HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

            

   ``தம்பி! வேறு ஒண்ணுமில்லை....பள்ளிக்கூடத்துக்கு போனவாட்டி தண்ணி வசதியெல்லாம் பண்ணிக் கொடுத்தீங்க. இப்போ பிள்ளைங்க உட்கார்ந்து படிக்க பெஞ்சும், கொஞ்சம் விளையாட்டுச் சாமான்களும் வேணும்!

   ``ஆகட்டும் சார்

   உடனே பஞ்சாயத்துத் தலைவர், ``தம்பி...நம்மூர் கோவிலை மராமத்து பண்ணணும். கும்பாபிஷேகம் நடத்தணும். அப்புறம் ஆழ்குழாய் கிணறு...

    தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, ``இவ்ளோதானா இன்னும் வேறு இருக்கா? என்று சிரித்தான், கோபி.

   ``அப்புறம் தெருவிளக்கு...

    கோபி அங்கே ஒரு யுத்தம் மூண்டுவிட வேண்டாம் என்று நினைத்தான்.``ஊருக்கு உதவி பண்ணுறதல எனக்கும் மகிழ்ச்சிதான். இப்போதைக்கு என்னென்ன அவசியத் தேவைன்னு பட்டியல் போட்டு அதுக்கு எவ்வளவு ஆகும்னு குறிச்சு மதிகிட்டே கொடுங்க. என்னால் முடிஞ்சதை நிச்சயம் செய்யிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

   அவர்கள் போனதும் மதி, ``ஏன்டா டேய்! நீ என்ன மந்திரியா? அவங்க மனு கொடுப்பானுங்க.... நீங்க பரிசீலிப்பீங்களா....நடக்கிற காரியமா இதெல்லாம்? இதோ.... இன்னொரு கோஷ்டி வருது பார்! ஆகா...என்ன ஒரு மரியாதை! வரும்போதே பலமான கும்பிடு!

   அவன் முணுமுணுக்க, வயலிலிருந்து வந்த அவர்கள். கோபியை நலம் விசாரித்து, `எங்க பசங்களுக்கும் துபாய்ல ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்!

   `நல்லாத்தானிருக்கும் என்று மனதுக்குள் கறுவிக் கொண்டு,``கோபி! பாவம் இவங்க! பசங்களை உன்னோட அழைச்சுப் போய் வைச்சுக்கோயேன்! அவங்களும் நம்மூரில் பங்களா கட்டட்டும்! என்றான் மதி.

   அவர்களிடம் பக்குமாய் பேசினான், கோபி, சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. முந்தி மாதிரி இப்போ அங்கே வாய்ப்பு இல்லை. சம்பளமும் இல்லை. சம்பளத்தைக் குறைச்சதோட இல்லாம அடிமை மாதிரி வேலை செய்யவேண்டியிருக்கு. அங்கே செலவு பண்ணிப் போய் குடும்பத்தைப் பிரிஞ்சு வெயிலில் கஷ்டப்படுறதுக்கு இங்கேயே மேல்! இங்கேயே ஏதாவது செய்யச் சொல்லுங்க என்று நழுவினான்.

(6)

   குழாயடிச் சண்டை, பேருந்துகளின் உறுமல், வாகனங்களின் புகை, சுவரொட்டிகளை மேயும் ஆடு மாடுகள் என்று அமளிப்படும் சென்னையின் புகழ்பெற்ற திருவல்லிக்கேணி.

   அதன் சந்துக்குள் சந்து சந்தாக இருந்து தங்கும் விடுதி ஒன்றின் அறையில் மின்சாரம் இல்லாமல் ஓடாமல் அழுக்குடன் தொங்கிக் கொண்டிருந்த மின்விசிறியை வெறித்தபடி படுத்திருந்தான், கோபி.

   அவனது முகத்தில் மூன்று வார தாடி மிச்சமிருந்தது. ஊருக்குப் போகவே வெறுப்பாயிருந்தது.

   யோசித்துப் பார்த்தால் எல்லோருமே சுயநலத்துடன் செயல்படுவதாய்த் தெரிந்தது, துபாய் போகும்முன்பு வரை என்னை எப்படியெல்லாம் கரித்துக்கொட்டி இருப்பார்கள்! வீட்டினருக்கே நான் ஒரு பாரமாக இருந்தேன்.

   எனக்குக் கஷ்டம் வந்த போது விலகியிருந்தவர்கள் இப்போது நெருக்கம் காட்டுகிறார்கள். கெட்ட பெயருடன் ஊரில் இருந்தபோது ஆதரவு கொடுத்த அகல்யா, நன்றாக இருக்கும்போது விலகிப் போகிறாள்.

   அதுதான் அவனுக்குப் புரியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. அவளுடன் நான் எத்தனை நெருக்கமாக இருந்தேன்! ஏன் இந்த விரிசல்?

   அதைத் தெளிவுபடுத்த முடியவில்லை. இதே பழைய கோபியாக இருந்திருந்தால், நேராய் வீட்டுக்குள் போய் அவளது கையைப் பிடித்து இழுத்து வந்து தாலிகட்டி இருப்பான்.

   இப்போது பணம் மட்டுமில்லை, பக்குவமும் வந்திருக்கிறது. வெளியே போய் கஷ்டப்பட்ட பிறகு உலகம் புரிகிறது. ஊரில் இருக்கும்வரை குறுகிய சிந்தனை! அதுதான் உலகம் என்கிற தப்பான கண்ணோட்டம்.

   படித்து முடித்த சமயத்தில் கோபி மிகவும் உணர்ச்சி வசப்படுபவனாக இருந்தான். சட்டென அவனுக்குக் கோபம் வரும்.

   யாராவது தவறு செய்தால் சொல்லிப் பார்ப்பான். கேட்கவில்லை என்றால் ஒரே அடி! யாருக்கும் அஞ்சுவதில்லை.

   ரேஷன் கடைக்குப் போவான். அங்கே எடைக்கல்லில் ஏமாற்று நடக்கும். அரிசி கடத்தப்பட்டு மளிகைக்கடைக்கு விநியோகிக்கப்படும். காத்திருந்து அதைப் பிடித்து அதிகாரியிடம் ஒப்படைப்பான்.

   பஞ்சாயத்துப் பணத்தைப் பொய்க் கணக்கு எழுதும் தலைவருக்கு இவன் எதிரி.

   ஊரில் பேருந்தை நிறுத்தாமல் போகும் டிரைவருக்கு மண்டகப்படி! கோவிலில் பூஜை பண்ணாமல் சம்பளம் மட்டும் வாங்கும் பூசாரி இவனைக் கண்டு அஞ்சுவார்.

   இப்படி தபால் பட்டுவாடா பண்ணாத தபால்காரர், சாராயம் காய்ச்சும் ரவுடி என்று அநியாயங்களைத் தட்டிக் கேட்பான். இளம் ரத்தத்தில் தொடக்கத்தில் இதெல்லாம் நன்றாகத்தானிருந்தன.

   ஆனால், போகப் போக தொல்லைகளும், தலைவலிகளும் அதிகமாயின, அவனைக் கவிழ்க்கவும், வீழ்த்தவும் தருணம் பார்த்திருந்தனர். அதற்குப் பஞ்சாயத்து தலைவரும் உடந்தை.

   அரிசி கடத்தும் நபர் ஒருநாள் ஆள் வைத்து திண்ணையில் படுக்கும் கோபியை அடிக்க ஏற்பாடு செய்திருந்தார். அன்று பார்த்து கொசுத் தொல்லை என்று கோபி உள்ளே படுத்திருந்தான்.

   வெளியூர் போய்விட்டு தாமதமாக வந்த சாமிநாதன் வீட்டினரை எழுப்ப வேண்டாம் என்று அன்று அங்கே படுத்திருக்க வந்த ரவுடிகள் கோபி என நினைத்து அவரைச் சாத்திவிட்டு ஓடிவிட்டனர். அந்தத் தாக்குதலில் சாமிநாதன் பேச்சுமூச்சில்லாமல் இரண்டு வாரம் படுக்கையில் கிடக்க வேண்டியிருந்தது.

