கண்கள் மயங்கிய போது...  

                            

 

       பஸ் கிளம்பிப் போனதும் அவர்கள் சந்தோஷத்துடன் டாக்ஸி பிடித்தனர்.

     “எனக்கு பயமாருக்குடி” என்று அர்ச்சனா தன் புலம்பலை ஆரம்பித்தாள்.

     “உனக்கு எல்லாத்துக்குமே பயம்தான். நாளை கட்டிக்கிட்ட புருஷனை பார்த்து கூட பயப்படத்தான் போகிறாய்

     நீ.”

     மதியம் பனிரெண்டு மணி, கொடைக்கானலில் வெயிலிற்கு பதில் அங்கங்கே புகையடித்தது. இயற்கை காட்சிகள் கண்களை பறித்தன. ரோடுகளிலெல்லாம் சப்பை மூக்குக்காரிகள் சொட்டர் விற்றனர்.

     ஹோட்டல் கைலாஷில் அவர்கள் இறங்கி கொண்டார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை! ‘என்னத்துக்கு தனி அறை...? மூணு பேருமே ஒரே டூம்ல இருக்கலாமே!” அர்ச்சனா சொன்னாள். “வீண் செலவுதானே!”

     “செலவை பத்தி உனக்கு ஏன் கவலை நான்தானே பண்றேன்!”

     “இருந்தாலும்... எனக்கு தனி அறை வேணாம் பயமாயிருந்தா கல்யாணியோட தங்கிக்க. எனக்கு ப்ரைவேஸி வேணும்.”

     அவர்கள் குளித்து சாப்பிட்டனர். சின்னதாய் தூக்கம் போட்டு விட்டு கூலிங்கிளாஸை மாட்டிக் கொண்டு வெளியே வந்தனர். ரோட்டில் ஹாயாய் நடந்தனர். அவர்கள் மூவருமே டைட் பேண்ட் போட்டு. கூந்தலை கன்னா பின்னாவென பின்னியிருந்தனர். ரோட்டில் போகிறவர்கள் எல்லாம் அவர்களை ஒரு மாதிரி பார்க்க- “இங்க என்ன அவுத்து போட்டுக்கிட்டு ஆடறாங்களா... போங்கய்யா வேலையை பார்த்துக்கிட்டு” என்று ரதிலா விரட்டினாள்.

     தெருவோரம் ஷொட்டர் விற்றுக் கொண்டிருந்த சைனீஷ் பெண்களின் முன்னால் போய் ரதிலா, “கல்யாணி! ப்ரா வாங்குவோமா?” என்றாள்.

     “இங்கே அதெல்லாம் கிடையாது, வார்ம் மெட்டீரியல் மட்டும் தான்!” கடை போட்டிருந்த பெண், “என்ன வேணும்?” என்றாள் தடுமாறின தமிழில்.

     “ஷொட்டர்...? உல்லன்? மப்ளர்...?”

     இல்லை, உன் சப்பை மூக்கு!” என்று ரதிலா சிரித்தாள். அவள் பேந்த பேந்த விழிக்க,

     “சீ...வாடி நேரமாகுது. இருட்டுவதற்குள் சுற்றிப் பார்க்கணும்.”

     “ஏன்... இருட்டினால் என்னவாம்...பயமா?”

     “பயமில்லே. இப்பவே குளிரடிக்குன்னுதான்!” அர்ச்சனா மழுப்பினாள். ரதிலா. “நில்லுங்க ஒரு நிமிஷம்” என்று பெட்டிக்கடையிடம் ஓடினாள். “வில்ஸ் ஃபில்டர் இருக்கா...?

     “எதுக்குடி சிகரெட்...?”

     “குளிருதுன்னியே!”

     “சீ, தப்பா நினைச்சுக்கப் போறாங்க, வாடி.”

     ரதிலா அவர்களை பொருட்படுததாமல் “ஒரு பாக்கெட் எடு மேன்!” என்றாள். கடைக்காரர் தயங்க, “ஏன் பொம்பளைங்க கேட்டால் தர மாட்டாயா... நாங்க சிகரெட் பிடிக்கக் கூடாதா?” என்று அவளாகவே சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு இழுத்தாள்.

     இழுத்த இழுப்பில் அவளுக்கு நெஞ்சை கரித்தது. புகை உள்ளே கரித்தது, புகை உள்ளே போனதும் தொண்டையில் எரிந்தது. கரகரத்தது. இருமலும் தும்மலும் சேர்ந்து கொண்டு வர, அவள் சமாளித்துக் கொண்டு காசு கொடுத்து விட்டு நடந்தாள்.

     கடையை விட்டு தள்ளி வந்து மரதடியில் அமர்ந்து கொண்டு குபுக்கென வாந்தி எடுத்தாள். கொல்...கொல் லென இருமி தீர்த்தாள்.

     “ஏண்டி... சொன்னோமே கேட்டாயா... எதுக்காக இந்த வீம்பு?”

     “சும்மா இருங்கடி. அவன் எத்தனை இளப்பமாய் பார்த்தான் தெரியுமா? இவனுங்களுக்கு பெண்கள் என்றாலே இளப்பம்! பெண்கள் புகை பிடிக்கக் கூடாதா... மது அருந்ததக் கூடாதா... கேரளாவுலல்லாம் போய் பார் குடும்பத்தோட சேர்ந்து வீட்ல வச்சு குடிக்கிறதை!”

     “ஐயோ ரதி! நீ இன்னும் மது வேற குடிக்கப் போகிறாயா... வேணாம்டி!” என்று கல்யாணியும் அர்ச்சனாவும் அவளை தரதரவென இழுத்துக் கொண்டு ஒடினர்.

     “விடுங்கடி! மதுதான் கூடாது-தொப்பிக் கூட வாங்கக் கூடாதா?” என்று கலர் கலராய் தொப்பி வாங்கி போட்டுக் கொண்டனர். பேரம் பேசி டாக்சி பிடித்தனர்.

     டாக்ஸிகாரர் அவர்களை முருகன் கோவிலுக்கும் பில்லர் ராக், கோகர்ஸ் வாக், டெலஸ்கோப், கார்டன் என்று அழைத்துப் போய் கடைசியில் லேகில் இறக்கி விட்டான்.

     அவர்கள் தனி போட் எடுத்து உல்லாசமாய் மிதந்தனர். மிதித்தனர். ஏரியை விட்டு வெளியே வந்தபோது ஆங்கங்கே விளக்குகள் பிரகாசமடித்தன. சுற்றுப்புறம் இருட்டாயிருந்தது.

     “ரதி! ரொம்ப டயர்டா இருக்கு. வாடி ரூமிற்குப் போவோம்.”

     ரதிலா ஹோட்டலுக்கு வந்ததும் சேகருக்கு போன் பண்ணினாள். அவன் பிசினஸ் விஷயமாய் பாண்டிக்கு போய் விட்டதாய் பதில் வந்தது.

     ரதிலா பட்டென்று போனை வைத்தாள். அவளுக்கு எரிச்சலாய் வந்தது. பெரிய பிசினஸ்! ஊரில்தான் சேகருடன் பேச முடியவில்லை. அவன் காலேஜிற்கு வந்தால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். விடக்கூட மறுக்கிறார்கள். சரியென்று நாம் அவனுடைய அலுவலகத்திற்குப் போனால், அவன் ஒரேடியாய் பயந்து சாகிறான். நண்பர்கள் கிண்டலடிப் பார்களாம்.

     கிண்டலடித்தால் என்ன? காதலி என்பார்கள். கட்டிக்கப் போகிறேன் என்பார்கள் அவ்வளவுதானே? இதற்கு கூட பயப்படுகிறவனுக்கு எதற்கு காதல்?

     நாம் எத்தனை உருகுகிறோம் என்பது அவனுக்கு தெரிகிறதா? காலேஜையும் அவனுடைய அலுவலகத்தையும் விட்டால் திருச்சியில் சந்திப்பதற்கு வேற என்ன இடம் இருக்கிறது. திருச்சி காதலர்களுக்கு துரோகம் செய்கிறது.

     சினிமா, காவிரி கரை என்று போகலாம், ஆனால் அங்கு தெரிந்தவர்களின் கண்களில் பட்டு விட்டால் உடனே போய் வீட்டில் வத்தி வைத்து விடுவார்கள்.

     என்னதான் நாம் செல்லம் என்றாலும்கூட, காதலுக்கு வீட்டில் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்பா பிரிஸ்டீஜ் பார்ப்பார். அம்மா ஜாதி ஜாதகமெல்லாம் பார்ப்பார்கள்.

     சரி, ஊரில்தான் முடியவில்லை. கொடைக்கானலிலாவது தோழிகளை ரூமில் அமர்த்தி விட்டு அவனுடன் நிம்மதியாய் சுற்றலாம் என்று வந்தால், அதையும் அவன் கெடுக்கிறான்.

     ரூமிற்கு வந்த ரதிலாவிற்கு கோபம் கோபமய் வந்தது. கதவை மூடிவிட்டு நைட்டிக்கு மாறினாள். கண்ணாடியில் பார்ப்பதற்கு அவளுடைய முகம் விகாரமாய் தெரிந்தது தூக்கமின்மையும் அலைச்சலும் கண்களுக்கு கீழ் கோடு போட்டிருந்தன.

     படுக்கையில் விழுந்தவளுக்கு தூக்கம் பிடிக்கவில்லை தலை வலிக்கிற மாதிரி இருந்தது. காற்று அடிக்காமலேயே அறையெல்லாம் ஜில்லென்றிருந்தது. அத்தனை ஜிலு ஜிலுப்பிலும் கூட கொசுக்கள் பறந்து வந்து குத்தின.

     அவள் ஜன்னல் விளிம்புகளில் ஸ்கிரீன் போட்டு மூடினாள். மெத்தையில் கொசு வலையை இழுத்து விட்டாள். மாத நாவல் ஒன்றை விரித்தவளுக்கு தலையை ரொம்பக்கூட வலித்தது. பாலோ, டீயோ குடித்தால் தேவலாம் போலிருந்தது.

     உடன் அழைப்பு மணியை அடித்தாள். பையன் ஒருவன் பூனை மீசையுடன் ஓடி வந்து கதவைத் தட்டினான். அவள் திறந்து, “பால் இருக்கா...?” என்றாள்,

     “இருக்கும்மா!”

     “நான் உனக்கு அம்மாவா...? என்று முறைத்தாள். அவன் நடுங்கிப் போனான். தடுமாற்றத்துடன். “இருக்குக்கா!”

     “அம்மா இல்லேன்னா உடனே அக்காவா...? உதைப்பேன்; விட்டா, ஆன்டின்னு கூட அழைப்பாய் போலிருக்கே. போய் பால் எடுத்து வா. நல்லா சூடா இருக்கணும், இல்லேன்னா உன் முகத்துல ஊத்துவேன்.”

     அவன் பதில் சொல்லாமல் நடையை கட்டினான். என்ன சொன்னாலும் இவளிடம் வம்பு என்பது அவனுக்கும் புரிந்து விட்டிருந்தது.

     சற்று நேரத்தில் டிரேயில் வைத்து அவன் பால் எடுத்து வந்து பயபக்தியுடன் கதவைத் தட்டினான்.

     “திறந்துதான் இருக்கு வாடா!”

     அவன் கை நடுக்கத்துடன் உள்ளே வர, “ஏண்டா பயம்? என்ன முதலிரவுக்கா போறே’ வச்சுட்டுப் போ!”

     அவன் விட்டால் போதும் என்று ஓடினான் ரதிலா சிரித்துக்கொண்டு, பாலை எடுத்துக் குடித்தாள். அப்படியே படுக்கையில் சரிந்து, மாத நாவலில் கவனம் செலுத்த முயன்றவளுக்கு முடியவில்லை.

     அவளுக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. தலையைச் சுற்றியது. முன்னைக்காட்டிலும் இப்போது அதிகமாகக்கூட தலை வலித்தது. வயிற்றை குமட்டிக்கொண்டு வந்தது.

     என்னாயிற்று... ஏன் இப்படி? நல்ல ஹோட்டலில் தானே சாப்பிட்டோம். அப்புறம் ஏன் இந்த அவஸ்தை... நமக்கு என்னாயிற்று? நமக்குள் என்ன நடக்கிறது...

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles