சென்னையில் திருவையாறு - 2008  - நான்காம் ஆண்டு
முதல் நாள் நிகழ்ச்சி!

20, டிசம்பர் 2008. காலை 8-55 மணிக்கு லஷ்மன்ஸ்ருதி மியூசிக்கல்ஸ், நாடக அகாடெமி, கலாலயா யுஎஸ்ஏ, மற்றும் ஜீ- தமிழ் தொலைக்காட்சி இணைந்து இசைக்காக தமிழகத்தில் நான்காவது வைபவமாக நடத்தும் மிக பிரம்மாண்டமான இசை விழாவான 'சென்னையில் திருவையாறு - 2008' சங்கீத வைபவம் முதல் நிகழ்ச்சியான பொள்ளாச்சி பி.எஸ்.வீராசாமி, பி.எஸ்.சிவக்குமார் சகோதரர்களின் நாதஸ்வர இன்னிசையுடன் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ஆரம்பமானது. நிகழ்ச்சி முடிவில் பொள்ளாச்சி பி.எஸ்.வீராசாமி, பி.எஸ்.சிவக்குமார் சகோதரர்களை சியாண்டல் ராமன் கெளரவித்தார். இதர கலைஞர்களை ஜீ தமிழ் சார்பாக விஜயசாரதி கெளரவித்தார். அதைத் தொடர்ந்து காலை 10-30 மணிக்கு கர்நாடக சங்கீத கலைஞர்களுள் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷன்" பி.எஸ். நாராயணசாமி அவர்களின் தலைமையில் பெரியவர் சிறியவர் என்ற வயது பேதமின்றி, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண் பெண் பேதமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை' பாடினார்கள். பார்வையாளர்களில் பலரும் அவர்களுடன் இணந்து பாடினார்கள்.

நிகழ்ச்சி முடிவில் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், மூத்தவருமான அண்மையில் மறைந்த அமரர் சி.ஆர்.கோபிநாத் அவர்களின் திருவுருவ படத்தை, லஷ்மன்ஸ்ருதி சகோதரர்கள் ராமன்,லஷ்மன்., கலாலயா கலா அய்யர், நாடக அகாடமி, ஜீ தமிழ் தொலைக்காட்சி சந்திரசேகர், பத்மபூஷன் பி.எஸ்.நாராயணசாமி, மற்றும் அமரர் சி.ஆர்.கோபிநாத் அவர்களின் சகோதரர் சி.ஆர்.விஸ்வநாதன் முன்னிலையில் தினமலர் நாளிதழ் அதிபர் ராகவன் அவர்கள் மேடையில் திறந்து வைத்தார்.

தினமலர் நாளிதழ் அதிபர் ராகவன் அவர்களையும், அமரர் சி.ஆர்.கோபிநாத் அவர்களின் சகோதரர் சி.ஆர்.விஸ்வநாதன் அவர்களையும் கலாலயா கலா அய்யர் கெளரவித்தார்.ஜீ தமிழ் தொலைக்காட்சி சந்திரசேகர், விஜயசாரதி , மற்றும் சிட்பி' நாயர் அவர்களை ரவிசங்கர் கெளரவித்தார். பத்மபூஷன் பி.எஸ்.நாராயணசாமி அவர்களை ஜீ-தமிழ் சந்திரசேகர் கெளரவித்தார்.

இதனைத் தொடர்ந்து பகல் 1 மணிக்கு மாஸ்டர் விக்னேஷின் கீ போர்டு இசையும், 2.45 மணிக்கு பாபநாசம் அசோக் ரமணியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், மாலை 4.45 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவனின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு O.S. அருணின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் இனிதே நடந்தேறியது.

Schedule - Dec. 2008

Artistes

Tickets

Organisers

Chennaiyil Thiruvaiyaru 2007

Chennaiyil Thiruvaiyaru 2006

Chennaiyil Thiruvaiyaru 2005

Photo Gallery

சென்னையில் திருவையாறு - 2007 - ஒரு பார்வை

Thiruvaiyaru Home


Feedback Contact Us Home