HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

             

    `வாலில்லாத என்று சொல்ல வந்த குமரேசன், அதை அடக்கிக்கொண்டு புன்னகைத்தான்.

    ``அண்ணா! உங்க நண்பர்கூட ஆசைதீர பேசி முடிச்சாச்சா? `கோபி எப்போ வருவார் எப்போ வருவார்னு எங்களைக் கேட்டு தொல்லை பண்ணிட்டார்!

   சுதா சொல்லிவிட்டு குமரேசனைப் பார்த்து கண் சிமிட்டினாள். அதை ரசித்தாலும் கூட வெளிக் காட்டிக் கொள்ளாமல் ``கோபி! அப்போ என்னைக் கிளம்பச் சொல்கிறாய்? என்றான்.

   ``ஆமாம். நான் எல்லாம் பார்த்துக்கிறேன். நீ தைரியமா புறப்படு!

   ``சரி, நாம் பேசினபடியே நடக்கட்டும். அதுல ஒண்ணும் மாற்றமில்லையே?

    ``இல்லை. நீ புறப்படு.

    குமரேசன் கிளம்புகிறான் என்பதை ஆறிந்ததும் சுதாவுக்கு ஏக்கமாயிற்று.

    அவன் வந்தபோது அந்நியனாகத் தெரிந்தான். ஆனால், நான்கு நாளில் அவன்பேரில் ஈடுபாடு ஏற்பட்டு நெஞ்சை என்னவோ பண்ணிற்று.

    இந்த நான்கு நாளும் அவனுக்காக உடை உடுத்தி அவனுக்காக அலங்காரம் செய்து, அவனுக்காகக் கோலம்! புதுப்புது சமையல்! இனம்புரியாத துள்ளலுடன் திரிந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்கிற மாதிரி இருந்தது.

   யாராவது அவனைத் தடுத்து நிறுத்தமாட்டார்களா? என்கிற எதிர்ப்பார்ப்பு.

   குமரேசன் அறைக்குள் போய் தன் துணிமணிகளைப் பெட்டியில் எடுத்து அடுக்க,``அவரை இருந்துட்டுப் போகலாம்னு சொல்லும்மா என்று கவுசல்யாவிடம் கிசுகிசுத்தாள்.

   ஏறக்குறைய அதே எண்ணத்தில் இருந்தாள் அவளும், குமரேசனின் பழக்கமும், பண்பும் , பேச்சும் அவளையும் கவர்ந்திருந்தன. அவனும் துபாயில் வேலை பார்ப்பவன் என்கிறபோது நிச்சயம் வசதியுள்ளவனாகத்தான் இருப்பான். பேசாமல் சுதாவுக்கு இவனை முடித்துவிட்டால் என்ன? இவளும் அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறாளே!

  ``கோபி! நீ வந்தவுடனேயே தம்பியை அனுப்பணுமா? இன்னும் ரெண்டு நாளைக்கு இருந்துட்டுப் போகட்டுமே.

    ``அம்மா....அவன் இங்கிருந்து என்ன பண்ணப் போறான்?

        ``தம்பி இதுவரை அறைக்குள்ளேயே இருந்துட்டுது. அப்படியே ஊரைச் சுத்திப் பார்த்துட்டு...

     `சுத்திப் பார்க்க இங்கே என்ன இருக்கும்மா?

     ``ஏன் ...நம்ம புதுக் கட்டிடம் இருக்கே என்று வார்த்தைகளைக் கொட்டின சுதா, சட்டென கவுசல்யாவுக்குப் பின்னால் மறைந்தாள்.

    ``அதையெல்லாம் அப்புறமாப் பார்த்துக்கலாம். அவனுக்கு நிறைய வேலை இருக்கு. ஏற்கனவே ஒரு வார வேலை நிக்குது! என்று கோபி வலுக்கட்டாயமாய் அவனை அழைத்துப் போய் பேருந்து ஏற்றிவிட்டு வந்தான்.

   சாமிநாதன், ``கோபி! நீ நடந்துக்கிறது கொஞ்சம்கூட நல்லாயில்லே! வந்த விருந்தாளியை இப்படித்தான் கழுத்தைப் பிடிச்சு தள்ளுற மாதிரி அனுப்பி வைப்பாங்களா? என்றார்.

   பெரிய மனித தோரனையில் கேட்டுவிட்டு கவுசல்யாவைப் பார்த்து `சரியாய்க் கேட்டேனா? என்று பார்வையால் கேட்டார், அவள் அதற்கு திருஷ்டு சுற்றாத குறைதான்.

   கோபி, அவரைப் பொருட்படுத்தாமல் அறைக்குள் போக, பின்னாலே வந்தவரை நிறுத்தி,`இப்போ என்ன வேணும்? என்றான்.

   ``அதில்லை...அந்த தம்பியைப் பற்றி எதுவும் சொல்லலியே? பையன் எப்படி? உனக்கும் அவனுக்கும் எப்படி உறவு?

    ``நல்ல உறவுதாம்ப்பா. எனக்குக் களைப்பா இருக்கு. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டுமா?

