கண்கள் மயங்கிய போது...  

                                         

    

     “சுற்றி வளைத்து மண்டையில் போடுகிறாயே! சரி போகட்டும், இந்த பணக்காரர்கள் என்று வந்து விட்டாலே ஹார்ட் வீக்காகி விடுகிறதே ஏன்...?”

     “அதை பிறகு ஆராயலாம். நீங்கள் ஆபீசுக்கு போகலியா... உங்க முதலாளியம்மாவோட அப்பா...”

     “இதோ கிளம்பிட்டேன் முதலாளியம்மா!” என்று காரில் ஏறினவன், நாம ஹனிமூனுக்கு எந்த ஊருக்கு போறோம்?” என்று கேட்டான்.

     “என் புருஷன் சொல்ற ஊருக்கு!”

     “அப்போ உன் புருஷன் சொல்ற ஊருக்கு நாளைக்கே கிளம்பறோம் என்ன...?”

     “நாளைக்கேவா...?” அவள் சத்தமாய் கேட்க, அதனாலென்னம்மா. சந்தோஷமாய் போய் வாருங்கள்” என்று சோமசந்தரம் தன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார்.

     “மாப்பிள்ளை! நீங்க எங்கே போகணுமோ... அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் இன்னைக்கே செஞ்சு முடிச்சுருங்க!”

     இத்தனை நேரம் தாங்கள் பேசிக் கொண்டிருந்ததை யெல்லாம் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த போது ரதிலா வெட்கப்பட்டாள். கார்த்திக்குக் கை காலெல்லாம் வியர்த்துப் போயிற்று. சட்டென்று சமாளித்துக் கொண்டு, “நான் வரேன் மாமா!” என்று கிளம்பினார்.

     அன்று மாலை வீடு திரும்பினதும் கார்த்திக் ரதிலாவை சுவற்றோடு நெருக்கி, “உன் துணிமணிகளை எல்லாம் எடுத்து பாக் பண்ணிடு. நாளைக்கு நாம கொடைக்கானல் போறோம்!” என்றான்.

     “கொடைககானலுக்கா...?” அவளிடம் ஒரு அதிர்ச்சி வெளிப்பட்டது.

     “ஏன் ரதிலா... கொடைக்கானல் வேண்டாமா...? நான் இதுவரை அங்கு போனதில்லை. ஊட்டிக்கெல்லாம் டூர் போயிருக்கிறேன். அதனால் தான் அங்கு போகலாம் என்று நினைத்தேன். அங்கிருக்கும் நண்பனுக்கு போன் பண்ணி ரூமெல்லாம் புக் பண்ண சொல்லிட்டேன். அவனை பார்த்தும் நாளாகிறது. நாங்கள் நாளை வருகிறோம் என்று சொல்லி விட்டேன். நண்பன் தன் வெளியூர் பயணத்தைக் கூட கான்சல் பண்ணி விட்டு காத்திருப்பான்.”

     ரதிலாவிற்கு கொடைக்கானல் என்றதுமே வியர்த்துப் போயிற்று. அவளுக்கு உடல் நடுங்கிற்று. தலை வலிக்க ஆரம்பித்தது.

     “ஏன் ரதி பேச மாட்டேன்கிறே... கொடைக்கானல் வேணாமா... நீ ஏற்கனவே பார்த்து விட்டாயா... ஓ ஸாரி! அந்த சம்பவம்! அதனால்தான் வேண்டாம் என்கிறாயா? அப்போ சரி, நான் நண்பனை இப்போதே அழைத்து விவரம் சொல்லி விடுகிறேன்!”

     அவன் ஃபோனிடம் போக, ரதிலா, “வேண்டாங்க கொடைக்கானலே போகலாம், சும்மா சும்மா எதுக்காக மாத்திக்கிட்டு...?”

     “அதுக்கில்லை ரதி! இங்கே என் சந்தோஷம் முக்கியமில்லை. உன் சந்தோஷம், உன் அமைதி, உனக்கு சாந்தம் தான் முக்கியம். இன்னும் சொல்லப் போனால் ஹனிமூன் என்பதைவிட எங்காவது போய் வந்தாலாவது நீ பழையதை மறக்க மாட்டாயா என்கிற நப்பாசை தான் அதிகம்.

     நீ பயப்படுவது கூட ஒரு வகையில் நியாயம்தான். கொடைக்கானல் என்கிற போது பழையதை மறக்கிறதிற்கு பதில் நீ அதிகமாகக்கூட கவலைப்பட நேரிடலாம். வேண்டாம்!”

     “இல்லைங்க. நாம அங்கேயே போகலாம். எனக்காக எனக்காக என்று எல்லாவற்றையுமே செய்கிறீர்கள், எனக்கு பிடிக்கும் என்று பேரீச்சம் பழம் வாங்கி வருகிறீர்கள். எனக்கு பிடித்த ரோஸ் கலரிலேயே துணி வாங்கி தைத்துக் கொள்கிறீர்கள். நான் வருத்தப்படக் கூடாது என்று இது வரை படுக்கையில் கூட அனுசரித்துப் போகிறீர்கள். எனக்கு வேண்டி இதுவரை உடல் சுகத்தைக் கூட ஒத்தி வைத்திக்கிறீர்கள். இந்த பாவிதான் இதுவரை மனதை மாற்றிக் கொள்ளாமலேயிருக்கிறேன்.

     நான் ஒரு சுயநலக்காரி. என் செயலால், என் திமிரால் எங்கள் அப்பா-அம்மாவின் நிம்மதியை போக்கினேன். உங்களின் வாழ்க்கையையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறேன். உங்களது ஆசாபாசங்கள், தேவைகள் எதுவுமே முக்கியமில்லை என்று எப்போதுமே நான், எனது என்றே நடக்கிறேன்.

     இந்த ஒரு விஷயத்திலாவது நான் உங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? நாம் கொடைக்கானலுக்கே போவோம். அங்கே சுற்றுவோம். அங்கே போய் தான் நமக்கு நிஜமான முதலிரவு. நான் ரெடி!”

     ரதிலா மூச்சு விடாமல் பேசி விட்டு தன் உடைகளை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள்.

     “வேண்டாம் ரதிலா! நீ உணர்ச்சி வசப்படுகிறாய். இன்னும் உனக்கு அந்த காம்ப்ளக்ஸ் இருக்கிறது. அது உன்னை எந்த அளவிற்கு அரிக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நாம் ஊட்டிக்கே...

     “இல்லை, நாம் கொடைக்கானல்தான் போகிறோம்.” ரதிலா சொல்லிவிட்டு அவனை கட்டிப்பிடித்து முகத்திலும், நெற்றியிலும், தாடையிலும், கழுத்திலும் கையிலுமென மாறிமாறி முத்தம் பதித்தாள். அவன் திணறிப் போனான்.

     இவளுக்கு இன்று என்னாயிற்று என்று கார்த்திக் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தான். அவள் அதை பொருட்படுத்தாமல் அவன் ஷூவை அவிழ்த்து வைத்தாள். பட்டன்களை கழற்றி, சட்டையை வாங்கி ஹாங்கரில் மாட்டினாள்.

     “பனியனை நீங்களே கழட்டிடுங்க! வியர்வை வாடை!” என்று முகம் சுளித்தாள். “பேண்ட்டை எப்படி சவுகரியம்... அதையும் நானே அவிழ்த்து விடவா...?”

     “வேணாம்... வேணாம் ரதிலா! நான் காண்பது கனவா இல்லை நனவா? நேற்று வரை இருந்த முதலாளியம்மா தானா நீ உனக்கு என்னாயிற்று! உன் வேகம் எனக்கு பயமளிக்கிறது ரதி!”

     “இதுக்கே இப்படி பயந்தால் எப்படி...?” என்று அவள் கண்ணடித்தாள். “நாளை... !”

     “ஐய்யோ... ! அப்போ நான் கொடைக்கானல் வரலேம்மா! என்று அவன் பொய்யாய் சிணுங்கினான்.

     “நீங்க வராம...? நான் மட்டும் போய் எந்த ஹனிமூனை தேடறது...?”

மறுநாள்-

     அவர்கள் காரில் கொடைக்கானல் பயணம், கார்த்திக் தான் காரை ஓட்டினான். அவள் அவன் மேல் சரிந்து அமர்ந்து இயற்கைகளை ரசித்துக் கொண்டு வந்தாள், அவளுக்கு பழைய நினைவுகள் ஞாபகத்தில் பிசிற ஆரம்பித்தன.

     இங்கே தானே நாம் காரை நிறுத்தச் சொல்லி எட்டிப் பார்த்தோம். இங்கே தண்ணீர் குடித்தோம். டிரைவரை காத்திருக்க வைத்து விட்டு அந்த மறைவில் போய் குளித்தோம். பிறகு ஈரத்துடன் நடுங்கினோம். இந்த டீக்கடையில்தானே டீ குடித்தோம். நனைந்த மேனியைக் கண்டு அவர்கள் நெளிந்தது இப்போது கண்ணில் இருக்கிறது.

     “என்ன ரதி...தூங்குகிறாயா...?”

     “ம்...” என்று அவள் கண் திறந்தபோது கொடைக்கானல் வந்திருந்தது. பள்ளி பிள்ளைகள் சீருடையில் போயின. பனி புகைந்து. பஸ்கள் உறுமின. ரோடு கடைகள் உஷ்ணமாகிக் கொண்டிருந்தன. மரங்களின் இலைகளில் இன்னும் ஈரம்;  வானத்தில் நீலம்!

     கொடைக்கானலில் எந்த மாற்றமுமில்லை. நேற்று வந்து போனது போலிருந்தது அவளுக்கு. இந்த ஹோட்டலில்தான் நாம் சாப்பிட்டோம். இந்த கடையில் தான் தொப்பி வாங்கினோம். அதோ...அந்த சொட்டர் கடை மூக்கு கேட்டு கேலி பண்ணினோமே!

     கார்த்திக், காரை ஹோட்டல் கைலாஷிடம் நிறுத்தி, “இறங்குங்க முதலாளியம்மா!” என்றான். அவளை செல்லமாய் இடித்து விட்டு கீழே இறங்கினவள் இந்த ஹோட்டலைக் கண்டதும் அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.

     விறுவிறுவென உள்ளே போன கார்த்திக், பின்னால் அவள் வராததை உணர்ந்து திரும்பிப்பார்த்தான். “ஏய்... ரதி! நீ வரலே...?”

     அவள், “இந்த ஹோட்டல் வேண்டாங்க!” என்றாள்

     “ஏம்மா...”

     “இது வேணாம்! இங்கே தங்கினா எனக்கு பைத்தியம் பிடிக்கும்!

     “இங்கே தான் ரூம் போட்டிருப்பதாய் நண்பன் சொன்னான், சரி, உனக்கு வேண்டாம்னா பரவாயில்லை. நாம் வேறு ஹோட்டல் பார்த்துக் கொள்வோம்!”

     அவன், “உன்னை புரிஞ்சுக்கவே முடியலே ரதி!” என்று இரண்டு மூன்று ஹோட்டல்களில் நிறுத்தி இடமில்லை என்று திரும்பினான். கடைசியில் கோடை லாட்ஜில் அவர்களுக்கு இடம் கிடைத்தது. காரை நிறுத்தத் தான் அங்கு இடமில்லை.

     “கொஞ்சமிரு ரதி!” என்று அவன் காரை தள்ளிப் போய் பார்க் பண்ணிவிட்டு வந்தான். அவள் இன்னமும் கலக்கத்தில் தானிருந்தாள்.

     “அறை விசாலமாயிருந்தது. உள்ளேயும் குளிரிற்று. உள்ளே நுழைந்ததுமே கார்த்திக் அவளைக் கட்டிப்பிடித்து ‘வார்ம் அப் பண்ணினான்.

     “இனி எல்லா காரியங்களையும் நாம சேர்ந்துதான் செய்யணும் ரதி. நமக்குள் இனி பிரிவில்லை. சேர்ந்து சாப்பிடுவோம். சேர்ந்து தூங்குவோம். சேர்ந்து குளிப்போம்.”

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles