HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

         

        ``சரி!

   ``மேலும் ஒரு விசயம்...!

   ``என்ன...?

    ``இந்த ஒப்பந்தம் இப்போதைக்கு நமக்குள்ளே இருக்கட்டும். வெளியே எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியவேணாம்!

     ``பின்னால் தெரியும்போது உன் பெற்றோரும் தங்கையும் உடைந்து போகமாட்டார்களா....?

     ``பார்த்தாயா ...மறுபடியும் என் தங்கைக்காகக் கவலைப்படுகிறாய். என் பெற்றோர் பற்றி உனக்கேன் அக்கறை...நீ வழிப்போக்கன்! வந்த வேலை முடிந்தா.... போய்க்கொண்டே இருக்கவேண்டியாதுதானே!

   உறுதியாகச் சொல்லிவிட்டு கோபி அங்கிருந்து வெளியேறினான். பாரத்தை இறக்கி வைத்த மாதிரி அப்போது அவன் உணர்ந்தாலும், பாரம் இறக்கப்பட்டதா? இல்லை, ஏற்றப்பட்டதா? என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை.

    எல்லாமே வேண்டாத விளையாட்டுகள்! பேராசை பிடித்த பெற்றோர். கலங்க வைக்கும் சுதா! வாழ்க்கையையும் வியாபாரமாகப் பார்க்கும் நகைக்கடை  காசிநாதன்! அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் முன்பு நந்தியாகக் குறுக்கே நிற்கும் குமரேசன்!

    இவற்றுக்கிடையில் அகல்யா இல்லை. மதியும் இப்போதெல்லாம் சரியாய் வருவதில்லை. அவன் இஷ்டத்திற்கு ஏதோ செய்துகொண்டிருக்கிறான். நான் மட்டும் பிரச்சினைகளை புதைத்துக்கொண்டு செக்குமாடு போல சுற்றிக்கொண்டிருக்கிறேன். உள்ளே புழுங்கினாலும்கூட வெளியே போலி பகட்டுச் சிரிப்பு.

    இதெல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு?

(16)

   ஒரு வாரம் ஓடிப்போயிற்று.

   பங்களாவிற்காக வந்து இறக்கப்பட்டிருந்த கம்பி, சிமெண்டு எல்லாம் திரும்ப ஏற்றப்பட்டுக் கொண்டிருக்க தகவலறிந்து வீட்டினர் ஓடிப்போய் மறித்தனர்.

   ``இதெல்லாம் எங்கே கொண்டுபோறீங்க....நீங்க எல்லாம் யாரு....? என்று அலறினாள், கவுசல்யா.

    ``நகைக்கடை முதலாளிதான் எங்களை அனுப்பிச்சார்.....

    ``அவர் எதுக்கு உங்களை அனுப்பணும்?

    ``கம்பி, சிமெண்டுக்கு பணம் தரலையாமே... அதனால திருப்பி அனுப்பும்படி உத்தரவு.....

    ``ஐயோ....ஐயோ...! இந்த அநியாயத்தைக் கேட்பார் இல்லையா....? என்று கவுசல்யா மார்பில் அடித்துக்கொள்ள, ஊர் மக்கள், வேடிக்கை பார்த்தனர். `இந்த பொம்பளை ஆடின ஆட்டம் என்ன...நல்லா வேணும்! என்று நினைத்தனர்.

    சாமிநாதன் என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டு மனைவிக்கு பயந்து ,``ஏய்....நிறுத்துங்கப்பா! என் மகன் வந்ததும் பணம் அனுப்புறேன்! என்றார்.

   ``அவன் எப்போ வர்றது...?

   ``வெளியூர் போயிருக்கான் ..வந்திடுவான்...

   ``அதுவரை எங்களால காத்திருக்கமுடியாது என்று அவர்கள் மேகமாகச் செயல்பட, சுதா ஓடிவந்து கவுசல்யாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.

    உடன் அவளது முகம் மலர்ந்தாலும், சந்தேகம் வரப்பெற்று, ``செய்வாரா..?

    ``நான் பேசறேம்மா...

    ``குமரேசன் இப்போ எங்கிருக்கார்? அதான் ஊருக்குப் போயிட்டாரே!

    ``இல்லை...இங்கே இருக்கார்.நான் பார்த்தேன்!

     குமரேசனை சுதா ஏன் பார்க்கணும்..அவனது இருப்பிடம் இவளுக்கெப்படி தெரியும் என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. அவளுக்கு அப்போது தேவை பணம்! அதை யார் கொடுத்தால் என்ன...? நமது கவுரவம் காக்கப்பட வேண்டும் என்றே நினைத்தாள்.

   ``சுதா! போ....அவரைப் பார்த்துப் பேசு!

   அவள்,குமரேசனைத் தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னாள்.

   ``அப்படியா...நீ எதுக்கும் கவலைப்படாதே! இன்னும் ஒரு மணி நேரத்துல நான் அங்கே பணத்தோடு வர்றேன்!

    சுதா மகிழ்ச்சியுடன் திரும்ப வந்து, ``ஏய்....! எல்லோரும் தள்ளிப் போங்க..! யாரும் எதையும் இனி தொடக்கூடாது. ஒரு மணி நேரத்துல உங்க பணம் வரும். வாங்கிட்டு இடத்தைக் காலி பண்ணணும்....ஆமா சொல்லிட்டேன்! என்று விரட்டினாள்.

     கவுசல்யா, அவளை மலைப்புடனும், பெருமிதத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

(17)

   நண்பன் மதி, செல்போனில் கோபியை அழைத்து, ``ஏய் ....நீ என்ன ஊரையே மறந்துட்டியா...? என்றான்.

    ``இங்கே என்னென்னவோ நடக்குது. நீ என்னை மறந்தாலும் பரவாயில்லை. வீட்டையும் சுதாவையும்கூட மறந்துவிட்டாயா?

   ``சே! எப்பவும் புதிர் போடுறதே உன் வேலையாப் போச்சு! சுத்தி வளைக்காம நேரா விசயத்துக்கு வா!

    ``ஆமாம். ஆ...ஊன்னு என்மேல பாய்றே! அத்தனை சொல்லியும்கூட, கோட்டைவிட்டுட்டு நிக்கிறியே!

     ``யாரை .....அகல்யாவையா.....?

     ``இல்லை...அவலை நான் கவனிச்சுக்கிறேன். குமரேசனை! அதான்பா உன் துபாய் நண்பனை! வந்து வந்து கடைசில வீட்டுலேயே ஐக்கியமாயிட்டான்!

     ``ஏய்...என்ன சொல்றே நீ? அதுக்கு வாய்ப்பே இல்லை.

     ``சரி, வந்து நேராப் பாரு. அப்போதான் ஒத்துக்குவே. என்ன ஒரு உபசரணை! என்ன ஒரு அன்னியோன்யம்!

    மதி அனாவசியமாய் பொய் சொல்லமாட்டான் என்று தெரியும். இத்தனை சொல்லியும்கூட வீட்டுக்குப் போகிறான். சுதாவுடன் பேசுகிறான் என்றால்....என்ன அர்த்தம்?

   அந்தக் குமரேசனை சும்மாவிடக்கூடாது!

   பயங்கரமாகப் பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கோபி வீட்டுக்குப் போனபோது, குமரேசன் முன்னறையில் அமர்ந்திருந்தான்.

   அவனுக்கு அருகில் கவுசல்யா நின்றிருக்க, சுதா, அவனைப் படம்பிடித்துக்கொண்டிருந்தாள்.

     அது, கோபி வாங்கி வந்த கேமிரா. `இதற்காகவா இவளுக்கு நான் கேமிரா வாங்கிக் கொடுத்தேன்?

     ``சுதா! இங்கே என்ன பண்றே...?

     ``படம் எடுக்கிறேன்...!

     ``காலேஜிக்குப் போகலியா.....? என்று கோபி, கேமிராவைப் பிடுங்கிக்கொண்டு குமரேசனைப் பார்த்து முறைத்தான்.

     குமரேசன், அதைப் பொருட்படுத்தாமல், ``கோபி! கொஞ்சம் நகரு! டி.வி. மறைக்குது, நல்ல காட்சி! என்று சிரித்தான்.

      ``சிரிப்புக் காட்சி! இப்போ இதுதான் முக்கியம்! சுதா வகுப்பு இல்லியா உனக்கு? போய் படிக்கிற வேலையைப் பார்!

     `இந்த அண்ணனுக்கு என்னாச்சு....ஏன் இப்படி குலைக்குது? என்று முனகியபடி அவள் உள்ளே போக, அம்மா எழுந்து, ``கோபி! ஏன் இப்படி நடந்துக்கிறே? வரவர உன் போக்கே சரியில்லே! நல்லவனா மாறிட்டேன்னு பார்த்தா, பழைய நிலைக்கே திரும்பிடுவே போலிருக்கே!என்றாள்.

   ``நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்? படிக்கப் போன்னு சொன்னது தப்பா? அவமேல எனக்கு அக்கறை இல்லையா? உரிமையில்லையா?

   ``அத்தனை உரிமையிருக்கிறவன், ஒரு வாரமாய் எங்கே போய் இருந்தாயாம்?

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles