சினிமா செய்திகள்
விமர்சனம்
புகைப்படங்கள்
வெள்ளித்திரையில்...
 
'ஆயிரத்தில் ஒருவன்' - தாமதம் ஏன்?
'காதல், காமம், மூர்க்கம் ஆகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடாக எடுக்கப்பட்ட 'காதல் கொண்டேன்','7ஜி ரெயின்போ காலனி' ஆகிய படங்களுக்குப் பிறகு கோபம் கொண்ட இளைஞனின் போராட்டத்தைச் சொல்லும்'புதுப்பேட்டை'. 'ஆயிரத்தில் ஒருவனி'ல் இவை எதுவுமே இருக்காது என்கிறார் செல்வராகவன். தனது வாழ்வில், கண்ணோட்டத்தில் வந்துள்ள பக்குவம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும் என்கிறார் இவர். இந்திய சினிமாவில் இது மாதிரி ஒரு படம் வந்ததில்லை என்று அடித்துச் சொல்கிறார் செல்வா. ஏகப்பட்ட பணச்செலவு, படப்பிடிப்பில் பல சிக்கல்கள் என்று எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டதாகச் சொல்லும் செல்வராகவன், அத்தனையையும் மீறிப் படம் நன்றாக உருவாகிவருகிறது என்று சொல்கிறார். இதுமாதிரி ஒரு படம் தயாராக இரண்டு வருஷம் ஆவதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்று சொல்லும் செல்வா, படம் வெளிவந்த பிறகுதான் தாங்கள் பட்ட கஷ்டத்தின் காரணமும் அருமையும் புரியும் என்கிறார்.

மேலும்