தங்கத்தாமரைப் பெண்ணே!

 

“நன்றி. நாங்க ஹாஸ்டலுக்குப் போய் சாப்பிட்டுக்கிறோம்.” என்று பரிசோதனை உபகரணங்களை எடுத்து வைக்கும்போது கொஞ்சமிருங்க. இன்னொருத்தர் பாக்கி!” என்று சொல்லிவிட்டு தலைமையாசிரியர் மெஸ்ஸிற்கு ஒடினார்.

கொஞ்ச நேரத்தில் மெலிந்து கண்கள் சொருகி, வெளுத்து, சாயம்போய் சுருங்கின சேலையும் குருவிக் குடுமியுமாயிருந்த ஆயாவை அழைத்து வந்து, “இவங்களையும் பார்த்திருங்க” என்றார்.

“இப்படி வந்து உட்காருங்க!” என்று சொல்லி நிமிர்ந்து பார்த்த சுஷ்மா, “அம்மா, நீயா?” என்று விசுக்கென எழுந்தாள்.

11

சுஷ்மா ஆயாவைப் பிடித்துக்கொண்டு, “அம்மா, என்னை உனக்கு அடையாளம் தெரியலா? நா உன் சுஷ்ம்மா! உன் செல்ல மகள்.”

அவள் அதற்குப் பதில் சொல்லாமல் வெறித்து வெறித்துப் பார்த்தாள்.

“அம்மா, அப்போ நான் குட்டைப் பாவாடை, ஒல்லியாய் பல் தெரிய இருப்பேன். இப்போ வளர்ந்துட்டதால அடையாளம் தெரியலியா? இங்கே பாரும்மா. என் கண்களைப் பார் கன்னத்தைப் பார்! பெத்த மகளையே மறநது போகிற அளவுக்கு உனக்கு என்ன வந்தது? சொல்லும்மா?”

அதற்கம் ஆயாவிடமிருந்து பதிலில்லா மல் போகவே, “ஏம்மா, இப்படிப பண்ணே? ஏன் என்னை விட்டுட்டுப் போனே? அப்பா, பாட்டி, நானெல்லாம் உன்னை எங்கேயெல்லாம் தேடினோம் தெரியுமா? அம்மா, பேசும்மா! ஏதாச்சும் பேசு!” என்று சுஷ்மா அவளைப் பிடித்து உலுக்கினாள்.

சுற்றியிருந்தவர்களுக்கு அவளது அழுகையும் விசும்பலும் வினோதமாய்த் தெரிந்தது. மாணவர்களைப் பொறுத்தவரை அவள் அழகுக்கிளி. அமைதிப் புறா. எல்லாத் திறமையும் பெற்று நிறையகுடமாய் இருப்பவள். எந்தச் சபலத்திற்கும் இடம்தராதவன். அவள் இப்படி வெம்புகிறாள், உருகுகிறாள் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏற்கெனவே பாதி பேர் பஸ்ஸில் ஏறி அமர்ந்திருக்க, சுரேஷும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தான்.

“சுஷ்மா, கன்ட்ரோல் யுவர் செல்ப்!”

“சார், இது என் அம்மா சார்! என்னை பெத்தவ. இத்தனை காலமா நான் தேடிக்கிட்டிருந்தவங்க!”

ஆசிரம நிர்வாகி இரைச்சல் கேட்டு ஓடிவந்து. “ என்ன சார் இங்கே ஏதும் பிரச்சினையா?”

“சார், நீங்களே சொல்லுங்க. இது என் தாய். இவங்க பெயர் செண்பகம்தானே!”

“செண்பகமா?” என்று அவர் ஆயாவை ஏறிட்டார். அப்போதும் அவளிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. “சீக்கிரம் டெஸ்ட்களை முடிச்சா நான் போய் வேலையைக் கவனிக்க வசதியாயிருக்கும்.” என்றான் ஹீனமாய்.

“வேலையை அப்புறம் கவனிக்கலாம். முதல்ல இவங்களுக்குப் பதில் சொல்லச் சொல்லுங்க!” சுரேஷ் சுஷ்மாவிற்கு வக்காலத்திற்கு வந்தான்.

“என்ன டாக்டர் நீங்களுமா? இந்தப் பொண்ணுக்கு ஏதும் கோளாறா? ஏன் கொஞ்ச முன்னாடி வரை நல்லதானே இருந்த்து!”

“சார், என்னதிது! மரியாதை குறையறது.”

“அப்புறம் என்ன டாக்டர்? செண்பகம்ங்கிறா. அம்மாங்கிறா. இவங்க பேரு ராஜலஷ்மி. ரொம்ப நாளா இங்கேதான் இருக்காங்க. இப்போ திடீருன்னு மகள் புதுசா எங்கிருந்து முளைத்தாள்?”

 “சார், இங்கே பாருங்க! ஐ ஆம் ஆல் ரைட்! எனக்கு எநத் மனவியாதியுமில்லை. இவங்க சத்தியமா என் அம்மாதான். ரொம்ப வருஷமா பிரிந்திருந்ததாலும் நான் பெரிசா வளர்ந்துட்டதாலயும் இவங்களுக்கு என்னை அடையாளம் தெரியாம இருக்கலாம். நீங்களே கேளுங்க.”

அதற்குள் அவளது அறை தோழி பார்கவி ஒடிவநது கூட்டத்தை விலக்கிக்கொணடு உள்ளே வர,  “பார்கவி, இங்கே பாருடி! இவங்கதான் என் அம்மா!” என்று உருகினாள்.

“நான் சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க!”

மற்ற புரபசர்கள் பொறுமையிழந்து,  “இது என்ன கலாட்டா? அம்மான்றே! அவங்க வாயே திறக்கமாட்டேன்றாங்க, உங்க அம்மா பொண்ணு விளையாட்டை பிறகு வெச்சுக்கலாம். நேரமாகுது. சீக்கிரம் புறப்படுங்க!” என்றனர்.

“சுரேஷ், ஏன் வேடிக்கை! எல்லோரும் வண்டில ஏறுங்க.”

அதற்குள் ஆயா கூட்டத்தை விலக்கிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சுஷ்மா பின்னாடியே ஓடி, “அம், என்மேல உனக்கு கருணையேயில்லையா? இங்கே எத்தனையோ அனாதைப் பிள்ளைகளுக்குச் சோறு ஆக்கிப் போடுகிறாய் என்றார்கள். ஆயா என்கிறார்கள். பெத்த மகளை அனாதையாக்கினதேன்? நான் என்ன பாவம் பண்ணேன்!”

அவள் கேட்டுக்கொண்டே பின்னால் நடக்க, ஆயா சட்டென ஸ்டோர் ரூமிற்குள் நுழைந்து கதவை உள்ளே தாழிட்டுக் கொண்டாள்.

“அம்மா, அம்மா.... என்னதிது?” சுஷ்மா கதவைத் தட்டி குழந்தைபோல அமர்ந்து விசம்ப, யாருக்கும் எதுவும் விளங்க வில்லை. சுரேஷிற்கும் குழப்பம். இவள் சொல்வது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இதுதான் இவளது இத்தனை நாள் விரக்திக்குக் காரணமோ? தாயைக் கண்டதும் மடைதிறக்கிறாள். தன்நிலை மறக்கிறாள்.

ஒருவித்ததில் இவளுக்கு இந்த மருத்துவ முகாம் மூலம் பெற்றத் தாயைச் சந்திக்க முடிந்த்தே என்கிற சந்தோஷம் எழுந்தாலும் அதை அந்தம்மாள் உதாசீனப்படுத்துவதில் வருத்தம்.

“சுஷ்மா, கூல்... கூல்... அமைதியா இரு.”

“சார், இது என் அம்மா!”

“ஓக்கே... ஓக்கே! நான் நம்பறேன். அம்மாவைப் பார்த்ததும் உனக்கு உற்சாகம். ஆனால் இவங்களுக்கு இந்தச் சந்திப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கலாம். எதுக்கும் கொஞ்சம் அவகாசம் கொடு. இவங்க இருக்கிற இடம்தான் தெரிஞ்சிருச்சில்ல. இனி, எப்போ வேணுமானாலும் வந்த பார்க்கலாமே! கிளம்பு!”

“இல்லை. நான் வரலே, நீங்க போங்க!”

“சுஷ்! இங்க பார். இந்த முகாமுக்கு நான் பொறுப்பாளின்னு உனக்குத் தெரியும். ஆளாளக்கு ஒவ்வொரு பக்கம் பிச்சக்கிட்டு நின்னா அப்புறம் பிரின்சிபால்கிட்ட எனக்குத்தான் கெட்ட பெயர். பிளீஸ்!”

“பிரின்சிபால்கிட்ட நான் பேசறேன் சார்!” என்று உடன் செல்லில் அவரது நம்பரை அவசர அவசரமாய் முயற்சித்து அந்தப பக்கம் கிடைக்காமல் போகவே “ஷிட்!” என்று முனகினாள்.

“சார், நீங்களாவது என்னைப் புரிஞ்சுக்குங்க. எத்தனை வருடக் கனவு! எத்தனை வருடத் தவிப்பு! அம்மாவுக்காகத்தானே அப்பா, சொத்து, சுகம் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கியிருந்தேன். இனி நான் அனாதையில்லே சார்!”

ஆசிரமத்தில் மணி சப்தம் கேட்டது. உடன் பிள்ளைகள் பிரார்த்தனைக் கூடத்தை நோக்கி வரிசை பிடித்தனர். வாசலில் பஸ் பொறுமையின்றி ஹாரனடித்தது.

“சுஷ்மா, வா போகலாம்.” என்று சுரேஷ் அவளது கையைப் பற்ற, அவள் எதிர்க்கவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்துபடி அவனுடன் நடந்தாள்.

பஸ்ஸில் சுஷ்மா செலுத்தப்பட்டதுபோல ஏறினாள். பிடித்து வைத்தது போல அமர்ந்தாள். வண்டி கிளம்பி ரொம்ப தூரம் வந்துபின்பும் கூட போகும்போது இருந்து ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் அப்போது இல்லை.

மருந்துவ பரிசோதனை செய்த களைப்பு ஒரு புறம், சுஷ்மாவின் சோகம் மறுபக்கம் என மாணவர்களையும் அமைதி காக்க வைத்தது.

ஹாஸ்டலுக்கு அவர்கள் திரும்பினபோது இரவு பன்னிரண்டாயிற்று. அதன்பிறகு சாப்பிடப் பிடிக்காமல், அவரவர் தங்கள் அறையை நோக்கி நடக்க, சுரேண் சுஷ்மாவின் கையை உரிமையோடு பற்றி, “என் மேல கோபமா?” என்றான்.

அவள் அதற்குப் பதில் சொல்லாமல் வெறுமையாய் பார்த்தாள். அந்தப் பார்வையில் வழக்கமான ஒளி இல்லை. மேற்கொண்டும் அங்கே நின்றிருந்தால் அழுகை முட்டும் போலிருக்கவே, “குட் நைட்!” என்று தன் விடுதியை நோக்கி நடந்தான்.

படுக்கைக்கு வந்தும்கூட சுரேஷிற்க சமாதாமில்லை. இத்தகை நாட்கள் வாழ்க்கை ஏதோ எதற்கோ என்று ஓடிற்று. கொள்கை, கோட்பாடு, லட்சியம் என எதுவுமில்லா சுதந்திர மனிதன்!.

ஆனால் இப்போது காரணமில்லாமல் ஒரு பிடிப்பு. மகிழ்ச்சி அன்றைய நிகழ்வுகள், சுஷ்மாவின் அண்மை, அவளது பார்வை, பசங்களின் கலாட்டாக்கள், அவளது வெறுமை எல்லாம் அவனைப் பாதித்தது. தூக்கம் பிடிக்கவில்லை.

விளக்குப் போட்டு, மேஜை மேலிருந்து மருத்துவ முகாம் பைல்களைச் சரி பண்ணினான். அங்கு எடுத்த ரத்தம் மற்றும் இதர வஸ்துகளை லேபுக்கு அனுப்பணும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

சுஷ்மா!

அவள் என்னைத் தொல்லை பண்ணுகிறாள். அதிலே ஒரு சுகம் வேண்டப்பட்டவர்கள் கொடுக்கும் தொந்தரவுகள் கூட சந்தோஷம் தருகின்றன. பிடித்தவர்கள் என்ன செய்தாலும் பிடிக்கிறது! நான் காயம்பட்டபோது அவள் எனக்கு மருந்தாக வந்தாள்.

இப்போது அவளுக்கு நான். ஆறுதலாக, பக்கபலமாக, துணையாக இருக்க வேண்டும். சுண்மாவை, தன்னிடம் இணைத்து வைக்க தன்னைத் தாக்கின மாணவர்களுக்கு அவன் மனம் நன்றி சொல்லிற்று. அந்த நேரம் செல்போன் சிணுங்க எடுத்தான். எதிர்முனையில் சுஷ்டாவின் தோழி பார்கவி. “சார், இங்கே உடனே வரமுடியுமா?” என்று பதறினாள்.

12

சுஷ்மாவின் அறை.

அலறலும் இரைச்சலும் கேட்டு ஏற்கனவே அங்கே மாணவிகள் மொய்த் திருந்தனர். இன்னமும் அறையை நோக்கி வெராண்டாவில் பாய்ந்து கொண்டிருந்தனர்.

குளியலறைக் கதவு திறந்திருந்தது. பார்கவி இரவு உடையின் பளபளப்பில் முடி பிசிறி மிரண்டு போயிருந்தாள்.

சுரேஷ் மாணவிகளை விலக்கிக் கொண்டு பிரவேசிக்க, “சார், இங்கே பாருங்க.” என்று பார்கவி குளியலறையில் மூலையில் சரித்து அமர வைத்திருந்து சுஷ்மாவைக் காட்டினாள்.

சுஷ்மா தலைக்கவிழ்ந்து, உடை நனைந்து, தரை முழுக்க ரத்தம் சிதறியிருந்தாள். அவளது விரலில் கட்டுப் போடப் பட்டு இன்னமும் ரத்தம் ஊறிக் கொண்டிருந்தது. வேண்டுமென்றே விரல் வெட்டி... குரூரம்!

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles