இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
இது எங்கே முடியும் என்றால், உண்மையிலேயே உங்களுக்கு அவசரமாக வண்டி தேவைப்பட்டு, பொருளாதாரமும் புரட்ட முடியாத நேரத்தில் பக்கத்து வீட்டுக் காரரிடம் வண்டி கேட்டால், உங்கள் வழக்கமான வில்லங்கத்தனத்தை மனதில் வைத்துக் கொண்டு, வண்டி கொடுத்து உதவும் நிலையிருந்தும் ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லி, “வண்டி கொடுக்க முடியாது, எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது ” என்பார்கள்.

உதவி கேட்பது தப்பல்ல. ஆனால் உதாரித்தனத்துக்கெல்லாம் மற்றவர்களிடம் ஏமாற்று வேலை செய்வது, உங்களை ஆபத்து நேரத்தில் தத்தளிக்க விடும். பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு ‘ஸ்கூட்டர்’ கொடுத்து உதம் போது, ‘பெட்ரோலை நான் போட்டுக்கொள்கிறேன்’ என்பது தான் நல்லவர்க்கு அழகு.

கணவன் - மனைவிக்குள் ஊடல், சின்னச் சின்ன சண்டைகள் வருவது சகஜம்.கணவன் வேலைக்குப் போகிறான் என்றால், போருக்குப் போகிறான் என்று அர்த்தம். பொருள் ஈட்டுவது சாதரண விஷயமல்ல.

நேர்மையான சம்பாதிப்பதற்கு வியர்வை மட்டும் செலவழிக்கவில்லை. அவமானம், கேலி, கிண்டல், சோதனை, தேய்மானம் இத்தனைக்கும் பிறகுதான் வருமானம், வேலை கிடைத்து வேலைக்குப் போகிற கணவர்களுக்கு இப்படி என்றால், வேலை யில்லாமல் வீட்டிலிருந்து வேலை தேடும் அல்லது வேலை கிடைக்காத கணவனை நினைத்துப் பாருங்கள். அவருக்கு அந்த வீட போலீஸ் இல்லாத ஜெயில்.

கணவருக்கு பசிக்கும்போது ருசியாகப் பரிமாற அடுப்புடன் மனைவி வேகிறாள். அந்த அடுப்பில் பூனை தூங்கக் கூடாது என்று கணவன் போராடுகிறான். இதை இருவரும் அடிக்கடி யோசித்தால் ஊடலைவிடக் கூடல் அதிகரிக்கும்.

டைம் டேபிள்போட்டுப் பள்ளியில் படிக்கலாம். வாழ்க்கையை டைம் டேபிள் போட்டு வாழ முடியாது. திட்டம் போடுவதும், செயல்படுவதும் தான் நம் கையில், நடைமுறையில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் துல்லியமாகத் தெரியாது. நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் ஒரு சிலர் ஒப்பாரி வைப்பதுடன், உலகத்தில் தனக்கு மட்டுந்தான் இந்தக் கஷ்டம், இந்த கஷ்டம் என்று நினைக்கிறார்கள்.

சிங்கத்துக்கு அடுத்து வேளை உணவு கிடைக்குமா? என்று தெரியாது.ஆனால் அதுதான் காட்டுக்கு ராஜா. அதே போல் உணவு கிடைத்துப் பசி ஆறியபின் தன் பக்கத்தில் மான் உரசினால் கூட சிங்கம் சீண்டாது. சொத்தில் கொஞ்சம் குறைந்து விட்டால் செத்தே போய்விடுவேன் என்று சிலர் பேசுவதைக் கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வரும். அதே நேரம் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத பலர் சந்தோஷத்தில் இடி இடிப்பது போல் சிரிப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன்.

டைம்டேபிள் வாழ்க்கை உழைப்பில் இருக்கலாம்.அதிர்ஷ்டத்தை டைம் டேபிள் போடக்கூடாது.ஆறு நாள் பட்டினி கிடந்தாலும் சிங்கம் சிங்கம் தான். ஒரு தகவல் : சிங்கத்தின் பாலை சாதாரணக் கிண்ணத்தில் வைக்க முடியாதாம். கிண்ணம் உருகிவிடுமாம். தங்கக் கிண்ணத்தில் தான் வைக்க முடியுமாம் . எது நடந்தாலும் நடக்கா விட்டாலும் நீங்கள் சிங்கம் போல் வாழுங்கள்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24