HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

         

        ``ஐயோ...ரொம்பவே குழப்புகிறாய் நீ!

   ``சீக்கிரம் எல்லாமே தெரியும்!

   ``ஆமாம். தெரியும்! அது எப்போ தெரியும்னுதான் நானும் காத்துகிட்டிருக்கேன். அதுக்குள்ளே வேறு சில விபரீதங்கள் நடந்துடுமோன்னு எனக்கு பயமா இருக்குடா!

   ``இப்போ ஏன் புதிர் போடுறே? விளக்கமா சொல்லு.

   ``சொன்னால் என்னைத் தப்பாய் நினைக்கமாட்டியே?

   ``நினைக்க மாட்டேன். தப்புன்னா ஒரே அடிதான்! ஆல் காலியாயிடுவே! அடச்சீ....சொல்லுடா!

    ``வந்து ... என்றவன், வந்து நின்ற பேருந்தைப் பார்த்தான். அதிலிருந்து இறங்கின மாணவிகளைக் கவனித்து பேச்சை நிறுத்தினான். பேருந்திலிருந்து சுதா இறங்கினாள். அவள் மிகவும் தளர்வாகத் தெரிந்தாள். மார்போடு புத்தகங்களை அணைத்துக் கொண்டு நடக்க,``பார்! அவளுக்கு நூறு ஆயுசு! அவளைப் பற்றிதான் பேச்செடுத்தேன். அவளே இறங்கிட்டா.

   ``அவளைப் பற்றி....?

   ``ஆமாம். கோபி! உன் தங்கைக்காக நீ உன் காதலை விட்டுக் கொடுக்கவும் முன்வந்திருக்கிறாய். ஆனா, சுதாவோட போக்கு அத்தனை சரியாகப் படலே....

    ``என்னடா சொல்றே?

    ``ஆமா கோபி. இதை உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தவிச்சுக்கிட்டிருந்தேன். உங்க வீட்டுக்கு வந்திருந்தானே-குமரனோ ..குமரேசனோ...அவன் யாரு?

    ``ஏன்? எனக்கு வேண்டியவன்தான்! அவனுக்கென்ன இப்போ..?

    ``அவன் ஆள் எப்படி? நல்லவனா? உனக்கு நல்லா தெரியுமா? எப்படித் தெரியும்? அவனோட ஊர் எது? என்ன தொழில் பண்றான்? ஜாதகம் என்ன?

  ``...........................

     ``ஏய்............ஏய்....! முறைக்கிறே பார்! அவன்கூட இவளுக்கென்ன பேச்சு....?

    ``வீட்டுக்கு வந்தவன்கிட்ட பேசுறது தப்பாடா.......?

    ``வீட்டுல சரி.....வெளியே?

    ``வெளியேவா.......எங்கே?

    ``கோபி! உனது கோபமும் அதிர்ச்சியும் புரிகிறது. ஆனால் உண்மையை நீ பார்க்கணும், ஜீரணிச்சுக்கணும். ஏற்கனவே ரெண்டு பேர் எங்கிட்ட சொன்னாங்க. நான் நம்பலே,அப்புறம் ,திருச்சி மாம்பழச்சாலை பக்கம் ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்ததால்தான் இத்தனை வற்புறுத்திச் சொல்றேன். சுதா படிக்கப்போறேன்னு சொல்லிட்டு அவன்கூட சுத்தறாடா! தப்பு நடக்கிறதுக்குள்ளே நீ......

    கோபி, அவனுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை, அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான். அவனது கண்களில் காட்டமிருந்தது.

(15)

   குமரேசன், திருச்சி ஓட்டல் ஒன்றில்தான் தங்கியிருந்தான். கோபி போனபோது அறைக்குள் புகைத்துக் கொண்டிருந்தான். குறுமேசையில் மது, சோடா புட்டிகள் காலியாக இருந்தன.

   கோபி, கோபத்தை அடக்கிக்கொண்டு,``குமரேசா! உன் நோக்கம் என்ன...? என்றான்.

   அவன் சிரித்தபடி, `என் நோக்கம்? உனக்குத் தெரியாதா ...என்ன?

   ``நீ எதுக்கு இங்கே தங்கியிருக்கணும்? அதான் ஊருக்குப் போன்னு சொன்னேனில்லே...?   

    ``அதெப்படி ...நீ போன்னா போயிடணுமா? ஏன்? உன் வீட்டுல இருக்கக்கூடாதுன்னே....அது உன் வீடு..என்னைத் துரத்த உனக்கு உரிமை இருக்கு! ஆனா இது ஓட்டல்! காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் இங்கு தங்கலாம்!

   ``உங்கிட்ட காசு இருக்குங்கிறதுக்காக என்ன வேணாலும் செய்வியா? கேட்டவன், கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினான்.

   ``கையை எடுடா...! நான் என்ன அப்படி தப்பு செஞ்சுட்டேன்?

   ``குமரேசா! தயவுசெய்து என்னைச் சித்திரவதை செய்யாதே! நான் செஞ்சது தப்பு. ஒத்துக்கிறன். அதுக்கு நான் தான் பரிகாரம் செய்யணும். தண்டனை தர்றதானாலும் எனக்குதான் தரணும். அதைவிட்டு...என் குடும்பத்தில் கை வைப்பது எந்த விதத்தில் நியாயம்....?

    ``தப்பு நீ பண்ணியிருக்கலாம். ஆனால், அனுபவிப்பது அவங்கதானே! எனக்கு உன் நிலைமை தெரியும்! தர்மசங்கடம் புரியது! நீ ராசியில்லாதவன்டா! குடும்பத்துக்கு நல்லது ஏதாவது பண்ணணும்னு நினைக்கிறாய் பார்...நீ பெரிய மனுசன்! நீ நல்லது பண்ணு! அதை நல்ல வழியில் பண்ணணும்.. இன்னொருத்தவனுக்கு துரோகம் செஞ்சு, நல்லது செய்யக்கூடாது! நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் கூடாது!

 ``சரி....சரி..நான் ஒத்துக்கிறேன்! ஆனா அதுக்காக.... என் தங்கை பாவம்டா...அவ அப்பாவி!

   ``அப்படின்னு நீ நினைச்சுக்கிட்டிருக்கே...நீ தான் ஏமாளி! பொண்ணுங்களுக்கு வயசு வந்துட்டா....அப்புறம் பாவமாவது அப்பாவியாவது! நம்மைவிட அவங்க வேகமாகவும், விவரமாகவும் இருக்காங்க. கவலைப்படாதே! அவள் விவரமாவே இருக்கா! என்னை மயக்குறா....மயங்குறா....!

   ``குமரேசா! வேணாம்... இந்த விளையாட்டு! அவளை ஒண்ணும் பண்ணிடாதே! ஏமாத்திடாதே.....!

   ``போடா, மடையா! அதான் சொன்னேனில்லே... சுதா விவரமா இருக்கான்னு! அவள் ரொம்ப உஷார்...கறார்..இதுவரை நானும் அவளைத் தொட்டதில்லை. அவளும் தொடச் சம்மதிச்சதில்லை. அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்காம். எனக்கும் மெல்ல மெல்ல பிடிச்சிகிட்டிருக்கு.அவளையே ஏன் கட்டிக்கக்கூடாதுன்னு தோணுது!

    ``கட்டிக்கவா...இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்!

    ``ஏம்ப்பா.... எனக்கென்ன குறை?

    ``புகைபிடிக்கிறாய் ....குடிக்கிறாய்...!

   ``இது கெட்டபழக்கம்தான் இல்லேங்கலே....ஆனால் இதுக்காக கல்யாணம் வேணாம்னு வைத்தால் உன் தங்கைக்கு வரன் கிடைப்பதே அபூர்வமாயிடும்! அவ்ளோதான்! நான் ஒண்ணும் உங்கிட்ட மறைக்கலியே! நீதான் மறைத்தாய்! எனக்குத் துரோகம் பண்ணினாய்! இதுவே, உன் தங்கையை கட்டிக்க வர்றவன் கல்யாணத்துக்குப் பிறகு குடிச்சால் என்னை பண்ணுவே? எனது நேர்மையை நீ ஏத்துக்கணும்! எங்கிட்ட வேற என்ன குறை இருக்கு?

   ``யாருக்குத் தெரியும்! உன்னைப் பற்றி இதுக்கு முன்னாடி எனக்கு எதுவுமே தெரியாது. ஏதோ எனது போதாத காலம்!

    `சீச்சி....ரொம்ப சலிச்சுக்கிறியே....! இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலை...உன் தங்கை உடலளவுல பரிசுத்தமாதான் இருக்கா. மனசளவுல அது இல்லை. அவள் என்னைக் காதலிக்கிறதா! கல்யாணத்துக்கு என்னை நிர்பந்திக்கிறா...

    ``அவகிட்ட நான் பேசுறேன். இது நடக்காது!

    ``அப்போ எனக்குப் பரிகாரம்? பண்ணிடு... போயிடுறேன்...!

    ``என்ன...என்ன பரிகாரம்? சொல்லு ...உடனே செய்யிறேன்!

    ``வந்து ...வேற எதுமில்லை...புதுசா கட்டுற உன் பங்களா....!

    குமரேசன் கேட்டதும் கோபி, வாயடைத்துப் போனான். `இவன் நாம் நினைப்பது போல சாதாரண ஆளில்லை, விளைந்தவன். நன்றாகத் திட்டமிட்டுதான் உள்ளே நுழைத்திருக்கிறான். நான் தவறு செய்தது உண்மை என்கிற போதும் அதற்குப் பரிகாரம் தேடும் பொறுப்பும் எனக்கிருக்கிறது.

   நல்லதோ கெட்டதோ  பெற்றோர் இந்த பங்களாவுக்கு ஆசைப்பட்டுவிட்டார்கள். அதை நிறைவேற்றும் கடமையை ஏற்றிருக்கும்போது அடி மடியிலேயே கை வைக்கிறான்.

    இவன் கேட்கும் விலை அதிகம்தான்.

    ஆனால், அதைவிட இவனுக்கு நான் அதிக துரோகம் பண்ணியிருக்கிறேன்! கோபி அப்படியே நாற்காலியில் முகத்தை மூடிக்கொண்டு குனிந்து அமர்ந்தான்.

    சில நிமிடங்களில் அவனது மனது தெளிவு பெற்றிருந்தது. முகத்தில் ஒரு மலர்ச்சியை வரவழைத்துக்கொண்டு, ``சரி, ஒத்துக்கிறேன்! ஆனால், அதற்குப்பிறகு என் தங்கையை மறந்திடணும். அவளைத் திரும்பிக்கூட பார்க்கக் கூடாது!

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles