கண்கள் மயங்கிய போது...  

                               

        

    மறுநாள் கார்த்திக் கிளம்பிப் போனதும் ரதிலா அவனுடைய உடைகளை அலச ஆரம்பித்தாள். அவனுடைய லெதர் பாகில் உள்ளுக்குள் உள்ளாய் ஒரு டைரி கிடைத்தது.

     அதில் அந்த போன் சம்பாஷனை எல்லாம் உண்மை என்று நிரூபிக்கிற மாதிரி அவன் சில குறிப்புகளை எழுதியிருந்தான். அதில் ஜெயன் பெயரும் இருந்தது. ஜெயனுக்கு ஒரு லட்ச ரூபாய் நாமம்! என்று ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது.

     ரதிலவால் இந்த சம்பவத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இவன் கயவன். ரொம்ப்ப நாட்களாகவே இவன் நம்மை ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்க வேண்டும்.

     நாம் கொடைக்கானல் போனதையும் எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு, நம்மை தொடர்ந்து, காரியத்தை சாதித்துக்கொண்டு பிறகு நல்லவன் போலவும் தியாகி போலவும் நடித்து... ஷிட்! இவனை சும்மாவிடலாகாது.

     இப்படிப்பட்டவன் உயிரோடு இருக்கக் கூடாது. இவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது. பெண்கள் என்றாலே இளப்பம், எளிதில் ஒடித்தும் வளைத்தும் விடலாம் என்று அலைபவர்களை சுண்ணாம்புக் கால்வாயில் போட்டு பொசுக்க வேண்டும்.

     பொறு! பொறு மனமே! நடந்தது என்னவோ நடந்துவிட்டது. இத்தனை தூரம் ஆன நிலையில் இனி ஆத்திரப்பட்டு என்ன பயன்? அவனை கொன்று விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா...? அவன் செய்தது எல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை உங்கள் அப்பாதான் திரும்பி வரப் போகிறாரா?

     இனி ஆக வேண்டியதை யோசி.

     இவன் அத்தனை கொடூரமான தவறு வேண்டுமதனாலும் செய்திருக்கட்டும், ஆனால் இப்போது இவன் உன் கணவன், இவனை கொன்று விடுவதால் உன் பூவும் பொட்டும்தான் போகும். சிறை! மன நிம்மதி போகும்.

     உள் மனம் கேட்டது.

     அப்புறம் என்ன தான் செய்வது?

     ‘இப்போதும் ஒன்றும் குடி முழுகிவிடவில்லை. அவனை திருத்த முயற்சி செய்! அவன் தவறுகளை உணரச் செய்! அந்த பெண்ணின் தொடர்பை துண்டித்து விடு! அவன் பணத்திற்காகத்தான் இதையெல்லாம் செய்தான் என்றால் உன் பணமும் சொத்தும்தான் அவன் பெயருக்கு போய் விட்டதே. அப்புறம் ஏன் கெட்டுப் போக வேண்டும்? உன்னுடன் நிம்மதியாய் வாழலாமே?’

     ‘அப்புறம்’ அந்த பிளாக்மெயில்காரனை என்ன பண்ணுவது... அவன் அந்த படத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்து விட்டால்...?’

     அவனுக்கு வேண்டியது பணம்தானே! அவற்றைக் கொடுத்து அவனை அமுக்கு!

     ரதிலா இரண்டு நாட்கள் தீவிரமாய் யோசித்தாள் நடந்ததெல்லாம் நடந்துவிட்டது. இனி நடப்பதாவது நல்லதாக இருக்க வேண்டும். அவளுக்கு தன் மேலேயே வெறுப்பு வந்தது.

     ஒரு பெண், அதுவும் படித்த பெண் இப்படியெல்லாம் கூட ஏமாந்து போவோமா...? “எல்லாம் நல்லதற்குத்தான் நல்லதற்குத்தான்” என்று அவன் சொன்னது எல்லாமே அவனுடைய நல்லதற்குத்தானா? பாவி! படுபாவி! சண்டாளன்! நம்பிகை துரோகி! நம்மை எப்படியெல்லாம் பேசி மயக்கி விட்டான்!

     அந்த ஜெயன் அதன் பிறகு இரண்டு முறை போன் பண்ணியிருந்தான். இரண்டு முறையுமே ரதிலா ஒட்டுக் கேட்டிருந்தாள். அவன் எத்தனை மிரட்டியும்கூட கார்த்திக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. டோன்ட் கேர் என்றே இருந்தான்.

     அந்த படம் பத்திரிகையில் வந்தால் அவனுக்கென்ன, அவன்தான் திட்டப்படி இந்த வீட்டு மகாராஜா ஆகி விட்டானே! ஆனால் நமக்கு அப்படியில்லை. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அது நமக்கு மட்டுமில்லை நம் குடும்பத்திற்கும் நம் அப்பாவிற்கும் எல்லோருக்குமே அவமானம்.

     முதலில் அந்த ஜெயனைப் போய் பார்க்க வேண்டும்.

     அவள் கிருஷ்ணவேலுவை வரவழைத்து “என்னை மன்னித்து விடுங்கள்...” என்று எல்லா விவரங்களையும் சொன்னாள். “இந்த இக்கட்டிலிருந்து நீங்கள்தான் என்னை காப்பாற்ற வேண்டும்.”

     “அது எப்படிம்மா சாத்தியம்... அவன் ரெண்டு லட்சம் கேட்டிருக்கிறான்கிறே... அவ்ளோ பணத்திற்கு நீ என்ன பண்ணுவாய்?”

     “இப்போதும் அம்பதாயிரம் என்னால் தர முடியும் சார். அப்பா என் பேரில் போட்டிருக்கிறார். அதை எடுத்துக்கொண்டு போவோம். பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு படத்தையும் நெகடிவையும் வாங்கி வந்து விடுங்கள்.”

     “எனக்கென்னவோ இது அத்தனை நல்லதாய் படலே. பேசாமே போலீசுக்கிட்டே சொல்லி...”

     “வேண்டாம். அவர்களிடம் சொல்வது அத்தனை உசிதமில்லை. வீணாய் பேர் கெடும். மீண்டும் ஒரு முறை நான் சந்தி சிரிக்க வேண்டி வரும். தேவையில்லாமல் அப்பா பெயரும் இழுக்கப்படும். அதை நான் விரும்பவில்லை.”

     “அப்போ இத்தனை சதி பண்ணியிருக்கிறான் உன்னை ஏமாத்தி கணவனாயிருக்கிறான், இவனை சும்மா விட்டு விடுவதா?”

     “எல்லாம் என் விதி என்று எடுத்துக்கொள்கிறேன்! என்ன செய்வது... இவன் என் கணவனாய் போய்விட்டானே! நாம் ஏமாந்ததால் தானே இவன் நம்மை ஏமாற்றினான்?”

     “உன் வியாக்கியானம் நன்றாயிருக்கிறதாம்மா! இப்படி வியாக்கியானம் தர ஆரம்பித்தால் உலகத்தில் எந்த குற்றவாளியுமே தண்டனை பெற மாட்டான். இவனை இப்படியே விடலாகாது. போலீசில் சொல்லி தண்டிக்க வேண்டும்.”

     “தண்டித்து விட்டால்...? அதற்குப் பிறகு என் நிலைமை என்ன? இவனை தண்டிப்பது என்னை தண்டிப்பது போல சார். நான் இவனுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். இவனை திருத்தி, புது வாழ்க்கை துவங்க வேண்டும்.”

     “இவன் திருந்துவான் என்கிற நம்பிக்கை எனக்கில்லைம்மா?”

     “அப்படி திருந்தாவிட்டால் பிறகு யோசிப்போம். அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம்!”

     அடுத்த நாளே ரதிலாவும் கிருஷ்ணவேலுவும் கொடைக்கானலுக்கு கிளம்பினார்கள். கார்த்திக் ஆபீசுக்கு என்று கிளம்பிப் போனதும்தான் இந்தப் பயணம்.

     கிருஷ்ணவேலு. அந்த ஜெயனை கைலாஷ் ஹோட்டலில் போய் சந்தித்து, தன்னை கார்த்திக் அனுப்பினதாய்ச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்.

     ஜெயின் ரகசியமாய், “பணம் கொண்டு வந்திக்கிறாயா...?” என்றான்.

     “ம் முதலில் அந்த படத்தை எடு!”

     “தருகிறேன் இந்த டீலிங் இங்கே வேண்டாம், என் வீட்டுக்குப் போய் விடுவோம் வா!” என்று கிருஷ்ணவேலுவை அவன் தன் வீட்டிற்கு அழைத்துப் போனான். ரதிலா போய் வாருங்கள் என்று டாக்ஸியிலேயே காத்திருந்தாள்.

     ஜெயனின் வீடு பில்லர் ராக் போகிற வழியில் இருந்தது. சுற்றிலும் மரங்கள். அந்த வீடு மட்டும் குன்றின் மேல் ஒட்டப்பட்டது போல தனியாக இருந்தது.

     “பணத்தை எடு!”

     “முதலில் நீ படங்களையும், நெகடிவையும் எடு!”

கிருஷ்ணவேலு!

     “அவன் உள்ளே போய் எடுத்து வந்து “இதோ படங்கள்!” என்று காட்டினான்.

     “பணம் எவ்ளோ கொண்டு வந்திருக்கிறாய்?”

     “அம்பதாயிரம்”

     “அம்பதா... நான் ரெண்டு லட்சம் கேட்டிருந்தேன்.”

     “அது சரி, ஆனால் இப்போது இவ்ளோதான் புரட்ட முடிந்தது என்று சொல்லச் சொன்னார்.”

     “அது என்ன நியாயம்? என் தேவை ரெண்டு லட்சம். அதை கொடுத்தால்தான் நெகடிவையும் தருவேன். இல்லாவிட்டால் வெறும் படங்களை மட்டும் கொண்டு போ!” என்று படங்களை டேபிள் மேல் போட்டான்.

     அந்த படங்களை பார்க்க பார்க்க கிருஷ்ணவேலுவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. அதில் ரதிலா மயங்கிக் கிடக்க, கார்த்திக் மிருகம் போல...சே... !

     “என்ன யோசிக்கிறாய்?’‘

     “எங்கள் முதலாளி நெகடிவையும் வாங்கி கொண்டு வரச் சொன்னார்.”

     “உங்கள் முதலாளியா...” என்று ஜெயன் சிரித்தான். “பரதேசி பயல்! ஒரு அப்பாவிப் பெண்னை ஏமாற்றி முதலாளியாகி விட்டு டபாய்க்கிறான். இவன் இப்படி ஏதாவது செய்வான் என்று தெரிந்து நான் படம் எடுத்தது எத்தனை நல்லதாய்ப் போயிற்று. உன் முதலாளியிடம் போய் சொல்! முழுதாய் ரெண்டு என் கைக்கு வந்தால்தான் நெகடிவ்! நீ போகலாம்!”

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles