HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 சிவகாமி முத்தையா பிக்சர்ஸ்

16494 அடி நெ.28506 12.2.60 வெளியான தேதி 9-2-1960.

தயாரிப்பு-எம்.எ.வேணு, இயக்கம்-மித்ரதாஸ்.எ, கதை-வசனம்-எ.கே.வெங்கடாராமானுஜம், இசை-கே.வி.மகாதேவன், பாடல்-பாபநாசம் சிவன்-கா.மு.ஷெரீப்,எடிட்டிங்-கே.ராமசந்திரன், கலை-எம்.பி.குட்டியாப்பு,நடனம்-சின்னிசம்பத்-எம்.சம்பத்குமார், ஸ்டில்-ஜான், லேப்-விஜயா சினி லேப்.

எம்.கே.தியாகராஜா, ஜெயஸ்ரீ, பாகவதர், ஜி.வரலஷ்மி, ஜக்கையா, முத்துலஷ்மி, சிவசூரியன், எஸ்.டி.சுப்புலஷ்மி, நடராஜன், லஷ்மி பிரபா.

முடிசூடா மன்னனாக வாழ்ந்த பாகவதர் கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார்.  யாரும் உதவ வரவில்லை.  எம்.எ.வேணுவிடம் சென்றார் நான் படத்தில் நடிக்க வேண்டும்-பணம் வேண்டும் என கேட்டார்.  நான் முன்போல பாட முடியாது நான் பாடி, நடிப்பதாக இருந்த ராஜயோகி படத்தின் பாடல்கள் அப்படியே இருக்கின்றன.  அந்த பாடலை உபயோகிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் அதன்படி அப்பாடல்களை விலை கொடுத்து வாங்கி சிவகாமி படத்தை எடுத்தார்.  பாகவதருடன் நடிக்க பல கலைஞர்கள் மறுத்து விட்டனர். பாதி படம் முடிந்துவிட்டது.

டாக்டர்கள் கச்சேரிகள் ஏதும் நடத்தக்கூடாது என்று அறிவுரை கூறியுள்ளனர்.  எம்.எ.வேணு சென்னை வந்திருந்த போது வெளியூர் கச்சேரிக்கு அழைத்தனர் பெரும் தொகை கொடுப்பதாக கூறியதால் கச்சேரி செய்ய போய் விட்டார்.  பாதி கச்சேரியில் கண் தெரிந்த பார்வையிழந்தார்.  விபரமறிந்த எம்.ஏ.வேணு சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் அப்போது கலை உலகினர் எவரும் அவரை பார்க்கவில்லை.  சில நாட்களில் காலமானார்.  அப்போது பார்க்கவந்த கலைஞர் யாரையும் அனுமதிக்கவில்லை.  வேணு அவர்களே திருச்சிக்கு பாகவதரின் உடலை எடுத்து அடக்கம் செய்தார்.  பட ஒப்பந்தத்திற்கு முன் வேணு அவர்கள் என்னுடன் (பிலிம் நியூஸ் ஆனந்தன்) பேசுகையில் படத்தில் வரும் லாபத்தை அவருக்கு கொடுக்க இருக்கிறேன்.  இதை பத்திரிகையில் செய்தியாக போட வேண்டாம் ஏனென்றால் கடன் கொடுத்தவர்கள்-வருமான வரிக்காரர்கள் வந்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று கூறினார்.  பாகவதர் இல்லாததால் கதை வேறு விதமாக அமைந்து பாகவதரின் சில பாடல்களையும் சேர்ந்து படத்தை வெளியிட்டார்.  படம் ஓடவில்லை. பாகவதரின் ரசிகர்கள் எங்கே போனார்கள் அருமையான பாடல்கள் இருந்தும் ஏன் யாரும் கேட்கவில்லை.

More Films