HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

  

    அவன் சோர்ந்துபோய் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் அகல்யாதான் வந்து ஆறுதல் சொல்வாள். அப்போது அவள் பிளஸ் -2 மாணவி.

  அவனைப் பார்க்கும்போது அவளுக்குள் மின்சாரம் பாயும்.

  `இதுக்கெல்லாம் சோர்ந்துவிடலாமா? விநாயருக்குத் துணையாய் ஆலமரத்தடியில் போய் அமர்ந்திடலாமா? என்று அவனுக்கு பின்னால் நின்று கிச்சுக்கிச்சு மூட்டுவாள்.

  ``ஏய்....உதைபடுவே நீ!

   `பார்த்தீங்களா! மறுபடியும் உதை! எதுக்கு கோபம்?

   `அமைதியா சொன்னா எவன் கேட்கிறான்?

   `கேட்காட்டி போறான்! நீங்க உங்க வேலையைப் பார்க்கிறது!

   `எனக்கு ஏது வேலை?

   `தேடணும், முயற்சிக்கணும்!

   `தேடாமயா இருக்கேன்! விண்ணப்பம் போட வீட்டுல பணம் தரதில்லை. அப்புறம் வேலை எப்படி கிடைக்கும்?

   `சாருக்கு அதான் பிரச்சினையா? இனி கவலை வேண்டாம்! நான் பணம் தரேன்!

   `உனக்கேது?

   `அதைப்பத்தி சார் சிந்திக்க வேணாம், எங்க அப்பாகிட்ட வாங்கித் தருவேன்!

   `உனக்கேன் அக்கறை?

   `எல்லாம் காரணமாதான்!

   `என்ன காரணம்?

   `அதெல்லாம் சொன்னா இந்த மரமண்டைக்குப் புரியாது. அதுவும் இப்போ சுத்தமா புரியாது! என்று சிரிப்பான்.

  கலகல, வெகுளிச்சிரிப்பு, அந்தக் கள்ளமில்லா உள்ளம், அவனை ஈர்க்கும். மயக்கும். `இந்த வயதில் இவளுக்கு இத்தனை வசீகரமா? என வியக்க வைக்கும்.

  சொன்னபடியே அவ்வப்போது பணம் தருவாள்.

  அகல்யாவின் உதவியாலும், ஊக்கத்தாலும் அவனுக்கு வேலை கிடைத்தது. அதுவும் பக்கத்து நகரத்தில்.

   வேலைக்குப் போனால் கோபி மாறிவிடுவான் என்று பார்த்த அம்மாவுக்கு ஏமாற்றம். வேலை கிடைத்தும் கூட வீட்டில் மகிழ்ச்சியில்லை . அவன் இன்னும் அதிகமாக ஊர்க்காரியங்களில் ஈடுபடத்  தொடங்கினான்.

   வேலை முடிந்து வந்தால் பசங்களுடன் சுற்றக் கிளம்பி விடுவான். ஏரிக்கரை, தேநீர்க் கடையில் அமர்ந்து பஞ்சாயத்து பண்ணுவான்.

   இது பகையை வளர்த்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அவனது வேலைக்கும் உலை வைத்தது.

    திரும்பவும் வேலை தேடும் படலம்.

(7)

   இருள் பரவியிருந்தது. தெருவில் காரணமேயில்லாமல் எதற்கோ சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

   எழுந்து லுங்கியைச் சரி செய்தான், தண்ணீர்ப் பானையைப் பார்த்தான். வறட்சியாக இருந்தது. மணியடிக்க, உதவியாளன் ஓடிவந்து, ``டீயா சார்....? என்றான்.

   ``முதலில் தண்ணீர்!

   தண்ணீர் வந்ததும் குடித்தான். கண்ணாடியின் முன் போனான். அவன் கன்னத்துத் தாடி அவனுக்கே அருவெறுப்பாய் தெரிந்தது. `இதெல்லாம் தேவையா? இப்போது என்ன நடந்துவிட்டது? எதற்கு இந்தக் கோலம்?

  ``என்ன நடக்கவில்லை?

    `எல்லோருக்கும் நான் போகப்பொருள் ஆகிவிட்டேனோ! எனக்கும் எனது உணர்வுகளுக்கும் இங்கு மதிப்பிலையோ! நான் ஓட்டாண்டியாக இருந்தபோது மிதிக்கப்பட்டேன். பணம் வந்ததும் மதிக்கப்படுகிறேன்.

  நாளைக்கே பணம் இல்லாவிட்டால் திரும்பத் தூற்றப் படுவேனோ?

  `மதிப்பு-மரியாதை கவுரவம்-அன்பு பாசம் நேசம் நட்பு-உறவு எல்லாமே பணத்தின் அடிப்படையில்தானா? பணம்தான் எல்லாவற்றுக்கும் பாலமா?

   `அதுதான் பிரதானம் என்றால் நான் ஏன் அதை வெறுக்க வேண்டும்?

    `எனக்குத் தேவை நிம்மதி. சுற்றியிருப்பவர்களின் மகிழ்ச்சி!

    `இல்லை எக்காரணம் கொண்டும் நான் அவற்றை இழக்கக்கூடாது! முடிவெடுத்தான். உடை மாற்றினான். பெட்டியை எடுத்தான்.

    அறையைப் பூட்டி வெளியே வந்தான். தெருவில் இறங்கி ஆட்டோ பிடித்து நெரிசலில் காணாமல் போனான்.

(8)

   இரவு ஒன்பது மணிக்கு நண்பன் மதி, விடுதிக்கு ஆட்டோவில் வந்து இறங்கினான். மாடிக்கு போனான். அந்த அறையில் பூட்டு தொங்கியது.

    `கோபி இல்லையா....? என்று கேட்டான்.

    `அவர் வெளியே போனார்.

    `எப்போ வருவார்?

    `தெரியலை சார்...நீங்க யாரு...?

    `நீ புதுசா...? என்று அவனது வாயை அடக்கிவிட்டு சோபாவில் அமர்ந்து, அதில் கிடந்த பத்திரிகையைப் புரட்டினான்.

    கோபி வர இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. மதி அவனைப் பாய்ந்து பிடித்து,``இது உனக்கே நல்லாயிருக்கா ...? என்று கடிந்தான்.

    ``எது..?

    ``இப்படி யாருக்கும் தெரியாம ஊரை விட்டு வந்து அறை எடுத்து .... இது தேவையா...?

  ``யாருக்கும் தெரியாதுன்னு எப்படிச் சொல்ல முடியும்? உனக்குத் தெரிஞ்சிருக்கே!

   ``தெரிஞ்சு என்னடா பயன்? செல்போனில் பேசலாம்னு பார்த்தால் எடுக்கமாட்டேன்கிறாய்!

    ``தொல்லை வேணாம்னுதான்!

    ``கோபி! நானும் உனக்கு தொல்லையா போயிட்டேனா? ஏன்டா இப்படி நடந்துக்கிறே? நீ ஊரில் இல்லைன்னதும்... எங்கே என்கேன்னு....?

   ``எல்லோரும் கேட்கிறாங்களா.....? என்று நாற்காலி எடுத்துப் போட்டான்.

   ``எல்லோரும் இல்லேன்னாலும்  பஞ்சாயத்துத் தலைவரும், தலைமை ஆசிரியரும் கேட்கிறாங்களே!

   ``ரொம்ப மகிழ்ச்சி, அவங்களுக்காவது என்னை நினைக்க தோணுச்சே! சரி ...நீ சாப்பிட்டயா...?

   ``இல்லை ..உனக்காகக் காத்திருந்து, காத்திருந்து கொசுக்கடிதான் மிச்சும்! உனக்கு வேறு அறையே கிடைக்கலியா....?

   ``இது போதும்! என்ற கோபி வெளியே போனான்.

   ``டிபன் வாங்கிவா! என்று ஒரு சிறுவனை அனுப்பினான்.

   ``கோபி! உன்னை நினைச்சா எனக்கு பயமாயிருக்குடா....அகல்யாவை நீ எத்தனை நேசிச்சேன்னு எனக்குத் தெரியும். அதுக்காக? தாடி, சோகம் இதெல்லாம் தேவையா...?

   ``இது அதுக்காக இல்லை!

   ``அப்புறம்?

   ``உனக்கும் சொன்னபுரியாது. எனக்குள்ளேயே சில விசயங்கள் அடங்கிக்கிடக்கு. அதை ஆத்திக்க அவகாசம் வேணும்.

   ``அதுக்கு ஏன் உன்னை வருத்திக்காணும்? நல்ல வேலை! சம்பளம் இருக்கு. இவ போனா போகட்டும் இன்னொருத்தி வருவா! என்று ஆறுதல் சொன்னான்.

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles