இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
விஞ்ஞான வளர்ச்சியுடன் ஒன்றிப் போனால்தான் முன்னேற்றம். ஆனால் நம்மில் பலர் விஞ்ஞானத்தில் அக்கறை காட்டுவது சோம்பேறியாக வாழந்தான் வழிகாட்டுகிறது. உதாரணத்திற்கு, ஒரே ஒரு மாடி ஆனாலும் லிப்ட் இருக்கிறதா? என்று கேட்பார்கள். படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி. நம் உடம்பை நாமே வெயிட் போட்டு தூக்கி நடப்பது மிகவும் நல்லது. வயதானவர்கள் விப்டில் ஏற வேண்டாம் என்று கூறவில்லை. வலுவானவர்கள் லிப்டில் ஏறி வயதைக் குறைத்துக் கொள்ளாமல் இருக்கலாமே !

வீட்டில் டைனிங்க டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். ஒரு வேளையாவது தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு பாருங்கள். உங்களையறியாமல் நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள். வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டும் தான். இருந்தாலும் வெட்டவெளி கிராம காலைக்கடனில் ஒரு சுகம் இருக்கிறது.அதனால் சுறுசுறுப்புடன் நாளைத் துவங்கலாம். இப்போது எல்லாவற்றிற்கும் மேல் ரிமோட் கண்ட்ரோல்- டி.வி., ஏ.சி., ரேடியோ, டேப் ரிக்கார்டர் - எல்லாம் ரிமோட் வந்து விட்டதால் எந்திரங்களை மனிதன் இயக்குகிறானா? அல்லது எந்திரங்கள் மனிதர்களை இயக்குகின்றதா? என்ற குழப்பம் உண்டாகி விட்டது.

துக்கம் எல்லோர் வாழ்விலும் வரும. அந்தத் துக்கத்தின் அளவு தெரியாமல் சிலர் எப்போதும் ஒப்பாரியுடன் ஒன்றிப் போய் இருப்பார்கள். என் தந்தை மறையும் முன் அவர் இல்லாமல் இந்த உலகில் ஒருநாள் கூட என்னால் வாழ முடியாது என்றிருந்தேன். ஆனால் அவரில்லாமல் பல ஆண்டு காலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். இதனால் என் தந்தை மீது எனக்கு அன்பில்லை என்று அர்த்தமில்லை. சிலகாலம் என் தந்தையின் மறைவு துக்கத்தில் மூழ்கடித்தது. பிறகு அவரது அறிவுரை, அன்பு, ஆசி என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு விஷயம் - துக்கம் நம் ஒருவர் வாழ்வில் மட்டும் வந்ததாக நினைக்க கூடாது. துக்கம் ஒரு சம்பவம். முதலில் துயரத்தின் உயரம் அறிந்து கொள்ளுங்கள்.

சிலர் எதற்கெடுத்தாலம ரூல் பேசுவார்கள். பக்கத்து வீட்டில் ஒரு விசேஷம் என்றால், இவர்கள் வீட்டின் வாசலில் இரண்டு கார்கள் நின்றாலே போதும் காச்சு-மூச்சு என்று கத்துவார்கள். அப்போது தான் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று அலட்டிக் கொள்வார்கள். இவர்ள் வீட்டில் விசேஷம் நடந்தால் பக்கத்து வீட்டின் வாசலில் கார்கள் நிற்க வேண்டியிருக்குமே என்பதை நினைத்துப் பார்க்க மாட்டார்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் திட்டினால் அவர்கள் மனம் எவ்வளவு புண்படும் என்பதை நினைப்பதேயில்லை. இதில் எனக்கு ஆச்சரியமான விஷயம் - சிறியவர்களைவிட வயதானவர்கள் தான் இந்த ரூல்பேசி வம்புக்கு வருகிறார்கள். ஒன்றை யோசியுங்கள், உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பக்கத்து வீட்டுக்காரரே ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டும் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மாரடைப்பே வராது.

நாம் கடைக்குச் சென்று ஏதாவது ஒரு பொருளை வாங்குவோம். அதே பொருளை வேறு ஒருவர் விலை கேட்பார். அவருக்குப் பிடித்து விடும் . கடைக்காரருக்கு ஒரே பொருளை இருவருக்கு எப்படித் தருவது என்று குழப்பம். உடனே நீங்கள் அப்பொருளை அவருக்கே கொடுத்து விடுங்கள் என்று கூறிப் பாருங்கள். அந்தப் பொருளை வாங்கியதை விட இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் ஆசைப்படும் ஒன்றை வாங்க சந்தோஷப்படுவதைவிட விட்டுக் கொடுப்பதால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்- காதல் உட்பட (ஒரு தலைக் காதலாக இருந்தால்).

‘பேரம் பேசி வாங்குவது தனக்குத் தெரிந்த ஒரு கலை’ என்று சிலர் பெருமைகயாகக் கூறிக்கொள்வதுண்டு. என்னைப் பொருந்தவரை பேரம் பேசக் கூடாது என்று நினைப்பவன் நான் - காரணம் நாம் பேரம் பேசி குறைத்து வாங்குவதால் வரும் லாபத்தில் பெரிய தொகை வந்துவிடப் போவதில்லை. மேலும் நமது வருமானம் எவ்வளவு? வியாபாரியின் லாபம் எவ்வளவு என்று யோசிக்க வேண்டும். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் இரண்டு ரூபாய் சொல்லும் பொருளை ஒரு ரூபாய்க்குக் கூச்சமில்லாமல் கேட்பார். உதாரணத்திற்கு, பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்ததில் கிடைக்காத மகிழ்ச்சி நூறு ரூபாய் சீட்டாட்டத்தில் கிடைக்கும் என்று சொல்வார்கள். அது போலத்தான் பேரமும்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24