இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
எந்த தொழிலையும் அக்கறையுடன் சிந்தித்துச் செயல் பட்டாலும் அதற்கன நேரம் காலம் வரும் போது தான் பிரகாசமாக வரும். குருவைவிட மாணவன் பிரபலமடைந்தால் குருவிற்குத் திறமை குறைவு என்று அர்த்தமாகுமா? லட்சியத்தோடு போராடினால் நிச்சயம் வெற்றி ! ஆனால் என்றைக்கு ? எப்போது? எங்கே அந்த வெற்றி காத்திருக்கிறது ? என்பதை எவராலும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாது. எப்போத நமக்கு மகிழ்ச்சி வரும் என்று புலம்பும் நாம், எப்போது நமக்குக் கோபம் வரும் என்று யோசித்ததுண்டா? அறிவைச் சேகரித்துச் சேமித்து வையுங்கள். அது பிற்காலத்தில் நிச்சயம் நல்ல வட்டியைத் தரும். கவனம் சிதறாமல் பொறுமையுடன் உங்கள் லட்சியத்தை நோக்கிப் பயணம் செய்யுங்கள் - வெற்றி நிச்சயம். இந்தத் தத்துவத்தைக் கூறியிருப்பவர் ‘பென்ஜமின் டிஸிலரி’ என்ற வெற்றி பெற்ற அறிஞர்.

ஒரு வாரம் வேலைக்குச் செல்லவில்லையென்றால் வீட்டில் இருப்பவர்கள் நம்மிடம் பேசும் வசனமே அதிர்ச்சியாக இருக்கும் - ‘கொஞ்சம் பையனை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடுங்க’, ‘பால் வாங்கிட்டு வந்துடுங்க’, ‘எதுக்கு சீக்கிரம் முழிச்சி ரெடியாகி எல்லாரையும் தொந்தரவு செய்றீங்க?’ இந்த மாதிரி தொடரும். வேலைக்குச் செல்லவில்லையென்றால் ஆண்கள் பாடு படாத பாடாகி விடும். போருக்குப் புறப்படுபவர்களைப் போல் காலையில் வேலைக்குப் புறப்படுவதுதான் புருஷ லட்சணம். அப்போது தான் நம்மை ஒரு வீரனாக மதிப்பார்கள்.

இந்த வேலைக்குத்தான் போவேன் என்று அடம் பிடித்து அசிங்கப்படுவதை விட, எந்த வேலையையும் இழுத்துப்போட்டுச் செய்து பாருங்கள். உற்சாகமாகவும், இளமையாகவும் இருப்பீர்கள். உழைக்காமல் ஒதுங்கியிருந்தால்,உடம்பு கூட உங்கள் சொன்னப் பேச்சு கேட்காது. உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் ஓயாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த உடம்பு வேலைக்குச் செல்லவில்லை என்றால் எப்படி? வேலை கிடைக்கவில்லை என்பவர்களுக்கு ஒரு பதில் - ஓயாது வேலை தேடுவதே ஒரு வேலை.

விழாக்களுக்குச் செல்வதைச் சிலர் புதுப் புதுக் காரணங்களைக் கூறித் தவிரித்து விடுவார்கள். விழா ஓர் ‘இணைப்பு’ என்பதைக் கூர்ந்து நோக்கினால் தெரியும். சண்டை கொண்ட இருவர் பந்தியில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதால் சம்பந்திகளாக மாறக் கூடிய வாய்ப்புக் கூட உண்டு.

யாரும் கல்யாண வீட்டிற்கோ, காதணி விழாவிற்கோ கோபத்துடன் வருவதில்லை. வாசலில் நுழையும் போதே பன்னீர்தெளித்து? சந்தனம் பூசி, கற்கண்டு கொடுத்தால் கோபம், கோபம் கொண்டு ஓடி விடாதா? மேலும் நட்பு, உறவு போன்றவை இறுகுவது வெகுநாட்களுக்குப் பறிகு சந்திப்பதில் தான் ஏற்படும். சந்தோஷம் குசலம் விசாரிப்பு இவையெல்லாம் ழிக்களில் அழைப்பிதழ் கொடுக்கும் போது, ‘குடும்பத்தோட அவசியம் வரணும்’ என்று அழைக்கும் கலாச்சாரம் நம்மிடம் இருக்கும்போது அதை ஏந் அலட்சியப்படுத்துவானேன்? அழைப்பிதழ் அனுப்பாத உங்கள் எதிரி வீட்டுத் திருமணத்திற்குப் பெருந்தன்மையுடன் போய்ப் பாருங்கள். அவர் உங்கள் முந்நாள் எதிரி ஆகிவிடுவார்.

சில நேரங்களில் நண்பர்கள் நம்மைச் சந்திக்க வரும் போது, உடன் யாரையாவது கூட்டி வந்தால் அவரைப் பற்றி அவர் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வருவதில்லை. மேலும் நம் நண்பரிடம் பேச வேண்டிய ரகசியங்களை ஒளிவு மறைவு இல்லாமல் கொட்டித் தீர்த்து விடுவோம். அந்த விஷயங்கள் வந்தவருக்குத் தெரியக் கூடாததாகக் கூட இருக்கலாம். அதைப்பற்றியெல்லாம் நாம் யோசிப்பதே இல்லை.

ஒரு விஷயம், நமக்குப் பிடித்தவர்கள் மற்றவர்களுக்குப் பிடித்தமானவராக இருப்பார்கள் என்று எப்படி ஊர்ஜிதப்படுத்த முடியும் ? கடவுள், நாத்திகள்ம, மதம்,ஜாதி, தலைவர்கள் இப்படிக் கருத்து வேறுபாடு எல்லாருக்கும் உண்டு என்பதை உணராமல், நண்பருடன் பேசுகிறோம் என்பதை மட்டும் நினைத்து பக்கத்தில் வந்தவரையும் நம் பேச்சோடு கலந்துவிடும்படி கூடப் பேசுவோம். திடீரென்று சொல்லக்கூடாத விஷயத்தையெல்லாம் சொல்லி விட்டோமோ என்ற சந்தேகம் வரும் போது தான் இவர் யார் என்று அறியத் தோன்றும்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24