தங்கத்தாமரைப் பெண்ணே!

 

      அவள் மியூசிக், கவிதை, டான்ஸ், பாட்டு, பேச்சுப்போட்டி என எல்லாவற்றிலும் பிரகாசிப்பாள் என்று பிரின்சிபால் சொல்லியிருந்தார். ஆனால் அவற்றையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிமை. பகட்டின்மை. எல்லாமிருந்தாலும் கூட ஏதோ ஒன்று அவளை அடக்கி ஆண்டுகொண்டிருக்கிறது. என்ன அது?

அதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவனுக்கு எழுந்த்து. “வார்டன் சார்! எங்க கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்ல்லே!”

அவன் சட்டென சுதாரித்து, “ஆங்... என்ன கேட்டீங்க...! இங்கே ஏன் வேலைன்னுதானே... வெல்! நான் ஒழுங்கா படிக்கலை. படிக்கிற காலத்துல ஊர் சுத்தினதால மார்க் பத்தல, அதான்.”

“அப்படிப்போடு!”

“சரியா படிக்கலேன்னா உங்களுக்குக் கூட இதே நிலைமை தான் வரும்!”

சுரேஷ் சொல்ல, இப்போது மாணவர்கள் அவனுக்கு ஆதரவாகச் சிரித்தனர். அதைச் சகிக்கமுடியாமல் கணேசும் ஜானியும் பழிப்புக் காட்டிப் பின்பக்கத்தைக் ஆட்டிவிட்டு நடந்தனர்.

பாடம் நடத்த அறிவும் ஆர்வமும் திறமையும் மட்டும் இருந்தால் போதாது. சாமர்த்தியமும் வேண்டும். பசங்களை வசீசரித்து பாடத்திற்குள் கொண்டுவந்து அவர்களைக் கட்டிப்போடவேண்டும்.

சுரேஷ் மெல்ல மெல்ல அந்தக் கலையில் தேர்ச்சிப் பெற்றுக் கொண்டிருந்தான். அவன் மீண்டும் பாடத்திற்குள் நுழைந்தபோது வாசலில் அட்டெண்டர்.

“என்ன...”

அவன் கொண்டுவந்த ஒரு சீட்டை நீட்டினான்.

“சுஷ்மா, உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க, யு கான் கோ!”

அவள் அதற்கு மதிப்பளிக்காமல் அமர்ந்திருக்க, “ஐ ஸே, யு கேன் கோ!” என்றான் அழுத்தம் கொடுத்து.

கிளாஸ் எடுக்கவிடாமல் இதுமாதிரி இடைஞ்சல்கள்.

“ஏம்ப்பா, கிளாஸ் முடிஞ்சு இதைக் கொண்டு வரலாமில்லே!”

“வைஸ்பிரின்சிபால்தான் சார்  அனுப்பச்சார்!”

சுஷ்மா வேண்டாவெறுப்பாய் வெளியே வந்தாள். அட்டெண்டரிடம், “யார்?” முறைத்தாள்.

“தெரியலம்மா! அதோ அங்கே மரத்தடியில நிக்கிறாங்க!” என்று அவர் கைகாட்ட, அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் அவளத முகம் சிவக்க ஆரம்பித்தது. கண்களில் கானல். அவர்களை அலட்சியப்படுத்தி வேறு பக்கம் நடக்க ஆரம்பித்தாள் சுஷ்மா. முகம் கொடுக்காமல் எதிர் திசையில் நடக்க, “ஏய், சுஷ்... நில்லு. நில்லு” என்று விவேக் பின்னால் ஓடிவந்தான்.

அவள் அவனைப் பொருட்படுத்தாமல் நடக்க, அவளைக் கடந்துபோய் மறித்துக் கொண்டு, “எங்கே போற?” என்றான்.

“வழியைவிடு.”

“எங்கேன்னு சொல்லு. என்மேல் என்ன கோபம்?”

“விவேக், அனாவசியமா என்னை டிஸ்டர்ப் பண்ணாதே. கிளாஸ் நேரத்துல தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு ஏற்கெனவே பலமுறை சொல்லி யிருக்கேன்.”

“சுஷ்.. சொல்றதைக் கேள், நான் எனக்காக வரலை. உன் சித்தி மகேஸ்வரிக்காக.”

“சித்தி...” என்று சுஷ்மா பற்களைக் கடித்தாள்.

மரத்தடியில் இருந்தும் மாடி வராண்டாவில் இருந்தும் மாணவர்கள் கவனிப்பது தெரிய, அவளக்குச் சங்கடமாயிற்று. “இப்போ என்ன வேணும் உனக்கு?”

“சித்தி பேசணுமா வா! காருக்குப் போவோம்.”

சுஷ்மா அருகில் வந்த்தும் மகேஸ்வரி தன் தங்கமுலாம் பூசின கண்ணாடியைச் சரிபார்த்துக் கொண்டு, “வாம்மா, உன்னைப் பார்த்து எத்தனை நாளாச்சு?” என்று பாசம் பொங்கினாள்.

அப்படியே அவளைக் கட்டிக்கொள்ள வந்தவளை ஒதுக்கி, “என்ன விஷயம்?” என்றாள் கறாராய்.

“உன் கூட நிறைய பேசணும். போகலாமா? வா!”

“எங்க?”

“நம்ம வீட்டுக்கு...”

“நம்ம வீடா?”

“ஆமாம். எதுக்கு தண்டச்செலவுன்னு சொல்லிக்கூட கேட்காம உனக்குத் தானே உங்கப்பா இங்கே பங்களா கட்டிப்போட்டிருக்கார். ஆனா நீ அங்கே திரும்பிக்கூடப் பார்க்கிறதில்லே. அதெல்லாம் போகட்டும். எப்படி இருக்கே நீ?”

“இருக்கேன்...” என்று பதில் அளித்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டு கடந்து போன தோழிக்க விரல்களால் ‘பை’ சொன்னாள்.

“ஏன் விரக்தி? நீ சந்தோஷமாய் இருக்கணும். சௌகரியமாய் இருக்கணும்னுதானே அப்பா....”

“நான் எப்படிப்போனா என்ன? விஷயத்துக்கு வாங்க. நேரமாகுது.”

“சுஷ்மா, நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணேன்? ஏன் என்மேல் வெறுப்பைக் கொட்டுகிறாய்? அப்பாவுக்கு மட்டுமல்ல, எனக்கும்கூட நீ ஒரே பெண். உன்மேல் நாங்க உயிரையே வைச்சிருக்கோம்.”

“இதைக் கேட்டுப் புளிச்சுப்போச்சு.”

அதற்குள் வகுப்பு முடிஞ்சு மாணவர்கள் சலசலப்புடன் வெவ்வேறு அறைக்கு இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

சுரேஷ் அந்தப் பக்கம் வந்தவன் சுஷ்மாவைப் பார்த்ததும் தயங்கி நின்றான்.

‘””””இவர்கள் யார்?’ சுஷ்மா வேண்டாவெறுப்புடன் நிற்பதாகத் தெரிகிறது. ஏன், என்ன விஷயம்? அவளது முகத்தில் கூட ஆர்வமில்லை.

அவள் அருகில் தயக்கத்துடன் வந்து. “சுஷ்மா. யு நீட் எனி ஹெல்ப் பர்ம் மீ” என்று அவர்களைப் பார்த்தான். “இவங்க யாரு?”

மகேஸ்வரி முந்திக் கொண்டு, “நான் இவ சித்தி. இவன் என் தம்பி விவேக். சுஷ்மாவை எங்கக்கூட அழைச்சுப்போகணும்.”

“எங்க?”

“எங்க வீட்டுக்கு...”

சுரேண் சுஷ்மாவின் முகத்தை ஏறிட்டு அங்கு வெளிப்பட்ட அதிருப்தியை உணர்ந்து. “நான் ஹாஸ்டலுக்குத் தான் வார்டன். கிளாஸ் நேரத்துல பர்மிஷன் தர எனக்கு உரிமை இல்லை.”

“நாங்க பிரின்சிபால்கிட்ட பேசிட்டோம். ஒரு முக்கியமான குடும்ப விஷயம்... அதான்... சுஷ்மா வண்டியில் ஏறு.”

அங்கே ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்று சுஷ்மா காரில் ஏறினாள்.

5

“பங்களா, தள்ளியிருந்து பார்க்கும் போதே பளபளத்த்து. காரின் ஓசையைக் கேட்டதும் வாட்ச்மேன் ஓடிவந்து இரும்பு கேட்டைத் திறந்து கும்பிட்டான். புள்ளிவெளியில் நீர் தெளித்துக்கொண்டிருந்தவர்கள் எழுந்து, “வணக்கம்மா”என்று கைக்கூப்பிவிட்டு உடன் வேலையைத் தொடர்ந்தனர்.

மகஸ்வரி இறங்கி கம்பீரத்துடன் நடந்தாள். விவேக், “வா சுஷ்... ஏன் தயக்கம்? இது நம் கெஸ்ட்ஹவுஸ்தானே!” என்று வழிந்தான்.

ஹாலில் மகேஸ்வரி அமர்ந்து டி.வி.யை ஆன் பண்ண. பிரம்மாண்டமாய் படம் ஓடிற்று.

 “என்ன சாப்பிடுறை?”

“என்ன பேசணும்னு இங்கே அழைச்சுட்டு வந்தீங்க?”

“சுஷ்மா, என்னை உனக்குப் பிடிக்காம போகலாம். நான் இடையில் வந்தவ. விடு. உங்கப்பர் என்ன பண்ணாரு! எதுக்காக நீ அவரை அவாய்ட் பண்ணணும்? இந்தச் சொத்து, சுகம், வசதிகள் எல்லாம் உனக்காகத்தானே கார், ஆட்கள எல்லோரும் இருக்கும் போது எதுக்காக நீ ஹாஸ்டல்ல தங்கணும்?”

அவள் கண்கலங்கிய நேரத்தில் விவேக் ஜூஸ் கொண்டுவந்து நீட்டினாள்.

“அக்கா, இதுக்குத்தான், இப்படி அழுவேன்னுதான் நீ வரவேணாம்னு சொன்னேன். கேட்டாதானே!”

“நீ சும்மா இருடா! சுஷ்மா ஏத்துக்கிட்டாலும் இல்லைன்னாலும் இவ எனக்கும் பொண்ணுதான். என் மகள்தான். இவைளை நான் எதிரியாய் நினைக்கலை. என்னை மதிக்கலை. என் மேல அன்பு காட்டலைன்னாலும் கூட கவலைப்படலை. இவங்கம்மா ஓடிப போனதுக்கு நான்தான் காரணம்னு சொல்லறதைத்தான் என்னால ஜீரணிக்கமுடியலை.”

“என் அம்மா ஓடிப்போகலை. ஓடிப்போக வச்சீங்க நீங்களும் என் அப்பாவும் சேர்ந்து.”

“சரி உங்க அப்பாதான் தப்புப் பண்ணார். அவரை நீ மன்னிக்கவோ. ஏத்துக்கவோ மனசில்லே. நீ என்ன பண்ணினாலும் உன்னைப் பத்தி நினைப்பிருந்தா வந்திருக்கணும். வநது பார்த்திருக்கணும். உன் அம்மா ஏன் வரலை?”

சுஷ்மா இதற்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்தாள். ஒரு வகையில் அம்மாவின் மேலும் கோபம் திரும்பிற்று. சித்தி கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. பெற்ற மகள் நான் என்ன குத்தம் பண்ணினேன். ரெண்டும் கெட்டான் வயது. என்னை அம்போன்னு விட்டுட்டுப் போக அவளுக்கு எப்படி மனது வந்தது. எங்கே போனாள்? என்னவானாள்? என் மேல் பாசமிருந்தால் இத்தனை வருடங்கள் திரும்பிப் பார்க்காமல் இருப்பாளா?

“சுஷ்மா, இப்போ சொல். நான் உனக்காக எல்லாம் செய்யத் தயாராக இருந்தேன. உனக்குப் பாசம் ஊட்டி உன் தேவைகளை ஒரு தாயாய் கவனிக்கத் தயாராய் இருந்தேன். மலேசியாவுக்கு என் கூட வந்திரு. அங்கு ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கிறோம்னு எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கவில்லை. எங்களுடன் வரமறுத்து விட்டு உன் பாட்டி வீட்டுக்குப் போய்விட்டாய். அங்கிருந்து படித்தாய். லீவில் விசா எடுத்து அனுப்பினாலும் நீ வருவதில்லை. நாங்கள் பார்க்க வந்தாலும் நீ முகம் கொடுப்பதில்லை. இருந்தாலும் உன் செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறோம். உன் பேரில் இந்த பங்களா பேங்க்கில் டெபாசிட். நீ விரும்பினபடி பல் மருத்துவ படிப்புன்னு எதிலாவது குறைவைத்தோமா? செல்.”

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles