இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
சில நண்பர்கள் இருக்கிறாகள். சர்வர் பில் கொண்டு வரும் நேரம் பார்த்து கை கழுவப் போய்விடுவார்கள் . பிறகு வந்த ‘நீங்கள் ஏன் பில் கொடுத்தீர்கள்?’ என்று போலியாக சண்டை போடுவார்கள். உபசரிப்பில் உண்மை இருந்தால், ருசியை விட அன்பும், நட்பும் பலப்படும்.

ஒரு பொருளை எடுத்துப் பயன்படுத்தி விட்டு, அப்பொருளை எடுத்த இடத்திலேயே வைக்கிறோமா? என்று நம்மை நாமே கேட்டால் பாதிப் பேரிடம் இருந்து வரும் பதில் ‘இல்லை’ என்று தான் இருக்கும். சாவியை எடுத்த இடத்திலேயே வைக்காமல் அதைத் தேடி அவதிப் படுவதைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம்.

இப்போதெல்லாம் சிலர் தங்களது செல்போனை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் இன்னொருவரின் போனை வாங்கி ; தங்கள் நம்பருக்குப் போட்ட எங்கே போன் சத்தம் அழுகிறது? என்று கண்டுபிடிக்கிறார்கள். பல் துலக்கும் பிரஷ்ஷிலிருந்த இப்பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் நம் ஞாபக சக்தி மேல் நமக்குள்ள நம்பிக்கை வைக்கலாம் ; ஆனால் அதீத நம்பிக்கை கூடாது. கார் சாவி இந்த இடத்தில் தான் வைக்க வேண்டும் ; சைக்கிளைப் பூட்டி இந்த இடத்தில் தான் சாவியை வைக்க வேண்டும் என்று நிர்ணயித்தால், எதுவும் தொலைந்து போகாது. மூளையைப் போட்டுத் துளைக்கவும் வேண்டாம். ஞாபகமறதியே இல்லாதவர்கள் இருப்பதாக என் ஞாபகத்தில் இல்லை.

நமக்கு எஸ்.டி.டி.மற்றும் ஐ.எஸ்.டி. போன் வந்தால் யார் பேசுகிறார்களோ அவர்களது பொருளாதார நிலை, நமது நிலை ஆகியவற்றை ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்த்துப் பேச வேண்டும். அவர் சொல்லக் கூடிய செய்தி சுருக்கமானதாக இருந்தால் பரவாயில்லை.

அதிக நேரம் பேச வேண்டிய விஷயமாக இருந்தால், போன் செய்வதவரை, ‘நீங்கள் போனை வையுங்கள், நான் திரும்ப அழைக்கிறேன்’ என்று கூறி அவரது டெலிபோன் பில்லைக் குறைக்க முயலுங்கள். அவர் மனதில் மட்டு மல்ல, உங்கள் மனதிலும் மகிழ்ச்சி ‘அலை’ அடிக்கும். போன் செய்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக வெட்டியாகப் பேச்சை இழுப்பது ஒரு வகையில் துரோகம் கூட.

சிலர் எங்கே எதைப் பேச வேண்டுமென்று தெரியாமல் மூக்கை நுழைத்துப் பேசுவதைப் பார்த்தால் நமக்கு எரிச்சலாக வரும். மேலும் நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காமல் படபடவென பேசுவார்கள்.

ஒரு விஷயம்- மற்றவர்களின் பேச்சில் என்ன விஷயம் இருக்கிறது.எங்கே அவர் முற்றுப்புள்ளி வைக்கிறார் என்று கவனித்து நாம் நம் கருத்தைச் சொல்லத் தொடங்க வேண்டும். அவர் பேச்சில்‘கமா’ - வைக்கும் போது நாம் குறுக்கிட்டுப் பேசக்கூடாது.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24