    ``ஓ....ஓய்வு எடுத்துட்டு அப்புறமா சொல்லு போதும், அவசரமில்லை!

    கோபி, கட்டிலில் படுக்கையை விரித்துப் படுக்க, கவுசல்யா, ``அந்த நகைக்கடை காசிநாதனுக்கு என்ன வந்ததோ தெரியலை! நம்மகிட்டே முகம் கொடுக்காமல் நழுவுகிறார். முன்னைப் போல அவர் இல்லை, கல்யாணப் பேச்சு எடுத்தாலும் பதில் பேசுறதில்லை, என்ன காரண மோ தெரியலியே! என்று புலம்பிக் கொண்டிருக்க

   கோபி,`எல்லாத்துக்கும் நான்தான்ம்மா காரணம்! என்று தனக்குள் சொல்லிக்கொண்டு புன்னகைத்தான், அவனுக்கு காசிநாதனை பார்க்கப் போன விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.

(13)

   சில நாட்களுக்கு முன்பு...

   திருச்சி பெரியகடை வீதியில் மலைக் கோட்டையைத் தரிசித்தபடி அந்த நகைக்கடை இருந்தது. எப்போதும் நெருக்கடியாய் இருக்கும் அந்தக் கடைவீதியில் எத்தனை துணிக்கடை, எத்தனை நகைக்கடை என்றாலும் கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது.

   கோபி அங்கு போனபோது கடைக்குள் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் விளக்குகள் ஜாலம் பண்ணிக்கொண்டிருந்தன.நகையும் சதையுமாய் பெண்கள். காசாளரிடம், `காசிநாதனைப் பார்க்கணும் என்றான்.

    `நீங்க?

    ``வந்து... கோபின்னு சொல்லுங்க.

    சற்று நேரத்தில் இண்டர்காமில் செய்தி பெற்ற காசிநாதன், தலையில் பாதி முடியுடனும், கை கழுத்தில் தங்கம் மின்ன மாடியிலிருந்து இறங்கி வந்து கூட்டத்தில் அவனைத் தேடினார்.

    காசாளர், ``அதோ அவர்தான் என்று சோபாவில் அமர்ந்திருந்தவனைக் காட்ட, அன்பு பெருக்கெடுத்து ஓடி வந்தார். ``வாங்க மாப்பிள்ளை என்று அவனது கைகளைப் பிடித்துக் கொண்டார்.

    ``போட்டோவுல பார்த்தது. சட்டுன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. வரீங்கன்னு சொல்லவே இல்லையே ..வாங்க, மாடிக்குப் போகலாம் அழைத்துப் போனார். அங்குதான் அவர் வீடு.

    தனது ஏசி அறையைத் திறந்து, அமர்ந்தார். ``உட்காருங்க மாப்பிள்ளை என்றவர், மனைவியை அழைத்து, `ஏய்..... மாப்பிள்ளை வந்திருக்கார். பொண்ணை அழைச்சு வா

   ``என்ன சாப்பிடுறீங்க மாப்பிள்ளை? என்றார் பரிவுடன்.

   ``முதல்ல இந்த `மாப்பிள்ளையை `கட் பண்ணுங்க என்றான், கோபி சூடாக.

   காசிநாதன், அவன் தமாஷ் பண்ணுகிறான் என்று நினைத்து, ``அது மரியாதையா இருக்காதே தம்பி! என்று வழிந்தார்.

   `இல்லேன்னா அதைவிட அதிகமாய் மரியாதை கெட்டுப் போகும்.

   அதற்குள் தொலைபேசி ஒலிக்க, எடுத்துப் பேசினான். ``தம்பி இங்கேதான் வந்திருக்கு...பேசுறீங்களா..? என்று கேட்டவர், உடனே ரிசீவரை வைத்தார்.

   ``உங்களுக்குப் பொண்ணைப் பார்க்கணும்னு ஆவலா இருக்கும். கொஞ்சம் பொறுங்க! கோபியைப் பார்த்து சொன்னார்.

    ``இல்லை, நான் பொண்ணைப் பார்க்க வரலை. நான் உங்களைப் பார்க்கதான் வந்தேன்!

    ``என்ன சொல்றீங்க?

    கோபி எழுந்து கதவை மூடிவிட்டு, அவரிடம் வந்து, ``என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்....? என்றான்.

   ``நல்லவர். துபாயில் வேலை!

   ``அதுதானே தெரியும்.....? அதுக்கு முந்தி நான் ரவுடியா இருந்தது. தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! என்னைத் திரும்பவும் ரவுடியாக்கிடாதீங்க! நான் ஜெயிலுக்குப் போனவர்ன். போகவும் அஞ்சாதவன்!

   ``தம்பி ....என்னென்னவோ பேசுறீங்க! எதுவுமே எனக்குப் புரியலை! என்று அவரது வாய் குழறிற்று. நெற்றியில் வியர்வை அரும்ப காசிநாதன், மிரள மிரளப் பார்த்தார்.

   ``இதோ பார்! நீ பணக்காரனா இருக்கலாம். பெரிய வியாபாரியா இருக்கலாம். அதுக்காக் என் வாழ்க்கையை வியாபாரமாக்கிடுறதா?

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles