சினிமா செய்திகள்
விமர்சனம்
புகைப்படங்கள்
வெள்ளித்திரையில்...
 
'அங்காடித்தெரு' - இரண்டு இசையமைப்பாளர்கள்!
வசந்த பாலனின் 'அங்காடி தெரு' படத்திற்கு முதலில் இசையமைக்க ஒப்புக் கொண்டவர் ஜி.வி. பிரகாஷ்குமார்தான். இவரை 'வெயில்' படத்தில் அறிமுகப்படுத்தியவர் வசந்த பாலன். திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, படத்திலிருந்து பிரகாஷை நீக்க முடிவு செய்தார் வசந்த பாலன். அவருக்கு பதிலாக விஜய் ஆன்டனியை இசையமைக்க வைக்கலாம் என்று நினைத்தாராம். ஆனால், ஒவ்வொரு சூப்பர் ஹிட் பாடலையும் கேட்டுவிட்டு முதலில் விஜய் ஆன்டனிக்கு வாழ்த்துச் சொல்பவர் பிரகாஷ்தான். இதனால் தங்களுக்கு இடையே இருக்கும் நட்பு கெட்டுவிடுமே என்று அஞ்சிய விஜய் ஆன்டனி, பிரகாஷிடம் இந்த படத்திலிருந்து விலகிக்கொள்வதாக கடிதம் வாங்கிவிட்டு வாங்க. இசையமைக்கிறேன் என்றாராம். சொன்னபடியே கடிதத்தை வாங்கி வந்துவிட்டார் வசந்தபாலன். ஆனால் பிரகாஷ் போட்டுக்கொடுத்த இரண்டு பாடல்களைப் படத்தில் பயன்படுத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார் வசந்தபாலன்.

மேலும்