தவழும் பருவம்  

வாசகர் நோக்கில்...

 

       என்.சி. மேகன்தாஸ் வழங்கிய ‘தவழும் பருவம்’ நாவல் மிக அருமை. பெண்ணுக்கு பெண் விட்டுக்கொடுக்கும் சாம்பவியைப் போல் 100-க்கு ஒரு பெண் இருந்தால் அதுவே உலக அதிசயம். –எம்.சுதா, வடிவீஸ்வரம்.

நோயுற்ற கணவனை தாசியின் வீட்டுக்கு கூடையில் சுமந்து சென்றாளாம் அக்காலத்து நளாயினி. அவளைப் போலத்தான் தன்னால் சுகப்பட முடியாத கணவனின் வாழ்வுக்காக வேறு ஒரு பெண்ணுடன் வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறாள் சாம்பவி யாருடைய தியாகம் பெரிது? –என்.பாபு, எழமூர்.

‘தவழும் பருவம்’ கதை என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. –கே.சி.தேசிங்கு, டேராடூன் (உ.பி.)

 கதையில் வரும் சாம்பவியை நினைத்து நாங்கள் அழுதே விட்டோம். -ஜே.பஷீர், நஜீமாபேகம், கோபாலபட்டினம்.

சினிமாவுக்கு வேண்டுமானால். இந்த முடிவு பொருந்தும். வாழ்க்கைக்கு உதாவாது. -மு.மகாலிங்கம், வேடசத்தூர்.

 கண்கள் மயங்கிய போது.....

என்.சி. மோகன்தாஸ் எழுதிய ‘கண்கள் மயங்கிய போது’ தரமான நல்ல குடும்பக் கதை. –கே.புஷ்பராஜ், கனியக்காவிளை.

 பெண்ணுக்கு கற்புதான் முக்கியம் என்பதை நாசூக்காக கூறி ரதிலா என்ற பாத்திரத்தின் வழியாக அதை வலியுறுத்தி உள்ளார் மோகன்தாஸ். –எஸ்.லதா, சொர்ணகுப்பம். கே.ஜி.எப்.

 ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் படித்து பாதுகாக்க வேண்டிய நாவல். –ஏ.கே.ஜெ.ஜெய் புன்னிசா, கூத்தா நல்லூர்.

ரதிலா பட்ட கஷ்டம் மனதை, இன்னும் நெருடுகிறது. -எம்.பிரேமலதா, மதுக்கூர் படப்பைகாடு.

 பெண்கள் அடங்கி கிடக்கவும் கூடாது; அடங்காப் பிடாரியாகவும் இருக்கக் கூடாது என்பதை ரதிலா கேரக்டர் மூலம் உயர்த்தியிருக்கிறார். –ஜி.எம்.ஞானசுந்தரி பி.ஏ.புதுப்பள்ளி.

ரதிலாவின் கேரக்டர் கல்லூரி மாணவிகளுக்கு ஒரு படிப்பினை. –சி.லதாசந்திரன், மேலபுதுப்பள்ளி.

என்னுரை

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிற தவழும் பருவம், கண்கள் மயங்கியபோது இரண்டு நாவல்களுமே தேவியின் கண்மணி இதழில் வெளியாகி எனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தவைகள்.

மர்மக் கதை, காதல், அரசியல், மாந்திரீகம் என பலதரப்பட்ட கதைகள் எழுதினாலும் கூட குடும்ப நாவல்களில் கிடைக்கும் திருப்தியே தனி!

அதுவும் தேவியின் கண்மணி இதழுக்கென்று தனி பாணியும், கொள்கையும் வைத்திருக்கிறார்கள் விரசம் கூடாது; கதையில் நல்லதொரு மேஸேஜ் இருக்க வேண்டும். அதுவும் பெண் இனத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் இருப்பதோடு விறுவிறுப்பும் வேண்டும். இந்த பாணியில் எழுதுபவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவது அவர்களின் தனிச்சிறப்பு.

இந்த இரண்டு நாவல்களுமே கண்மணியின் ஆசிரியர் குழுவுடன் பலமுறை கலந்து பேசி விவாதித்து உருவாக்கியவைதான். ஆகையால் இவற்றின் வெற்றியில் அவர்களுக்கும் பங்குண்டு.

அவர்களுக்கும் புத்தகமாய் வெளியிடும் வள்ளி புத்தக நிலையத்தாருக்கும் எனது நன்றி.

அன்புடன்

என்.சி.மோகன்தாஸ்

 14-4-93

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles