HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

           

    ``ஏன் என்ன விஷயம்?

  ``இங்கே நாங்க வாழுறதா இல்லை சாவதான்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்போ... இந்த தம்பி வந்து தான் பணம் கொடுத்து உதவிச்சு! இவர் மட்டுமில்லேன்னா நாங்க மூணு பேரும்....

   கவுசல்யா சொல்லிவிட்டு கண்களைக் கசக்கிக் கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள். கோபியின் ஆத்திரம் இன்னும் அதிகமாயிற்று. `இவன் எதற்குப் பணம் தரவேண்டும்? பசப்புகிறானா? யோசித்தான்.

   ``கோபி! அந்தக் காசிநாதனை நல்லவருன்னு நினைச்சிருந்தேன். ஊர் மக்கள் அப்பவே சொன்னாங்க. அவர் ஏமாற்றுப் பேர்வழி அவரோட நகைக்கடையும் போலின்னு. நான் தான் அதைப் புரிஞ்சுக்காம நம்பி ஏமாந்துவிட்டேன். அவர் ஆள் அனுப்பி மிரட்டுறார். சாமான்களையெல்லாம் திருப்பி எடுத்துட்டுப் போறார். இதுக்காக நாங்க இவ்வளவு பாடுபட்டோம்? ஊகூம்... அந்த சம்பந்தம் நமக்கு சரிப்பட்டு வரும்னு தோணலே.

   கவுசல்யா, முந்தானையால் கண்களை ஒற்றிக்கொண்டு, ``நீ போய் என்ன சேதின்னு அந்தாள்கிட்ட கேளு!

   ``சரி, கேட்கிறேன், குமரேசா! இப்படி வா! உங்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கோபி, அவனை இழுத்துக் கொண்டு பின்பக்கம் போனான்.

    ``ஏய்...எதுக்கு இங்கே வந்தே?

    ````கோபி! முதல்ல சட்டையிலிருந்து கையை எடு! நான் ஒண்ணும் விரும்பி வரலை. உங்க அம்மாவும் சுதாவும் தான் கூப்பிட்டாங்க!

    ``கூப்பிட்டா.... உடனே வந்துடுறதா? நீ எதுக்காகப் பணம் தரணும்?

     ``பங்களா  வளர  வேணாமா?

     `` அதுதான் நீ எதுக்கு தரணுமுன்னு கேட்டேன்!

     ``என்னடா இது...பங்களாவை எனக்குத் தரேன்னு சொன்னே. அதுக்குச் செலவு பண்ண எனக்கு உரிமையில்லையா?

      ``பங்களாவைத்தான் இன்னும் எழுதித் தரலியே! அப்புறம் அதுக்குள்ளே உனக்கென்ன உரிமை?

      ``ஓகோ.. அப்போ அன்னைக்குச் சொன்னதெல்லாம்? வெறும் வாக்குதானா? நான் என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா? எனக்கு இப்போ முடிவு தெரிஞ்சாகணும். அதை இப்பவே என் பேருக்கு மாத்தித் தரணும்! என்று குமரேசன் உரக்கப் பேச-

   ``ஏய் ....ஏண்டா கத்துறே? மெதுவா பேசு.

    ``..............................

    ``இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடு.

    ``அதுவரை நான் இங்கேதான் இருப்பேன்.

    அவர்கள் தனியாய் பேசிக்கொள்வது என்னவென்று அறியும் ஆவல் சுதாவுக்கு எழவே. அறைக்குள்ளிருந்து ஜன்னல் வழியாகக்  கவனித்துக்கொண்டிருந்தான்.

   `அண்ணனிடம் ஏதோ பிழை இருக்கிறது. அதனால்தான் திடீர் திடீரென கோபம் வருகிறது! அம்மா சொன்ன மாதிரி பழையபடியும் அண்ணன் தப்பு தண்டாவுல இறங்கிருச்சா?

   அப்போது வாசலில் அரவம் கேட்டது. வாகனம் வந்து நிற்பதும்,புழுதி பறப்பதும் தெரிந்தது. தொடர்ந்து தட்டப்பட்டது.

   கவுசல்யா, யோசனையுடன் போய் திறக்க வெளியே போலீசார் இருவர்,``இது கோபியோட வீடுதானே? என்று அதட்டினர்.

    அவள் மிரண்டு,``ஆமா...எ..என்ன விஷயம்?

    ``அவன் இருக்கானா? என்று கேட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே நுழைந்தனர். ``எங்கே அவன்?

    அவள் வார்த்தை வராமல் தடுமாறி, ``சார்...என் மகன் என்ன தப்பு பண்ணினான்? என்றாள்.

    `` அதை ஸ்டேஷன்ல வந்து கேட்டுக்குங்க! அவனை எங்கே ஒளிச்சு வச்சிருக்கீங்க?

     ``இல்லை. நாங்க ஒளிச்சு வைக்கலை. அவன் இங்கே இல்லை என்று தோட்டத்தை மறித்தபடி பொய் சொன்னாள்.

     அதற்குள், குமரேசன் போலீசைக் கவனித்து, `கோபி! போலீஸ்....போலீஸ்.... என்று கிசுகிசுத்தான்.``உன்னைத்தான் தேடுது.

   ``என்னையா...எதுக்கு?

    ``அதை அப்புறமா சொல்றேன். முதல்ல நீ தப்பிச்சு போயிடு!

   `` நான் ஏன் போகணும்? நான் என்ன தப்பு பண்ணினேன்?

   ``விபரம் புரியாம பேசாதே? என் பேர்ல நான் புகார் கொடுத்திருந்தேன். ரெண்டு வாரம் கழிச்சு அவங்க சாவகாசமா இப்போதான் வர்றாங்க!

    ``என் பேரில் எதுக்கு புகார்? அதான் நான் சரின்னு சொன்னேனே!

    ``அதுக்கு முன்னாடி கொடுத்த புகார்! சொல்றதைக் கேளு. சீக்கிரம் போயிடு! இல்லேன்னா வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிடும்!

     ``நான் எங்கே போவேன்?

     ``என் அறையில் இரு. இவங்களைப் பேசி சமாளிச்சு அனுப்பிட்டு நானும் வர்றேன்!

(18)

    அந்தச் சம்பவம், குமரேசனை அந்த வீட்டின் நாயகனாகவும், பாதுகாவலனாகவும் உருவகப்படுத்தி இருந்தது, சாமிநாதனுக்கும் கவுசல்யாவிற்கும் மகனைவிட அவன் பேரில் அத்தனை மதிப்பும் மரியாதையும் வந்திருந்தது.

    பெற்று வளர்த்த மகன் உதவாக்கரையாக இருக்கிறான். திரும்பத் திரும்ப குடும்பத்திற்கு அவனால் கெட்ட பெயர். எங்கிருந்தோ வந்தவன் நம்மைக் காக்கிறான். இது மாதிரி நமக்கு ஒரு பிள்ளை இல்லாவிட்டாலும் மருமகனாவது கிடைத்தால் தேவலாம் என அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.

    அன்று போலீசைப் பார்த்து வீட்டினர் மிரண்டு போயிருக்க, குமரேசன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அவர்களை அணுகினான், அவர்கள் அவனைப் பார்த்ததும் பயம் தணிந்து பணிவுடன் பேசினர்.

   இவன் நிச்சயம் பெரிய ஆள்தான். சுதாவுக்கும் இவனைப் பிடிக்கிறதால் மருமகனாக கிடைத்தால் நமது பாக்கியம்! மகனை போலீஸ் தேடுகிறது. அவன் எங்கே ஓடினான் என்கிற கவலையை விட `பசையுள்ள இவனது பக்கமே அவர்களின் நாட்டம் போயிற்று.

   குமரேசனுடன் தனியாகப் பேசியபின் போலீஸ்காரர்கள் சமாதானமாகி, ``இவர் சொல்வதால் இப்போ போகிறோம். உங்கள் பையனைக் கண்டிச்சு வையுங்க என்று கிளம்பினார்கள்.

    சுதாவுக்கு அதைக் கேட்க பூரித்துப்போயிற்று; அண்ணனைத் தாழ்த்தின வருத்தத்தைவிட நேற்று வந்தவனைப் புகழ்வதைப் பார்த்து மனது மகிழ்வதன் நோக்கம் அவளுக்குப் புரியவில்லை.

    கவுசல்யா, பயம் தெளிந்து,``சார் ...காபி குடிச்சிட்டுப் போங்க என்று கெஞ்சி, ``சுதா ...சீக்கிரம் போய் பாலைச் சுட வை என்று விரட்டினாள்.

    போலீஸ்காரர்கள், குமரேசனைப் பார்க்க, ``ஆமா சார்...இவங்களோட மகிழ்ச்சிக்காக என்க. `சரி என்று அமர்ந்தனர். காபி கூட இவரைக் கேட்டுவிட்டுதான் குடிப்பார்கள் போல என அவள நினைத்தாள்.

     தம்பி போலீஸ்ல பெரிய வேலையில இருக்குமோ!

    அவர்கள் போனதும், ``தம்பி! போலீஸ் ஏன் கோபியை....

   ``அது வந்து... அது ஒண்ணுமில்லை. அதான் சரிபண்ணி அனுப்பிட்டேனே!

    ``சரிபண்ணினது உங்களது திறமை! பெருந்தன்மை. அதுக்கு நாங்க ரொம்ப கொடுத்து வைச்சிருக்கோம். ஆனா, என்ன விசயம்னு தெரிஞ்சாகணுமில்லே?

   ``தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க? அதான் பிரச்சினை முடிஞ்சுபோச்சே.

    ``இல்லை தம்பி.... இந்த பிரச்சினை முடிஞ்சிருக்கலாம். உடனே இன்னொன்ண்ணு கிளம்பாதுன்னு என்ன நிச்சயம்? பிரச்சினை வரும்போதெல்லாம் உங்களைத் தொந்தரவு பண்ணிகிட்டிருக்க முடியுமா?

    ``உங்கள் தொந்தரவுக்காக மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்.

    ``அதுக்கில்லை தம்பி, கோபியை நினைச்சா எங்களுக்கு பயமாயிருக்கு. துபாய் போறதுக்கு முன்னாடி யாருக்கும் பயனில்லாம தறுதலைய சுத்திகிட்டிருந்தான். அங்கே போனதும் திருந்திட்டான்னு நினைச்சு அவனுக்காக இடம் வாங்கி, பங்களா கட்டி, பெரிய இடத்துல பெண் ஏற்பாடு பண்ணினோம். அவனைப் பற்றி சம்பந்திக்கு தெரிஞ்சு போச்சோ என்னவோ தெரியலை..... எங்களோட உறவை முறிச்சுக்கிட்டார்.

    ``...........................

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles