தங்கத்தாமரைப் பெண்ணே!

 

   ஜானி அவனது கையைத் தட்டிவிட்டு, “த பாரு... நீ புதுசு. உன்னை வார்டனாக யாரும் இன்னும் ஏத்துக்கவே இல்லை. பார்த்தா படிக்கிற பையன் மாதிரி இருக்கே. அப்புறம் எப்படி நாங்க!”

“பரவாயில்லே. நானும் சீனியர்னு நினைச்சுக்கோ. பாவம், அவனுங்களை விட்டிரு. பசங்களா, நீங்க போங்க!”

“சரி அவங்க போகட்டும். நீ இதை அணைச்சிரு!”

“ஓயெஸ்” என்று சுரேஷ் தன் செருப்பால் அந்தத் தீயை நசக்க.. காகிதக் கறுப்புத் துகள்கள் காற்றில் பறந்தன.

சுந்தருக்க பசங்கள் தப்பிவிட்ட ஆத்திரம். அவர்கள் முன்னில் அவமானமாயிற்று. பற்களை வேகவேகமாய் பிரஷ் செய்தபடி நகர்ந்தான். இந்தாளுக்கு இருக்கு ஆப்பு! எப்படி எங்கே கவிழ்க்கலாம் என அவனது மனது சிந்திக்க ஆரம்பித்தது. சுரேஷ் முன்பு படிக்கிற நாட்களில் ரொம்ப சுமார் ரகம்.

ஒல்லிப்பிச்சான்! அப்பாவி தோற்றம். கல்லூரிக்கு நுழைந்த புதிதில் ராக்கிங்குக்குப் பயந்து ஹோட்டலில் தங்கி அப்பாவிற்குத் தண்டச் செலவு வைத்த்தை அவன் இன்னும் மறக்கவில்லை.

ஒரு மாதம் ராக்கிங் சீசன் முடிந்ததும் ஹாஸ்டலில் போராடி இடம் பிடித்து ஒட்டிக் கொண்டான். ராக்கிங் என்பது பொழுதுபோக்காக இருந்து விட்டால் பரவாயில்லை. சித்ரவதையாகும் போது லேசான மனது படைத்தவர்கள், கிராமத்திலிருந்து படித்து முதன்முதலில் நகரம் பார்ப்பவர்களுக்கு அது நரகம்.

மெடிக்கலே ணோம் என்று ஓடுபவர்கள் உண்டு. பயத்தில் நெஞ்சு துடிப்பு நிற்பவர்கள், மனம் வெறுத்து தற்கொலைக்குச் செல்பவர்கள் என பல ரகம் உண்டு. அந்த மாதிரி எதுவும் இங்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் சுரேஷ் உறுதியாயிருந்தான். அதில் ஜூனியர்களுக்கு அவன் பேரில் மரியாதை என்றாலும் வட, சீனியர்களுக்குக் கொலை வெறி! எங்கே மாட்டுவான் என்று காத்திருந்தனர்.

ஹாஸ்டலிலிருந்து கிளம்பினால் பசங்கள் நேராய் வகுப்புகளுக்குச் செல்வதில்லை.

அறையிலிருந்து ரொம்ப நேரத்திலேயே கிளம்பி மைதானம். அங்கே புல்வெளி, காதல் மரம் எனக் காத்திருத்தல்.

பிடித்த மாணவிக்கு சிக்னல். அவள் வேண்டுமென்றே சிக்னலை கிராஸ் பண்ணுவாள். உடன் அவளைக் கவர வழிசல்கள்!

“உனக்கு இந்த்த் தாவணி நல்லாருக்கு!” கண்டுக் மாட்டார்கள். “இந்த ஹேர் ஸ்டைல் பிரமாதம். பின்னிட்ட போ!”

“கீதா, நீ எங்கே அழகிப் போட்டிக்குக் கிளம்பிட்டியா?”

“ஏய், போதும், போதும் என்ன வேணும் இப்போ?”

“அப்பா, மடைதிறந்தாயே அதுவே போதும்.”

“அது போதுமில்லே... ஆளை விடு!”

“இல்லை டியர்... வந்து...” அவனுக்குத் தலை அரிக்கும். அவளக்குப் புரியும். திரும்பிக்கொண்டு புன்சிரிப்பாள். புத்தகத்தை இறுக்கிக் கொண்டு வாட்ச்சை பார்ப்பாள்.

“கிளாஸ்க்கு இன்னும் டையமிருக்கு!”

“நான் லைப்ர்ரி போகணும்!” என்று பாதம் மாறுவாள்.

“நல்ல பழக்கம். நாங்கூட அங்கேதான்!”

“ஈக்கு என்ன வேலை கொல்லம்பட்டரையில?”

“ஹா...ஹா...”

அவளுக்குப் புரியும். எதற்கு அவன் வழிகிறான் என்று. ஆனாலும் கூட அலைய வைக்க மனது அலையும். போய்த் தொலைகிறான் என்று விடுவதில்லை.

“நான் ஊருக்குப் போன் பண்ணிட்டு அப்புறம்தான் லைப்ர்ரி.”

“போனா... அதுக்கு எதுக்கு காம்பவுண்ட் கடக்கணும்? இந்தா என் செல்லில்....”

அவள் முறைப்பாள்.

அவன் “ஸாரி.... ஸாரி... மொபைல்ல காசில்லை. ரீசார்ஜ் செய் மறந்துட்டேன்!” என்று தலையில் தட்டிக்கொள்வான்.

அவளுக்கு நன்றாகத் தெரியும் எங்கே வருகிறான் என்று! ஆனாலும் கூட கழுக்கம். அதில் ஒரு சந்தோஷம் அவர்களுக்கு.

“காசில்லா செல் எதுக்காம்?”

‘எல்லாம் ஒங்களாலதாண்டி... மிஸ்டு கால் கொடுத்துக் கொடுத்தே எங்களைச் செல்லாக் காசாக்கிடறீங்களே’ என்று சொல்ல நினைத்து ஹி...ஹி.. என்பான்.

“இப்போ  என்னதான் வேணும்.... சொல்லேன்!”

“வேறு என்ன... கைமாத்து ஐநூறு ரூபா!”

“முன்னே ஐநூறு கொடுத்த்து?”

“எதுக்குச் சில்லரை மொத்தமா ரவுண்ட் பண்ணி ஆயிரமாக்கிடலாமே!”

“ஒரு பொம்பளைகிட்ட கைநீட்டறதுல வெட்கம். மானம்...?”

“சூடு, சொரணை.... அய்ய்ய்யே... அதெல்லாம் நமக்கெதுக்கு?”

“இப்போ எதுக்கு இத்தனை வழிசல்?”

“பணம்!”

“அதான் எதுக்குன்னேன்? தண்ணிக்கா இல்லை தம்மா?”

“சேச்சே... அதுக்குத்தான் தோழினி இருக்காளே! இது செல் ரீசார்ஜ்க்கு!”

“நான் பண்ணிர்றேன். நம்பர் கொடு!”

“உங்ககிட்ட இருக்குமே. நீ மிஸ்ட் கால் பார்ட்டியில்லியே! இந்தா குறிச்சிக்கோ. ஆனாலும்கூட நீ மோசம்.”

“ஏன்? கேட்டவுடனே காசு தர்றதினாலயா?”

“எங்கே கொடுத்தாய்? என்மேல நம்பிக்கையில்லாம ரீசார்ஜ் பண்றேன்கிறாய். கையில காசு கொடுத்தா என்னவாம்?”

“எனக்குத் தெரியும். நீ ரீசார்ஜ் பண்ணக் கிளப்புக்கு போவாய்னு. அங்கே சீட்டு ஆட்டம். பாட்டம்”

“சீச்சீ... அங்கே மனுஷன் போவானா டார்லிங்! உனக்கு என் பேர்ல கொஞ்சங்கூட கருணை இல்லை.”

வார்த்தைகளில் கெஞ்சல் கொஞ்சும்.

4

“நீயெல்லாம் படிச்சு டாக்டராகி எவனெவன் உயிரை எடுக்கப் போறியோ தெரியல!” கலா அவனிடம் பொய்க்கோபம் காட்டினாள்.

 “அப்போ குடுத்திடு.. மறக்காம கணக்கு வச்சுக்க!”

“இங்க பணமில்லை. ஹாஸ்டலுகு சாயந்திரம் வா!”

‘அதான் தெரியுமேங்கடி.. அங்க வந்து லோ லோன்னு நாங்க காவல் காக்கணும். நீங்க ஆடி அசைஞ்சு வந்து தருவீங்க. எல்லாம் திமிருடி!’

“ஏய், என்ன முறைக்கிறே! காசு வேணாமா?”

“வேணும் வேணும். பைக்கோட பொழுது சாய வந்துடறேன்.”

“பைக் எதுக்காம்?”

“சினிமா... உனக்கும் லிப்ட்...”

“உதைப்படுவே...”

இதெல்லாம் நிரந்தர... காட்சிகள். காலம் மாறினாலும் கோலங்கள் மாறவில்லை. பெண்களும் அதே... அதே... மாணவர்களும் அப்படியப்படியே!

வழியில் நின்று சைடாய் ஜொள் விடும், கடலைப் போடும். ஸ்டைல் பண்ணும், பைக் உறுமவிடும் மாணவர்களை சுரேஷ் கண்டுகொள்வதில்லை.

அதில் ஒரு சந்தோஷம், த்ரில்! சந்தோஷிக்கட்டுமே!

சுரேஷ் என்னத்தான் ஆத்மார்த்தமாய் சிரத்தையுடன் வகுப்புகள் எடுத்தாலும் கூட மாணவர்களின் கண்ணோட்டத்தில் அவன் வார்டன. சந்தோஷத்துக்கு துரோகி. இடைஞ்சல் பேர்வழி.

அவன் புதிது என்பதாலும் ஹாஸ்டலில் பொறுப்பு இருப்பதாலும் அதிகமாய் அசைன்மெண்ட் கொடுக்கப்படவில்லை. சீனியர்கள் வராமல் போகும்போது அழைப்பார்கள்.

கண்டிப்பும் கறார்த்தனமும் பல காரியங்களில் தேவையாய் இருக்கின்றன. பசங்கள் விஷயத்திலும் கூட அப்படித்தான். இல்லாவிட்டால் பிரித்து மேய்ந்துவிடுவர்.

கல்லூரி நாட்களும் அந்தப் பருவமும் இன்னும் நினைவில் மிச்சம் இருப்பதால் சுரேஷ் அவர்களை அதிகமாய் துன்புறுத்துவ தில்லை. மாணவப் பருவம் சிறப்பான எதிர்காலத்திற்குப் பயிரடப்படும் தருணம் இது. குசும்பும் விளையாட்டும் அளவோடு இருந்தால் ரிசிக்கலாம். அதிகமாகிவிடும்போது வெறுப்பாகிவிடும்.

“இங்கே கற்றல்தான் பிரதானம். அப்படி ஒரு மனநிலை இல்லாதவர்கள் படிப்பு வேண்டாம் என்பவர்களை நாம் வற்புறுத்த விரும்பவில்லை. இங்கே வந்திருப்பது அட்டென்டென்ஸிற்காகத் தான் என்றால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். ப்ராக்ஸி இல்லாமலே நானே ஃபுல் அட்டென்டென்ஸ் கொடுத்து விடுகிறேன். மார்க் போகும் எனப் பயப்பட வேண்டியதில்லை. படிக்க விருப்ப்ப்படுபவர்களுக்கு இடைஞ்சல் பண்ணாமல் வெளி போய் உலாத்தலாம்” என்பான்.

இப்போது அவன் சொல்லி வாய் மூடும் முன்பு கணேகம் ஜானியும் எழுத்து. “ரொம்ப தாங்க்ஸ் வார்டன்!” என்று புத்தகத்தைப் உருட்டிக் கொண்டு நடந்தனர்.

வாசல்வரை போன ஜானி திரும்பி வந்து. “எம்.டி.எஸ். படிச்சுட்டு எதுக்காக சார் வாத்தியார் வேலை? பேசாம கிளினிக் வைக்கப் பிழைச்சுக்கக் கூடாதா?” என்றான்.

உடன் வகுப்பிற்குள் சிரிப்பு அதிர்ந்தது. இந்தக் கேள்வி, கேலி, கிண்டல் எல்லாம் பழகிவிட்டதால் அவனுக்குக் கோபம் வரவில்லை. அத்தனை பேரும் மகிழ்ந்து. பிறகு சுரேஷ் பார்க்கிறானே என்று குனிந்துகொள்ள, அவர்களுக்கிடையே அப்போது எந்தச் சலனமுமில்லாமல் இருந்த சுஷ்மா அவனத கவனத்தை ஈர்த்தாள்.

அவளைக் கவனித்த பின்பு பசங்களின் கலாட்டாக்கள் அவனுக்குப் பெரிதாய் தெரியவில்லை. மின்னும் பொன்னாகி. ஒளிரும் நட்சத்திரமாக ஜொலிக்கும் வைரமாயிருப்பவளின் முகத்தில் மட்டும் ஏன் அத்தனை சோகம்?

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles