இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
வீட்டின் தரையில் சிமெண்ட் அல்லது டைல்ஸ் ஒட்டி அழகு பார்க்கும் நாம், அங்கே போடும் நாற்காலியால் தரை சேதப்படாமல் இருக்க யோசிப்பதில்லை. உங்கள் காலுக்கு செருப்பு அணிந்து கொள்வது போல வீட்டில் போடும் நாற்காலிகளுக்கும் புஷ் போடுங்கள். தரையும் பாதிக்காது, உங்கள் காலும் பாதிக்காது.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பது இப்போது பல விஷயங்களுக்குத் தேவைப் படுகிறது. பாஸ்போர்ட், அடையாள அட்டை, பரீட்சைக்கு ஹால் டிக்கெட், கிரெடிட் கார்டு, பேங் அக்கவுண்ட் இப்படிப் பலவற்றிற்குத் தேவைப்படுகிறது. இது இல்லாத போது இச்சிறிய போட்டாவை எடுக்கப் பலர் காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் குதித்துக் கொண்டு, ‘சீக்கிரம்’ - சீக்கிரம்- சீக்கிரம்’என்று போட்டோ கடைக் காரரை நச்சரிப்பார்கள்.

இப்போதெல்லாம் புகைப்படத் துறையில் பல முன்னேற்றங்கள் வந்து விட்டன. போட்டோ எடுத்த ஐந்து நிமிடத்தில் எத்தனை பிரிண்ட் வேண்டுமானாலும் எடுத்துத் தருகிறார்கள். நாம் திடீரென்று போட்டோ எடுக்க வேண்டிய கட்டத்தில், தாடியுடன் இருக்கிறோமா, கொஞ்சம் டல்லாக இருக்கிறோமா? என்று பல குழப்பங்கள் வரலாம். எப்போதும் நம்மிடம் குறைந்தது பத்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை ரெடியாக வைத்திருங்கள். டென்ஷனே இல்லை.

இதேபோல் சிலர் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து விட்டு எப்போது வரும் என்று தவித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதாவது வெளிநாடு செல்வோம் என்ற கனவுடையவர்கள் உடனே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய வேண்டும். பாஸ்போர்ட் இருந்தால் தான் சில உயர் படிப்புகளுக்குத் தேர்வே எழுத முடியும் என்பது சிலருக்குத் தெரியாது.

எப்போதாவது, என்னவோ அற்புதம் நடக்கும் என்ற நம்பிக்கையில்தாம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெளிநாடு செல்ல அதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டும் போது ‘பாஸ்போர்ட்’ என்கிற சாவி உங்கள் கையில் இருந்தால் தான் நீங்கள் வெளிநாடு செல்ல முடியும். ஒரு விஷயம், பாஸ்போர்ட் என்பது உங்கள் உடன் பிறவா உறப்பு.

நம் வீடுகளில் சுவர் மூலையில் ஒட்டடையைப் பார்த்தவுடன் தான் ஒட்டடை அடிக்க வேண்டும என்ற எண்ணம் தோன்றுகிறது. சில சந்தோஷ குடும்பங்களைக் கவனித்திருக்கிறேன். அட்டவணை ஒன்று வைத்திருக்கிறார்கள். அதன்படி ஒட்டடை இருக்கிறதோ, இல்லையோ - இத்தனை நாளைக்கு ஒரு முறை ஒட்டடை அடிக்க வேண்டும், விளக்குகளைச் சுத்தம் செயய வேண்டும், காருக்கு ஆயில் மாற்ற வேண்டும். இப்படித் தயாரித்த பட்டியலை, குடும்பத்தில் யார், யார் என்னென்ன வேலை செய்வது என்பதைப் பசங்கள் வரைக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறார்கள்.

அதனால் தான் வீடுகள் எப்போதும்‘பளீச்’ சென இருக்கின்றன. வீட்டில் உள்ளவர்களும் உற்சாகத்துடன இருக்கிறார்கள். இது என்ன நம்மால் முடியாததா? நிச்சயம் முடியும். இப்போதே பட்டியலைத் தயாரியுங்கள். ஒட்டடை அடிக்கத் துவங்கினால் ஒட்டகத்தையும் ஒரே தவணையில் வாங்கலாம்.

நம் நண்பர் ஒருவரை ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறோம் என்றால் முதலில் நம் பாக்கெட் நிறைவாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஆர்டர் செய்யும் போது உங்களுக்குப் பிடித்தது என்ன வென்று அறிந்து ஆர்டர் செய்ய வேண்டும்.

அதைவிட ஒரு மடங்கு மேலே யோசித்தால் , சர்வரிடமே, ‘ஐயா! இவர் என் உயிர் நண்பர், விருந்த கொடுக்க அழைத்து வந்திருக்கிறேன். அவர் உங்களையும் உங்கள் ஓட்டலையும் பாராட்டும்படி அசத்துங்கள்’, என்று கூறி விட்டால் போதும். உங்கள் நண்பர் உச்சி குளிந்து விடுவார்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24