   கோபி ஆவேசப்பட்டு,`அப்பா! உங்களை அடிச்சது யாரு? சொல்லுங்க. கை காலை வாங்கிடுறேன்! என்று கிளம்பினான்.

   கவுசல்யா, அவனை அடக்கி, `நீ கை காலை வாங்கிட்டா அப்பவுக்கு வலி போயிடுமா? ஏன்டா.... ஏன்டா இப்படி எங்களை வதைக்கிறே? என்று கரித்துக் கொட்டினாள்.

  `நான் என்னம்மா தப்பு பண்ணினேன்?

   `எவனோ கொள்ளையடிச்சா உனக்கென்னவாம்?

  `இப்படி எல்லோரும் இருக்கிறதால்தாம்மா நாடு வீணாப் போகுது, அராஜகம் அதிகமாகிப்போச்சு!

   `ஆமாம் ....நீ தலையெடுத்துதான் அதையெல்லாம் அழிக்கப்போறியாக்கும்! ஒழுங்காய் போய் பிழைக்கப் பார்! ஒரு வேலை தேடிக்கத் துப்பில்லை. இவனெல்லாம் நியாயம் பேச வந்துட்டான்.

    `அம்மா! நான் வேலை தேடாமலா இருக்கேன்?

    `ஆமா... தேடி என்ன பயன்? போகிற இடத்திலும் தகராறு அப்புறம் யார் வேலை தருவா?

    `என்னம்மா? சம்பந்தமில்லாம `முயலுக்கு எத்தனை கால்! உன் தங்கச்சி முடி எத்தனை அடி ன்னெல்லாம், கேட்டால் கேட்டுகிட்டு சும்மா இருக்கணும்கிறியா?

   `ஆமா...நீ சும்மாயிருக்க வேணாம்! இப்படியே ஊர் முழுக்க சண்டை போட்டு எதிரிகளைச் சம்பாதிச்சிகிட்டுரு. தெருவுல போறவன் வர்றவனெல்லாம் எங்களை அடிச்சுப் போட்டுட்டு போகட்டும். அப்புறம் எங்களோட சமாதிமேல் நீ நேர்மை நியாயம் பேசிகிட்டிருக்கலாம்.

   `ஏம்மா...ஏம்மா இப்படிச் சொல்றே? உங்க மேலயும் குடும்பத்து மேலயும் எனக்கு அக்கறையில்லையா?

   `அக்கறையிருந்தா முதல்ல நீ வேலை தேடிக்கணும். இந்த ஊரைவிட்டுப் போயிடணும்.

   `என் பேர்ல இத்தனை வெறுப்பா?

   `ஆமா, பெத்த கடனுக்கு வளர்த்துப் படிக்க வச்சாச்சு, இனி சம்பாதிச்சுப் போடாட்டியும் பரவாயில்லை, உபத்திரவம் கொடுக்காம இருந்தா போதும். இல்லாட்டி எங்களுக்கு மகன் பிறக்கலை, சுதா மட்டும்தான் பிள்ளைன்னு நினைச்சுட்டு இருப்போம்.

   பெற்றவர்களே தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என்று அவன் வெந்து நொந்துபொயிருந்தபோ அவனுக்கு ஆறுதல் தந்தது இரண்டு பேர்தான்.

   ஒருவன் மதி. அடுத்தது அகல்யா. படிக்கும் காலத்திலிருந்தே அவனுக்கு அவள் மீது அன்பு உண்டு. கோபி, படித்தது. அவளது அப்பாவிடம்தான். அவர் நேர்மையானவர். அந்த நேர்மை அவனது மனதில் பதிந்து வாழ்வில் முறைகேடுகளைச் சகிக்க முடியாமல் திண்டாடினான்.

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles