கண்கள் மயங்கிய போது...  

                              

  

      என் திட்டம் பலித்து விட்டது. நான் எதிர்பாத்த படியே பணமும் வந்து விட்டது. இனி நீ தேவையில்லை, நான் என் வழிக்கு போகிறேன். நீ உன் வழிக்குப் போ. இனி நீ தாராளமாய் செத்துப் போகலாம், எப்படி சவுகர்யம்...?“

     கார்த்திக் கேட்டு விட்டு சிரித்தான் ரதிலா அப்படியே பிரமை பிடித்த மாதிரி நின்றிருந்தாள். அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை சவுக்கால் அடித்தன.

     “எப்படி சவுகர்யம்...? காவிரிக்குப் போகிறாயா... இல்லை தண்டவாளமா, தூக்கு கயிறா... இல்லை விஷமா...?”

     அவள் ரத்தம் கொதித்தது. அவனை அப்படியே கடித்து குதறிவிடும் ஆத்திரம் எழுந்தது. இவன் மனிதனே இல்லை. மிருகம்! அரக்கன்! இவன் இனியும் உயிர்வாழக் கூடாது. இவனுக்கு சரியான தண்டனையளிக்க வேண்டும்.

     “என்ன கண்ணு யோசனை... கமான்.”

     “பாதகா! சண்டாளா! உன்னை நான் சும்மா விட மாட்டேன்!”

     “என்ன செய்வாய்...? எனக்கென்று இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. நான் தனி ஆள். எப்படியும் நடப்பேன். எதை வேண்டுமானாலும் செய்வேன். ரொம்பத் துள்ளினாய் என்றால், நீ நடத்தை கெட்டவள் என்று ஊர் முழுக்க நோட்டீஸ் அடிப்போன். அதைச் சொல்லியே டைவர்ஸ் வாங்குவேன்.

     அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. இந்த அயோக்கியன் செய்தாலும் செய்வான். இவன் சரியான விஷம்பாம்பு இவனை நேரிடையாய் தாக்க இயலாது அதற்கு நமக்கு பலமும் இல்லை. புத்தியும் இல்லை. பொறு பொறு மனமே!”

     அவள் அதற்கு மேலும் அவனுடன் வாக்குவாதம் நடத்தவில்லை. படுக்கையில் போய் விழுந்து விம்மினாள்.

     கார்த்திகை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. அவன் இத்தனை பெரிய அயோக்கியனா? அன்று எப்படியெல்லாம் பேசினான், உத்தமன், தியாகி, நேர்மையின் சின்னம் என்கிற மாதிரியெல்லாம் நடந்து கொண்டானே!

     அவளுக்கு பழைய சம்பவங்கள் ஞாபகத்தில் பிசிற ஆரம்பித்தன.

     “ரதி! உனக்கு என்னென்ன பிடிக்கும், எதெது பிடிக்காதுன்னு ஒரு லிஸ்ட் கொடேன்!”

     “எதுக்குங்க...?”

     “அது தெரிஞ்சாத்தானே நான் உனக்கு நல்ல கணவனா நடந்துக்க முடியும்?”

‘“இப்பவே நல்ல கணவனாதான் நடந்துக்கிறீங்க!”

     “அப்படியா... தாங்க்ஸ்! இனியும் அது மாதிரி நடந்துக்குவேன்னு நான் உறுதிமொழி தரேன். எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம். நீ இன்று போலவே என்றென்றும் மலர்ச்சியோட இருக்கணும். நீ எந்த வேலையும் செய்யக்கூடாது. உன் உடம்பு பஞ்சை. உன் விரல்கள் வெண்டை! உன் இதழ்கள் ரோஜா, கன்னம் ஆப்பிள், கண்கள் வாடாமல்லி மொத்தத்தில் நீ என்றுமே வாடக்கூடாது.

     உன் கண்ணில் நீர் வரக்கூடாது. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!”

     சே! எப்படியெல்லாம வசனம் பேசினான்.

     கார்த்திக் அதன் பிறகு அவளை ரொம்ப கூட துன்புறுத்தினான். ஒரு சமயம் தன் காதலி ப்ரியாவை அழைத்து வந்து, “ரதி! மீட் மை யுட்பி?” என அறிமுகப்படுத்தினான்.

    “நீ தற்கொலை செய்து கொண்டதும் நான் இவளை தான் கட்டிக்கொள்ளப் போகிறேன்!”

     அதைக் கேட்டதும் அவளுக்கு சுருக்கென்றிருந்தது. நாம் சாகும் வரை அவன் விடமாட்டானா...?

     “என்னடி முறைக்கிறே...? போ, போய் காபி-டிபன் எடுத்து வா! இனி இவள்தான் இந்த வீட்டுக்கு எஜமானி!”

     அவன் வெறுப்புடன் அடுப்படிக்கு போக, “கொஞ்சம் நில்!” என்று பிடித்து நிறுத்தினான். “ஆமாம், நீதான் சாகப் போகிறாயே. அப்புறம் உனக்கு எதற்கு நகைகள்...? எல்லாவற்றையும் கழற்றி இவளிடம் கொடுத்து விடு! ரெயிலில் அடிபட்டால் நகைகள் சேதமாகி விடும் என்ன?”

     அந்த ப்ரியா ரதிலாவை விட சற்று அழகு குறைவாய்த்தானிருந்தாள். ஆனாலும் கூட அவளைவிட கவர்ச்சியாய் உடை உடுத்தியிருந்தாள். கண்களில் அம்பை வைத்திருந்தாள். அந்த அம்புகளை எய்துதான் கார்த்திக்கை வீழ்த்தியிருக்கவேண்டும்.

     இவள் நம்மை விட எந்த விதத்தில் உசத்தி... எதற்காக இவன் இவள் காலடியில் விழுகிறான்.

     ப்ரியா அவர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அமர்க்களம் பண்ணிவிட்டுத்தான் கிளம்பிப் போனாள்.

     ரதிலா ஒரு முடிவுக்கு வர அதிக நாட்கள் பிடிக்கவில்லை. நம் பேர் கெட்டாலும் சரி, நம் குடும்ப போர் கெட்டாலும் சரி, இனியும் இப்படியே தொடரலாகாது. இனியும் இந்த கயவன் நம் சொத்துக்களை அனுபவிக்கலாகாது, பெறமைக்கும் ஒரு எல்லை உண்டு.

     இவன் செய்த செயல்களுக்கு நிச்சயமாய் தண்டனை நிச்சயம். ஆனால் அவற்றையெல்லாம் நிரூபிக்க வேண்டும். அப்போதான் சட்டம் ஒப்புக்கொள்ளும்.

     இவன் குற்றவாளி என்று நிரூபிக்க இருக்கும் ஒரே ஆதாரம் அந்த படங்கள்தான்! அவற்றை என்ன விலை கொடுத்தாவது வாங்கியாக வேண்டும். வாங்கி போலீசில்...

     இந்த விவரம் அவனுக்கு தெரியக் கூடாது. மறைமுகமாய் செயல்பட்டு பின்னால் போய் குத்த வேண்டும். ஒரே குத்து! குறி தப்பக் கூடாது! அவன் தப்பிக்கக் கூடாது! அவன் தப்பிக்க முடியாதபடி ஆதாரங்களுடன் அவனை நேரிட வேண்டும்.

    ரதிலா , கிருஷ்ணவேலுவின் குவார்ட்டர்ஸை நோக்கி நடந்தாள். அவள் போன போது பவர் கட்டாகி, வீடே இருட்டாயிருந்தது. அவர் இருட்டில் தடுமாறி மெழுகுவர்த்தி பற்றவைத்து, “ரதி! என்னம்மா இந்த நேரத்துல...

     “அங்கிள்! என்னை நீங்கதான் காப்பாத்தணும்”  என்று அவள் அவருடைய காலில் விழுந்தாள்.

    அங்கிள்! அந்த வார்த்தையை கேட்டதுமே அவருக்கு சிலிர்த்துப் போயிற்று. நீ இப்போது தாம்மா நிஜமான ரதி!

    “என்ன இது...எழுந்திரு!” என்று அவளை தூக்கி நாற்காலியில் அமர வைத்தார்.

    “அங்கிள்! அந்த கார்த்திக் நல்லவனில்லை. கபோதி! நயவஞ்சகன்! அவன் என்னை நன்றாய் ஏமாற்றி  விட்டான். இனியும் அவன் திருந்துவான் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவனை பிடித்து உடனே போலீசில் கொடுத்தாக வேண்டும் அங்கிள்!”

     “கொடுக்கலாம்மா. ஆனா அதுக்கு ஆதாரம்...?”

     “வாருங்கள் அந்த படங்களை போய் வாங்கி வருவோம்”

     “ஆனால் அவன் ரெண்டு லட்சம் கேட்கிறானே! அவ்ளோ பணத்திற்கு நாம் எங்கே போவது...?”

     “ரெண்டு லட்சம்தானே... இதோ என் நகைகள்! இவைகளை விற்போம். விற்று அந்த படங்களை மீட்போம்.”

     “அவசரப்பட்டு எந்த முடியுக்கும் வரவேணாம்மா. நன்றாய் யோச்சு...”

     “இனி யோசிக்க ஒன்றுமில்லை. அவன் தப்பக்கூடாது எப்பாடு பட்டாவது அந்தப் படங்களை நாம் பெற்றாக வேண்டும்.”

     “ரதிலாவின் குரலில் கரகரப்பு இருந்தது. கண்களில் ஆவேசம் அனலடித்தது.

     “சரிம்ம. நீ வீட்டுக்கு கிளம்பு! அவனுக்கு தெரிஞ்சா சந்தேகப்படுவான். நான் காலையில் வருகிறேன். நகைகளை விற்றோ, அடமானம் வைத்தோ பணம் புரட்டிக் கொண்டு கிளம்புவோம்.”

     வீட்டிற்கு திரும்பினவளுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்த மாதிரி இருந்தது. இன்னும் இருபத்திநாலு மணி நேரம்! கணவனே...கயவனே நம்பிக்கை துரோகியே! அதற்குள் ஆடுவதையெல்லாம் ஆடி தீர்த்து விடு! அந்த படங்கள் என் கைக்கு வந்துவிடும். அதன் பிறகு நீ கம்பி எண்ணியாக வேண்டும்.

     அவள் கீழ் அறையில் படுத்து தூங்கிபோனாள்.

     அவள் தூங்கின பின்பு ஒரு போன் கால் வந்தது. கார்த்திக் எரிச்சலுடன் போய் எடுத்தான். எதிர்முனையில் பேசினது வேறு யாருமில்லை. ஜெயன்!

     அவன் மிகுந்த ஆவேசத்துடன், “ஏய் கார்த்தி! பேசினபடி எனக்கு பணம் தர முடியுமா... முடியாதா...?”

     “என்னடா விரட்டுகிறாய்... தர முடியாது! உன்னால் ஆனதை பார்!” கார்த்திக் குடித்திருந்த வெறியில் கத்தினான்.

     “சரி, நீ பேசவில்லை. புரிகிறது. உன் திமிர் பேசுகிறது. திடீரென வந்த சொத்து உன்னை பேசச் சொல்கிறது. பரவாயில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி பேசுவாய் என்று பார்க்கிறேன். இந்த படங்களை போலீஸில் ஒப்படைக்கிறேன். ஆங்! போலீஸ் எதற்கு. உன் மனைவியிடம் ஒப்படைத்தால் கூட போதுமே!”

     அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கார்த்திக் சுதாரித்துக் கொண்டான். அந்தப் படங்களை ரதியிடம் கொடுக்கப் போகிறானா? ஆபத்து! அவள் ஏற்கெனவே நம்மை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறாள். இந்த சமயத்தில் அவைகள் கிடைத்தால் அவள் சும்மா இருப்பாளா

     “ஜெயன்...ஜெயன்... ! ஹலோ...ஹலோ!”

     “லைன்லதான் இருக்கேன் சொல்லு.”

     உனக்கு வேண்டியது பணம்தானே! நாளை மதியம் வரை பொறுத்துக்கொள்! நீ கேட்ட தொகையை கொடுத்து விட்டு படங்களை வாங்கி கொள்கிறேன்.

     “அப்படி வா வழிக்கு! வச்சுரட்டுமா கண்ணு!”

      கார்த்திக்கின் முகம் இறுகிப் போனது. ராத்திரி முழுவதும் அவனுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. பாட்டில் உடைத்து குடித்தான் விடிந்ததும் சூட்கேஸ் எடுத்துக் கொண்டு கண்டஸாவில் ஏறி அமர்ந்து சீறி பாயவிட்டான்.

     அவன் காரில் கிளம்பிப் போன விஷயம் ரதிலாவிற்கு லேட்டாகத்தான் தெரிந்தது. அவள் கண் விழித்துப் பார்த்த போது போர்டிகோ காலியாக இருந்தது. அவள் அவசரம் அவசரமாய் மாடிக்கு ஓடினாள். அங்கே கார்த்திக் இல்லாதது அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. விடிந்தும் விடியாததற்குள் அவன் எங்கே கிளம்பிப் போனான்...?

     அவளுக்கு பதட்டமாயிருந்தது. செய்வதறியாது இங்குமங்கும் நடந்தாள். கிருஷ்ணவேலு வருகிறாரா என்று வாசலைப் பார்த்தாள். நெட்டி முறித்தாள். கடிகாரத்தை சபித்தாள்.

     அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. இந்த அங்கிள் இன்னும் என்ன பண்ணுகிறார்! நாம் எத்தனை சீரியஸாய் சொல்லிவிட்டு வந்தோம்...

     அவள் பொறுமையிழந்து காரில் ஏறி அமர்ந்து கிளப்பினபோது கிருஷ்ணவேலு வந்தார். வந்த வாயுடனேயே “எங்கேம்மா கிளம்பிட்டே...?”

     “அங்கிள் சீக்கிரமா ஏறுங்க!”

      “அவர் புரியாமல் ஏறி அமர்ந்ததும் ரதிலா காரை விசுக்கென கிளப்பினாள்.

     “இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டிருந்தீங்க.”

     “எழுந்து குளிச்சுட்டு பூசை முடிச்சுட்டுத்தான் வரேன். ஆமா. எங்கே இத்தனை அவசரமான பயணம்...?”

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles