கண்கள் மயங்கிய போது...  

                                       

   

     கிருஷ்ணவேலு தோல்வியுடன் பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பினார். “அவன் பிடிவாதம் பிடிக்கிறான்ம்மா. பேசாம போலீசுல சொல்லி...”

     “உஷ்! எல்லாம் வீட்ல போய் பேசிக்கலாம் வாங்க!”

     கார் கொடைக்கானலை விட்டு இறங்கிக் கொண்டிருந்தது.

     ரதிலா மவுனாய் அமர்ந்திருந்தாள். ஆனால் உள்ளுக்குள் அவள் மனம் படாதபாடு பட்டது.

     அந்த படங்கள் ! அவற்றில் என்னென்னவெல்லாம் இருக்கும்? நாம் மயங்கிக்கிடக்கும் போது கார்த்திக் நம் உடைகளைக் களைந்து, ப்ளவுஸை கிழித்து... அவளுக்கு நினைக்கவே கூசிற்று.

     தன் அந்தரங்கத்தை பிறர் பார்த்துவிட்ட அவமானம் அவளை ஆட்டி வைத்தது. கார்த்திக்கைவும், அந்த ஜெயனையும் உயிர் நிலையிலேயே அடித்து கொல்ல வேண்டும் என்கிற ஆவேசம் எழுந்தது. அயோக்கியர்கள்!

     ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை ஏலம் போடும் இவர்களெல்லாம் மனிதர்களே இல்லை. காட்டுமிராண்டிகள்! மலம் தின்னிகள்!

     இனி எதை நினைத்து எதற்காகிறது! எல்லாவற்றையும் முன்பே யோசித்திருக்க வேண்டும். ஏதே ஒரு வேகத்தில் செய்த தவறு இத்தனை சந்தி சிரிக்கும் என்பது யாருக்கு தெரியும்...?

     அவர்கள் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். ரதிலா முன் சீட்டில் தன் தலையை தாழ்த்தி முட்டுக்கொடுத்துக் கொண்டு விம்மினாள். அவளுக்கு வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது.

     யாரிடம் போய் அழுவது? நமக்கென்று யார் இருக்கிறார்கள்? நம்மை ஏலம் போடவும் இளப்பமாய் பேசவும் தான் எல்லோரும் இருக்கிறார்கள். எல்லாம் நம் தலையெழுத்து!

     பேசாமல் அன்றைக்கே செத்துக் போயிருக்கலாம். அப்பா-அம்மாவாவது நிம்மதியாயிருந்திருப்பார்கள்.

     “என்னம்மா தலை வலிக்குதா?”

     “இல்லை அந்த படங்களை நீங்கள் கையோடு வாங்கி வந்திருக்கலாம். நானும் பார்த்திருப்பேனில்லே!”

     “அந்த அவலங்களை நீ பார்க்க வேண்டான்னுதாம்மா நான் வாங்காம வந்தேன். அவற்றை பார்த்த பின் என் ரத்தமே கொதிக்கிறது. இன்னும் நீ பார்த்திருந்தாய் என்றால், நிச்சயமாக உடைந்து போயிருப்பாய்!”

     “இப்போது மட்டும் என்ன சந்தோஷமாகவோ இருக்கிறேன்.”

     “இருந்தாலும்மா... அந்த படங்கள் ஒரு அநாகரீகம் உன் நன்மையை கருதித்தான் அவனை விட்டு விட்டு வந்தேன். முதலாளி ராத்திரி பகலாய் தூக்கமில்லாமல் சம்பாதித்த சொத்து! இந்த பாவிகளுக்கு இளப்பமாயிருக்கிறது. அந்த படங்களுக்கு அம்பதாயிரமாம்! இந்த கன்றாவியை எங்கே போய் சொல்வது?”

     “பணம் போனால் போவுதுன்னு நீங்க அவற்றை வாங்கி வந்திருக்கணும்!”

     “அதனால என்னம்மா பிரயோஜனம்? நம்ம கிட்ட அம்பதை வாங்கிக்கிட்டு பிரிண்ட்டை தருவான். நாம இந்த பக்கம் வந்ததும். வேறு பிரிண்ட் எடுத்துக்குவான். நாம்தான் பணத்தையும் கொடுத்துட்டு ஏமாளியாய் வர வேண்டும்!”

     அவள் ஒன்றும் பேசவில்லை. கண்களை மூடிக்கொண்டாள்.

     “அப்போ இவனை இப்படியே விட்டுடறதா...? நீங்க ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, இப்பவே இவனை வெட்டிப் போட்டுட்டு போலீசுல போய் சரணடைஞ்சுடறேன்!”

     “உணர்ச்சிவசப்படாம வாங்க யோசிப்போம்.”

     “இன்னும் என்னம்மா யோசிக்க வேண்டியிருக்கு? உங்க வீட்டு உப்பை தின்று வளர்ந்தது இந்த உடம்பு உனக்கு வேண்டி நான் ஏதாவது செஞ்சாதான் என் மனசு ஆறும். எனக்கென்ன பெண்டாட்டி பிள்ளையா. நான் எதுக்காக கவலைப்படணும்... !

     “மானேஜர் சார், நான் சொல்றதை கேளுங்க! வன்முறை வேண்டாம். தொட்டதற்கெல்லாம் பழிவாங்கப் போனால் நம் நிம்மதிதான் போகும். இப்படியெல்லாம் நடந்ததை பாடமா எடுத்துக்கிட்டு. இதற்கு மேலயாவது சந்தோஷமா வாழ்ந்து காட்டணும்ங்கிற வெறி எனக்குள்ளே எழுது. அந்த சாந்தோஷத்தை அவசரப்பட்டு எதுவும் செஞ்சு வைச்சு கெடுத்துராதீங்க!”

     ஒரு வாரம் அமைதியாய் ஓடிற்று. கார்த்திக் நேரங்கெட்ட நேரத்தில் வந்தால்கூட, எந்த பிரச்சனையும் உண்டு பண்ணவில்லை. அவன்பாட்டிற்கு வருவான். தூங்குவான்.

     வரும் போதே குடித்திருப்பான். வீட்டிற்கு வந்தும்கூட குடிப்பான். காலையில் எழுந்ததும் கிளம்பி விடுவான். சில நாட்கள் அவன் மாடி ஏறக்கூட திராணியில்லாமல் சரிந்து விழுவான். ரதிலா அவனை தூக்கி வந்து படுக்கையில் கிடத்துவாள்.

     ஒரு நாள் “நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன். எதுக்காக இப்படி குடித்து உடம்பை கெடுத்துக்கறீங்க...?” என்றாள். அவள் கேட்டதுதான் தாமதம், பளார் என்று கன்னத்தில் அறைந்தான். அவள் சுருண்டு போய் விழுந்தாள்.

     “நீ யாருடி அதை கேட்கிறதுக்கு. இது என் வீடு. என் சொத்து! நான் குடிப்பேன், அழிப்பேன் என்ன வேண்டுமானாலும் செய்வேன்!” என்று கத்தினான்.

     அவள் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அவனுடைய சித்ரவதைகள் மெல்ல மெல்ல அதிகமாயின. நினைத்ததற்கெல்லாம் அவளை அடிக்க ஆரம்பித்தான். ஏதாவது குறை சொல்லி அவளை அடிப்பான். எட்டி உதைப்பான். அவள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாள்.

     ஆனால் அவற்றையெல்லாம் வரலட்சுமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

     “ரதிலா! இனியும் இந்த கன்றாவியை என்னால சகிச்சு கிட்டிருக்க முடியாது! என்னை விடு! நான் கோவில் குளம்னு போறேன். பிச்சை எடுத்தாவது என் வயிற்றை கழுவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினாள்.  

     “அம்மா நீயும் என்னை விட்டு போய்விட்டால் அப்புறம் எனக்கு யார்ம்மா துணை... எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீ தானேம்மா!”

     “ஆறுதலைப் பார்த்தால் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அவமானங்களை சகித்துக் கொள்வது...? இது நம் வீடு. நம் சொத்து. இது ஒவ்வொன்னையும் சம்பாதிப்பதற்கு அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பார்ன்னு எனக்குதான் தெரியும். எல்லாம் எதற்காக? நீ நன்றாயிக்க வேண்டும், நம் சந்ததி அனுபவிக்க வேண்டும். என்றுதான்.

     நமக்கென்ன தலையெழுத்தா இப்படி அல்லல் படணும்னு, நீ படும் சித்ரவதைகளை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியலேம்மா!”

     “அதுக்கு என்னை என்னம்மா பண்ணச் சொல்றே...?”

     “இந்த மாதிரி ஒரு அயோக்கியன் கணவனா இருந்து என்ன, இல்லாட்டிதான் என்ன, பேசாம விவாகரத்து பண்ணிவிடு.”

     “விவாகரத்தா அதனால் நமக்கு என்னம்மா நன்மை? அவன் சந்தோஷமா போயிருவான். நான் ஏற்கனவே பட்ட அவமானங்கள் போதாதா... இனியும் என்னை வாடச் சொல்கிறாயா...?”

     “அப்போ அவதிப்பட்டுக் கொண்டே கிட, நான் போகிறேன்.”

     வரலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினாள். ரதிலாவிற்கு இன்னனும் கூட அவனை திருத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது.

     ஒரு சமயம் “ஏங்க நான் உங்களுக்கு என்ன குறை வைத்தேன். நான் இருக்கும்போது இன்னொரு பெண் உங்களுக்கு எதற்கு...?” என்றாள் கனிவுடன். ‘நீங்கள் கெட்டுப் போனதற்கும், குடிப்பதற்கும் இடையில் வந்த அந்த செருக்கி தானே காரணம்?”

     அவள் கேட்டு வாய் மூடும் முன்பு அவள் கன்னம் பழுத்தது. “யார்டி இடையில் வந்தது...? நீ தான் இடையில் வந்தாய். ப்ரியா இடையில் வரவில்லை. உனக்கு முன்பே எங்களுக்குள் நட்பு உண்டு. எங்களுக்குள் தூய்மையான காதல்.”

     “அப்போ என்னிடம் நீங்கள் பேசினது பழகினதெல்லாம்...?”

     “புரியலே...? எல்லாம் வெறும் நடிப்பு! எனக்கு வேண்டியது பணம்! நானும் அதற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எத்தனையோ வழியில முயற்சி பண்ணி பார்த்தேன். முடியலே. கை வைக்கிற பிசினஸ் எல்லாம் தோல்வியிலேயே முடிஞ்சது. எவனையாவது ஏமாத்தலாம்னு பார்த்த எவனுமே ஏமாறுவதற்கு தயாராய் இல்லை. அப்புறம்தான் இப்படி ஒரு யோசனை வந்தது. அதற்காக எந்தப் பெண் கிடைப்பாள் என்று அலைந்தேன். அந்த சமயத்தில்தான் நண்பர் ஒருவரின் வீடியோ கேசட் கடைக்கு அடிக்கடி வந்த நீ என் கண்ணில் பட்டாய். அதன் பின் உன் பின்னணியை ஆராய்ந்தேன். உன்னையே தொடர்ந்து கொண்டிருந்தேன். உன் கொடைக்கானல் பயணம் என் திட்டத்தை சாதித்துக் கொள்ள பேருதவியாக இருந்தது. உன்னை தொடர ஆரம்பித்தேன்.

     பொம்பளைய கைவச்சா ஈஸியா ஏமாந்திருவா. சென்டி மெண்ட்லாயிடுவான்னு நான் போட்ட திட்டம் பொய்க்கலே. நீ நான்றாய் ஏமாந்தாய் இப்போதும் சொல்கிறேன். உன்மேல் எனக்கு கொஞ்சம் கூட பிரியம் இல்லை. அனுதாபம்தான் எழுகிறது. எனக்கு தேவை உன் பணம். உன் சொத்து.

     இவை இல்லாவிட்டால் நான் ஏன் உன்னை தற்கொலையிலிருந்து காப்பாற்ற வேண்டும்! இத்தனை திட்டம் போட வில்லையென்றால் என்னால் உன்னை நினைத்துத்தான் பார்த்திருக்க முடியுமா, இல்லை நீ தான் என்னை நெருங்க அனுமதித்திருப்பாயா?

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles