தங்கத்தாமரைப் பெண்ணே!

 

எங்கள் கிராமத்துல டவர் எடுக்காது சுஷ்! அது போகட்டும், என்ன இத்தனை காலையில...? டீ போடட்டுமா...?”

“வேணாம், நான் அதுக்காக வரலே!”

“பின்னே?”

“உடனே கிளம்புங்க! என் அம்மாவைப் போய்ப் பார்க்கணும்!”

“அவங்கதான் வரமுடியாதுன்னுட்டாங்களே!”     

“இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும், எனக்கென்னவோ அந்த நிர்வாகி அம்மாவை நெUYருங்கி விடாம சதி பண்றதா தெரியுது!”

“அவர் ஏன்? அதுல அவருக்கென்ன லாபம்?”

“சும்மா தர்க்கம் பண்ணிக்கிட்டிருக்காம கிளம்புங்க!”

“இன்னிக்கு எனக்கு கிளாஸ் இருக்கு!”

“கட் அடிங்க!”

“நல்ல கதை!” சுரேஷ் சிரித்தான். “நான் என்ன ஸ்டூடண்டா, கட் அடிக்க?”

“அப்போ என்னைவிட உங்களுக்கு கிளாஸ்தான் முக்கியமாகப் போச்சு?”

“அப்படியில்லே, இருந்தாலும் அதுக்காகத்தானே எனக்குச் சம்பளம் தராங்க!”

“எதுவும் பேசக்கூடாது. இந்தாங்க!” என்று  டூத் பிரஷ் எடுத்து, பேஸ்ட் வைத்து, துண்டை எடுத்து அவன் தோளில் போட்டு “ம்... சீக்கிரம் எல்லாம் ஆகட்டும்” என்று விரட்டினாள். அவனுக்கு அவளது உரிமையும் அந்தக் கண்டிப்பும் பிடித்திருந்தது.

அவன் ரெடியாகி வருவதற்குள் பைக் ரெடியாக இருந்தது.

“இதிலா? வேணாம்!”

“ஏன்?”

“ஆசிரியர் குடியிருப்பில் சேர்ந்து போவதைப் பார்த்தால் கதாகாலட்சேபமாயிடும். நீ முன்னால் போ. வெளியே ஆட்டோ பிடிச்சுக்கலாம்.”

அனாதைப் பிள்ளைகள் இல்லம்.

சுரேஷையும் சுஷ்மாவையும் பார்த்ததுமே நிர்வாகியின் முகம் சிவந்து போயிற்று. “எங்கே வந்தீர்கள்என்றார் வெறுப்புடன்.

“எங்கம்மா... !”

“அம்...மா.. ! நீங்க அடி எடுத்து வச்சதிலிருந்து இங்கே ஒரே பிரச்சனை! எங்களை நிம்மதியா செயல்பட விடமாட்டீங்களா?”

“என்ன பிரச்சனை... நாங்க என்ன பண்றோம்?”

“அதெல்லாம் உங்களுக்கு ஏன்? ஆதரவற்ற பிள்ளைகள், முதியோர்கள், தொட்டில் குழந்தைகள்னு பராமரிக்கிறதுல, பாதுகாக்கிறதுல உள்ள கஷ்டநஷ்டங்கள் உங்களுக்குத் தெரியாது. சொன்னாலும் புரியாது. எனக்கு நிறைய வேலை இருக்கு.”

அவர் சொல்லிட்டு நடக்க, “சார், உங்கள் சேவைகள் புரியுது. சுயநலமில்லாம உழைப்பது கஷ்டம்தான். ஆனா அதுல நாங்க குறுக்கிட வரலியே... என் அம்மா... அவங்க என்னைப் பெத்தவங்கிறதை நம்பலேன்னா எப்படி?”

“நான் நம்பறேன். எனக்கு எல்லாம் தெரியும். ஆயா சொன்னாங்க...”

“எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுமா என்னை அவாய்ட் பண்றீங்க..?”

“என்ன பண்றது? ஆயா சொல்லும்போது நான் மறுக்க முடியுமா? உங்கப்பா தப்பு பண்ணப்போ ஆரம்பத்துல உங்கம்மாவுக்கும் கோபம். ஆவேசம், அப்புறம் யோசிச்சுப் பார்த்தப்போ, ஆயாவிடம் வளர்வதைவிட...”

“செண்பகம்!” 

“யெஸ்...யெஸ்...செண்பகத்திடம் நீ வளர்வதைவிட, உனக்கு மலேசியாவுல சித்திதான் சரி. உன் படிப்பு, எதிர்காலம், வசதி வாய்ப்புகள் அங்கே நல்லாருக்கும்னுதான் செண்பகம் விட்டுக் கொடுத்தாங்க.”

“அதுக்காக? பெத்த மகளை விவரம் புரியாத அந்தச் சின்ன வயசுல விட்டுட்டு ஓடிப் போகணும?”

“எல்லாம் காரணமாய்தான். கூட இருந்தா, உனக்குக் கஷ்டம், அம்மாவின் மேல் உள்ள பாசம் அந்தப் பக்கம் வெறுப்பை வளர்க்கும், அப்பாவுடன் நீ போக மறுக்கலாம். சித்திமேல ஈடுபாடு வராம போகலாம். அதனால உன்னை விட்டுப்போயிட்டா, வளர வளர, காலப்போக்கில் நீ அம்மாவை மறக்கலாம். வங்களையும் ஏத்துக்குவாய்னுதான் ஒதுங்கி வந்துட்டாங்க. அவங்க அவங்க உனக்குச் செய்ய முடியாத பணிவிடைக்குப் பரிகாரம் தேடத்தான். இங்கே இத்தனைக் குழந்தைகளுக்குச் சேவகம் செஞ்சுவராங்க. அந்தத் தியாகத்தை நீ புரிஞ்சுக்கணும்.”

“தியாகம், மண்ணாங்கட்டி, யாருக்கு வேணும் இந்த மாதிரி தியாகம்? சார், எங்கம்மாவைக் கூப்பிடுங்க. நான் உடனே பார்த்தாகணும்.”

“அது முடியாது!”

“முடியாதுன்னா எழுதிக் கொடுங்க... நான் போலீஸுக்குப் போறேன். கேபியஸ்கார்ப் கோர்ட்டுல போட்டு உங்களைக் கூண்டில் ஏத்தறேன்.”

சுஷ்மாவின் ஆவேசத்தில் சுஷ்மாவின் ஆவேசத்தில் சுரேஷ் கூட மிரண்டு போனான். நிர்வாகி அவளை அனுசரணையாய்ப் பார்த்து, “சுஷமா, உன் அன்பும் ஆவேசமும் புரியுது. நான் அவங்களைப் பார்க்க முடியாதுன்னு சொல்லி மறுக்கலே. நிஜமாலுமே நீ அவங்களைப் பார்க்க முடியாது!”

“அதுதான் ஏன்னேன்?”

“செண்பகம் இங்கே இல்லே.”

“எங்க?”

“தெரியாது. யார்ட்டயும் சொல்ல்ம எங்கோ போயிட்டாங்க.”

18

நிர்வாகி பொய் சொல்லுகிறார். தங்களைத் தவிர்க்கப் பார்க்கிறார் என்று தான் சுஷ்மா முதலில் நினைத்தாள். அதை அவர் புரிந்துகொண்டு, “என் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கையில்லேன்னு தோணுது, வேணுமானால் உள்ளே போய் யாரை வேணுமானாலும் விசாரிச்சுப் பாருங்க. அவங்க இல்லாம பசங்க வாடிப் போயிருக்காங்க

அது உண்மை என்பது பலரின் வார்த்தைகளிலும் வருத்தங்களிலும் அங்கே வெளிப்பட்டது.

“எவ்ளோ நாளா காணோம்?”

“ரெண்டு வாரம்.”

சுரேஷ், “போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தீங்களா?” என்று விரைத்தான்.

“இல்லை.”

“ஏன்? எங்கம்மா அத்தனைக்கு எளப்பமா போயிட்டாங்களா?”

“அப்படியில்லேம்மா. ஒண்ணு அவங்க திரும்பி வந்திருவாங்கன்னு நினைச்சோம். அடுத்தது போலீசுக்குப் போனால், ஆசிரமத்தின் பெயர் கெட்டிடும். அவங்களுக்கு எந்த ஆபத்தும் வருகிற அளவுக்கு எதிரிங்க யாரும் கிடையாது. நல்லதையே நினைத்து நல்லதையே செய்கிற அவங்களுக்கு எதிரின்னு யாரும் இருக்க முடியாதுன்னு நம்பறேன்.”

“அப்புறம் எப்படி?”

“சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது. செண்பகம் இங்கே இருப்பது உங்களுக்குத் தெரிஞ்சுப் போச்சு. அதனால அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுவீங்கன்னு நினைச்சு தலைமறைவாகியிருக்கலாம்.”

சுஷ்மாவிற்கு அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. அழுகை பொங்கிக் கொண்டுவர,

“சுஷ், வா போகலாம்.” என்று சுரேஷ் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

மருத்துவக் கல்லூரி.

அன்று அனாடமி வகுப்பு.

சென்ற மாதம் இதற்காக இறந்த உடல் கிடைக்காமல், தற்போது கிடைத்து மாணவர்கள் தயாராக இருந்தனர். பொதுப்பிரிவு, பரிவு, பல், கண், காது என அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் முதலாமாண்டில் இந்த அனாடமி பாடம் உண்டு.

அரசாங்கக் கல்லூரிகளுக்குப் பிரச்சினையில்லை. அரசு மருத்துவமனையிலிருந்து உடல்கள் கிடைத்துவிடும். தனியார் கல்லூரிகளுக்கு இது எப்போதும் பிரச்சினை. சாதாரணமாய் எட்டு அல்லது பத்து மாணவர்களுக்கு ஒரு உடல் என ஒதுக்குவார்கள்.

இப்போது...நன்றாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஆங்காங்கே உடல்கள் கிடக்க, அறை ஒன்றிற்குள்...

டாக்டர் பிஜு மாணவ, மாணவிகளுக்கு அனாடமி பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். சுஷ்மாவின் முகம் களையிழந்திருந்தது, சுரேஷ் இந்த வகுப்பு எடுக்க வந்திருக்கலாமே என்று தோன்றிற்று.

டாக்டர் பிஜு சூழ்ந்திருந்தவர்களுக்கு டேபிள்மேல் விரைத்துக் கிடந்த உடலை எப்படியெப்படிக் கீற வேண்டும், என்னென்ன திசுககள், செல்கள், நரம்புகளைப் பிரிக்க வேண்டும், எப்படி வெட்ட வேண்டும் என்று விளக்கிச் சொன்னார்.

“ஹோப் எவ்ரிபடி அன்டர்ஸ்டான் நவ் டேக் யுவர் டூல்ஸ் அன்ட் கிட்ஸ்! குரூப் குரூப்பா அவங்கவங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாடியைப் போய் பரிசோதிக்கலாம்.”   

சுஷ்மா தன் குழுமத்துடன் ஒரு அறைக்குள் பிரவேத்தாள். அங்கேயும் உடல் ஒன்று விரைத்து மேஜைமேல் கிடந்ததுப்ரீஸியரின் பனிப் புகை. தலை மழிக்கப்பட்டு, உச்சி முதல் பாதம் வரை ஒரே நிலைமை.

“சுஷ்மா, நீ ஆரம்பிக்கிறாயா? நாங்க டீ சாப்பிட்டு வந்திடறோம்.”

“யெஸ்” என்று சுவாரஸ்யமில்லாமல் கையுறை எடுத்து மாட்டினாள். முகத்துக்கு மாஸ்க்.

‘அம்மா, நீ எங்கேயிருக்கிறாய்? குளிர் அதிகமாகத் தெரியவே கோட் பொத்தான்களைப் போட்டாள். அம்மா, ஏன் இப்படிப் பண்ணுகிறாய் நீ?’

கிட்ஸ் பெட்டியைத் திறந்து கத்தி, கத்திரிக்கோல், கத்தியை எடுத்து அந்த உடலின் மண்டைப் பகுதிக்குக் கொண்டுபோனவள்...

“அம்மா... !” என்று அலறினாள்.

அந்த அலறல் பிண அறை முழுக்க எதிரொலித்து, டீ குடிக்கப் போனவர்களையும் பிற அறைகளில் இருந்தவர்களையும் மிரள வைத்து, “என்ன, என்ன?” என்று ஓடி வந்தனர்.

“அம்மா!”

“இங்கேயும் ஆரம்பிச்சுட்டாயா? கடவுளே, கடவுளே! உனக்கு அம்மா வேணும்னா சொல்லு. வெளியே கடைல வாங்கித் தறோம். வீணா எங்களை டார்ச்சர் பண்ணாதே!”

“நோ! திஸ் ஈஸ் மை மம்!”

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles