இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
ஆனால் நாம் இப்போது சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்ககப் பல வழிகள் இருக்கின்றன. வழி தெரிந்தால் போதும். பிழைத்துக் கொள்ளலாம். நாளை எப்படியோ என்ற எண்ணம் நமக்கு மட்டும் தான் இருக்கிறது என்று சிலர் நினைத்துக் கொண்டிரக்கிறார்கள். ஆனால் எல்லோரும் அப்படித்தான் எந்நாளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதையும் மீறி ‘நாளை நமதே’ என்று நினைப்பவர்கள் தான் வெற்றி கண்டிருக்கிறார்கள். இப்போது உக்ஙள் உள் மனது நாளை நமதே என்று குசுகுசுவெனக் கூறுகூது என் காதில் விழுகிறது.

“நாம் ரொம்ப உஷார். என்னை ஏமாற்ற முடியாது” என்று ஒருவர் கூறினால் அவர் ஏதோ பெரிதாக ஏமாந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

உஷாராக இருப்பது என்றால் நாம் நம்மை அறியாமல் எந்த நேரமும் நம்மையே கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு அனிச்சைச் செயலாக இருக்க வேண்டும்.

வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டாலே போதும், கையெழுத்துப்போட்டவர்களின் தலையெழுத்து நம் கையில் என்று நினைப்பார்கள் சில உஷார் பேர்வழிகள். எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் நல்லவர்களிடம் எழுதி வாங்க வேண்டிய தில்லை. கெட்டவர்களிடம் எழுதி வாங்கினாலும் பயன் இல்லை.

மற்றவர்களைக் குறை கூறிப் பேசுவதையே பலர் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் குறை இருக்கின்றது. குறைகள் இல்லாத மனிதன் உயிருடன் இல்லை.

தவறு செய்வது மனித குணம். தவறு செய்யாத மனிதன் எதையும் செய்யாமல் இருக்கிறான் என்று பொருள். எந்தத் தோட்டத்திலும் களைகள் உண்டு...முள்ளில்லாத ரோஜா இல்லை.

கையில் முள் குத்தாமல் ரோஜாவைக் கிள்ளிக் காதலியின் தலையில் வைப்பதுதான் மனித மூளையின் வேலை.

காலை எழுந்த சற்று நேரத்திலேயே “பசி” நம்மைத் தொல்லை செய்கிறது. அதற்கான சாப்பாட்டை அளவோடு சாப்பிட்டு மீண்டும் வெற்றி கொள்கிறோம்.

இரவின் தூக்கத்திலும் ‘பசி’ என்ற ‘தோல்வி’, ‘உணவு’ என்ற வெற்றி...! பிறகு தான் மரணத்தின் ஒத்திகையான தூக்கத்தைக் காணச் செல்கிறோம்!

‘பசி’ என்ற தோல்விக்கு மருந்து, வெற்றி என்ற உணவு. அளவுக்கு அதிகமான உணவு...உடலுக்கு ஆபத்து. அதைப்போன்று தேவைக்கு அதிககமான வெற்றியும் நமக்கு ஆபத்து என்று புரிந்து கொள்வோம்.

ஒரு சாண் வயிற்றுக்கே ஒரு நாளைக்கு மூன்று முறை வெற்றி, தோல்வி போராட்டம்! நம் முழு வாழ்க்கைக்கு?

இதிலிருந்து நமக்கு ஒன்று தெரிகிறது.இரவுதான் நிரந்தரம்.சூரியன் என்று ஒன்று வருவதால்- பகல் என்ற வெற்றி பளிச்சிடுகிறது.

உழைப்பது நமக்காக, நம் வயிற்றுக்காக என்று மட்டும் சிந்திக்காமல் நம் சாப்பாட்டிற்காக வெயிலில் உழுது கொண்டு இருக்கிறானே ஒரு விவசாயச் சகோதரன் - அவன் வேர்வைக் கூலிக்காக உழைக்க வேண்டம். நம் கால் வலிக்காமல் பயணம் செய்ய வாகனத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறானே ஒரு தொழிலாளி - அவன் வயிற்றுக்காக உழைக்க வேண்டும்.

நம் மானத்தைதக் காக்க பருத்தியைப் பஞ்சாக்கிக் கொண்டிருக்கிறானே ஒரு பாட்டாளி, அவனுக்காக நாம் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

உடம்பில் வலி வரும்போது மருந்தால் வருடிக் கொடுக்கும் மருத்துவருக்காக நாம் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தள்ளாத வயதிலும், நம் தாய், தந்தையர் உட்கார்ந்து சாப்பிட நாம் ஓடோடி உழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24