|
ரசிகர்கள் ஆவேசப்பட்ட அளவுக்கு விஜய்'யின் 'குருவி' இல்லையாம். இதற்காக யாரும்
வருத்தப்படவில்லையாம்.
காரணம் 'குருவி' படத்துக்கு கிடைத்திருக்கும் ஓப்பனிங். அது எந்தளவுக்கு என்றால்
சில இடங்களில் 'சிவாஜி'யையே
ஓரம் கட்டியிருக்கிறதாம் 'குருவி'. சென்னை மல்டிபிளிக்ஸில் புதிய படங்கள் ஒரு
தினத்தில் ஏழுமுறை திரையிடப்படும்.
அதிகம் போனால் பதினைந்து. 'சிவாஜி' சிங்கத்தின் படம் அல்லவா 25 காட்சிகள்வரை
திரையிடப்பட்டன. தமிழ் நாட்டில்
இதுதான் சாதனையாக இருந்தது. விஜய், தரணி கூட்டணியின் 'குருவி' 'சிவாஜி'யின் இந்த
சாதனையை
முறியடித்திருக்கிறது. சென்னை மல்டிபிலிக்ஸ் ஒன்றில் 'குருவி' ஒருதினம் முப்பத்து
மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.
வேறு எந்த நாயகனும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை இது. இந்தளவில் படம்
பத்துநாள் ஓடினாலே பக்காவாக
லாபம் பார்க்கலாம் என சந்தோஷ முகம் காட்டுகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
|