தங்கத்தாமரைப் பெண்ணே!

 

அங்குதான், அன்று முதல்தான் அவர்களுக்குச் சனி பிடிக்க ஆரம்பித்தது.

தேவைக்கு முயற்சிப்பது ஆசை. அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து பேராசையாகிவிடுகிறது. பேராசை நிலைக்கும்போது தேவைகளும் அதிகமாகி பணம், பதவி, புகழ் என வெறியாகிறது.

முகுந்தனும் கூடி அப்படித்தான் ஆகிப்போனான். குடும்பத்தை முன்னேற்றணும், வசதிகளைப் பெருக்கணும் என்கிற நியாயமான ஆசையில் ஆரம்பித்வனின் முழுக்க அதிலேயே இருந்தது.

மாலையில் கடை வேலைக்குப் போனவன், அதைவிட அதிக வருமானம் என வேலை வாய்ப்பு ஏஜென்ஸிக்கு மாறினான். அதன் காரணமாய் வீட்டுக்குத் தாமதமாக வருவான்.

அவன் வரும்போது சுஷ்மா உறங்கிவிடுவாள். காலையில அவன் எழுவதற்குள் அவள் பள்ளிக்குக் கிளம்பிவிடுவாள். கைநிறைய பொருட்களும். வசதியான சாமான்களும் கிடைத்தாலும் கூட செண்பகத்திற்கும் சுஷ்மாவிற்கும் வெறுமையாயிற்று.

“அம்மா, அப்பா எதுக்காக இப்படி ராத்திரி பகலாய் கஷ்டப்படணும்?”

“எல்லாம் உனக்ககாத்தான். உன் எதிர்காலத்துக்காக.” 

“வேணாம். அப்பாவை வருத்தி கிடைக்கப் போகிற எதிர்காலம் எனக்கு வேணாம். அவர்ட்ட சொல்லும்மா.”

செண்பகம் சொல்லியும் முகுந்தன் கேட்கவில்லை.

“ஏங்க. இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த ஓட்டம்?”

 “இன்னும் கொஞ்சநாள்தான்.”

“அப்புறம்?”

“அப்புறம் மலேசியா போயிரலாம். நான் வேலை பார்க்கிற ஏஜன்ஸி மூலம் பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்தாச்சு. நம்ம கஷ்டமெல்லாம் கூடிய சீக்கிரம் தீரப்போகுது.”

சுஷ்மா குதூகலித்து, “ஐ, நானும் விமானத்துல பறக்கப் போறேன். என்யும் அங்கே அழைச்சுப் போவீங்கதானேப்பா!”

 

“நிச்சயமாய். நீ இல்லாமல் எங்களுக்குச் சந்தோஷம் ஏது?”

சுஷ்மாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பள்ளியில் தோழிகளிடம் ஆரம்பித்து மரமி. மட்டை. சுற்றுச்சுவர் என எல்லாவற்றிடமும் மலேசியா புராணம் படிக்க ஆரம்பத்தாள். வானத்தில் மிதந்தாள்.

“ஏய், நீ அங்கேயே படிக்கப் போயிருவியா?”

“ஆமா, படிப்பு மட்டுமில்லே அங்கேயே வேலை பார்த்து செட்டிலாகிருவேன்.”

“அங்கே போயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதடீ.”

“முயற்சி பண்றேன்.”

அந்தப் பக்குவமில்லா வயதில் மலேசியா மோகம் உள்ளூரைக் கசக்க வைத்தது. அந்தப் பள்ளி, வீடு, பஸ், படிப்பு எல்லாவற்றின் மேலும் இளப்பம் தோன்றிற்று.

ஒருநாள் இரவு இரண்டு மணியாகியும் கூட முகுந்தன் வீடு திரும்பவில்லை.

7

இரவு இரண்டு மணியாகியும் முகுந்தன் வீடு திரும்பாததால் செண்பகத்திற்குள் பயமாயிற்று. தூக்கமில்லாமல் வாசலுக்கும், சாலைக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.ஒருவேளை தாமதமாகிறது என்று அங்கேயே தூங்கி காலையில் எழுந்து வந்துவிடுவார் என சமாதானப்படுத்திக் கொண்டாள். மறுநாளும் ஆளைக் காணோம் என்றதும். அந்த அலுவலகத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்க பூட்டு!விசாரித்த்தில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டார்கள் என அவர்கள் மேல் புகார்! போலீஸ் வர, அவர்கள் ஓட்டம் தலை மறைவு!முகுந்தனும் போலீஸிற்குப் பயந்து பதுங்கியிருந்தான். அவளுக்குப் பயமாயிற்று. கடவுளே! என்ன இது சோதனை அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம். என் பேராசைதான்.இயல்பாய் இருந்தவரை உசுப்பிவிட்டு இப்போது உள்ளதும் போயிற்று. எனக்குப் பணம், காசு, வசதி எதுவும் வேணாம். அவர் மட்டும் போதும்.செண்பகத்திற்கு என்ன சொல்வதென்று தெரிவில்லை. விஷயம் கசிந்து அக்கம் பக்கத்தில் அவமானம். சுஷ்மாவும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தோழிகள் ‘”மலேசிய மகாராணி வரா!‘ எனக் கிண்டல்! அவளால் அதை எதிர்கொள்ள முடிய வில்லை.

“அம்மா, இனி நான் ஸ்கூலுக்குப் போகலே!” என்று நான்கு நாள் முடங்கிக் கிடந்தாள். வீட்டில் அம்மாவின் அழுமூஞ்சியைப் பார்ப்பதற்குப் பள்ளியே தேவலாம் என்று பிறகு மனது தேறிற்று. இறுகிற்று.ஒரு வாரம் கழித்து முகுந்தனிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. “செண்பகம், நான் நம்பி ஏமாந்துட்டேன். அது போலி ஏஜென்ஸி. பல பேர் அதுல பணம் கொடுத்து ஏமாந்துட்டாங்க. நான் எந்த தப்பும் பண்ணலே. ஆனாலும் அங்கு வேலை பார்த்ததால நானும் உடந்தைன்னு போலீஸ் தேடுது. நீங்க யாரும் கவலைப்பட வேணாம். நான் மலேசியாவுக்கு இன்னிக்கு ராத்திரிப் புறப்படறேன். அங்கே போய் வேலை தேடிக்கிட்டு உன்னையும் கூப்பிட்டுக்கிறேன். அதுவரைக்கும் சுஷ்மாவும் நீயும் பத்திரமா இருங்க!”

கணவன் அருகில் இல்லாவிட்டலும் பரவாயில்லை. எங்காவது நல்லா இருந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு. கொஞ்சநாள் அவர் தள்ளியிருப்பதுதான் நல்லது. பிறகு எல்லாம் நீர்த்துவிடும். அதன் பிறகு போலீஸில் சரண்டராகி எல்லா விவரமும் சொல்லிக் கொள்ளலாம்.

தற்காலிகமாய் மனதில் சமாதானம் ஏற்பட்டாலும் கூட அவளது மனதில், ‘எல்லாத்துக்கும் காரணம் நான்தானே என் பேராசைதானே‘ என்கிற உறுத்தல் குத்திக்கொண்டேயிருந்தது. மலேசியா சென்று விட்டாலும் கூட முகுந்தனுக்கு வேலை ஏதுவும் எளிதில் கிடைக்கவில்லை. அங்குமிங்கும் அலைந்து கடைசியில் தமிழ்நாட்டுக்கார் நடத்தும் ‘மெட்ராஸ் கபே‘யில் தஞ்சம் புகுந்தான். அது  கோலாலம்பூரின் மையத்தில் பிரபலம் அங்கு கல்லா கணக்கு எழுதல், அடுக்களை, சர்வர் என எல்லாமும் செய்தான். அங்கு வைத்துதான் மகேஸ்வரியும் அவனது குடும்பமும் முகுந்தனுக்கு அறிமுகமானார்கள்.

மகேஸ்வரியின் தந்தை அவன் பேரில் இரக்கப்பட்டு, “என்ன படிச்சிருக்கே?” என்றார்.

“டிகிரி சார்.”

“அப்புறம் ஏன் ஹோட்டல்?”

“வேறு வேலை அமையல சார்.”

“என் கம்பெனியில வேலை தரேன் வா” என அவர் அவளை அழைத்துக் கொண்டார். அவனுக்குச் சந்தோஷமாயிற்று. கடவுள் நம்மைக் கைவிடவில்லை.

ஊருக்கு அந்தச் சந்தோஷத்தை அறிவிக்கலாம் என மளிகைக் கடைக்குப் போன் போட்டபோது. “முகுந்தா, இங்கேயெல்லாம் இனி கூப்பிடாதே” என்று பயந்தார்கள்.

“ஏன்?”

“போலீஸ் டார்ச்சர்ப்பா. தினம் தினம் உன் பெண்டாட்டி புள்ளைய போலீஸ் விரட்டுவது. பணம் கொடுத்து ஏமாந்த பசங்களும் வந்து விரட்டறானுங்க.”

“செண்பகமும் சுஷ்மாவும் எப்படியிருக்காங்க? நான் அவங்கக்கூட பேசலாமா?”

“பேசினா இன்னமும் வம்பு. போனை வச்சிடு.”

“நல்ல வேலை. நல்ல சம்பளம். நல்ல மனிதர்கள் என்கிற சந்தோஷம் அந்த நேரத்தில் அவனிடமிருந்து பறிபோயிற்று. எது கிடைத்து என்ன.... நிம்மதியில்லையே! ஊரில் மனைவி, மகளை கஷ்டப்படுத்திக் கொண்டு எனக்கு மட்டும் இநத் சொகுசு தேவையா?

அவனுக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மகேஸ்வரியின் தந்தையிடம், “முதலாளி, நான் ஒருமுறை ஊருக்குப் போய் வந்துடுறேன். லீவு வேணும்” என்றான்.

சுறுசுறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் வேலை பார்க்கும் அவனை இழக்க அவருக்கு விருப்பமில்லை.

“அங்கு போனால் போலீஸ் புடுச்சுக்குமேப்பா!”

“பரவாயில்லை சார். நானே சரண்டாகிடறேன். என்னால என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. நான் கிளம்பறேன்.”

வைராக்கியத்துடன் பெட்டி கட்டிக்கொண்டு, டிக்கட் வாங்கிக்கொண்டு ஏர்போர்ட் போனவனை வரவேற்க அங்கே மலேசிய போலீஸ் தயாராயிருந்தது.

ஏர்போர்ட்டில் போலீஸ் தன்னை மறிக்கும் என்று முகுந்தன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

மனதில் சந்தேசத்துடனும் செண்பகத்தையும் சுஷ்மாவையும் பார்க்கப் போகும் உற்சாகத்துடனும் வரிசையில் நின்றிருந்தான். போர்டிங் போட வண்டியில் கனமாயிருந்த பெட்டிகளுடன் நகர்ந்தான்.

செண்பகம், இதோ வந்துட்டேன். உனக்கு நீ விரும்பின பட்டுப்புடவை, செயின், சுஷ்மாவுக்கு நெக்லெஸ்.

கவுண்டரை நெருங்கினபோது போலீஸ் ஓரங்கட்ட அவனுக்கு வியர்த்துப் போயிற்று. “உன் பெயரில் டிராவல் பேன் இருக்கு எங்களுடன் வா!”

“சார், நான் எந்த்த் தப்பும் பண்ணலே?”

“அதெல்லாம் ஸ்டேஷன்ஸ் போய் பேசிக்கலாம் வா!”

அவரது கனவுகள் சிதைந்து தகர்ந்தன. ஏற்கெனவே ஊரில் குடும்பம் சீரழிந்திருக்கிறது. இப்போது இங்க நானும் சிறையில். கடவுளே. எனக்கு ஏன் இந்தச் சோதனை! என்னை ஏன் இவர்கள்? இந்திய போலீஸ் சொல்லியிருக்குமா? அவனுக்குப் புரியவில்லை.

“சார், என் முதலாளிக்குப் போன் பண்ணலாமா?”

“ஓ... ஷ்யூர்.”

“ஒரு மணி நேரத்தில் மகேஸ்வரியும் அவர் தந்தையும் வந்து சேர்ந்தார்கள். முகுந்தனை ஜாமீனில் எடுத்தனர்.

“சார், ரொம்ப நன்றி, நான் எப்படியும் ஊருக்குப் போயாகணும்!”

“பயணத் தடை இருக்கே!”

“அதை அகற்ற என்ன வழி...?”

“யோசிப்போம்!”

ஒரு வாரம் போலீஸில் கையெழுத்துப் போட்டு வந்து, முகுந்தன் நொந்து பேயிருந்தான்.

“மகேஸ், இதிலிருந்து நான் தப்பிக்கவே முடியாதா?”

“வழியிருக்கு. ஆனா நானோ, அப்பாவோ ரொம்ப தலையிட முடியலே. ரத்தபந்தம் அல்லது நெருங்கிய உறவு பொறுப்பேத்துக் கிட்டா பயணத் தடையை விலக்க முடியும்ங்கிறாங்க.”

“எனக்கு இங்கே ரத்தபந்தம் யார் இருக்கா? நெருங்கிய உறவுக்கு நான் எங்கே போவேன்?”

“நான் ஒரு யோசனை சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!”

“சொல்லு.”

“நீங்க வெளியே போகணும்னா உங்களுக்கு உரிமையான யாராவத இங்கே இருக்கணும். நான் வேனுமானா அப்படி இருந்துடறேனே!”

அவன் அதிர்ந்து போனான்

“நீ எப்படி?”

“உங்க மனைவியாக!”

“மகேஸ்.. என்ன சொல்றே நீ? பைத்தியம் போல பேசாதே!”

“இல்லை. நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ரிஜிஸ்தர் பண்ணிரலாம். உங்களுக்கும் எனக்கும் திருமணம்.”

8

“உளறாதே! உன் வயசென்... என் வயசென்ன... ஏற்கெனவே உங்களுக்குக் கடன்பட்டிருக்கேன். இதுவேறயா? என்னால உன் வாழ்வு கெடவேணாம். அதுவுமில்லாம எனக்கு ஊரில் மனைவி- மகள் இருக்கிறார்கள்” முகுந்தன் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினான்.

“அவர்கள் அங்கே இருக்கட்டும். நான் இங்கே. உங்களைப் பார்த்த நாள் முதலே என் மனதில் மின்னல்... அப்புறம் உங்கள வேகம், விவேகம், செயல்பாடுகள் எல்லாமே என்னை மயக்கிடுச்சு”  மகேஸ்வரி தன் பங்குக்குப் பிடிவாதமாக இருந்தாள்.

“உங்கப்பா சம்மதிக்கணும்?” கொஞ்சம் இறங்கி வந்தான் முகுந்தன்.

“அவருக்கு ஏற்கனவே உங்க பேர்ல உயிர். நிச்சயம் சம்மதிப்பார். என் விருப்பத்துக்கு அவர் ஒருநாளும் மறுத்ததில்லை. தவிர, அவரது பிசினஸை உங்களைப் போல நல்லவர், திறமையானவர் ஒருவர்கிட்ட கொடுத்திட்டு ஒதுங்கணும்னு சொல்லிக்கிட்டிருக்கார்.”

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles