இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
சில நேரங்களில் நீங்கள் பேசியது யார் காதுக்குப் போகப் கூடாது என்று நினைத்திருந்தீர்களோ? வந்தவர் அவருடைய நண்பராக இருந்தால் உடம்பில் அல்ல, உயிரில் ஷாக் அடித்தது போலிருக்கும். சில நேரங்களில் வந்தவர் உங்கள் நண்பருக்கே தெரியாதவராகக் கூட இருக்கலாம். இதை விட சில நேரங்களில் உங்கள் நண்பருடன் வந்தவர் அவராக மூக்கை நுழைதுத உங்கள் வார்த்தைகளைப் பிடுங்கலாம்.

இந்த சிக்கலிலிருந்து தப்பிக்க ஒரே வழி, தெரியாதவராக இருந்தால் நீங்களாகவே உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் யார் என்பதை கூச்சமில்லாமல் கேளுங்கள். இல்லையென்றால் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன், ஞாபகமில்லை என்று யாருக்கும் பாதிக்காத பொய்யைச் சொல்லுங்கள். அவர் யார் என்பதைச் சொல்லியே தீருவார்,பிறகு வம்பு இல்லை.

அதே போல் நீங்கள் எந்த நண்பரை பார்க்கப் போனாலம உங்களுடன் அழைத்துச் செல்பவரை முதலில் யார் என்றும் எவ்வளவு நெருக்கம் என்பதையும் சொல்லி விடுங்கள். உங்கள் நண்பர் காப்பாற்றப்படுவார்.

சிலரிடம் அவரது விலாசம் கேட்டால் யோசித்து பின் தன் மனைவியிடமோ அல்லது மகன்களிடமோ கேட்டுச் சொல்பவர்களும் உண்டு. பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ, முதலில் உங்கள் விசிட்டிங் கார்டு அல்லது ஒரு சீட்டில் உங்கள் விலாசத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

அது உங்களை எங்கெல்லாம் காப்பாற்றும் தெரியுமா? திடீரென்று நீங்கள் மயங்கி விழுந்தால் உங்கள் விலாசம் தான் உங்களை வீட்டுக்கு அழைத்து வர உதவும். மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வந்தாலும் விலாசம் இல்லையென்றாலும் நேரம் விரயமாகும். வீண் டென்ஷன் உங்களுக்கு மட்டும் அல்ல, வீட்டில் உள்ள அனைவரிடமும் வெளியே செல்லும்போது விலாசத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

மேலும் ஒரு படி யோசித்தால், உங்கள் குடும்ப டாக்டர், வக்கீல் போன்றவர்களின் விசிட்டிங் கார்ட் அல்லது விலாசம், குறைந்த பட்சம், பாக்கெட் டைரியில் முக்கியமானவர்களின் போன் நம்பர்களைக் குறித்து வைத்துக் கொள்வது, ஒரு முதலுதவிப் பெட்டி உங்கள் பாக்கெட்டில் இருப்பது போன்றது. பாக்கெட்டில் பணமிருந்தால் அதை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். விலாசமிருந்தால் அது உங்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்.

அடிக்கடி வெளியூர் போகிறவர்களால் குடும்பத்தினருக்கு டென்ஷன் ஏற்படும். போன கணவர் உடனே போன் செய்ய வேண்டும். இல்லையேல் குழப்பம் கூடுகட்ட ஆரம்பித்து விடும். எவ்வளவு தூரப் பயணமானாலும் சரி, எவ்வளவு களைப்பாக இருந்தாலும் சரி, போனவுடன் போன் போட்டு நான் நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டேன். இனி இந்த விலாசத்தில் இந்தப் போனில் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறுங்கள்.உங்களைப் பற்றிய தேவையற்ற கவலையும், அவர்களைப் பற்றிய கவலையும் நீங்கி நிம்மதியாகப் பணியாற்றலாம்.

நமது வீட்டு விழர்க்களுக்குப் பத்திரிகை அனுப்பும் போது, பலரது விலாசத்திற்கு நாம் படும்பாடு இருக்கிறதே - மூளையே வலிக்கும். கொஞ்சம் முன் யோசனையோடு இதற்கு முன் நாம் நடத்திய விழாவுக்குப் பத்திரிகை அனுப்பும் போது , யார் யாருக்கு அனுப்பினோம் என்ற விலாச நகல் ஒன்றை எப்போதம் பத்திரமாக வைத்திருங்க்ள். ‘கல்யாணமா, காது குத்தா, எடு அந்த லிஸ்டை ’ என்று விசனப்படாமல் விலாசம் எழுதலாம்.

மேலும் நமக்கு புதுப் புது நண்பர்கள். உறவினர்கள் கூடும் போது இந்த லிஸ்டில் அவர்களது பெயரையும் உடனே சேர்த்து விடுங்கள். பலர் நமக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தால், அதே விசிட்டிங் கார்டில் மற்றொருவருக்கு நம் தொலைபேசி எண்ணை எழுதிக்கொடுத்து விடுவோம். விசிட்டிங் கார்டுக்கென்று ஒரு சிறு பெட்டி வைத்திருங்கள். இதெல்லாம் முன் ஜாக்கிரதை மட்டுமல்ல. நட்பை பலப்படுத்த ஒரு பாலமும் கூட.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24