இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
விசேஷங்களுக்குப் போகும்போ என்ன பரிசுப் பொருள் வாங்கி போவது - இதை அழைப்பிதழ் வந்த உடனே யோசிக்க வேண்டும். இல்லையென்றால் விழாக்களுக்குப் புறப்படும் முன் ஏற்படும் டென்ஷன் இருக்கிறதே - அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அழைப்பிதழ் வந்தவுடன் அவருக்கும் நமக்கும் உள்ள நெருக்கம்...இப்போதைய நமது பொருளாதார நிலை.....இதையெல்லாம் கணக்குப் போட வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை நான் அழைப்பிதழைப் பார்த்தவுடன் இதற்கு மலர் கொத்து, அன்று எனக்கு முக்கிய வேலை இருந்து போக முடியாமல் போனால் அதற்கு வாழ்த்துத் தந்தி, பரிசுப்பொருள் என்றால் எவ்வளவு விலை என்பதை அழைப்பிதழ் கவரிலேயே எழுதிவிடுவேன்.

மேலும் என்ன பரிசுப்பொருள் கொடுக்கப் போகிறோம் என்பதைக் கொஞ்சம் யோசித்துக் கொடுத்தால் அழைப்பிதழ் அனுப்பியவர் மனதில் அதிகம் இடம் பிடிக்கலாம்.

உதாரணத்திற்கு, அவர் எப்போதோ உங்களிடம் சொன்ன விஷயத்தை ஞாபகம் வைத்து அது நினைவுக்கு வரும்படி பரிசுப் பொருள் கொடுத்தால், அவர் எப்போதும் உங்களை மனதில் ஞாபகம் வைத்திருப்பார். கல்யாணப் பெண்ணுக்குப் பரிசு கொடுக்கும் போது, ‘சாவிக் கொத்து’ கொடுங்கள். இனி தன் கயில்தான் இந்தக் குடும்பப் பொறுப்பு என்று புரிந்து சந்தோஷப்படுவார்.

மாப்பிள்ளைக்கு, குழந்தை தாலாட்டும் தொட்டில் கொடுத்து பாருங்கள். அப்போதே தந்தையாகிவிட்ட சந்தோஷம் முகத்தில் தாட்வமாடும். புதுமனைப் புகுவிழா என்றால் வீட்டைச் சுத்தம் செய்ம் மிஷின் வாங்கிக் கொடுங்கள். எப்போதும் வீடு சுத்தமாக இருக் வேண்டும் என்ற உங்கள் சிம்பாலிக் அவர்களை சிலிர்க்க வைக்கும்.

டேப் ரிக்கார்டரில் பாடல் கேட்கும் ஆர்வம் உள்ள நாம், அந்தப் படப் பாடல் கேசட் முடிந்தவுடன் மறுபடியும் அந்தப் பட கேசட்டைப் பெட்டிக்குள் வைக்கிறோமா என்றால் , பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம் அதே சமயம் உடனே கேட்க விரும்பும் படப் பாடல் கேசட் தேடும்போது கிடைக்கவில்லையென்றால் வரும் கோபத்தின் அளவு இருக்கிறதே.... அடேங்கப்பா !

இதற்கு ஒரு யோசை - பாடல் கேட்டு முடிந்தவுடன் அடுத்தப் பட பாடல் கேசட்டை ஆர்வத்துடன் எடுக்கும் முன், கேட்டு முடிந்த பாடல் கேசட்டை அதன் பெட்டிக்குள் வைத்து விட வேண்டும். பிறகு அடுத்த பாடல் பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தால் இந்த கேசட் குழப்பம் தவிர்க்கப்படும். இதே போல, சில பைல்களைத் தேடும் போது வீட்டில் ரகளையே நடக்கும்.

டெலிபோன் டைரியில் எப்படி நம்பர்களைக் குறித்து வைத்துக் கொள்கிறோமோ அதேபோல் ஒரு டைரியில் எந்த பைல் எந்தப் பெட்டியில் இருக்கிறது என்று குறித்து வைத்துக் கொண்டால் வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி அலுவலகம் நடக்கும் உணர்வு தோன்றும்.

உழைப்பு என்பது உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், இருக்றிது. உடல் உழைப்புடன் அறிவும் கலந்து விட்டால் வெற்றியின் உச்சத்தைத் தொட்டு விடலாம். இதில் தன்னிலை உணருதல் மிக முக்கியம். தன்னால் இந்த வேலையைச் செய்ய முடியுமா? என்று முடிவெடுப்பது மிக முக்கியம்.

கோடரியால் மரத்தை வெட்டுவது பலம். மரம் வெட்டு முன்பே கோடரியைக் கூர்தீட்டுவது அறிவு. உடல் பலம் உள்ள எல்லோரிடமும் அறிவு அதிகமிருக்கும் என்று நினைப்பது தவறு. ஆனால் அறிவாளிகள் தனக்கு என்ன தெரியும் என்பதை விட, என்ன தெரியாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்து செயல்படுவார்கள். இப்போதும் எப்போதும் எனக்கு மனப்பாடம் ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டி வளர்ச்சி’.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24