தங்கத்தாமரைப் பெண்ணே!

 

ரெஸ்டாரென்டின் மங்கிய ஒளியில் மங்கள இசை சன்னமாய் ஒலித்துக்கொண்டிருந்த்து. எதிரெதிரே சுரேஷும், சுஷ்மாவும். அவளது கண்களில் ஓர் ஆர்வம். மஞ்சள் நிலவின் ஒளிப் பிரவாகம். ஒரு குத்து முடி காதோரம் கலாட்டா செய்த்து.

“சார், நீங்க...”

“இந்த சார் ரொம்ப அந்நியப்படுத்துது. கால் மீ சுரேஷ்!”

“சரி சுரேஷ் சார், ஸாரி, சுரேஷ்!” என்று கஷ்டப்பட்டு உச்சரித்து, “நீங்க மலேசியா போயிருக்கீங்களா?”

“இல்லை. அதுக்கான வசதி வாய்ப்புகள் அமையல!”

“அமைந்தால் வருவீங்களா?”

“நிச்சயமாய்.”

“இந்த லீவுக்கு அப்பா அங்கே வரச்சொல்லியிருக்கார். விசா ரெடி. அம்மாவை நினைத்து நினைத்து அப்பாவை இத்தனை வருடங்கள் ஒதுக்கி வைத்துவிட்டேன். அவர் சந்தோஷத்திற்கு மலேசியாவுக்கு வருவதாகச் சொல்லிவிட்டேன். இங்கே இருந்தா அம்மாவைப் போய் பார்க்கத் தோன்றும். அது அவங்களுக்கு எரிச்சல் மூட்டும். எப்படியோ அம்மா உயிரோடு இருப்பது வரை திருப்தி. அவங்களுக்கும் அவகாசம் கொடுப்போம்.”

“நல்ல விஷயம். அவசியம் போய் வா!”

“நீங்களும் வரீங்க... பாஸ்போர்ட் காப்பி கொடுங்க. ஒரே நாள்ல விசா  எடுத்திடலாம்.”

“நான் எதுக்கு? உங்கப்பா தப்பா நினைப்பார்?”

“சான்ஸ்ஸே இல்லை. உங்களுக்கும் சேர்த்துத்தான் டிக்கெட்  பண்ணியிருக்கார்.”

மலேசியா.

சுரேஷுக்கு வெளிநாடு, அதுவும் விமானப் பயணம் புதுசு. படிக்கிற காலத்தில் வெளிநாட்டு வாழ் இந்திய பசங்களின் நட்பு இருந்த்து. அவர்களின் வசதி, சொகுசு பார்த்து ஏங்கினது உண்டு, நாமும் வெளிநாடு போகணும் , நிறைய சம்பாதிக்கணும், சொகுசாய் இருக்கணும் என ஆசைப்பட்டதுண்டு. து இப்போது சுஷ்மா மூலம் கைகூடி வந்திருக்கிறது.

சுஷ்மா யார்? எனக்கென்ன வேண்டும்? எதற்காக என் மேல் இத்தனை அன்பு செலுத்துகிறாள்? நான் அவளுக்கு ஆறுதலாம். நான் அவளுக்கா? இல்லை, எனக்கு அவளா? எதேச்சையாக்க் கிடைத்த அறிமுகம். இது எதுவரை நீளும்? நான் அவளது ஆசிரியன். குரு. குரு இப்படி மனம் இளகலாமா? அலையலாமா?

விமானத்தில் அவளது அண்மை சுரேஷிற்கு இனித்த்து. இருக்கைக்கு இடையில் இருந்த கைப்பிடிப்பை நிமிர்த்தி விட்டு சுஷ்மா அவனது கையைக் கோர்த்துக் கொள்ள அவனுக்குள் கதகதப்பு. .ஸி.யையும் மீறி வியர்த்த்து.

அவள் எதிர்பார்த்த்து போல சுடிதாரின் துப்பாட்டாவை எடுத்து வேர்வையை ஒத்தி எடுத்தாள்.

சாப்பாடு வந்தபோது வேண்டுமென்றே ஒவ்வொரு விதமாய் சொல்லித் தன் தட்டிலிருந்து பாதியை அவனுக்குக் கொடுத்து, அதிலிருந்து பாதியைத் தானும் எடுத்து. ஓரக்கண்ணால் சிரித்தாள். அவன் வீழ்ந்தான்.

பெண்கள் ஒருவித்த்தில் தீவிரவாதிகள். பிடிக்காதவர்களை ஒதுக்குவார்கள். பிடித்தவர், வேண்டியவர்கள் என்கிற நம்பிக்கையைப் பெற்றவிட்டால் போதும் அன்பால் கொல்லுவார்கள். அரவணைப்பால் மூச்சுமுட்ட வைப்பார்கள்.

சுரேஷ வயதிலும் அனுபவத்திலும் மூத்திருந்தாலும் கூட அவளது ஸ்பரிசத்தில் மிரண்டு போனான்.

“என்ன? என்ன அப்படி பார்க்கிறீங்க-”  

“ஓன்றுமில்லை!”

“என்னடா சாதுப்போல் இருந்தாளே இப்போ இத்தனை அலைகிறாளேன்னா! நீங்க என் உடைமைன்னு ஆகிட்ட பின் விட்ரமுடியுமா?”

சொன்னவள் கண் சிமிட்டினாள். அவனது நாடித் துடிப்பு அதிகமாயிற்று.

“உங்களுக்கு என்னென்னல்லாம் பிடிக்கும்? குடிப்பீர்களா?”

“இல்லை,” என்று மிடறு விழுங்கினான்.

‘‘உண்மையைச் சொல்லணும்.”

“இல்லை.. வந்து... படிக்கும்போது பசங்களோட சும்மா ஜாலிக்கு. அப்புறம் விட்டுட்டேன்.”

“அப்புறம் புகை?”

“அதுவும் படிக்கும்போது திருட்டுத்தனமாய் புகை மட்டுமில்ல... மயக்கமருந்தும். இப்போது எதுவுமே இல்லை..”

“ரைட். நீங்க எனக்காக எந்தச் சந்தோஷத்தையும் இழக்க வேண்டியதில்லை. அளவோடு குடிக்கலாம். அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் கூடாது. உங்கள் கட்டுப்பாட்டில் அது இருக்கணும். புகை வேண்டாம். கஞ்சா கூடாது. என்ன தெரிஞ்சுதா?”

“சரிங்க டீச்சர்!” என்று அவன் சிரிக்க அப்படியே இழுத்து அவனது கழுத்தைத் தன் மார்போடு சுட்டிக் கொண்டாள்.

புதுப் பயணம், புது மனிதர்கள், புது இடம் என்கிற உணர்வெல்ல்ம் சுஷ்மாவின் அண்மையில் பறந்து போயிற்று.

ஏர்போர்ட்.

இறங்கி ரயில் பிடித்துகி நடந்து இமிகிரேஷனில் கியூ நின்று மலேசிய மற்றும் பெண்களின் நிறத்தை மறைவாய் ரசித்து, வெளியே காத்திருந்த முகுந்தனின் காரில் கோலாலம்பூர் பயணம்.

அவனுக்கு எல்லாம் கனவுபோல் இருந்த்து. சுஷ்மா காரின் முன் சீட்டில் அமர்ந்து கொண்டு அமைதியானாள். மறுபடியும் ரொம்ப சாது.

முகுந்தனின் பங்களா.

சுரேஷிற்குத் தனியறை. பளிங்குத் தரை, பளபளக் கூரை. தடையில்ல் மின்சாரம், தாராளத் தண்ணீர்.

சுஷ்மா அவனை குகை முருகன் கோவிலுக்கு அழைத்துப் போனாள். பிரம்மாண்டமான முருகன் சிலை. அண்ணாந்து பார்த்துவியந்தான். மூச்சு வாங்கினபடி ஏறினால் ஜில்லென குகை மேலேயிருந்து சொட்டும் நீர்த் துளிகள், செடி, கொடிகள், மரங்களின் அடர்த்தி, கே..எல்டவர், லேக் கார்டன்ஸ், ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் எனச் சுற்றினர்.

கென்டிங் ஹைலேண்டிங் ரோப் காரில் இருவரும் சங்கமித்தார்கள். அங்கு  நூற்றுக்கணக்கில் இயங்கின சூதாட்டத்தில் பணம் வைத்து ஜாலிக்குத் தோற்றனர். சுஷ்மா சிங்கம், புலியின் தலையில் தலைவைத்து படம் எடுத்துக்கொண்டாள்.

துரியன் பழம். ஹார்ட், நட்ஸ் வாங்கிச் சுவைத்தார்கள். சைனா மார்க்கெட் போய் பொருட்களை அலசினர். பெட்ரோ நார்ஸ் இரட்டைக் கோபுரங்களில் உயர்ந்தனர்.

அந்தச் சந்தோஷமெல்லாம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீடித்த்து.

17

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் விருப்பு வெறுப்புகளைக் காலம், நேரம்தான் தீர்மானிக்கிறது. அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப சில காரியங்கள் பிடிக்கின்றன. சிலது பிடிக்காமல் போகின்றன.

பிடித்து பிடிக்காமல் போவதும், பிடிக்காதது பிடிப்பதும் அதிசய நிகழ்வுகள் அல்ல. காரியம் சிலவற்றை உணர்த்துகிறது, புரிய வைக்கிறது, காயப்படுத்துகிறது, அல்லது ஆற வைக்கிறது, வெற்றி ஊட்டுகிறது, அல்லது தணிக்கிறது, மனிதர்களைப் பிரிக்கிறது அல்லது பிணைக்கிறது சுஷ்மாவும் அதற்கு விதிவிலக்காக இல்லை.

அப்பா, மலேசியா என்றாலே வெறுப்பாய் இருந்தது முன்பு, இப்போதோ இனிக்கிறது.

அப்பாவின் தப்புகள் இப்போது சரியாகப்படுகின்றன, அப்பாவின் இழப்புக்கு அப்பா இப்போது ஆறுதல். அவரது அன்பு அரவணைப்பு, செல்வாக்கு, செல்வம் எல்லாம் அவளை நெகிழ வைத்தன. அத்துடன் சித்தியின் உபசரிப்பும்.

அத்துடன் புதிதாய் சுரேஷின் அண்மை, கல்லூரி ஆரம்பிப்பதால் அவன் இரண்டு நாட்களில் ஊர் திரும்பிவிட்டான்.

பத்து நாட்களில் அவளும் விமானம் ஏறும்போது மனம் கனத்தது. தாயின் இழப்புக்கு அப்பாபடும் வேதனை புர ிந்தது. “அப்பா, ஊருக்குப் போய் அம்மாவைச் சந்தித்து எப்படியும் உங்களோடு சேர்த்து வெச்சுடறேன்பா.” என்ற வாக்குக் கொடுத்திருந்தாள்.

ஹாஸ்டலுக்கு வந்ததும் எதிலும் கவனமில்லை கல்லூரி சிறப்பு மலரின் வேலைகள், ஆர்ட்ஸ் கிளப் என எல்லாம் மேஜையில் கிடந்தன.

“அம்மா, நீ ஏன் இப்படி செய்கிறாய்? அப்பா கஷ்டப்பட்ட போது கூடவே இருந்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருந்து விட்டு அவர் சவுகர்யமாய் இருக்கும்போது ஒதுங்கியிருப்பதேன்?”

ஊர் உலகத்தில் யாருமே தப்பு செய்யவில்லையா? அதுவும் அவர் சுயநலத்திற்காகச் சித்தியை ஏற்கவில்லையேநம் குடும்பம் நன்றாக இருக்கணும் என்று சம்பாதிக்க வந்த இடத்தில் சிக்கல், அதிலிருந்து விடுபட சித்தி உதவியிருக்கிறார்கள்.

பழகும்போதுதான் தெரிகிறது, அவர்களும் எவ்வnshnளோ நல்லவர்களென்று, எல்லாமிருந்தும் அவர்களுக்குச் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாத நிலைமை, அது தெரியாமல் அவர்களை நிறையவே நோகடித்திருக்கிறேன்.

“அம்மா, நீ எனக்கு வேணும். அப்பா, சித்தி எல்லோருக்கும் வேணும்.”

இரவு முழுக்க அவளால் தூங்க முடியவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்து வேகமாய் குளியல்!

வெளியே பனிச்சிதறல்கள். மரம், செடி, கொடிகள் குளிருக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டிருக்க, சுஷ்மா வேகமாய் நடந்தாள். காய்கறி, பால், பேப்பர் வண்டி என ஹாஸ்டலில், வாகனங்கள் வரும் போகும் என்பதால் கேட் திறந்து கிடந்தது. அந்த நேரம் கட்டுப்பாடு கிடையாது.

ஆசிரியர்கள் குடியிருப்பு.

சில வீடுகளில் வெளிச்சம், திருப்பாவை, திருவெம்பாவை ஒலி, வாசலில் கோலம், பரங்கிப்பூ என சிங்காரமாமயிருந்தது.

சுரேஷிற்குப் புதிதாய் ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் வெறிச், இலை தழைகள் உதிர்ந்து, அடித்து வரப்படாமல் வாசலில் குப்பை, நமுத்துப் போன இலைகளை மிதித்துக் கதவைத் தட்டினாள். பெல்லடித்து பொறுமையின்றி “சுரேஷ்...சார்...சார்!”

கதவைக் குளிருக்குப் பயந்து திறந்த சுரேஷ் கம்பளி போர்த்தி கொட்டாவி விட்டு கசக்கினாள். யார் என்று யோசிப்பதற்குள் அவள் உள்ளே புகுந்து ஸ்விட்ச் தேடி லைட்டைப் போட்டாள். உள்ளே குப்பென உஷ்ணம்.

“சுஷ்மா! எப்போ வந்தே நீ!”

“நேற்று! அப்போ என் ஞாபகம் இருக்கு! போன் பண்ணலே, நான் எப்படி இருக்கேன் எப்போ வரேன்னு கவலைப்படலே!”

அவன் என்னவோ சொல்ல வர, “தெரியும். நான் போன் பண்ணியிருக்கலாமேன்னு சொல்ல வரீங்க... அதானே! எத்தனையோ தடவை முயற்சி பண்ணேன். செல் ரீச் ஆகலே!“

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles