தங்கத்தாமரைப் பெண்ணே!

 

“செய்வோம் சார்!” என கோரஸ்.

“குட். இப்போது நீங்கள் சாப்பிடப் போகலாம்.”

“நன்றி சார்!” பசங்கள் மறுபடி கிறு பிடித்தனர். ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அவர்களை ஒழுங்குபடுத்த...

“பாய்ஸ், வெயிட்... வெயிட்... ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்...” என்க... எல்லோரும் அப்படியே நின்றனர்.

“வருகிற ஞாயிற்றுக்கிழமை பக்கத்து மருத்துவமனையிலிருந்து இலவச மருத்துவ முகாம் நடத்த இருக்கிறார்கள். எல்லோரும் தவறாமல் பிரசன்ட் ஆகணும்.”

டைனிங் ஹால்.

அங்கே பசங்கள் கியூ பிடித்து நின்றனர். பெரிய பெரிய பாத்திரங்களில் சாப்பாடு, சாம்பார், ரசம் ஆவி பறந்தது. ஆயா பரிமாற, “ஆயா, இன்னிக்கும் சாப்பாடுதானா? டிபன் இல்லியா?” என்று முணுமுணுத்தனர்.

“நாளைக்குப் பூரி மசால். போதுமா?”

“தேக்ஸ் ஆயா!” என்று வாண்டு ஒன்று அவளை அணைத்து முத்தமிட ஆயா தெற்றுப்பல் தெரிய சிரித்தாள். அவள்தான் அங்கு மெஸ் பொறுப்பாளி. இருந்தாலும் கூட சாப்பாட்டுக்கு இல்லாதவள் போல மெலிந்திருந்தாள். கண்கள் ஒட்டி, கருவளையம். முடிவிசிறி கூன் விழா குறை.

தலைமை ஆசிரியர்கூட அவளைத் திட்டுவார். “ஏன் இப்படி இருக்கே? ஒழுங்கா சாப்பிடு.”

“நிறையதான் சாப்பிடறேன்”

“அப்போ எல்லாம் எங்கே போகுது?”

“உனக்கு ஒரு செக்கப் பண்ணணும். டவுனுக்குப் போயிட்டு வரியா?”

“வேணாம். அதான் மருத்துவ முகாம் வருதே பார்த்துக்கலாம்!”

பளபளவென விடியும் நேரம். பல் மருத்துவக் கல்லூரியின் ஜூனியர் மாணவர்களின் விடுதிப் பிரிவில் தடதடவென சப்தம்.

பசங்கள் பெர்முடாலும் பனியனுமாய் அறை அறையாய் தட்டி...

அங்கே பயத்துடன் எண்ணெய் வழிந்து படுக்கையுடன் லுங்கியையும் வாரிச் சுருட்டி எழுந்தவர்களை அள்ளிக்கொண்டு ஜிம்மிற்கு வந்தனர்.

தூரத்தில் ரயிலின் தடக் தடக் கட்டிடத்தில் எதிரொலித்த்து. மெஸ்ஸிலிருந்து பொங்கல் வாசம். ஜிம்மில் சதைப் பிடித்தவர்களும் சதையைப் பிடிக்காதவர்களும் சாகசம். மைதானத்தில் பசங்களின் ஜாக்கிங். அங்கிருந்து பெண்கள் விடுதிக்குக் கண் தூது.

நம்மாளு வர்றாளா... தென்படறாளா...

சுந்தர் பைக்கின் மேல் அமர்ந்துகொண்டு மீசை துளிர்த்த துவண்ட், மிரண்ட புதியவர்களை. ” “ஏய், கண்ணுங்களா வரிசையாய் நில்லுங்க.” என்று அன்பொழுக விரட்டினான்.

அவர்களுக்கு ஏற்கெனவே காலை நேரத்து வயிறு கலக்கல். அத்துடன் ‘ராகிங்’ என்பதும் புரிய... இவர்கள் நம்மை என்ன செய்யப் போகிறார்கள்...? மருத்துவமே வேணாம் என ஓடிரலாமா? என்கிற அச்சத்தில் அவர்களுக்கு மூ... முட்டியது.

அதிகாலையிலேயே வியர்ப்பு... இவர்கள் என்ன செய்வார்கள்? அடிப்பார்களா? விரவில் ஊசி? பேப்பர்களில் படித்திருக்கிறோமே. நிர்வாணமாய் ஓடவிடுவார்களா? தரையில் நீச்சடிக்கச் சொல்வார்களா? சீனியர் பெண்களிடம் போய் ஜ லவ் யூ சொல்லச் சொல்வார்களா? துணி துவைத்து. இஸ்திரி போடனுமா?

“ஏய், இவங்களை என்ன பண்ணச் சொல்லலாம்? ” ஜானி கோட்டான்.

“போடா ஒன்பது! தம்பிகளுக்கு வித்யாசமாய் புதுமையாய் ஒரு பயிற்சி.”

“பயிற்சியா...?”

“ஆமாம். விடலைப்பசங்கள். வெறும் படிப்பு படிப்புன்னு புத்தகப் புழுவாய் இருந்தால் எப்படி? வெளி உலகம் தெரிய வேணாம்? நாளைக்கு அப்புறம் எப்படி வெளியே வேலைக்குப் போறது, குடும்பம் நடத்தறது? எங்கே போனாலும் முன் அனுபவம் கேட்பாங்களே... கல்யாணத்துக்கம்! ஹா..ஹா...”

பசங்கள் எதுவும் விளங்காமல் ஒருவரை ஒருவர் பாத்துக் கொண்டனர். இந்தக் காலேஜிலும், ஹாஸ்டலிலும் ராக்கிங் கிடையாதுன்னு சொன்னாங்களே! அதை நம்பித்தானே இங்கே சேர்ந்தோம்?

இந்த வார்டன் எங்கே போய் ஒழிந்தான்?

ஜானி அருகில் கிடந்த குப்பையைக் காட்டி, “கூட்டுங்கடா!” என்றான்.

ஆஹா! இவ்ளோதானா... என்று சந்தோஷத்துடன் அவர்கள் குனிந்து கைகளால் அவற்றைச் சேர்த்துக் குவித்தனர்.

“ஆச்சா?”

“ஆச்சுண்ணா!”

“ஏய்... நான் என்ன சொன்னேன்... நீ என்ன பண்ணியிருக்காய்...ம்?”

“கூட்டி”

“இதான் கூட்டின லட்சணமா?” என்று ஒருவனுக்குப் பிடரியில் விழுந்த்து. அவன் மிடறு விழுங்க. “ஒண்ணு... ரெண்டு... மூணுன்னு மொத்த பேப்பரையும் கூட்டிச் சொல்றா!”

அவன் வெறுப்புடன் கூட்டி... “இருப்பது நாலு சார்!” என்று மிடறு விழுங்கினான்.

“அய்.... அய் சார்ன்னா விட்டிருவோமா! இதுக்கே அசந்துப்போனா எப்படி? சரி விமலுக்கு அஞ்சு மார்க். ஏய் பசங்களா! இதிலிருந்து என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?”

அவன்கள் விழிக்க....

“எண்ணத் தெரிஞ்சுக்கிட்டீங்கள்ல... அதுக்காகச் சந்தோஷப்படுங்க. அப்புறம் வேறு என்ன கத்துக்கிட்டீங்க.”

“ஏதுவுமே எங்களுக்குப் புரியலே!”

“ஆங்! அது புரியாதது... தெரியாத்து... விளங்காத்து... வினையானதுன்னு எல்லாத்தையும் விளங்க வைக்கத்தான் இந்த ப்ரேடு! இந்தச் சம்பவம் மூலம் உங்களுக்கு ஒரு கருத்துச் சொல்லனும்!”

“அடச்சீ! அனத்தாம சொல்லுடா!” பயில்வான் கணேஷ் பிளிறினான்.

“நமக்குச் சுற்றுப்புறச் சுகாதாரம் முக்கியம். டிசிப்லின் முக்கியம். கண்ட கண்ட இடங்கள்ல காகிதங்களையும். உபரிகளையும் போடலாமா? அத்துக்குன்னு அங்கங்கே வெச்சிருக்கிற குப்பைக் கூடைகளில் போடணும் புரிஞ்சுதா?”

“ஓ... நல்லா புரிஞ்சுது.”

“அதனால இப்போ என்ன பணறீங்க...?”

“அதை எடுத்து குப்பைக் கூடையில...” தினேஷ் குனிய. “ஏய். அதிகப் பிரசங்கி. ஒங்கிட்டச் சொன்னோமே... இன்னும் தலைவர் முடிக்கவேயில்லே.... அதுக்குள்ளே இன்னாடா அவசரம்? குறமாசத்துல பொறந்தவனா நீ...”

3

“ஸாரி, என்ன செய்யணும்... சொல்லுங்க!”

பசங்க கொஞ்சம் பயத்துடன் கேட்க, “குட்பாய்!” என்று தீப்பெட்டி ஒன்றை தீட்டினான். “வேஸ்ட்களால கிருமிகள் உருவாகும். அவைகள் கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்கிடும். தசாவதாரம் பார்க்கலே நீங்க?”

“பார்த்தேங்க...”

“நல்லது. பத்தவை...”

அவன் குனிந்து தீக்குச்சி எடுத்து உரசி உரசிப் பார்க்க வழுவிற்று.

நமுத்த பெட்டி, பயத்துடனும் படபடப்புடனும் குச்சிகளை ஒவ்வொன்றாய் கொளுத்திப் பார்த்து மூக்குக் கீழ் வியர்த்தான்.

“பச்! பொருளாதார நஷ்டம் போகட்டும்! இந்தா லைட்டர் பத்தவை”

“அவன் தயங்க, “சிகரெட் படிப்பியா நீ?”

“ம்கூம்...”

“பிடிக்கலேன்னா கீழே விழுந்திருமேடா... ஹா...ஹா ம்... நடக்கட்டும்!”

அவன் அசௌகர்யத்துடனும் அவநம்பிக்கையுடனும் கிளிக் குப்பை பற்றிக் கொண்டது. குப்பை கொழுந்துவிட்டு எரிய...

“என்னடா இது?”

“எது”

“எரியுதே இது!”

“வந்து... தீ, பயர்!”

“கரெக்ட் பயர் வந்தா என்ன பண்ண்ணும்?”

“அணைக்கணும் சார்...”

“எப்படி?”

“மணல் போடலாம்...”

“இங்கே மணல் இல்லையே அப்புறம்?”

“தண்ணி ஊத்தலாம்!”

“ஹாஸ்டல்ல ரொம்ப தண்ணிப் பஞ்சம்! அப்புறம்?”

“அப்புறம்... அப்புறம்...” என்று அவர்கள் தலை சொறிந்தனர். இனிமே ஞாயிற்றுக்கிழமை இங்கே இருக்கக் கூடாதுப்பா, ஊருக்கு ஓடிரணும். இந்த வார்டன் எங்கே போய் ஒழிந்தார்? ”

“ஏய், சீக்கிரம் யோசிங்கடா, குப்பைல வைரஸ் கீது. அது எரியுது. அந்த காத்து பரவினா நமக்குல்லாம் ஆபத்து நமக்குன்னு இல்ல... இந்த கத்து பக்கமே காலியாயிடும் இப்போ உடனே இதை அணைச்சாகணும். க்விக்... க்விக்... என்ன செய்வீங்க!”

“தெரியல சார்!”

“என்னடா தெரியல... ம்? தசாவதாரம் பார்த்தேன்னு சொன்னியே, அதுல கிருமியை அழிக்க என்ன பண்ணாங்க?”

“வந்து, ஸோடியம் குளோரைடு!”

“தம்பி, நீ கரீக்ட்டு கம் ஆன். க்விக். ஆகஷன்!”

“சோடியம் குளோரைடு. எங்கிட்ட இல்லியே... போய் மெல்ல எடுத்து வரட்டா?”

 “அதுக்குள்ளே கிருமி பரவிரும்!”

“அப்போ என்ன செய்யறத?”

“ஏண்டா கைல வெண்ணெயை வச்சுக்கிட்டு எவனாவது நெய்க்கு அலைவானா... தசாவதாரத்துல கிருமி எப்படி அழிஞ்சது?”

“சுனாமி, கடல் தண்ணி. ஆனா இங்கே கடல் எது?”

“மடையா, மடையா... குடம் குடமா உங்கக்கிட்டேயே இருக்கேடா!”

“எங்கக்கிட்டயா...யூ மீன் யூரின்?”

“யெஸ்.. யெஸ்... ம்... சீக்கிரம்!”

“அய்யோ... ஓப்பனாவா?”

“பயர் ஓப்பன்லதானே! ஓப்பனாதான் அணைக்கணும்!”

அதற்குள் பின்பகுதியில்...“வார்டன்” என்று கிசுகிசுப்பு கேட்டது.

சீனியர்கள் பிரஷ்சும் பற்சையுமாய் பாத்ரூமிற்குள் நழுவ, அங்கே, ஜானி, கணேஷ் மட்டும் பாக்கியிருந்தனர்.

“என்னடா திங்கிங்? அதிகாலைதானே டேங்க் புல்லாதானே இருக்கும். பைப்பைத் திறந்து பீச்சுங்கடா! ஏய், யார்றாது என் தோள்ல கை போடறது?”

சுந்தர் திரும்பிப் பார்த்து, “ஓ... வார்டனா?”

“ஆமாம். போதும் விடுங்கப்பா! பசங்க ரொம்பவே மிரண்டுட்டானுங்க!” சுரேஷ் சொல்ல...

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles