HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

    

       ``என்ன சொல்றே... அவளுக்கு வேறு வரன் நிச்சயமாச்சுன்னு சுதா சொன்னது?

   ``உண்மைதான்.

   ``ஏன்டா...ஏன்டா இப்படி? என்னால் நம்ப முடியலை ...அவ எப்படி?

   ``என்னைக் கேட்டால்? நீ கோபிக்கலேன்னா ஒரு விஷயம் சொல்றேன்.

   ``சொல்லு.

   ``அகல்யா நல்ல பொண்ணுதான்டா. அவங்க வீட்டிலும்கூட பிரச்சினையில்லை.

    ``அப்புறம்? அவளுக்கென்ன அவசரமாம்? என்பேர்ல நம்பிக்கையில்லையா?

    ``உண்மையைச் சொல்லணும்னா எனக்கே உன்னை நம்பமுடியாம இருந்தது. ஊரில் அந்த அளவுக்கு புரளி. உன் பேரில் புழுதி.

   ``என்னன்னு?

   ``நீ அங்கே யாரையோ கட்டிக்கிட்டேன்னு! உன்னைப் பற்றி நல்லவிதமா இதுவரை ஏதாவது உண்டா?

   ``அடப்பாவிகளா... இதெல்லாம் திரிச்சது யார்?

    ``அப்போ நீ அங்கே யாரையும் கட்டிக்கலியா?

    ``கோபி, ஓங்கி அவனது முதுகில் இடித்து, ``வண்டியை நிறுத்து! என்று கத்தினான். `பைக் தடுமாறி தளர்ந்து, கிறீச்சிட்டு சாலை ஓரத்தில் இளநீர் விற்கும் மீசைக்கார நபரை மிரட்டி நின்றது.

   ``மகா பாவி! நீயுமா அதை நம்பினே? யார் இப்படி ஒரு வதந்தியை பரப்பினது?

   ``தெரில, வதந்தி-பேரு, முகவரி எழுதி வச்சுட்டா வரும்?

   இளநீர்க்காரன், இதுதான் சந்தர்ப்பம் என்று ``இளநீர் சாப்பிடுங்க சார்! சந்தில் சிந்துபாடி அவர்களின் அனுமதிக்கு காத்திராமலேயே சீவினான்.

  ``இளநீர் எவ்வளவு?

  ``பத்து ரூபா.

   இளநீர் குடிச்சிக் கிளம்பும்போது, ``மதி! இளநீர் பத்து ரூபான்னா அநியாயமில்லே?

   ``உன்னை மாதிரி நாலு துபாய்க்காரன் இருந்தால் ஏன் விலை ஏறாது?

   ``என்னடா சொல்றே ... நான் என்ன செய்தேன்?

   ``நீ எதுவும் பண்ணாம இருக்கலாம். ஆனா உன் குடும்பத்தினர்! கோபி நீ வருத்தப்பட்டாலும் சரி, ஒரு விசயத்தை நான் சொல்லியே ஆகணும். உங்க அப்பா, மாமாவோட தொல்லை தாங்கலே...

   ``ஏய்...அவங்க என்ன பண்ணினாங்க....?

   ``நீ துபாயில் சம்பாதிச்சாலும் சம்பாதிக்கிறாய்! ஊரில் விலைவாசி ஏத்துறதே அவங்கதான்! கூலி ஆட்களுக்கு வெளியே அம்பது ரூபாய் சம்பளமுன்னா இவங்க அறுபதுன்னு சொல்லி கூப்பிடுவாங்க. அப்புறம் மத்தவங்களும் அதே கூலி தரவேண்டியிருக்கும். உங்களுக்கு துபாய் பணம் வருது, சமாளிக்கலாம், வயலையும், மழையையும் நம்பி இருக்கும் ஏழைங்க என்ன பண்ணுவாங்க?

   ``...........................

   ``இதுமட்டுமா ...நெல்லுக்கு விலை ஏத்துறது, ஒண்ணுக்கும் உதவாத நிலத்தை மூணு பங்கு விலைவச்சு பேசி முடிச்சிருக்காங்க. கேட்டால் சவடால்! முடிஞ்சா நீங்களும் அந்த விலை கொடுத்து வாங்குங்கன்னு ஊர்க்காரங்களோட சண்டை!

   ``........................

  ``இந்தப் போக்கு அத்தனை சரியில்லை. பணம் காசு வரலாம். போகலாம், அதுக்காக இப்படிக் குதிக்கிறதா....

   ``................................

   ``என்ன சத்தத்தையே காணோம்?

   ``இல்லை ....என்னால நம்ப முடியலே....எங்கப்பாவா இப்படி....? மாமா போகட்டும்! அவர் எப்பவுமே அப்படித்தான். அவரது பேச்சை யாரும் பொருட்படுத்துவதில்லை. அப்பா..... எப்படி மாறினார்? வீட்டில் பரமசாதுவாய் இருக்கார். அம்மா கிழிச்ச கோட்டைத் தாண்டுவதில்லை!

    ``அங்கே முடியலே....அதான் வெளியே ரொம்பவும் தாண்டுறார். இந்தச் சவடால் விசயத்துல உங்கப்பா மட்டுமில்லை, உங்க அம்மாவும் ஒண்ணும் குறைச்சலில்லை. அவங்களுக்கும் பேராசை! ஊர் முழுக்க வாங்கிப் போட்டுடணும்ங்கிற வெறி! இதெல்லாம் நல்லதுக்கில்லை. கொஞ்சம் கட்டுப்படுத்திவை. இல்லேன்னா யாராச்சும் பதம் பார்த்திருவாங்க. பணம் இருக்கலாம். கை காலோ உசிரோ போச்சுன்னா போனது போனதுதானே. அப்புறம் என்ன பண்ண முடியும்! ஆனா ஒண்ணு...

   ``என்ன....?

   ``தயவுசெஞ்சு நான் சொன்னதா அவங்களுக்குத் தெரிஞ்சிட வேணாம்!

   ``சீ ...எதுக்குடா பயம்?

    ``ஆமா. பயப்படாம முடியுமா? பணக்காரங்களாச்சே! மாடி மேலே மாடி கட்டுறீங்க! எனக்கொரு சந்தேகம்டா.... நீ அங்கே வேலை பார்க்கிறியா இல்லை, ரகசியமாய் வேற எதுவும் பண்றியா?

    கோபி சிரித்து, ``உனக்கு சந்தேகமா? அது போகட்டும், நான் அகல்யாவைச் சந்திக்க என்ன வழி? முதல்ல அதைச் சொல்! என்றான்.

   `அதுக்கு வாய்ப்பேயில்லை. தேவையுமில்லை.

   ``ஏன்? நான் சந்திச்சா என்னவாம்?

   ``வேற ஒருத்தனை கட்டிக்கப் போறவளை சந்திச்சு நீ என்ன பண்ணப் போறியாம்...சரி, சரி முறைக்காதே! உன் பிடிவாதம் இன்னும் மாறவேயில்லை. அவளை வீட்டில் சந்திக்க முடியாது. வெளியே கிணற்றடி, ஏரி... ஊகூம்... வேணுமானால் கோவில்ல சந்திக்கலாம். வெள்ளிக்கிழமை தோறும் அங்கே வருவா! முயற்சி பண்ணு!

(4)

    ஏரிக்கரையை ஒட்டி நாவல் மரங்களும், அரசமரம், ஆலமரம் என எல்லாம் பெருகித் தழைத்திருந்தன. அதில் குரங்கள்  ஊஞ்சலாட, காக்கைகள் அவற்றைத் துரத்த, குருவிகள் இன்னிசை பாட, ஏரிக்குள் இருந்த சொற்ப தண்ணீரில் மீன்களும், வாத்துகளும் நீச்சலடித்தன. ஆல மரத்தடியில் பிள்ளையார். அதன் கற்சுவர்கள் பெயர்ந்து, செடிகளும் புதர்களும் மண்டியிருந்தன. கொஞ்சம் தள்ளி பாலர் பள்ளி!

    அதற்கு பின்புறம் நான்கு ஏக்கரில் முள் வேலி போடப்பட்டு நடுவில் அந்தக் கட்டிடம் வளர்ந்து கொண்டிருந்தது. கிராமத்தில் இத்தனை பெரிய பங்களா எதற்கு? என்று யாரும் கேட்கத் துணியவில்லை.

   கோபிக்கே அதைப் பார்க்க பிரமிப்பாகத்தான் இருந்தது.

   அவன் யோசனையுடன் நடக்க ``இடம் நல்லாயிருக்கா? என்று சுவாமிநாதனும், கவுசல்யாவும் ஒரே குரலில் கேட்டனர்.

   அவர்களுக்குப் பின்னால் வந்த மதி,`` இந்தப் பசுமையும், குளுமையும் கோபிக்கு பிடிக்காம போகுமா....? என்று ஒத்தூத, கோபி திரும்பி முறைக்க, அவன் வாயை மூடிக்கொண்டான்.

   ``கோபி! இந்த பங்களாவுக்கு அம்மா பெயரை வச்சிடலாம். இதுல சுதாவுக்கு ஒரு வீடு. உனக்கு ஒண்ணு, எங்களுக்கு ஒண்ணு, அப்புறம் இந்தப் பக்கம் கொட்டகை போட்டு மாட்டுப் பண்ணை வைக்கலாம். மாட்டுத் தீவனத்துக்குப் புல் வளர்க்க அந்த ரெண்டு ஏக்கர்! மீதி உள்ளதுல கரும்பு, பழ மரங்கள்! கரையோரம் தேக்கு பயிரிடலாம்! என்ன சொல்றே...? எல்லாம் பணப் பயிர்!

   கோபி எதற்குமே வாய் திறக்கவில்லை. அவனுக்கு அவற்றை ஜீரணிக்க முடியவில்லை. அங்கு தெரிந்த பிரமிப்பை விட, அவனது நெஞ்சு முழுக்க அகல்யாதான் நிரம்பியிருந்தாள்.

    அவளது அந்த ஒரப் புன்னகை! அழகான கேசம், தாவணியின் லாவகம்!

   மதி அவனது மவுனத்தைக் கலைக்கும்வண்ணம், ``சாமி மாமா!உங்களை அடிக்சுக்க இனி இந்த ஊர்ல யாருமில்லை. சினிமா படப்பிடிப்பு நடத்தலாம் போல கண்கொள்ளாக் காட்சியா இருக்கு.

   ``சரியாச் சொன்னே மதி! உனக்குப் புரியுது. இந்த ஊர்க்காரனுங்களுக்குப் புரியலே.... நான் ஒண்ணும் மூளை இல்லாதவனில்லை. விபரம் புரியாதவனுங்க இவ்ளோ பெரிய வீட்டை டவுன்ல கட்டினா நல்ல வாடகை வருமேன்னு கேட்கிறானுங்க. என்னோட நோக்கமே சினிமாதான். இதைக் கட்டி முடிச்சுட்டோம்னு வச்சுக்கோ ..அப்புறம் ஒரு பயலும் பொள்ளாச்சிக்குப் போக மாட்டான். எல்லோரும் படம் எடுக்க இங்கே வந்திடுவானுங்க! அதுக்காகதான் இந்த ஏற்பாடு.

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles