தங்கத்தாமரைப் பெண்ணே!

 

“சுஷ்மா! என்ன இது?”

“அம்மா, என் அம்மா!” என்று தளர்வாய் அவள் முனகினாள்.

“அதுக்காக இப்படியா?” என்று முறைத்துவிட்டு ஆம்புலன்ஸிற்கு அழைப்பு விடுத்தான். “ஏன் இங்கே கூட்டம்? கேர்ன்ஸ் கோ டு யுவர் ரூம்ஸ்!”

பார்கவி சுஷ்மாவை அரவணைத்து எழுப்பி, நாற்காலியில் அமர வைத்தாள்.

 

“இந்தா, இந்த ஜூஸை சாப்பிடு!”

“சுஷ்மா, உன்னை ஸ்மார்ட் கேர்ள்னு நினைச்சேன், படிச்ச புத்திசாலிப் பெண் இப்படியா... ஷேம்!”

ஜூஸை பாதியில் நிறுத்தினவள், “ ஆமாம் சார். படித்த இந்தப் புத்திசாலிப் பெண் சொன்னதை யாரும் நம்பலியே! எங்கம்மாவை அடையாளம் காட்டினப்போ பைத்தியக்காரி பட்டம், மூளை அடையாளம் காட்டினப்போ பைத்தியக்காரி பட்டம், மூளை பிசகினவள் என ஏளனம்! பாருங்க சார்!  சின்ன வயசல நான் அம்மாகூட எடுத்துக்கிட்ட படம்! இப்போதாவது நம்பறீங்களா?”

“அதை அப்புறம் பார்த்துக்கலாம். ஆம்புலன்ஸ் கீழே வந்திடுச்சு. நீ கிளம்பு!”

“இல்லை. வரலை” என்றாள் கடுமையாய்.

போட்டோவில் சுஷ்மா மெலிந்து அரைப் பாவாடை, பனியனுடன் நிற்க அருகே உடல் மெலிந்திருந்தாலும் கூட முகம் பிரகாசமாய் அவளது தாய். நீ ரொம்பவும் உருவகப்படுத்திப் பார்த்தால் அந்த ஆயாவுடன் லேசாய் ஒப்புமை தெரிந்தது.

“இப்போவாவது நம்பறீங்களா சார்?”

“சுஷ்மா, என் நம்பிக்கை இப்போ முக்கியமல்ல. இப்ப முக்கியம் உன் உடல்நலம்! அவ்ளோ ரத்தம் சேதாரமாயிருக்கு. ஒரு டாக்டர் ஸ்டூடண்ட் இப்படியா?”

“சார், என்மேல உங்களுக்கு நிஜமாலுமே அக்கறை இருந்தா என்னை மறுபடியும் அங்கே அழைச்சுப் போங்க, எங்கம்மாவை நான் பார்க்கணும்.”

“நீ அவங்க பொண்ணுன்னு அவங்க ஒத்துக்கலியே!”

“ஒத்துக்க வைக்கிறேன்.”

மறுநாள்.

அனாதை ஆசிரமாம். நிர்வாகி வேண்டாவெறுப்பாகத்தான் அவர்களை வரவேற்றார். “வாங்க, டாக்டர். அதுக்குள்ளே டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்திருச்சா?”

“அதுக்கு ஒரு வாரமாகும். இப்போ நாங்க வந்தது ஆயாவை... ஸாரி, சுஷ்மாவின் தாயைப் பார்க்க...”

“டாக்டர் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க! நேத்து இந்தப் பெண் நடத்துன கூத்தில் ஆயா அப்செட் அந்தம்மாவுக்கு இதில் ஆர்வம் இல்லேங்கிறபோது எதுக்காக நிர்ப்பந்திக்கணும்?”

“நிர்ப்பந்திக்கலை! ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துட்டுப் போகிறோம்... ப்ளீஸ்... அவங்களைக் கூப்பிட முடியுமா?”

“அவங்க இங்கே இல்லை.... !”

“அப்புறம்?”

“பக்கத்து பில்டிங்கில் இதேபோல தொட்டில் குழந்தைகளைப் பராமரிக்கிறோம். தெருவில் ரோடில் அல்லது மருத்துவமனையில் அனாதையாக விடப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கும் இடம் அது. அங்கே போயிருக்கிறார்கள்.”

சுரேஷிற்கு அவர் பேரில் மதிப்பு தோன்றிற்று. அவரவர் தனக்குத் தன் குடும்பம், தன் பிள்ளைகள் என பேணும்போது இவர்கள் பிறருக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். சகிப்புத்தன்மையுடன் கூடிய சேவை!

“இப் யூ டோன்ட் மைன்ட். ஒரு அஞ்சு நிமிஷம்”

 

 “சரி வாங்க.”

அடுத்த கட்டடம் சமீபத்தில் கட்டப்பட்டு ஈர சுவாசம் இன்னமும் மிச்சமிருந்தது. ஹாலில் ஆங்காங்கே சங்கிலியில் தொட்டில்கள், அதற்குமேல் வண்ண பலூன்கள், கிலுகிலுப்பை, தலையாட்டிக் கண்சிமிட்டும் பொம்மைகள், பால் புட்டிகள்...

பணிப்பெண்கள் குழந்தைகளைத் தூக்கிப் பால் கொடுப்பதும், குளிப்பாட்டி, உடை மாற்றி தொட்டிலில் கிடத்துவதுமாய் இருந்தனர். தகவல் கொடுத்ததும் ஆயா ஈரம் பட்ட புடவையைச் சரிபண்ணிக் கொண்டு வந்தாள்.

அவளது கண்கள் சிவந்து, கன்னம் வீங்கி, ராத்திரி முழுக்க அவளும் தூக்கமில்லாமல் அழுதிருக்க வேண்டும்... புரிந்தது.

“ஆயா, இந்தப் பொண்ணு மறுபடியும் மறுபடியும் வந்து தொந்தரவு பண்ணுது. இன்னைக்குப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.”

நிர்வாகி சுஷ்மாவை ஆயாவிடம் விட்டுவிட்டு சுரேஷை அழைத்துக்கொண்டு வேளியே வந்தார்.

அவர்களின் கண்களிலிருந்து மறைந்ததும் சுஷ்மா, “அம்மா, எம்மேல உனக்குக் கொஞ்சம்கூட இரக்கமே இல்லையா?” என்று நா தழுதழுத்தாள்.

“என்னை எல்லோரும் பைத்தியம்ங்கிறாங்க. உளர்றேன்னு ஏசுறாங்க.”

ஆயா எதிர்பாராதவிதமாய், “என்னை மன்னிச்சுடு.” என்று சுஷ்மாவின் காலில் விழ, அவளுக்கு வெலவெலத்துப் போயிற்று.

“அம்மா, என்ன இது? எழுந்திரு.” என்று பிடித்துத் தூக்கித் தன் தோளில் தாங்கிக்கொண்டு அவளது கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

“அம்மா... அம்மா... உனக்கேன் இந்தக் கொடுமை?”

“எல்லாம் என் தலையெழுத்து.”

‘தலையெழுத்தில்லை. திமிர், புத்தியின்மை, லூசுத்தனம்’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளை சுஷ்மா அடக்கிக்கொண்டாள். வேண்டாம். ஏற்கனவே இவள் நிறைய அனுபவித்துவிட்டாள். நாம் வேறு அதைத் குத்திக்காட்டக் கூடாது.

“அம்மா, அப்பா நல்ல நிலையில இருக்கார். எனக்காகத் தனி பங்களாவே கட்டிவைச்சிருக்கார். உன்னை எப்போதுமே விசாரிச்சு உன் நினைப்பாகவே இருக்காரும்மா சித்தி கூட இங்கே வந்தாங்க!”

சுஷ்மா படபடவெனப் பேச, செண்பகம் அவளை அப்படியே வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“அம்மா, நீ கஷ்டப்பட்டதெல்லாம் போதும்மா! எங்க்கூட வந்திரும்மா. அப்பா பண்ணது தப்புதான். உனக்குத் துரோகம்தான். ஆனா, எதுவுமே திட்டமிட்டு இல்லியே! நம் வசதியைப் பெருக்கணும், நம்மை நல்லா வச்சுக்கணும்தானே... சித்தி குறுக்கே வந்தது ஒரு விபத்து. அதுல அவரைக் குற்றம் சொல்ல ஏதுமில்லைம்மா!”

 

“ஆம்மா! குற்றம் எல்லாம் என் பேரில்தான். ஏதோ ஒரு வேகத்துல புத்தி மழுங்கி உன்னை விட்டுட்டு வந்துட்டேன். யோசிக்கலே. ஆவேசம். நம்பிக்கைத் துரோகம்னு ஏமாற்றத்துல ரயில்ல விழுந்து சாகப்போன என்னைக் காப்பாத்தி இங்கே கொண்டு வந்துட்டாங்க. அப்புறம் கைக்குழந்தைங்க, அனாதைப் பசங்கன்னு பார்த்த பிறகு உன்னை விட்டுட்டு வந்த பாவத்தை இந்தப் பிள்ளைங்களுக்குச் சேவை செஞ்சு தீர்த்துக்கறேன்.”

 

“போனதெல்லாம் போகட்டும். இப்போதாவது உண்மையை ஒப்புக்கிட்டியே அது போதும். வாம்மா, எங்கூட வந்திரு. பழசையெல்லாம் மறந்திட்டு நாம் புதுவாழ்க்கையை ஆரம்பிப்போம். அப்பாவையும் அழைச்சுக்கலாம். அவரும் மலேசியாவை விட்டுட்டு இங்கே வரத் தயாரா இருக்கார். நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம் நிர்வாகிக்கிட்ட நான் பேசறேன். அப்பாட்ட சொல்லி இந்த ஆசிரமத்திற்கு நிறைய பணம் தரலாம். வாம்மா, எங்கூட வந்திரு.”

சுஷ்மா உருக, செண்பகம் சட்டென அவளிடமிருந்து விலகி, “இல்லை. நான் வர்றதா இல்லை, நீ போகலாம்.” என்றாள் உறுதியாய்.

13

சுஷ்மா செண்பகத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, “ப்ளீஸ்ம்மா ப்ளீஸ்..”  என்று கெஞ்சினாள்.

 

“இவ்ளோ நாள் அனாதை போல நான் வெறியோட, வைராக்கியத்தோட இருந்துட்டேன். இனியும் அப்படி முடியாதும்மா. தெய்வமா பார்த்து உன்னை என் கையில் காட்டியிருக்கு. வந்திரும்மா நீ. அப்பாக்கூட சேராட்டியும் பரவாயில்லை. நாம தனியா இருப்போம். நான் உன்னைக் காப்பாத்துறேன்”

 

செண்பனம் அவளது வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கத் தயாரில்லாத்து போல விரைப்பாய் நின்றிருந்தாள்.

“அம்மா, அம்மா...”

“ஷ்ஷ்ஷ்... இனி ஒரு வார்த்தை பேசக்கூடாது. என்னைப் பார்க்கவும் வரக்கூடாது. அப்படி வந்தால் அப்புறம் என்னை உயிரோடப் பார்க்கமுடியாது, ஆமா, சொல்லிட்டேன்.”

அவள் சொல்லிவிட்டு விருட்டென்று நடக்க, அதுவரை இருந்த சந்தோஷமெல்லாம் வந்துபோக, சுஷ்மா பிடித்துவைத்த்து போல நின்றிருந்தாள்.

சுரேஷைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த சோகமெல்லாம் மடைதிறந்து கண்ணீராய்க் கசிந்த்து.

“சார், நான் துரதிர்ஷ்டக்கட்டை, ராசியில்லாதவ, இந்த அனாதைப் பிள்ளைகளுக்காவது பரவாயில்லை, ஆசிரம்ம் இருக்க, ஆதரவு தெரிவிக்க அறக்கட்டளை இருக்க, எல்லாம் இருந்தும் எனக்க யாருமில்லை.”

சுஷ்மா அழ ஆரம்பிக்க, சுரேஷ் அவளை அரவணைத்து, “எல்லாம் சரியாகும், வா போகலாம்..” என்றான்.

“எனக்கு அந்த நம்பிக்கையில்லை. அம்மாவுக்க ஏன் என் மேல் அவ்வளவு வெறுப்புன்னு புரியலை.”

“சேச்சே, வெறுப்பெல்லாம் இல்லை. ஷாக். பதற்றத்துல அவங்களுக்குப் பேச்சு வரலே. பெத்த பெண்ணை விட்டுட்டு வந்துட்டோமே என்கிற குற்ற உணர்வு. கொஞ்சம் அவகாசம் கொடு. அவங்களும் உன் பிரிவை உணர்வார்கள். அப்போ உன்னைத் தேடி வருவார்கள.”

மருத்துவக் கல்லூரி.

அனாடமி வகுப்பு.

மூத்த லெக்சார் ஒரு மருத்துவ விடுப்பில் போயிருக்க சுரேஷிற்கு முழுநேர அஸிஸ்டென்ட் லெக்ச்ர்ராக நியமனம் கிடைத்திருந்த்து.

அனாடமி  என்றாலே அவனுக்க அலர்ஜி. இன்று நேற்றல்ல, படிக்கம்போது முதல் முதலில் பிணத்தைப் பார்த்த்திலிருந்து.

பொது மருத்துவம் என்றாலும் சரி, பல், கண், காது, மூக்கு என்று எந்தப் பிரிவானாலும் சரி அனாடமி உண்டு.

அனாடமிக்குப் பிணங்கள் கிடைப்பது அரிது. இதற்காகப் பல புரோக்கர்கள் உண்டு. விபத்து அல்லது அனாதைப் பிணங்களை ரசாயனக் கரைசலில் ஊறவைத்து ரத்தம் கண்டின பின் விரைப்புடன் குளிர் அறையில் பதப்படுத்தி வைப்பார்கள்.

மனிதனுக்கு உயிரோடு இருக்கும்போது ’மதிப்பு’ இருக்கிறதோ இல்லையோ பிணத்திற்கு ஏக கிராக்கி. பசங்களுக்குள் அடிதடி நடக்கும், மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் பிணத்திற்குப் படாதபாடுபடும், மாணவர்களிடம் இதற்காகப் பணம் கறந்தாலும்கூட பத்து மாணவர்களை ஒன்று சேர்த்து ஒரே உடலைக் கூறு போடச் சொல்லுவார்கள்.

இன்று அந்தப் பத்தில் சுஷ்மாவும் இருந்த்து இவனுக்க உற்சாகம் தந்த்து. அதே சமயத்தில் சங்கடமும், அவளின் அறிமுகம் இல்லாத போது எதுவும் தெரியவில்லை. இப்போது எங்கு நோக்கினும் அவள.

சுஷ்மாவுடன் நெருங்கிப் பழகவும் அவளுக்க ஆறுதலாக இருக்கும்படியும் சம்பவங்கள் அவனைத் தேடி வருவதாகவே பட்டது. அவள் வகுப்பில் இருந்தாலே பூரிப்பு. ஆனால் அனாடமி என்றதும் சுரேஷுக்கு லேசாய் வியர்த்த்து. சரியாய் சொல்லித்தர வேண்டுமே என்கிற பதட்டம்.

படிக்கிற நாளில் முதன்முதலில் உடலைப் பார்த்துப் பரிதவித்த்து இன்னும் அவனது மனதில் நிழலாடியது.

.ஸி. ஹால், ஆங்காங்கே போர்த்தி வைத்தி பிணங்கள், நாற்றம், கையில் உறையிட்டு லெக்சரர் பசங்களைச் சுற்றி நிறத்தி வினாவினார்.

சுரேஷுக்கு உதறல்,

அவர் சொல்லிக்கொடுத்த போது எல்லாம் தெளிவாய் இருந்த்து. கத்தியைக் கொடுத்து. “பிணத்திற்கு உயிர் கொடுங்கள்என்றபோது கூட வெடவெட, உள்ளுக்குள் ஜுரம், வயிறு கலங்கி குமட்டல், போர்த்தியிருந்த துணியை விலக்கினதுமே அவனுக்குக் கைகளில் நடுக்கம்.

“என்ன தயக்கம்? ம்...ஆரம்பி. தலையிலிருந்து கால் கீறி தசைகளையும் நரம்புகளையும் அலசவேண்டும்.”

      அவன் அந்த உடலின் தலையில் கத்தியை வைத்து அழுத்த கத்தி எகிறிக்கொண்டு விழுந்த்து. சுற்றியிருந்த மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் சிரிக்க, அவனுக்கு அவமானமாயிற்று, அதில் பதற்றம் அதிகமாயிற்று, ஆவேசத்தில் தன் முழு சக்தியையும் கைக்குள் கொண் கொண்டு போய் மண்டையிலிருந்து ஆரம்பித்து உடலில் அழுத்த...

உடல் அப்படியே விறகு பிளப்பதுபோல பிளந்து, ‘இப்போ என்ன சொல்றீங்கஎன்று இறுமாப்புடன் பார்த்தபோது லெக்சரர், “சே, நாஷ்தி பண்ணிட்டியே” என்று அவனது முதுகில் அறைந்தார்.

தட்டிக்கொடுப்பார் என்று பார்த்தால் இப்படி தட்டுகிறாரே, என்று வந்த கோபத்தை அடக்கிக் கொண்டான். வெட்கங்கெட்ட கோபம்.

“‘ஏய், என்ன இது?”

“நீங்கதானே சார்...”

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles