சினிமா செய்திகள்
விமர்சனம்
புகைப்படங்கள்
வெள்ளித்திரையில்...
சினிமா விமர்சனம்
'தெனாவட்டு'
கிராமத்திலிருந்து வேலைக்காக சென்னை வரும் வெள்ளந்தியான இளைஞன் கோட்டை (ஜீவா), தாதா கைலாசத்திடம் (ரவிகாளே) அவர் தாதா என்று தெரியாமல் தன் நண்பன்(கஞ்சா கருப்பு) உடன் வேலையில் சேர்கிறார். சென்னைக்கு வந்த இரண்டாம் நாளே காயத்ரி (பூனம் பஜ்வா) என்னும் அழகுப் பதுமையைச் சந்தித்து மூன்றாம் நாளே காதலிக்க ஆரம்பிக்கிறார். அம்மணியும் நாயகனுக்கு அதிகத் தொந்தரவு கொடுக்காமல் சீக்கிரமே காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிடுகிறார்.காதலியின் தந்தையும் ஒரே காட்சியில் தன் மகளை நாயகன் வசம் ஒப்படைத்து செல்கிறார்.கொலை, கட்டைப் பஞ்சாயத்து என்று இயங்கிவரும் கைலாசத்தின் மகன் ஒரு பெண் பித்தன்.
'சேவல்'
வில்லன் கூட்டத்திடமிருந்து காதலியைக் காப்பாற்றும் நாயகன் என்ற ஒரு வரிக் கதையை நீட்...ட்டி வளைத்து சொல்லியிருக்கிறார்கள். 1989-1991-ல் சிவசைலத்தில் கதை நடக்கிறது. கஷ்டப்பட்டு உழைக்கும் ரஜேஷுக்குத் தப்பாமல் வந்து பிறந்த தறுதலைப் பிள்ளை ஆறுமுகம் (பரத்). செத்துப்போன தாத்தாவின் நிலத்தை அப்பாவுக்குத் தெரியாமல் விற்றுவிட்டுக் குடித்துக் கும்மாளம் போடும் பிள்ளை.இந்தப் பிள்ளையின் பெரியப்பா பிள்ளை தபால் தங்கவேலு (வடிவேலு) ஊரில் போஸ்ட்மேன். ஊரில் ஒரு அக்ரஹாரம். அதில் இரண்டு அழகுப் பெண்கள். அக்கா காயத்ரி (சிம்ரன்), தங்கை பாரிஜாதம் (பூனம்). அக்கா கல்யாணமாகிப் பக்கத்து ஊருக்குப் போய்விடுகிறாள்.
'ஏகன்'
'பில்லா' வின் வெற்றிக்குப் பிறகு அதே அஜீத் - நயன்தாரா ஜோடி இணையும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 'ஏகன்' வந்துள்ளது. 'ஏகன்' என்றால் சிவபெருமான். 'ஏகன்' என்றால் ஒற்றை ஆள். சிவனைப் போல ஒற்றை ஆளாக நின்று, சத்ருக்களை சம்ஹாரம் செய்யும் வேடத்தில் அஜீத். அபாரமான திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரியாக வருகிறார் அஜீத். ஹாங்காங்கில் ஒரு பெரிய டானுக்கு முடிவுகட்டும் இவர் இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பணிக்காக வருகிறார். வில்லன் சுமனின் முக்கிய கூட்டாளியான தேவன் போலீஸிடம் சரணடைந்து அப்ரூவராக மாறுகிறார். ஆனால் சுமனுக்கும் போலீசின் பாதுகாப்பிற்கும் பயந்து தேவன் தலைமறைவாகிறார்...
'காதலில் விழுந்தேன்'
ஒரு பெண்ணையும் அவளது சக்கர நாற்காலியையும் தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க ஓடுகிறான் ஒரு இளைஞன். துரத்தி வருபவர்களிடமிருந்து தப்பித்து அந்தப் பெண்ணுடன் ரயிலில் ஏறிவிடுகிறான். விசாரிக்கும் டி.டி.ஆரிடம் தன் கதையைக் கூற ஆரம்பிக்கிறான். பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பில் வசிக்கும் ஏழைப் பையனான அந்த இளைஞனுக்கு தன்னால் ஏற்பட்ட விபத்துக்குப் பிராயச்சித்தமாக மருத்துவ ஏற்பாடு செய்து குணப்படுத்துகிறாள் பணக்காரப் பெண் மீரா. இந்த மீரா மீது அவனுக்கு (நகுலனுக்கு)க் காதல் வருகிறது...
'சரோஜா'
வேடிக்கையும் விளையாட்டுமாய் நகரும் 'சென்னை-600028' என்ற பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்த வெங்கட் பிரபு இம்முறை மிகவும் வித்தியாசமான முறையில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். 'பேபெல்' (Babal) படத்தின் இன்ஸ்பிரேஷனில் 'சரோஜா' திரைக்கதையை அமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. 'சரோஜா' ஒரு த்ரில்லர். காமெடி கலந்த த்ரில்லர். ஒருநாள் சம்பவமே படம். அதில் அவர் சேர்த்திருக்கும் திரைக்கதை நுணுக்கங்களும், கதாபாத்திரங்களை வடிவமைத்த விதமும் படத்திற்கு புதுமையும் நேர்த்தியும் தந்திருக்கிறது.
'தனம்'
மூட நம்பிக்கைக்காரர்களின் பிடரி தட்டும் நல்ல கருவை எடுத்துக் கொண்டவர்கள் அதை வெளிப்படுத்திய விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள். பாலியல் தொழிலாளி தனம் (சங்கீதா),தன் தொழிலில் கிடைக்கும் தொகையை அங்குள்ள ஏழைகளுக்குக் கொடுத்து உதவுகிறாள். சென்னையில் இருந்து வரும் பிராமண இளைஞன் அனந்தராமன் தனம் மீது காதல் வயப்படுகிறான். பல முறை பணம் கொடுத்து அவளை அனுபவிக்கிறான். நாளுக்கு நாள் அவனது காதல் வளர்ந்துகொண்டே போக, அவளையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். தனம் மறுக்கிறாள்.
'தாம் தூம்'
காலஞ்சென்ற ஜீவா என்ற மகா கலைஞன், ஒளிகளாய் வாழ்ந்திருக்கும் படம். மருத்துவ பயிற்சிக்காக ரஷ்யா செல்கிறார் ஜெயம்ரவி. இரண்டு வாரத்தில் திரும்பி வந்ததும் காதலியுடன் திருமணம் என்ற கனவில் இருப்பவரை கம்பி எண்ணவைக்கிறது ரஷ்ய சூழ்நிலை. கொலை வழக்கு ஒன்றில் சிக்கும் நாயகன், தான் நிரபராதி என நிருபிக்க சந்தர்ப்பம் கிடைக்காததால் போலீஸிடமிருந்து தப்பிக்கிறார்.ஒரு பக்கம் ரஷ்ய தாதாக்களின் துரத்தல், இன்னொரு பக்கம் போலீஸ் விரிக்கும் வலை என ஓடிக் கொண்டே இருக்கும் ரவிக்கு நல்ல நேரம் கிடைப்பதுடன் முடிகிறது கதை.
'ஜெயம் கொண்டான்'
பாலசுப்ரமணியத்தின் துல்லியமான லைட்டிங் திறமைக்கு எல்லா காட்சிகளுமே சாட்சியம் கூறுகின்றன.குறிப்பாக வீட்டிற்குள் படம் பிடித்த விதம் நமக்கு பிடிக்கிறது. வித்யாசாகரின் இசையில் 'நான் வரைந்து வைத்த ஓவியம்...' பாடலும் யுகபாரதியின் வரிகளும் கவர்ந்திழுக்கின்றன. க்ளைமாக்ஸில் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம், தலைத்தட்டி உணர்த்தும் உண்மைக்காக அவருக்கும் ஒரு சபாஷ். இயக்குனரின் எண்ணத்தை சிதைக்காத எடிட்டர் வி.டி.விஜயனுக்கும் பாராட்டுக்கள்.
'சுப்ரமணியபுரம்'
புது இயக்குனர் சசிக்குமாரின்' சுப்ரமணியபுரம்' இந்தக் கோடையின் ஆச்சரியங்களில் ஒன்று. கதை புதிது அல்ல. ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதம் புதிது. கதை சொல்லும் விதத்தில் இருக்கும் எளிமையும் யதார்த்தமும் இப்படத்தைத் தனித்துக் காட்டுகின்றன. பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக இருந்த சசி, காட்சிப்படுத்தலிலும் கதை சொல்லலிலும் அழுத்தமாக வெளிப்படுகிறார்.
'யாரடி நீ மோகினி'!
ஐந்து ஆண்டுகளாக வேலை தேடி அலைகிறார் தனுஷ். இதற்கிடையே நயன்தாராவை பார்க்கிறார். முதல் பார்வையிலேயே காதல். தொடர்ந்து செல்கிறார். அவர் பணிபுரியும் சா·ப்ட்வேர் நிறுவனத்திலேயே தானும் பணிபுரிய முடிவெடுத்து அங்கு நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்துதேர்ச்சி பெறுகிறார். வேலை விஷயமாக நயன்தாராவுடன் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.
வெள்ளித்திரை!
பிருதிவிராஜ் சினிமாவில் ஒரு திறமையான உதவி டைரக்டர். தவம் இருந்த மாதிரி இரவு பகலாக கஷ்டப்பட்டு ஒரு நல்ல கதையை உருவாக்கி அதன்மூலம் டைரக்டர் ஆகும் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார். சினிமாவில் எப்படியாவது நாயகன் வேடம் கட்டுவது என்ற உறுதியோடு 12 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருப்பவர் பிரகாஷ்ராஜ். ஒரு நாள் வாடகை பாக்கிக்காக அவரை துரத்திவிடுகிறார் வீட்டுக்குச் சொந்தக்காரர்.
ஃ ( அஃக்)
 சின்ன கதைதான். அதை சொன்ன விதத்தில் இமயம் தொட்டிருக்கிறார் இயக்குனர் மாமணி. ஆட்டு மந்தை போல் போய் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை சின்ன பிரம்பை வைத்துக் கொண்டு திசை திருப்ப முயன்றிருக்கிறார். இது ஒரு சோதனை ரீதியிலான திரில்லர் படம். படத்தில் பாடல்கள் இல்லை, சண்டை இல்லை, காமெடியும் இல்லை. ஆனால் படத்தில் உயிர் இருக்கிறது....
"அஞ்சாதே"
 போலீஸ் ஆக நினைப்பவன் பொறுக்கியாகவும், பொறுக்கியாக இருந்தவன் போலீசாகவும் ஆகிற ஃபார்முலா 'தாதா' கதை. இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும், குற்றவாளிகளின் உலகை மிஷ்கின் அணுகியிருக்கும் விதமும் புதுசு! விடிந்தால் மதுக்கடை, விரல் நீட்டினால் சண்டை என்று திரியும் நரேனுக்கு லட்சியம் என்று பெரிதாக எதுவுமில்லை. ஆனால் அவரது நண்பர் அஜ்மலுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்....
"நெஞ்சத்தை கிள்ளாதே"
தேடி தேடி அனுபவத்தை சம்பாதித்துக் கொள்கிற ஒருவன், தன்னை தேடி ஒரு காதல் அனுபவம் வரும்போது என்ன செய்கிறான்? தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் நாயகியின் நெஞ்சை கூரிய வார்த்தைகளால் கிள்ளி அவமானப்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் காதலின் உன்னதம் புரிந்து நாயகி முன் உருகி நிற்க அவள் முடிவு என்னவாக இருக்கும் என்பது க்ளைமாக்ஸ்....
சாது மிரண்டா..
அண்ணன், தம்பி இருவர் வங்கி ஒன்றை கொள்ளை அடிக்கின்றனர்.இதற்கு மத்திய மந்திரியும் உடந்தை. கொள்ளை நடந்த அன்று வங்கி மேனேஜர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார். கொள்ளை அடித்த அண்ணன் அமெரிக்கா சென்றுவிட, தம்பி பணத்துடன் இங்கேயே தங்கிவிடுகிறார். அப்பாவியாக இருக்கும் பிரசன்னா, பிரவுன் சுகரை கூட பவுடர் பாக்கெட் என நினைத்து கடத்தல் கும்பலுக்கு....
"தங்கம்"
அண்ணன் சத்யராஜ் தங்கை ஜெயஸ்ரீயை பாசத்தைக் கொட்டி வளர்க்கிறார். விட்டால் தங்கச்சிக்காக ஒரு தனிக்கட்சியே ஆரம்பிக்கிற அளவுக்கு பாசம் செலுத்துகிறார். இந்த பாசத்திற்கு ஊறுவிளைவிக்க வில்லனாக வருகிறார் சண்முகராஜன். அவர் சத்யராஜ் மீதான பழைய பகையில் அவரது தங்கையின் கற்பை சூறையாட, கொதித்துப்போகும் சத்யராஜ் சண்முகராஜனை உதைத்து தங்கையின் கழுத்தில் தாலிகட்ட....
இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
பூவுலகில் நாடக நடிகரான நா. அழகப்பன் தனக்கு 'தார' தோஷம் இருப்பதால் தன் நாடகக் குழுவினர் தந்த யோசனைப்படி, பரிகாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒரு சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அந்த சிலையோ தேவலோகத்து ரம்பை! வம்பை விலை கொடுத்து வாங்கியது மாதிரி ஆகிவிடுகிறது வாழ்க்கை. மாலை நேரமானால் அலேக்காக தேவலோகத்துக்கு தூக்கிச் செல்லப்படும் அழகப்பன், மறுநாள் பூவுலகத்தில்
 பிரிவோம் சந்திப்போம்
ஸ்டவ் வெடிப்புகள், தீக்குளிப்புகள், வரதட்சணை கொடுமைகள், நிலுவையில் குவியும் விவாகரத்து வழக்குகள் எதுவுமின்றி குடும்பம் சந்தோஷ பூங்காவாக மாற வேண்டுமென்றால் குடும்ப உறவுகள் எப்படி இருக்க வேண்டுமென்பதை அழகாக சித்தரிக்கும் படம் ' பிரிவோம் சந்திப்போம் '. விட்டால், ரங்கநாதன் தெருவை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு உறவுகள் நிறைந்த குடும்பத்தில் சேரன். அதற்கு நேர்
 காளை
ஜீவா என்ற பெயரை கேட்டாலே அரசியல்வாதியில் ஆரம்பித்து போலீஸ் வரை அனைவருமே தொடைநடுங்கி போகிறார்கள். யார் இந்த ஜீவா ? .ஊரையே நடுங்க வைக்கிற ரவுடி, போலீஸ் அதிகாரி, தேனி மண்ணின் வீர இளைஞன் என மொத்தம் மூன்று ஜீவா'க்கள். ஊரையே நடுங்க வைக்கிற ரவுடி ஜீவா,போலீஸ் அதிகாரி ஜீவாவின் பெண்ணான வேதிகாவை கைபிடிக்க துடிக்கிறான்.
'பழனி'
ஒன்பது சண்டை, அஞ்சு பாட்டு இவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் போக மீதி நேரத்தை நிரப்ப அருமையான அக்கா-தம்பி சென்ட்டிமென்ட்! ஒரு கமர்சியல் சினிமாவுக்கு இது போதும்தானே..? அப்பாவின் கள்ளக் காதலியை கொலை செய்து பத்து வயதில் சிறைக்குப் போகும் பரத், பதினைந்து வருடம் கழித்து திரும்பி வந்து, அக்கா குஷ்புவிடமே....
பீமா
" பீமா "நகர வாழ்க்கையில் ஓசைபடாமல் நடந்துகொண்டிருக்கும் நிழல் உலகம் பற்றிய படம். 'நாயகன்' பட பாணியில் கெட்டவர்களுக்கு கெட்டவனாக நல்லவர்களுக்கு நல்லவனாக வாழும் தாதா பிரகாஷ்ராஜ். அவருக்கே வித்தை காட்டும் அதிரடி நாயகனாக விக்ரம்.'என்ன வேணும் உனக்கு?' நேருக்கு நேர் மிரட்டும் பிரகாஷ்ராஜ்க்கு பயப்படாத விக்ரம்,
மிருகம் 
காமமும் கோபமுமாக வெறி பிடித்து அலையும் ஒரு மனித மிருகத்தின் கதை.நாட்டுக்கு தேவையான நல்ல கதைதான். ஆனால், படம் நெடுக கண்களுக்கு தேவையற்ற காட்சிகள். மது, மாது... இதுதான் ஹீரோ ஆதியின் வாழ்க்கைப் பாதை. கண்ணில்பட்ட பெண்களை எல்லாம் கற்பழித்து கிராமத்துக் காட்டானாக சண்டித்தனம் செய்கிறார்.
பில்லா-2007
சூப்பர் ஸ்டார் நடித்து 1980ல் பட்டையைக் கிளப்பிய 'பில்லா' , இன்றைய ஹைடெக் தொழில்நுட்பக் கலக்கலுடன் புது அவதாரம் எடுத்துள்ளது. கதை, காட்சிகள் எல்லாம் பழைய படத்தை அடியொற்றி இருந்தாலும், இளம் தலைமுறை ரசிகர்களுக்கு அலுப்ப.......
கல்லூரி
இயக்குநர் சங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' தயாரித்துள்ள படம் 'கல்லூரி'. கதாநாயகன் - கதாநாயகி புதுமுகம் அகில் - தமன்னா. 'காதல்' படத்திற்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ளார். பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்த 'முத்து, ரமேஷ், அய்யனார், காமாட்சி ஆகிய நான்கு மாணவர்களும்.,...
ராமேஸ்வரம்
ஈழத்திலிருந்து அகதியாக ராமேஸ்வரம் வருகிறார் ஜீவா. ஊரின் பெரும்புள்ளி லாலின் மகளான பாவனாவுக்கு ஜீவாவைப் பார்த்ததும் காதல். பாவனாவை ஜீவா காதலித்தாலும் நிர்பந்தங்களின் காரணமாக இலங்கைக்கே திரும்புகிறார்......
வேல்
அரிவாள், அரைபாடி லாரி, அரிசி மண்டி, அரசியல்வாதி, வில்லன் என தன் ஃபேவரைட் அயிட்டங்களுடன் களம் இறங்கி தன் ஆக்ஷன் பட்டறையில் ஹரி தயாரித்துள்ள அடுத்த கமர்ஷியல் அருவா....... வேல்!
பொல்லாதவன்
சிறு தீ'ப்பொறி ஒரு காட்டையே அழித்துவிடும் என்பார்கள். அதுபோல் ஒரு சிறு சம்பவம் எப்படி ஒரு மனித வாழ்க்கையையே புரட்டிப்போட்டு ஒரு நல்லவனைப் பொல்லாதவனாக்குகிறது என்பது கதை.