தங்கத்தாமரைப் பெண்ணே!

 

அவனுக்குத் தலையில் விண்விண்ணென்று வலித்தது. தனக்கு என்ன நேர்ந்தது. ஏது நேர்ந்த்து என்று யூகிக்கக் கொஞ்சநேரம் பிடித்த்து. வேண்டாத வேலை!

பசங்கள் எப்படிப் போனால் என்ன என்று தூங்குவதை விட்டுவிட்டு திருடன்போல பிடிக்கப் போனதற்குத் தண்டனை. சிறுபிள்ளைத்தனம்!

படிக்கும்போது நான் செய்யாத சேஷ்டைகளா? கஞ்சா, தண்ணி என அனைத்தையும் டெஸ்ட்டும், டேஸ்ட்டும் செய்து மயங்கி, வாந்தி எடுத்து, இனி உருப்படப் போவதில்லை என வருந்தி அப்பா கஷ்டப்பட்டு அனுப்பும் பணம் இப்படி போகிறதே என உறுத்தல் எடுத்து செத்துப் போக முயன்றது கூட உண்டு.

இதெல்லாம் அந்தந்த வயசுக்கும் சூழலுக்கும் சகஜம். கண்டுகொள்ளக் கூடாது. அல்லது வார்டன் தொழிலை விட்டுடணும்.

அவன் ஒரு முடிவுக்கு வந்தபோது அறைக்கு வெளியே கிசுகிசுப்பு கேட்டது.

“போ! நீ போ! முழிச்சுட்டார். இல்லை நீ போ! நான் போனால் சரிப்படாது.”

“அட, இங்கே என்ன கலாட்டா... பார்க்கணும்னா சீக்கிரம் பார்த்துட்டு கிளம்புங்க!” நர்ஸ் விரட்டினாள் உடன் முதலில் தெரிந்தது சுஷ்மா! பிறகு கவிதா, ரோஷ்னி, வினிதா, அனிதா எனப் பெண்கள் படை!

“ஸாரி சார்!” என்று அனிதா முகத்தை வருத்தத்தின் எல்லைக்குக் கொண்டுபோய் துக்கம் காட்ட, சுஷ்மாவைப் பார்த்து, “தட்ஸ் ஓ.கே!” என்று முனகினான்.

சுஷ்மாவைப் பார்த்ததும் உற்சாகம். அவள் வருவாள் என்றால் இப்படி அடிக்கடி அட்மிட்டாகலாம். வேதனைக்கிடையிலும் வட பைத்தியக்காரத்தனச் சிந்தனை.

“ஸாரி சார் உங்களுக்கு இப்படி ஆயிருச்சன்னு தெரிஞ்சதும் துடிச்சுப் போயிட்டோம். பசங்கள் கூட ரொம்ப பீல் பண்றாங்க.”

“எதுக்கு? அரைகுறையாய் விட்டதற்கா”

“இல்லே சார். உண்மையில் அவங்க வேற எந்த்த் தப்புத் தண்டாவுக்கும் போகலே. லேப்ஸ் அனாடமிக்காக வைத்திருந்த டெட் பாடி சேதமாகிவிட வேறு ஏற்பாடு செய்தாகணும்னு புரபசர் உத்தரவு. அதற்காக்க் கல்லறைக்குப் பிணம் தோண்டப் போனார்களாம். வேறு எதுவுமில்லையாம் சார்..”

“வெறும் தோண்டல் தானா இல்லை, யாரையாவது கொலை செய்து...? ம்..மா” என்று சுரேஷ் தலையைப் பிடித்துக்கொண்டு முனகினான். சுஷ்மா சட்டென அவனை நெருங்கி அவனது தலைக்கட்டை அழுத்திப்பிடித்தாள், சுற்றியிருந்தவர்களின் கண்கள் விரிய, சுரேஷ் வலி மறந்து மெய் வாய் கண் எல்லாம் மறந்தான்.

10

 “எல்லோரும் ஏறியாச்சா? வண்டி புறப்படலாமா?”

பிரின்சிபால் கேட்க, “இன்னும் பிஜீ வரலே சார்!”

“இன்னும் என்ன பண்றான்?” என்று அவர் கடுப்படிக்க, “இதோ வந்துட்டேன் சார்!” என்று கையில் வெள்ளைக் கோட்டையும் ஸ்டெதாஸ்கோப்பையும் ஏந்திக்கொண்டு பிஜீ ஒடிவந்தான். கூலிங்கிளாஸ், தலையில் தொப்பி, தோளில் காமிர.

“ஏய், என்னப்பா மெடிக்கல் கேம்ப் பிற்கா இல்லை பிக்னிக் போறீங்களா?”

“ரெண்டுந்தான்!” என்று பஸ்ஸிலிருந்து பதில் வந்தது.

“ஒருநாள் உங்களிடமிருந்து விடுதலை!” உடன் பஸ் முழுக்க சிரிப்பு.

பிரின்சிபால் அதை எதிர்கொள்ள முடியாமல், “சுரேஷ், ஆர் யூ.ஒ.கே? காயம் ஆறிடுச்சுல்லே?” என்று பேச்சை மாற்றினார்.

