HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

    

   ``அவன் திரும்ப பழைய ரவுடித்தனத்தைக் காட்டத் தொடங்கிட்டானோங்கிற பயம்...சொல்லுங்க, அவன் ஏன் தலைமறைவாகணும்? தப்பு பண்ணிலேங்கிறப்போ எதுக்காக போலீசைப் பார்த்து ஓடணும்?

   ``அதான் சொல்றேனே! வீட்டுல இத்தனை பேர் முன்னாடி போலீஸ் அவனைப் பிடிச்சுட்டுப்போனா ஊர் கேவலமா பேசாதா? அதனால் நான் தான் அவனை ஓடிப்போகச் சொன்னேன். அது சமயோசித நடவடிக்கை! அப்புறம் அவன் தப்பு பண்ணலியான்னு கேட்கிறீங்க?

    ``ஆமா...

    ``தப்பு அவன் பண்ணலேன்னு நான் பொய் சொல்ல விரும்பலே. தப்பு செஞ்சிருக்கான். அது அவனையும் மீறின தவறு. அவனே எதிர்ப்பார்க்காம அவனது தலைக்குமேல் போன விசயம்...அதுகூட அவன் தனக்காகப் பண்ணலை, பிறருக்காகத்தான்!

    ``தெரியும் அவனைப் பற்றி! தனக்காகப் பண்ணிக்கிட்டாதான் பரவாயில்லையே! இவனுக்கு எப்போதான் நல்ல புத்தி வருமோ தெரியலை என்று கோபியை கரித்துக் கொட்டினர்.

    கிராமத்தில் சின்ன விஷயம்கூட ஊர் முழுக்க வேகமாய் பரவிவிடுவது இயல்பு.

    கோபியைத் தேடி போலீஸ் வந்த செய்தியும் சுவாரசியமாய் பரப்பப்பட்டது.

    ஏற்கனவே சாமிநாதன் கவுசல்யாவின் அலட்டல் தாங்காமல் பொறாமையில் தகித்திருந்தவர்களுக்கு இப்போது நல்ல தீனி கிடைத்தது.

   `என்னவோ பெரிதாய் துபாய் பணம் என்றார்கள். இத்தனை பெரிய பங்களா கட்டுவதற்கு கோபி என்ன எண்ணெய் கிணறா வைத்திருக்கிறான்? நகைக்கடைக்காரனை ஏமாத்தி பணம் பிடுங்கினார்கள். கோபியும் என்ன குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தானோ தெரியவில்லை. வசமாய் சிக்கிக்கொண்டான்! என்றார்கள்.

   கிராமத்தில் அன்பு பாசம் நேசம்-பற்றுதல் மனிதாபிமானம் உதவும் குணம் எல்லாமே அதிகம். அதைவிட அதிகமாய் பொறாமையும்! அருகிலிருப்பவரின் வளர்ச்சியையும் உயர்வையும் சகித்துக்கொள்ளமுடியாத அவலத்தால் பலரும் பலமாதிரி பேசிக்கொண்டிருந்தனர்.

    அதனால் கூச்சப்பட்டு, பேச்சு அடங்கட்டும் என்று கோபி நகரத்திலே தங்கியிருந்தான். அது மேலும் ஊர் மக்களுக்கு பேச வசதியாயிற்று.

     `அவன் ஜெயிலில் இருக்கிறான். அதனால்தான் வரவில்லை. இனி வரவே முடியாத மாதிரி உள்ளே போட்டு விட்டார்கள். ஜாமீன்கூட கிடைக்கவில்லை என்றார்கள். அதை வீட்டில் உள்ளவர்களும் நம்ப வேண்டியதாயிற்று. அதெல்லாம் குமரேசனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

(19)

    ``ஏண்டா! சுத்தமா அழிஞ்சு குட்டிச்சுவராப் போறதுன்னே நீ முடிவு பண்ணிட்டியா.....? மதி, கடுங்கோபத்துடன் தொலைபேசியில் கோபியைப் பிடித்து விளாசினான். இவன் பதில் பேசவில்லை.

    ``உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டிருக்கே! ஊர்ல என்னென்னவோ புகையுது. எதைப்பற்றியும் கவலைப்படாம அங்கே என்ன பண்ணுறே? தெரியாமத்தான் கேட்கிறேன்...

    அதன்பிறகும் கோபி எதுவும் சொல்லாமல் மவுனமா இருந்தான்.

    ``கோபி! வெள்ளம் தலைக்கு மேல் போயிடுச்சு, அப்பவே உனக்கு நான் கோடிட்டுக் காட்டினேன். நீ எதுவும் பண்ணலே....உன் தங்கச்சியை அந்தக் குமரேசனுக்குக் கட்டி வைக்கப் போறதா ஊர் முழுக்கப் பேச்சு!

   ``அந்தப் பேச்சுக்கு பயந்துதானே....நானே ஒதுங்கியிருக்கேன்!

   ``இது கோழைத்தனம்....பிரச்சினைகளை எதிர்கொள்வதை விட்டுட்டு.....ஒடி ஒளிஞ்சா எல்லாம் சரியாயிடுமா? உடனே புறப்பட்டு வாடா....!

(20)

    கோபியைப் பார்த்ததும் கவுசல்யா முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சுதாவின் முகத்திலும் அலட்சியம் தெரிந்தது. யாருடைய தயவும் இல்லாமல் பணக்கார  -வசீகர இளைஞனைக் கட்டிக்கொள்ளப் போகும் கர்வம் மிளிர்ந்தது.

    பொதுவாகவே பெண் என்பவள் படிப்பு, பணம், கல்யாணம் எல்லாவற்றிற்குமே வீட்டில் பெற்றோர் அல்லது சகோதரனை எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்களை அனுசரித்துப் போனால்தான் காரியம் நடக்கும்.

    இங்கே குமரேசனை அவள் தன்னைத்தானே தேடிக் கொண்டதாகவும், இனி வேறு யாருடைய தயவும் தனக்குத் தேவையில்லை என்கிற மாதிரியும் அவள் நினைத்தாள். அது அவளது நடத்தையிலும் பிரதிபலித்தது.

   ``சுதா! நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா.....?

   ``என்ன கேள்விப்பட்டேன்னு சொன்னாதானே தெரியும்!

   ``உனக்கும் குமரேசனுக்கும் திருமணம் நிச்சயம் பண்ணப் போறாங்கன்னு...

    ``ஆமாம்...உண்மைதான். அதில் என்ன தப்பு? அவரை நான் நேசிக்கிறேன். நம்ம குடும்ப மானத்தைக் காத்தவர். எல்லாத்துக்கும் மேலாக உன் நண்பர்!

    ``சுதா! நான் உனக்கு எப்படி எடுத்துச் சொல்வேன்! நண்பன்னா அத்தனை நெருக்கம் ஒண்ணுமில்லை. அவன் யாரோ எவனோ! அவனது குடும்பப் பின்னணி என்னன்னு கூடத் தெரியாது!

     ``அதனால என்ன? குடும்பப் பின்னணி தெரிஞ்சு கிட்டா காதலிக்க முடியும்? எனக்கு மனசுக்கு பிடிச்சிருக்கு. பழகினேன். பழகும்போது இன்னும் அதிகமாய் அவரைப் புரிஞ்சுக்க முடிஞ்சது. அதனால என்னைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை. நான் ஒண்ணும் பாப்பா இல்லை. அந்தக் காசிநாதன் பொண்ணு மாதிரி ஓடிப்போகலை!

    ``சுதா! இதோ பார்! நான் உன் அண்ணன்.... உனக்கு நல்லதையே நினைப்பவன்...

    `சரிண்ணா ...நான் மறுக்கலே ....நல்லதை நினைக்கிறாய்.....ஆனால் செயல்படுத்தும்போது கோட்டை விட்டுவிடுகிறாய்.... நல்லதை நினைத்துக் கெடுதலை வரவழைத்துக்கொள்கிறாய். நல்லது நினைத்தால் மட்டும் போதாது... அதைச் செயல்படுத்துவதற்கு ஒரு துணிவும், பக்குவமும் வேண்டும். கோழைத்தனம் கூடாது. உங்கிட்ட அதுதான் அதிகமா இருக்கு. உதாரணத்துக்கு அகல்யா விசயம்.... பல ஆண்டாகச் சுற்றினீர்கள்.... கடைசியில் கல்யாணம் என்று வரும்போது பிரிவு... ஒதுங்கிவிட்டாய்!

    ``சுதா! மனசாட்சி இல்லாம பேசாதே! நானா ஒதுங்கினேன்? நம் பெற்றோர்தானே? பணம், பங்களா, பகட்டுன்னு மயங்கி என் வாழ்வைக் காவு கொடுத்தாங்க?

    `எல்லாம் எனக்குத் தெரியும். பெற்றோர்கள் பலதும் சொல்வார்கள், செய்வார்கள். அவர்களின் கண்ணோட்டமும் அவர்களின் சிந்தனையும் வேறு. நீ மெய்யாலுமே அகல்யாவை விரும்பி இருந்தா.... அவளை விட்டிருக்கக்கூடாது....

    ``சுதா! நீயும் இப்படி பேசுகிறாய்? அதுவும் என்னைப் பார்த்து? பாவி! சின்ன வயசிலருந்து எனக்காக நான் எதுவும் கேட்டிருக்கிறேனா? உனக்காக! உனக்காக எத்தனை கஷ்டப்பட்டிருப்பேன்! உன்சுகம்! உன்தேவைகள்! உனக்குப் பிடித்தவைகள்! உன் நல்லதுக்கு என்று வாழ்ந்தேனே.... எல்லாவற்றையும் மறந்துவிட்டு தூக்கி எறிஞ்சு பேசுறியே....., இது நியாயமா...?

   ``..........................

   ``இப்போ ....இங்கே இந்தக் காசிநாதன் பொண்ணைப் பற்றிச் சொன்னியே! அவள் கெட்டுப் போனவன்னு தெரிஞ்சும்கூட எல்லோரும் சேர்ந்து என் தலைவலியில் கட்டி வைக்கப் பார்த்தீங்களே! நான் ஏன் அதற்கு மவுனம் காத்தேன்.....தெரியுமா.....?

    ``ஏன் ......பணம் வருதுன்னுதானே!

    ``அடி பைத்தியமே! இந்த அண்ணனை நீ புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா? இப்படி அமிலத்தை உமிழ்கிறாயே....? இது உனக்கே நியாயமா இருக்கா..?

   ``...........................

   ``நகைக்கடைக்காரன் பணம் கொடுத்தா........அதை வச்சு உனக்கு ஒரு நல்ல வாழ்வு தொடங்கலாம் என்றுதான், எனது மனசாட்சியையும் அடக்கி வெச்சிருந்தேன். அகல்யாவையும் துறக்க முன்வந்தேன். எல்லாம் உனக்காகத்தான்.....

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles