இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
ஞாபக மறதி இல்லாத மனிதனைக் கண்டுபிடிப்பது சிரமம். பல மேடைகளில் பேச்சாளர்கள் பேச நினைத்துப் போன விஷயங்கள் எதுவுமே பேசாமல் வேறு விஷயங்களைப் பேசி ஏனோ தானே என்ற சமாளித்து டுவார்கள். ஆனால், பலர் குறிப்பெடுத்துப் போன பேப்பரைப் பாக்கெட்டிலிருந்து எடுக்காமலேயே சரியாகப் பேசி கைதட்டல் வாங்கிவிடுவார்கள். மார்க்கெட்டிற்குப் புறப்படும் முன் என்ன என்ன வாங்க வேண்டும் என்று குறிப்பெடுத்துச் செல்லுங்கள்- குழப்பமில்லாமல் குழம்பு வைக்க முடியும்.

குறிப்பெடுத்தல் எவ்வளவு முக்கியம் என்பதற்கு நான் அறிந்த ஒரு சிறந்த உதாரணம் : அனுபவப்பட்ட ஆகாய விமானி. அவர் விமானத்திதல் ஏறினால் - விமானம் புறப்படுவதற்கு முன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்ற குறிப்பு அட்டையை எடுத்துப் படித்து டிச் செய்வார். அதே போல் விமானம் புறப்பட்ட பின், இறங்குவதற்கு முன்னும், இறங்கிய பின்னும் குறிப்பு அட்டையைப் படித்துச் செயல் படுவாராம். இது பயிற்சி விமானி முதல், நாளை ஓய்வு பெறும் விமானி வரை கடைப்பிடிக்கும் விதிமுறை. இதை மனிதல் குறித்து வைத்து விடேன் என்று சந்தோஷப்படாதீர்கள். குறிப்பெடுத்து செயல்படுங்கள்.

நமக்கு யாராவது பணம் கொடுத்தால் அவர்கள் முன் எண்ணிப் பார்ப்பது அவர்களை இன்சல்ட் செய்வது மாதிரி என்ற எண்ம் நமக்குள் பதிந்து விட்டது. அவர் போன பிறகு எண்ணிப் பார்த்தால் ஓரிரு நோட்டுகள் குறைந்தால் அவர் மீது நமக்கு மதிப்புக் குறைந்து, அவர் மீது எப்போதும் ஓர் உஷார் கண் வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு விடும்-

அதே போல் நாம் யாருக்காவது பணம் கொடுத்தால் அவர் நம் முன்னால் எண்ணிப் பார்த்தால் அவமானப்படுத்துகிறர்ர் என்று டென்ஷன் ஆகி விடுகிறோம். இதில் ஒரு முடிவுக்கு வருவோம்.

உங்களிடம் பணம் கொடுப்பவரிடம், ‘தப்பாக நினைக்காதீர்கள்...எண்ணிப் பார்த்ததுக் கொடுங்கள். குறைவாக இருக்கும் என்று சொல்லவில்லை, அதிகமாகவும் இருக்கலாமில்லையா?’ என்று கிண்டலடிப்பது போல் சொல்லிப் பாருங்கள்.

உங்களுக்கும் நிம்மதி, கொடுப்பவருக்கும் செல்ப் செக்கப்.

அதே போல் நீங்கள் யாருக்காவது பணம் கொடுக்கும் போதும் உங்கள் முன்னால் எண்ணச் சொல்லுங்கள். காரணம், “நானே எண்ணவில்லை, அதனால் தான் ” என்று பொய்யைச் சொல்லுங்கள். டீலிங்ஸ் சரியாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்தப் பணத்தை எடுத்துச் செல்லும் இடைப்பட்டவர்களுக்கு ஓரிரு நோட்டுகளை உருவுவதில் பெரிய லாட்டரி அடித்த சந்தோஷம் உண்டு, இதனால் நமது மரியாதைக்குரியவர்கள் மீது வீண் சந்தேகம் ஏற்பட்டு சந்தோஷம் குறையும்.

கடிதம் எழுதும் பழக்கத்தைக் காதலிப்பதோடு நிறத்திக் கொள்கிறவர்கள் தான் அதிகம். கடிதம் நம் மனசாட்சி என்பதை யாரும் உணருவதில்லை. பல மணி நேரம் பேசித் தீர்க்காத விஷயத்தை ஒரு கடிதம் சரி செய்துவிடும். பல மைல் தூரத்தை மூச்சு விடும் தூரமாக்குவதும் கடிதம்தானே என்பதை உணர வேண்டும். கடிதம் எழுதிப் பழகிவிட்டால் எழுத்தாற்றல் நம்மையறியாமல் கூடும்.

நீங்கள் பல வருடங்களுக்கு முன்னால் எழுதிய கடிதத்தை உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ பத்திரப்படுத்தி வைத்திருந்து காட்டினால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலும் உங்கள் முன்னேற்றத்தின் அளவை அந்தக் கடிதங்கள் தான் நிரூபிக்கின்றன. சிலர் கடிந்து பேசுவதைக் கடிதம் மூலம் காட்டி விடுவார்கள். அது அவர்களுக்கு சாட்சிக் கடிதமாகி ஆபத்து உண்டு பண்ணி விடும்.

கடிதங்களில் முக்கியமானத நன்றி தெரிவிக்கும் கடிதங்கள். இது உங்களை அறியாமல் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் பரிந்துரை. நட்பை வளர்க்க உரம் போட வேண்டம என்றால் கடிதம் எழுதப் பாகீக் கொள்ளுங்கள்.

பலர் தாங்கள் செய்யும் வேலையின் பளுவை விவரிக்கும் போத எனக்கு அவர்களது அறியாமை தெரியும். நான் பார்க்கிற வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்று சொல்லுபவர்கள், தயவு செய்து அடிக்கடி சர்க்கஸுக்குச் சென்று பாருங்கள். பிறகு சர்க்கஸ் சாகசக் காரர்களின் ரிஸ்க், பயிற்சி பற்றி யோசியுங்கள். பிறகு உங்கள் வேலைப்பளு குண்டூசி போல் ஆகிவிடும்.

கம்பிமேல் நடப்பவரைப் பற்றி யோசித்தால் கைப்பிடி இருந்தும் பஸ்சில் தள்ளாடி மற்றவர்களை இடிப்பவர்கள் மீத எவ்வளவு கோபம் வரும். சர்க்கஸ் கூடாரத்தின் உச்சியில் அந்தரத்தில் ஊஞ்சலாடி ஒருவர் கையை இன்னொருவர் பிடிப்பதைப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதில் உள்ள கஷ்டத்தை யோசித்தால் இதயத்தில் கண்ணீர் வரும். புவியீர்ப்பு சக்தி உயரம் போகப் போக பூமியை நோக்கி அதிகரிக்கும். உயிரோடு உயரத்தில் ஊஞ்சலாடும் இவர்களை எண்ணிப் பாருங்கள். நீங்கள் வாங்கும் சம்பளத்தையும் எண்ணிப் பாருங்கள்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24