தங்கத்தாமரைப் பெண்ணே!

 

ஆர் யூ மேட்-”

“ப்ளீஸ்... பிலீவ் மீ...இது என் அம்மாதான்!” என்று அந்த உடலின் முகத்தைப் பற்றப் போனவள், மயங்கிக் கீழே சாய்ந்தாள்.

“ஏய், பிடிங்கப்பா. யாரைப் பார்த்தாலும் இவளுக்கு அம்மா நினைப்பு. தூக்குங்க கிளினிக்குக்கு. இன்னிக்கும் அனாடமி... பனாடமிதான்!”

கிளினிக்!

அதே கல்லூரியின் விளிம்பில் பளபளப்பும் பணக்காரத்தனமுமாய் வார்டு முழுக்க நோயாளிகளும் நர்ஸ்களுமாய் நிரம்பிருந்தனர்.

“டாக்டர் சுரேஷ், அம்மா கண் திறந்துட்டாங்க!” என்க, “இதோ வந்துட்டேன்” என்ற செல்போனை நிறுத்தி விட்டு உள்ளே ஓடினான்.

அந்தப் படுக்கைக்குச் சென்று எழ முயன்ற சுஷ்மாவை, “தட்ஸ் ஓக்கே” என்று தலையில் பிடித்து அமர்த்தினான். “ஆர் யு ஆல் ரைட்?”

“யெஸ்” என்று கண்கலங்கினாள்.

“அது நிச்சயமாய் என் அம்மாதான்! சொன்னா யாரும் என்னை நம்பமாட்டேன்றாங்க. பைத்தியக்காரி பட்டம்... சுரேஷ் நீங்களாவது..”

“ஐ பிலீவ்! நீ எதைப் பத்தியும் ஒர்ரி பண்ணிக்காம ரெஸ்ட் எடு!”

“நோ, சும்மா என்னைச் சமாதானப்படுத்தறதுக்காகச் சொல்ல வேணாம். தட்ஸ் மை மம்!”

“சுஷ், வி அக்ரி. விசாரிச்சாச்சு. ஏற்கனவே போலீஸுக்குச் சொல்லி இன்ஸ்பெக்டர் விஜய் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார். உன்கிட்ட பேசணுமாம். வரச் சொல்லட்டா?”

இன்ஸ்பெக்டர் பதவிக்குப் பொருந்தாமல் தொப்பையின்றி நரையின்றி விஜ்ய் இளமையாய்த் தெரிந்தான். அவனது கண்களில் ஆர்வமும் கனிவும் கசிய, அவளது படுக்கையருகே நாற்காலி போட்டு அமர்ந்தான்.

அவள் அவநம்பிக்கையோடு சுரேஷைப் பார்க்க...

“சுஷ்மா, நான் டாக்டர் சுரேஷின் நண்பன்தான். நாங்க எல்லாம் விசாரிச்சுட்டோம். யு ஆர் ரைட். நீ பயந்தது போலவே அது உங்கம்மாதான். அந்த ஆசிரமத்தின் நிர்வாகியும் இங்கே வந்து அதை உறுதிப்படுத்திட்டார்.”.

அதைக் கேட்டதும் சுஷ்மா கண்களை மூடிக்கொண்டு விம்ம ஆரம்பித்தாள்.

“மை மாம். எங்கம்மா... வாட் ஹேப்பன்ட் டு ஹர்...?”

“தெரியல. கண்டுபிடிப்போம். அவங்க ஆசிரமத்தை விட்டுப்போய் இரண்டு வாரத்துககு மேலாச்சாம், நிர்வாகியும் அங்கு பணிபுரிபவர்களும் சொன்னாங்க. அதற்குப் பிறகு அவங்க எங்கே போனாங்க? என்னாச்சு... எப்படி இங்கே வந்தாங்கன்னு விசாரிக்கணும்?”

“அதோட...எப்படி இறந்தாங்கன்னும் கூட தெரிஞ்சாகணும் சார்?”

“சுஷ்மா என்ன சொல்ற நீ?”

“யெஸ். ப்யூர்லி இட்ஸ் எ மர்டர்?”

“வாட் ஆர் யு டாக்கிங். வயசானவங்க. அவங்களைப் போய் யார் கொலை? என்ன மோட்டிவ்?”

“அது எனக்குத் தெரியாது. ஆனா அவங்க நார்மலா சாகலே. அது மட்டும் உறுதி!”

“எதை வச்சு சொல்கிறாய்?”

“அவங்க மண்டைல அடிபட்ட தழும்பு இருந்தது. நான் பார்த்தேன்.”

“தழும்பு? இறந்து பதப்படுத்தப்பட்ட உடலின் மண்டையில் தழும்பு? ஈஸ்ட் பாஸிபிள்?”

“விஜய் சுரேஷைக் கேட்க, அங்கே ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்த டாக்டர் ஒருவர், “சார், நான் என் அபிப்பிராயத்தைச் சொல்லலாமா?” என்றார்.

விஜய் அவரை வேண்டாதவராய்ப் பார்க்க, “ஐம் டாக்டர் மனோகரன். இங்கே சீனியர்,” என்று கை கொடுத்தார். “உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, என் அறைக்கு வந்தால் எல்லாத்தையும் உங்களுக்கு நான் விளக்கமாகச் சொல்ல முடியும்.”

“வித் ப்ளஷர்” என்று விஜ்ய் அவரைப் பின் தொடர்ந்தான்.

19

டாக்டர் மனோகரன் தன் அறையில் ஏ.ஸி.யை ஆன் பண்ணிவிட்டு, “ப்ளீஸ், டேக் யுவர் சீட்!” என்றார். “சுரேஷ் நீயும்தான்!” அவன் தயங்க, “ஜூனியர்னா என்ன... பரவாயில்லே உட்கார்” என்று அழைப்பு மணியை அழுத்தினார்.

பளிச்சென, பளபளப்பாய் எட்டிப் பார்த்த மலையாள நர்சிடம். “கொஞ்ச நேரத்திற்கு நோ பேஷன்ட்ஸ் ப்ளீஸ்!”

“ஓ.கே. டாக்டர்!”

“இன்ஸ்பெக்டர் என்ன யோசனை? உங்க சந்தேகம் தழும்புதானே?”

“யெஸ் டாக்டர். கெமிக்கல் போட்டு பதப்படுத்திதானே பாடி அனாடமிக்கு வரும்? அப்புறம் தழும்பு எப்படி?”

“கெமிக்கல் அதாவது பார்மால்ஹைட் திரவம் குறிப்பிட்ட அடர்த்தியில் சில பிரத் யேக்க் கருவிகளை வெச்சு உடம்புல இன்ஜெக்ட் பண்ணுவாங்க அது எதுக்குன்னா, இறந்துபோன உடல்ல இருக்கிற இன்டர்னல் ஆர்கன்ஸ் கெடாமல் இருப்பதற்கு. அது இல்லேன்னா ரத்தத்துல இருக்கிற பாக்டீரியா சிதைஞ்சு நாத்தம் எடுக்க ஆரம்பிச்சிரும். இந்த கெமிக்கல் ரத்த நாளங்களில் பரவி ரத்தம் சிதையாம பார்த்துக்கும்.

அதனால் அடிபட்ட ரத்தம் வந்திருந்தாலும்கூட ரத்தம் வெளியே இப்போ வராது. ஆனால் அடிபட்ட தழும்பு வெளிப்புறத்தல அப்படியேதானிருக்கும். இந்த மாதிரி கெமிக்கல் இன்ஜெக்ட் பண்றதை எம்பால்மிங்னு சொல்லுவாங்க. இதை வெளியே அவ்வளவு எளிதாய் செஞ்சுட முடியாது.”

“இந்த பார்மால்டிஹைட் கெமிக்கல் உள்ளே கொடுக்க மட்டும் தானா டாக்டர்...?”

“இல்லை. கொஞ்சம் கான்ஸன்ட்ரேஷன் குறைச்சு இறந்து போன உடம்புல வெளியேயும் தடவுவதுண்டு, இதன் மூலம் தோல் கெடாமல் இருப்பதுடன் நாற்றமடிக்காமலும் பாதுகாக்கப்படுது.”

“அனாடமிக்கு இந்த மாதிரி உடல்கள் எங்கிருந்து கிடைக்குது டாக்டர்?”

“பெரும்பாலும் ஜி.எச்.சில் இருந்து சப்ளையாகும். விபதுல இறந்தவங்க, அனாதைங்க பிணத்தை வாங்கிக் ஆள் இல்லாம இருந்தா அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிச்சிடுவாங்க. அப்புறம் ரத்ததானம், கண்தானம் போல உடல் தானம் செய்றவங்களும் உண்டு.”

“இந்தச் செண்பகத்தம்மாவோட உடல் எப்படி? ஜி.எச்.சில் இருந்துதான் வந்ததா...?”

“தெரியல. விசாரிக்கணும். பெரும்பாலும் அரசாங்க மருத்துவமனைகளில் இறந்த உடல்களுக்குப் பிரச்சினையிருக்காது. எங்களை மாதிரி தனியார் கல்லூரிகளில்தான் பிரச்சினை. டிமாண்ட் அதிகம். பாடி சப்ளை பண்ணுவதுக்குன்னு மீடியேட்டர்கள், புரோக்கர்கள் இருக்கிறார்கள். சமயத்தில் மாணவர்களே கூட அவர்களுடைய முயற்சியில் ஏற்பாடு செய்வதுண்டு. இப்போ இந்தம்மாவின் மண்டையில் அடிபட்ட தழும்பு இருக்கும்பட்சத்தில் அது கொலைதான்னு எப்படி எடுத்துக்க முடியும்? தவறிக் கீழே விழுந்து மண்டையில் அடிபடவும் வாய்ப் பிருக்கில்லே?”

“இருக்கு. போஸ்ட்மார்ட்டம் செஞ்சு பார்த்திருப்பாங்களே!”

ஒரு வாரம் மாணவர்களிடையே பரபரப்பாயும் திரில்லாகவும் ஓடிப் போயிருந்தது. போஸ்ட்மார்ட்டம் செண்பகத்தின் மண்டையில் தாக்கப்பட்டு அவள் மூர்ச்சையாகி விழுந்து இறந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என வானிலை அறிக்கைபோல குழப்பிற்று.

அந்த உடல் அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட வில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

பிறகு எப்படி?

விஜய், அனாடமி அசிஸ்டென்ட்டை குடைய, “இது ஒரு வாரம் முன்புதான் சார் எங்களுக்குக் கிடைத்தது” என்றார்.

“எப்படி?”

“அட்டெண்டருக்குத்தான் அந்த விவரம் தெரியும்.”

“அட்டெண்டர் எங்கே?”

“அவர் லீவு சார்!”

“எப்போதிருந்து?”

சுஷ்மா மயங்கி விழுந்து விஷயம் வெளியான நாளுக்கு மறுதினத்தில் இருந்து அவர் எமர்ஜென்ஸி விடுப்பில் சென்றிருப்பதும் தெரிந்தது.

“அட்டெண்டரோட வீட்டு விலாசம் தர முடியுமா?”

தந்தார்கள். ஆனால் இன்ஸ்பெக்டர் விஜய்க்கு அங்கே ஏமாற்றமே மிச்சம். அவர் குடும்பத்துடன் ஊருக்குப் போய் விட்டதாய் அக்கம் பக்க வீட்டினர் தெரிவித்து, “என்ன விஷயம் சார்?” என்று ஊர் வம்பிற்கு அலைந்தனர்.

இந்த ரூட் இனி சரிப்படாது. வேறு மார்க்கத்தில் விசாரணையைத் தொடரவேண்டும். எங்கே ஆரம்பிப்பது? எப்படி கொண்டு போவது?

சுஷ்மா ஒரு வாரமாய் மிகவும் உடைந்து போயிருந்தாள். எதிலும் சிரத்தையில்லாமல் வகுப்பிலும் கவனமல்லாமல் இருந்தவளைப் பார்க்க சுரேஷிற்குக் கஷ்டமாயிற்று.

‘அம்மா, அம்மா’ என்று உருகுகிறாள். அம்மாவைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் மிதந்தாள். கைக் கொட்டியது வாய்க்கெட்டாமல் போயிற்று. இதற்கு அவளைப் பார்க்காமலே இருந்திருக்கலாம்.

மலேசியாவிலுள்ள முகுந்தனுக்குத் தகவல் போய் அவர் அடுத்த விமானத்தைப் பிடித்து வந்திருந்தார். செண்பகத்தின் உடலைப் பார்த்துப் பொங்கி அவர் அழுத்து சங்கடமாயிற்று.

பெரியவர், பணக்காரர், பிசினஸ்மேன், எவ்வளவோ பேர்களுக்கு வேலை கொடுப்பவர், இத்தனை சாதுவா என வியப்பு.

“சுரேஷ், என்ன இதெல்லாம்? நீங்க இருக்கீங்கங்கிற தெம்பில் இருந்தேன். எப்படி? என் மனைவிக்கு இப்படி?”

“தெரியல சார். போலீஸ் தீவிரமாய் விசாரிச்சுக்கிட்டிருக்கு.”

“இல்லை. போலீசை மட்டும் நம்பி பிரயோஜனமில்லை. நீங்களும் களத்தில் இறங்கணும். எனக்கு மனைவி இல்லேங்கிறது ஏற்கனவே முடிவாகிப் போச்சு. நான் கவலைப்படறதெல்லாம் சுஷ்மாவுக்காகத்தான். அவளோட கண்ணீர் என்னைக் கலக்குது. கரைக்குது. மீண்டும் அவளை நான் புத்துணர்வோட பார்க்கணும்.”

அன்று மாலை.

சுரேஷ், சுஷ்மாவைத் தன் குவார்ட்டர்ஸிற்கு அழைத்திருந்தான். முன்பெல்லாம் அவள் வந்தால் யாராவது பார்த்தால் தப்பாய் பேசுவார்கள் என்கிற பயமிருக்கும்.

இப்போது அதில்லை. யாருக்குப் பயப்படணும்? அவளது தந்தையே அவளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்.

வீட்டுக்கு வந்ததும் சுஷ்மா சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய், என்ன இது? இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி?”

அவள் பதில் சொல்லவில்லை.

“காலேஜ் மேகஸின் வேலையெல்லாம் அப்படியே இருக்காமே... பிரன்சிபால் ரொம்ப வருத்தப்பட்டார்”

“சுரேஷ்... என் அம்மா...”

“சின்னக் குழந்தையா நீ? தோ பார், நீ அழுதா நல்லாயில்லே. உனக்கு ஆண்டவன் அழகைக் கொடுத்திருக்கான். அறிவைக் கொடுத்திருக்கான். அதைக் காப்பாத்திக்கணும். எப்போதும் மலர்ச்சியா இருக்கணும். அதைவிட முக்கியமா நான் நினைக்கிறது உன் திறமை! பாட்டு, எழுத்து, நடனம், பேச்சு, ஓவியம்னு உங்கிட்ட உள்ள திறமைகள் தானே வந்த்ததில்லை. நீயே கஷ்டப்பட்டு, ஆர்வப்பட்டு முயற்சி பண்ணி உருவாக்கினது. உன் அழகைவிட ஐ அட்மையர் யுவர் டேலன்ட்ஸ். அது எக்காரணம் கொண்டும் பாழாகிடக் கூடாது.”

சுரேஷ் அவளிடம் ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் அலறிற்று. எதிர்முனையில் இன்ஸ்பெக்டர் விஜய், “டாக்டர், அந்தம்மா கேஸில் ஒரு புது திருப்பம்” என்றார்.

20

 “சுரேஷ் ஆவல் தாங்காமல்,  “என்ன... என்ன அது திருப்பம்?” என்றான்.

மறுமுனையில் இன்ஸ்பெக்டர் விஜய் சிரித்தபடி, “புதுத் தகவல் கிடைச்சிருக்கு... எனக்கென்னவோ நம் விசாரணைக்கு இது பயன்படும்னு தோணுது!”

“என்ன அதுன்னு இன்னும் நீங்க சொல்லலே!”

“அவசரமா நான் வெளியே கிளம்பிக்கிட்டிருக்கேன். நேரில் பேசுவோமே!” அவர் வைத்துவிட. சுரேஷிற்கு ஏமாற்றம்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles