தங்கத்தாமரைப் பெண்ணே!

 

15

முகுந்தனின் விருந்தினர் இல்லம்.

முகுந்தன் ஹாலில் அமர்ந்திருக்க, வாட்ச்மேன், வேலை ஆட்கள் என எல்லோரும் வந்து நமஸ்கரித்தனர். முகுந்தன் அவர்களுக்கு வேட்டி, சேலை கொடுங்க, “இன்னிக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். அதுக்குக் காரணம் என் பொண்ணு சுஷ்மா! உங்க எல்லோருக்கும் இன்னைக்கு விருந்து ஏற்பாடாகுதுஎன்ஜாய்!”

“ரொம்ப நன்றிங்கய்யா!”

மகேஸ்வரி குறுக்கே வந்து, “எல்லோரும் போய் வேலையைக் கவனிங்க” என்று அதட்டினாள். “நீங்க குளிச்சுட்டு வாங்க, சாப்பிடலாம்!”

“உன் தம்பி எங்கே? ஆளையே காணோம்? ஏர்போர்ட்டுக்கு வருவான்னே?”

“வழியில் கார்ல ஏதோ பிரச்சனையாம். அதனால லேட்டாயிருச்சாம்!”

“ஆமாம் மாமா. சாரி!” என்று விவேக் அவருக்கு முன்னால் நிற்க முடியாமல் தலை சொரிந்தான்.

“அதெல்லாம் போகட்டும். என்னவோ எக்ஸ்போர்ட் பிசினஸ்னு சொன்னியே... எப்படி போகுது?”

“பிக்அப் ஆயிருச்சு மாமா!”

அப்போது வாசலில் டாக்ஸி வந்து நின்றது. சுஷ்மாவும் அவளுடன் சுரேஷும் இறங்க, விவேக்கின் முக்ம் இருண்டது.

சுஷ்மா, “அப்பா” என்று ஓடி வந்து கட்டிக்கொள்ள, முகுந்தன் நனைந்த்ன.

“சுஷ், எப்படியிருக்கே! எவ்ளோ வளர்ந்துட்டே நீ. மை டார்லிங்.”

மகேஸ்வரி, “ஆள் மட்டுமா வளர்ந்திருக்கா, நம்ம பேர்ல வெறுப்பும் கூடத்தான்!” என்று கழுத்தைச் சொடுக்கினாள்.

“இல்லே சித்தி, இல்லேப்பா, இனி உங்களை நான் வெறுக்க மாட்டேன். இனி நமக்கு வசந்த் காலம்.”

முகுந்தன் சுரேஷ் பக்கம் திரும்பி பார்க்க, “... ஸாரிப்பா. அறிமுகப்படுத்த மறந்துட்டேன். நான் பேர்ன்ல சொன்னேனேப்பா சுரேஷ், லெக்சரர். என்னோட ஒரே ஆறுதல் இவர்தான். கட்டுப்பெட்டியா, யார்ட்டேயும் பழகாம, பேசாம, இறுக்கமா இருந்த என்னைக் கலகலப்பாக்கினது இவர்தான்.”

“ரொம்ப நன்றி தம்பி. ஏன் நிக்கிறீங்க? விவேக், சாருக்கு நாற்காலி கொண்டு வந்து போடு!”

சுஷ்மாவிற்குக் குதூகலம் பிடிப்படவில்லை. ‘அப்பா அப்பா’ என்று அவரிடம் அப்படி ஒட்டிக்கொண்டாள். சாப்பிடும் போதும் அவரை ஒட்டிக்கொண்டு கண்கள் கலங்க்க் கலங்கச் சிரித்தாள்.

சுரேஷிற்கு அவளைப் பார்க்க விநோதமாக இருந்த்து. புத்திசாலிப் பெண். படிப்பிலும், இதர கலைகளிலும் வல்லவள். இங்கே எந்த இறுமாப்புமில்லாமல் குழந்தை போல கொண்டாடுகிறாள். பாவம், இத்தனைக் காலம் பொத்தி வைத்திருந்த பாசமெல்லாம் இப்போது கொட்டுகிறது.

“அப்பா, சாப்பிட்டதும் உங்களை ஒரு இடத்துக்கு அழைச்சுப் போகப்போறேன்...”

“எங்கே?”

“சஸ்பென்ஸ், உங்களுக்கு ஒரு கிப்ட். நீங்க அதைப் பார்த்த்தும் ஷாக்காகி அப்படியே பேச்சு மூச்சில்லாமல் போகப் போறீங்க.”

“செத்துப் போவேன்றியா?”

“அப்பா“ என்று அவரை வாயைப் பொத்திக்,

“என்ன இது அபசகுனமாட்டம்?”

“எனக்கு வயசாகுதும்மா. பிரஷர். சஸ்பென்ஸெல்லாம் என்னால் தாங்க முடியாது. சீக்கிரம் சொல்லிரு.”

சுஷ்மா சொல்ல, அவருக்கு நம்ப முடியவில்லை. அவள் சொன்னபடியே பேச்சு வரவில்லை. ஸ்தம்பித்து அமர்ந்திருந்தார்.

“செண்பகமா? நீ பார்த்தியா?”

“பார்த்தேன்பா... ஒரு அனாதைப் பள்ளியிலே...”

“ரொம்ப சந்தோஷம்மா” என்ற மூக்குக் கண்ணாடியை ஒதுக்கி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கிளம்பும்போது முகுந்தன், “மகேஸ்வரி, நீயும் வா போகலாம்” என்றார்.

“வேணாம்...நீங்க போயிட்டு வாங்க”

“செண்பகத்தைப் பார்க்கணும்னு உனக்கு ஆவலில்லையா? இல்லை, அவளை போட்டியா நினைக்கிறாயா?”

“போட்டியா... நல்ல கதை. யாருக்கு யார் போட்டி? நான்தான் இடைச்செருகல், புத்தியில்லாம குறுக்கே வந்து மாட்டிக்கிட்டு எல்லோருடைய வெறுப்பையும் சாபத்தையும் அனுபவிக்க முடியாதவள்.”

“சித்தி, பழசையெல்லாம் மறந்திருங்க. அம்மாவையும் அழைச்சு வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம். வாங்க.”

“வேணாம்மா. நீ இத்தனை அன்பா சித்தின்னு வாய் கொள்ளாம கூப்பிடறதே எனக்குப் போதும். நான் வந்தா ஒருவேளை அவங்க கோபப்படக் கூடும். பேசி சமாதானப்படுத்தி இங்கே அழைச்சி வாங்க.”

காரில் சுஷ்மா, முகுந்தனின் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவரது தோளில் சரிந்தபடி அமர்ந்திருந்தாள்.

அதிலே அவளுக்குப் பெருமிதம் அவருக்கும் ஆனந்தம்.

“அப்பா, நான் ரேங்க் ஹோல்டர் தெரியுமா உங்களுக்கு? காலேஜ் மேகஸின் எடிட்டர், பாட்டு, மியூசிக்கின்னு எல்லாத்திலையும் மெடல்ஸ் வாங்கியிருக்கேன். அப்புறம் ஸ்போர்ட்ஸ்ல கூட.”

“ரொம்ப சந்தோஷம்.”

ஆசிரம்ம்.

வண்டி உள்ளே நுழைந்த்துமே யாரோ ஓடி வந்து மறித்தார்கள்.

“யார் நீங்க? என்னவேண்டும்? யாரைப் பார்க்கணும்?” என்று ஏகப்பட்ட கேள்விகள்.

“நிர்வாகி.“‘

“அவர் ரொம்ப பிஸி. பார்க்கமுடியாது,”

“சும்மா இரண்டு நிமிஷம்... மெடிக்கல் ரிப்போர்ட் கொண்டுவந்திருக்கேன். கொடுக்கணும்.’‘

“கேட்டிலயே கொடுத்திருங்க. நாங்க சேர்ந்திடறோம்.”

“இல்லை. அப்படியெல்லாம் தரமுடியாது. மருத்துவ முகாம் மூலம் நடந்த லேப் ரிப்போர்ட். கான்பிடன்ட். நான் அவரைப் பார்த்துத் தான் கொடுக்கணும். கூப்பிடுங்க.”

சுரேஷ் அதட்டவும் செக்யூரிட்டி போனில் பேசி, “சரி, போங்க” என்று நகர்ந்தான்.

“சார், என்னதிது...திடீர் கெடுபிடி!”

“தெரியல. அனாதைப் பிள்ளைகள் இல்லம். பாதுகாப்பா இருக்கிறது நல்லதுதானே!”

பள்ளியின் சுற்றுப் பக்கம் முழுக்க அமைதி. எங்கும் ஆரவாரமில்லை. பசங்களின் நடமாட்டமே தெரியவில்லை. என்னாயிற்று? பள்ளிக்கு விடுமுறையோ?

வேலை பார்த்தவர்கள், புல் வெட்டினவர்கள் முகங்களில் கூட புன்னகையில்லை. வெறுமை, வரவேற்பறையில் நீண்ட காத்திருப்பிற்குப் பின்பு நிர்வாகி வந்தார்.

சுரேஷ் தன் கையில் கொண்டு வந்திருந்த ரிப்போர்ட் கவரைக் கொடுத்து, “இது மிஸ்டர் முகுந்தன். சுஷ்மாவின் அப்பா. மலேசியாவிலிருந்து வந்திருக்கார்” என்று அறிமுகப்படுத்தினான்.

“வணக்கம் சார்!”

“இன்னிக்கு ஸ்கூல் லீவா?”

“இல்லை...வந்து, ஆமா?”

“ஏதும் விசேஷமா”

“அப்படியெல்லாம் எதுவுமில்லை. கிளாஸ் ரூம்கள்ல மராமத்து நடக்குது. ஓடெல்லாம் ஒழுகுது. பெயிண்டிங், சுண்ணாம்புன்னு ஒரு வாரம் இழுத்திருக்கும் போல அதான்.”

“சார். நாங்க செண்பகத்தம்மாவைப் பார்க்கணும். கொஞ்சம் வரச் சொல்றீங்களா?”

அவரது முகம் உடன் கறுத்த மாதிரி இருந்த்து. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், என்ன விஷயம்?” என்றார்.

“இது என் அப்பா. அம்மாவை நாங்க பார்க்கறதுக்குப் புதுசா எதுவும் விணயம் வேணுமா? கூப்பிடுங்க சார்.”

“ஸாரி...ஒரு நிமிஷம்” என்று அவர் உள்ளே போனார்.

செண்பகம் எப்படியிருப்பாள்? எந்த மாதிரி வரவேற்பாள்? என முகுந்தன் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்.

பத்து நிமிடம் கழித்து வந்த நிர்வாகி, “ஸாரி சார்! உங்களை யாரையும் பார்க்க விருப்பமில்லேன்னும், இனி அவங்களைப் பார்க்க வரவேணாம்னும், அப்பட வந்தா இந்த ஊரைவிட்டே போயிருவேன்னும் செண்பகம் உங்கள்ட்ட சொல்லச் சொன்னாங்க,” என்றார் கடுமையாய்.

16

“சுஷ்மா அப்போ நான் புறப்படட்டுமா?”

முகுந்தன் மனமில்லாமல் கைப் பெட்டியை எடுத்தார்.

“இன்னிக்கே நீங்க போய்த்தான் ஆகணுமாப்பா?”

“ஆமாம்மா... மலேசியாவுல முக்கியமான கான்ட்ராக்ட் பேச்சு வார்த்தை நடக்குது. மந்திரிங்களோட அப்பாயிண்ட்மென்ட், நீ மனசு மாறி பிரியமாய் கூப்பிட்டியேன்னுதான் உடனே விமானத்தைப் பிடிச்சு வந்தேன்.”

சுஷ்மா அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கினாள்.

“நான் ரொம்பவே உங்களை நோகடிச்சுட்டேனில்லேப்பா.”

“பரவால்லேம்மா... இப்போதாவது நீ கிடைத்தாயே... அது போதும். அம்மாவைப் பார்க்க முடியலேங்கிற வருத்தம்தான். அது கூட சரியாயிரும். சீக்கிரம் அவளும் நம்கூட சேர்ந்திருவா. அதுக்காக்க்  கவலைப்பட்டு படிப்பைக் கெடுத்துக்காதே. சித்திக்கும் உன் அன்பைக் கொடு. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்னைக் காப்பாற்றினது அவள்தான். இந்தச் செல்வம், செல்வாக்கு, சம்பாத்தியம் எல்லாம் உன் சித்தி போட்ட பிச்சைன்னு சொல்ல்லாம்.”

மகேஸ்வரி, “என்னங்க, பெரிய பெரிய வார்த்தையாய் பேசிக்கிட்டு மனஸ்தாபம் நீங்கி ஒன்று சேர்ந்த பின்பு எதுக்குப் பழசெல்லாம். நீங்க்க் கவலைப்படாமக் கிளம்புங்க. செண்பகம் அக்காவையும் மனசு மாத்தி அங்கே அழைச்சுட்டு வரேன்

“சுஷ், எக்ஸாம் முடிந்த்தும் லீவுக்கு அங்கே வரேயில்லே?”

“ஷ்யூரப்பா! சினிமாவுல பார்த்துப் பார்த்து மலேசியாவை நேர்லயும் சுத்திப் பார்க்கணும்னு ஆசை வந்திருச்சு.”

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles