Chennaiyil Thiruvaiyaru Home
 

Press Release

வழங்கும்
“சென்னையில் திருவையாறு” 2009 - ஐந்தாம் ஆண்டு வைபவம்

இயற்கை என்பது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம். இந்த ஐம்பெரும் சக்திகளையும் அடக்கி ஆள்வது இசை என்றால் அது மிகையாகாது.
உலகின் பொதுவான மொழி என்று சொன்னால் அது மௌனமாக பேசப்படும் சைகை மொழி எனப்படும். அதையடுத்து பொதுவான மொழி இசை ஒன்றே ஆகும்.
இசை ஒன்றே நாடு, மொழி, மதம், சாதி போன்றவற்றைக் கடந்து பேதமற்ற ஒருமை நிலையை உருவாக்ககூடியது.
இயற்கை அமைப்புகளுக்கு இறைவன் 'பருவம்' என்ற குறிப்பிட்ட காலத்தை உருவாக்கி அதன்படி சில பருவத்தில் மட்டுமே பூக்கும் மலர், பெய்யும் மழை, வீசும் காற்று, கொட்டும் பனி, விளையும் பயிர்கள் என படைத்துள்ளான். இதற்கிடையில் இறைவன் இசைக்கென்று ஒரு பருவத்தை படைத்திருக்கின்றாரா என்றால் அதுவே மார்கழி, மாதங்களில் சிறந்ததும் மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதத்தைப்பற்றிச் சொல்லவேண்டுமென்றால்:
• ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படும் மாதம் மார்கழி
• பகவத் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி'' என்று கிருஷ்ண பரமாத்மாவே குறிப்பிடும் மாதம் மார்கழி
• தில்லைச் சிதம்பரத்தில் நடராஜர் நடனம் புரிந்த திருவாதிரை திருநாள் இடம்பெறும் மாதமும் மார்கழி
• திருவெம்பாவையை மாணிக்க வாசகர் அருளிய மாதமும் மார்கழி
• மனுக்குலம் தழைக்க இப்பூவுலகில் மாமரிச்செல்வனாம் இயேசுபிரான் அவதரித்த மாதமும் மார்கழி
• ஹரி நாம சங்கீர்த்தனம் எனும் புனைப்பாடல்களைப் பலர் ஒன்றுகூடி பாடும் மாதமும் மார்கழி
• வாசலில் வண்ண வண்ண கோலங்கள்
• கோவில் கோபுரங்களில் மணியோசைகள்
• ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள்
இப்படி எத்தனையோ சிறப்பு சேர்ந்ததுதான் மார்கழி. அப்படிப்பட்ட மார்கழியில் சிறந்த ஒரு வைபவம் இசை விழா. அதுவே தியாகராஜர் ஆராதனை விழா.
தியாகராஜரை அறியாதோர் திருவையாறையே அறியார், திருவையாறை அறியாதோர் தமிழகத்தையே அறியார்.
“எந்தரோ மஹானுபாவுலு அந்தரீகி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்காரரும் இவரே. எத்தனையோ சங்கீத கர்த்தாக்கள், சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள், சாஸ்திரீய சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள். அவர்களில் முதன்மையானவராக “ஸ்ரீதியாகராஜர்” திகழ்கின்றார். இவர் தாம் இயற்றிய சங்கீத உருப்படிகளிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்” ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபீ, வராளி மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள், தான் வணங்கிய ஸ்ரீராம பிரானைப் போற்றி இயற்றிய ஐந்து பாடல்கள் உலகம் எங்கும் இசைக்கலைஞர்களால் இன்றும் பாடப்பட்டு வருகிறது.

         முகப்பு                                                      அடுத்த பக்கத்திற்க்கு செல்ல

Pancha Ratna Kritis

 

 
< Back |   < Home