“பாத்ரூம்ல இனி எச்சிரிக்கையா குளி! வார்டனே இப்படி வழுக்கி விழுந்தா எப்படி? சரி சரி, கிளம்புங்க!”

மருத்துவக் கல்லூரி முகாம் என முகத்தில் பேனர் கட்டப்பட்டிருந்த பஸ், டயர்கள், எலுமிச்சம்பழம் நசுக்கி, சூடம் காட்டப்பட்டுக் கிளம்பிற்று.

அது காம்பவுண்ட் கடக்கிறவரைதான் மவுனம். பிரதான சாலையைத் தொட்டதும், “ஏய், கலகலப்பா இருங்கப்பா.” ஜானி சொல்ல, பின்பக்கமிருந்து, “லக லக லக...” எனக் கலவரம் ஆரம்பித்தது.

சுரேஷிற்குத் தலையில் கட்டுப் பிரித்திருந்தாலும்கூட வலி இன்னும் மிச்சமிருந்தது. நெற்றியில் கிண்ணென்று பாரம்.

பிரின்சிபால் அவனுக்கு முடியவில்லை என்றால் வேறு யாரையாவது அனுப்புகிறேன் என்றார். அவன்தான் பிடிவாதமாய்க் கிளம்பியிருந்தான்.

அதற்கு இரண்டு உந்துதல்கள். ஒன்று இந்தக் காம்ப்பை வெற்றிகரமாய் முடித்தால் முழுநேர லெக்சர்ராக்குவதாய் பிரின்சிபால் கொடுத்த வாக்குறுதி. அடுத்தது சுஷ்மா!

என்னவோ தெரியவில்லை.... அவனையுமறியாமல் மனது அவளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருந்தது. அதற்குக் காரணம் அவளது அழகா, வனப்பா, திறமையா, அமைதியா, கண்களில் எப்போதும் தேக்கி வைத்திருக்கும் சோகமா, இல்லை எல்லாமுமா எனத் தெரியவில்லை.

அவளது கைப்பட்ட தலைக்கட்ட அன்று இனித்தகித்தது. அவளது அண்மை வேண்டும் வேண்டும் என்று மனது துடித்தது.

இப்போதும் பசங்கள் பாடி, ஆடி, மவுத்ஆர்கன் வாசித்து அமளி பண்ண சுரேஷின் பார்வை சுஷ்மாவின் பக்க்ம் எதேச்சையாய்த் திரும்புவதுபோலப் பாவித்தது.

அதுவரை அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சுஷ்மா, சட்டென மின்சாரத்தைத் தொட்டதுபோல் சாலைப் பக்கம் திரும்பி நாக்கைக் கடித்தாள். முகம் சிவந்த, நெற்றியில் இல்லாத வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.

அவனது வருகை அவளுள்ளும் பூரிப்பு தந்திருந்தது. அது ஏனென்று சுஷ்மாவிற்கும் புரியவில்லை. அதுவைரை அப்பா, அம்மா, சித்தி, பொறுக்கி விவேக் என கனத்த மனது, சுரேஷை நினைக்கம் போது இளகுவதை அவளாலும் உணர முடிந்தது.

தனக்குள் என்ன நிகழ்கிறது, எந்த ரசாயனம் வேலை செய்கிறது என்பதில் சுஷ்மாவிற்கும் குழப்பமிருந்தது. மருத்துவ மனையில் அத்தனை பேர் இருக்கும்போது எந்த சக்தி தன்னை உந்தி அவனது தலையைப் பிடிக்கச் செய்தது?

எனக்கென்ன உரிமை அவனிடம்? என் அத்தனை ஈர்ப்பு? எனத மனக்காயங்களுக்கு சுரேஷ் மருந்தாக இருக்கிறாரோ? எப்போதிருந்து இந்த அவஸ்தை?

அன்ற பிரின்சிபால் அறையில் அறிமுகப்படுத்தும்போதே வைரஸ் வந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். அது உள்ளுக்குள் படாய்ப்படுத்துகிறது.

அதற்கு முன்பும் சுரேஷ் வகுப்பிற்கு வந்திருந்தாலும்கூட அது பெரிதாய் தெரியவில்லை. அந்தச் சந்திப்புக்குப் பின்பு எந்த லெக்சரராவது லீவு எடுத்து அவன் வருவான்.

லைப்ரரிக்குப் போவாள். அங்க சுரேஷ் தலைதெரிகிறதா என்று அவளையுமறியமல் கண்கள் தேடும். சொல்லி வைத்த மாதிரி அவன் உள்ளே நுழைவான். அப்புறம் கேண்டீன், வெளியே கடைவீதி, கோவில் என பல எதிர்பாரா சந்திப்புகளில் கண்உரசல்.

அன்று பசங்கள் காம்பவுண்ட் தாண்டிக் குதித்து, ‘மாட்டினோம் தண்டனை உறுதி. பேசாமல் எமர்ஜென்ஸி விடுமுறை எடுக்கலாமா‘ என அவர்கள் டென்ஷனில் இருப்பதைப் பார்க்க சுஷ்மாவிற்கப் பரிதாபமாயிருந்தது. மருத்துவமனையிலிருந்த சுரேஷ் இவர்கள் பெயரில் புகார் கொடுக்காதவரை பிரச்சினையில்லை.

“பேசாமல் அவர் காலில் போய் விழுந்துடுவோமா?” என்று அவர்கள் யோசித்தனர்.

“வேணாம். ஒருவேளை அவர் நம்மை அடையாளம் கண்டிருக்காத பட்சத்தில் நாமே ஏன் போய் மாட்டிக்கொள்ள வேண்டும்?”

“சுஷ்மா, நான் வேணுமானால் அவரிடம் பேசிப் பார்க்கட்டுமா?”

“என்னன்னு?”

“பசங்க பாவம்.. விட்டிருங்கன்னு.”

“சும்மா சொன்னா விட்டிருவாரா? ஏற்கனவே மண்டையில் ஹெல்மெட்!”

“எதுக்க காம்பவுண்ட் கடக்கணும்னு கேட்டால்?”

“அனாடமிக்குப் பிணம், அது, இதுன்னு அளக்கறதுதான்!”

சுஷ்மா பொதுவாகவே பேசுவத கம்மி. அழுத்தக்காரி. ‘அவளுண்டு.... அவள் வேலை உண்டு‘ என்றிருப்பவள். அவளே சுரேஷிற்குத் தூது போகிறேன் என முன்வரும்போது, ‘போய்தான் பார்க்கட்டுமே‘ என்று அனுப்பினர்.

அந்தத் தூதுக்கு சுரேஷிடம் நல்ல பலனிருக்கவே, பசங்களிடம் அவளைப் பற்றி ‘பக்தி‘க் கொண்டது. அவள் நம்மைக் காப்பாற்றினாள். பிரச்சினை வராமல் தப்பித்தோம் என்று சந்தோஷப்படுவதற்கிடையில், ‘இவளக்கென்ன நம் மேல் அக்கறை? அக்கறை நம் மேலா? இல்லை? இந்தச் சாக்கில் வார்டனைப் போய்ப் பார்க்கலாம் என்று கிளம்பினாளா?

சுஷ்மா விண்ணப்பிக்கிறாள்... சுரேஷ் கேட்டுக கொள்கிறான் என்றால் என்ன அர்த்தம்?

மருத்துவக் கல்லூரியில் ஒட்டு உறவு என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மாணவ, மாணவிகளிடம் இது சகஜம். தோழி காதலி, டைம்பாஸ், கடன் தோழி, சினிமா தோழி, பிக்னிக் தோழமை எல்லாமே மறைக்கப்படாத லூட்டிகள்.

ஆனால் வார்டன் மேலேயே ‘லுக்‘ என்பத அங்கு ரகசியமாயும் விவாதிக்கப்பட்டு அதன்பின் சுஷ்மா புலிப்படை, பூனைப்படை. யானைப்படை என அனைத்து வழிகளிலும் கவனிக்கப்பட்டாள்.

பஸ் குலுங்க, ரொம்ப சாதுபோல சுஷ்மா அவன் பக்கம் திரும்பினாள். அவனிடம், ‘வலி பரவாயில்லையா? எனக் கண்களால் ‘பரவாயில்லை. நீ மறுபடியும் பிடித்துவிட்டால் தேவலாம்!‘ என்று புன்னைகத்தான்.

அவள் ஓரக்கண்களால் அதற்கப் பதிலிட்டாள். ‘இனி ராத்திரி உளவுக்குப் போகாம ஒழுங்கா தூங்கணும்

‘சரி மேடம்!‘

அதற்குள் இரண்டு பேர், “கண்கள் இரண்டால் சுஷ்மா கண்கள் இரண்டால்” என்று அவளைப் பார்த்து உரக்கப் பாட, பஸ்ஸில் கொல்லெனச் சிரிப்பு. சுஷ்மா சட்டென கன்னம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள்.

அனாதை பிள்ளைகள் ஆசிரமம்.

பஸ் அங்கே நுழைந்த்தும் ஆட்டம், பாட்டம், புகை, பாடல், கலாட்டாக்கள் சட்டென அடங்கி வருங்கால மருத்துவர்கள் மிக நாகரீகமாகவும் அடக்கமாகவும் பொறுப்போடும் இறங்கினர்.

ஆசிரமத் தலைவர், பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியைகள் வரவேற்று மருத்துவப் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைகளுக்கு அவர்களை அழைத்துப் போயினர்.

உபசரிப்பு.

சற்று நேரத்தில் பிள்ளைகளுக்கெல்லாம் பரிசோதனை. அடுத்து ஆசிரியர்கள். பிறகு அலுவலர்கள், வாட்ச்மேன், டிரைவர், கூலி ஆட்கள் என முடிந்ததும் சுரேஷ், “சார், உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. நாங்க கிளம்பலாமா?” என்றான்.

“இருங்க, சாப்பிட்டுட்டுப் போகலாம்.”

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles