சினிமா செய்திகள்
விமர்சனம்
புகைப்படங்கள்
வெள்ளித்திரையில்...
 
அறிமுக நாயகன் படத்தில் மூன்று நாயகிகள்!
கோவை தொழிலதிபர் திருமதி மாயா தயாரிக்கும் படம் 'சிவகிரி'. பொதுவாக கதையில் வரும் கேரக்டரின் பெயரை தலைப்பாக வைப்பார்கள். இந்த படத்தில் நடிக்கும் புதுமுகத்தின் பெயர் சிவகிரி. இதையே டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.முதல் படத்திலேயே ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் இந்த சிவகிரி. நாட்டுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை அழிக்க இவர் என்னவெல்லாம் முயற்சிகள் எடுக்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்கிறாராம் புதுமுக இயக்குனர் ஷிவாஜி. 'டிஷ்யூம்' படத்தில் பொறி பறக்க ஆக்சன் காட்சிகளை அமைத்த 'டிஷ்யூம்' சக்திவர்மாவை தேடிப்பிடித்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அறிமுக நாயகன் சிவகிரிக்கு மூன்று நாயகிகள். படத்தில் நாயகிகள் மூவருடனும் சிவகிரிக்கு தலா ஒரு இயட் பாடல் இருக்குமா என்பது தெரியாது. ஆனால், அறிமுகப்படத்திலேயே மூணு நாயகிகள், அசத்து மாப்ளே அசத்து என்கிறார்களாம் சிவகிரியின் நண்பர்கள்!

மேலும்