சினிமா செய்திகள்
விமர்சனம்
புகைப்படங்கள்
வெள்ளித்திரையில்...
 
சங்கீதா - பின்னணிப் பாடகர் கிரிஷ் திருமணம்!
கே.பாக்யராஜின் 'கபடி கபடி' படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சங்கீதா.'பிதாமகன்','உயிர்', 'தனம்' உள்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சங்கீதா நடித்திருக்கிறார்.இவருக்கும், `உன்னாலே உன்னாலே....' என்ற பாடலை பாடிய பின்னணி பாடகர் கிரிஷுக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு கிரிஷ் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து, சங்கீதாவும், கிரிஷும் திருப்பதி சென்று ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை சங்கீதா மறுத்தார். சங்கீதா-கிரிஷ் காதலை 2 பேர் குடும்பத்தினரும் இப்போது ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து இருவருக்கும் முறைப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்த திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 1ம் தேதி காலை 9 மணிக்கு திருவண்ணாமலை கோவிலில் நடக்கிறது.

மேலும்