HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

     

  அவர்களுடைய சந்திப்பைப் பற்றி முதலில் ஊரில் அத்தனை பேச்சு எழவில்லை. பிறகு பேச்சு புகைந்து, வாத்தியார் அதைப்பற்றிக் கவலைபடவில்லை. யார் யாரோ அவனைப் பற்றிப் பற்ற வைத்தனர்.

  அவன் வேலையில்லாதவன் முகடு. சண்டைக் கோழி அது-இது என்று சொன்னார்கள்.

   அவர் `பரவாயில்லை. அவன்தான் என் மருமகன் என்று எழுதியிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? நடக்கிறபடி நடக்கட்டும் என்று அவர்களின் வாயை அடைப்பார்.

   அவரின் அந்தப் பெருந்தன்மையும், கோபியின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையும் அவனை நெகிழச் செய்யும். அந்த நம்பிக்கைக்கு எந்தவித இடையூறும் நேர்ந்து விடாதபடி அவன் கவனமாக அகல்யாவுடன் பேசுவான் பழகுவான்.

   அவனது வீட்டைப் பொறுத்தவரை கோபி `தண்ணி தெளிக்கப்பட்டவன்! வேலையில்லாமல் சொரணை இல்லாமல் சுற்றுபவனுக்கு யாரும் பெண் தரமாட்டார்கள். யாரும் தராததற்கு வாத்தியார் மகள் பரவாயில்லை. சுமாரான வசதி உண்டு. அகல்யாவும் படித்திருக்கிறாள். பண்பானவள். இவனுக்கு அவள் கிடைத்தால் அது அவனது அதிஷ்டம்! என நினைத்தார்கள்.

   அதை ஏன் நாம் தடுக்க வேண்டும் என்று எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர்.

   வாத்தியார் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைத்தால் நமக்கும் செலவு மிச்சம் என்பதும் அவர்களது கணக்காக இருந்தது.

   இதைப்பற்றியெல்லாம் கோபி கவலைப்படவில்லை. பந்தபாசம் மறந்து வீட்டினர் நடந்துகொள்ளும் விசயங்களில் உடன்பாடில்லாவிட்டாலும்கூட அவன் அவற்றைப் பெரிது படுத்த விரும்பவில்லை.

    குடும்பம் என்றிருந்தால் கருத்து பேறுபாடுகள், மனத்தாங்கல்கள் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் போக போக சரியாகிவிடும்.

    வேலைவெட்டியில்லாத கோபிக்கு அமையப்போகும் திருமணமும் ஊரில் புகைச்சலை ஏற்படுத்திற்று. இந்தத் திருமணம் நடந்துவிட்டால் அப்புறம் அவன் ஊரைவிட்டே போகமாட்டான் நமக்கு இடைஞ்சலாய் இருப்பான் என்று அவனது எதிரிகள் சதிச் செயலில் இறங்கினர்.

   ஒரு முறை வெளியூர் போய்விட்டு பேருந்துக்காகக் காத்திருந்தபோது ஒரே கூட்டம்.

   பெட்டியுடன் வேகமாய் வந்த ஒருவர். `இதைக் கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா? என்று கெஞ்சும் பாவனையில் சொன்னார்.

   `நானும் பஸ்சுக்காகத்தான் காத்திருக்கேன். பஸ் வந்தால் உடனே போயிடுவேன்.

    `பிளீஸ் சார்... வயித்துல ஒரே கலவரம்! என்று அவர் நெளிந்தார்.

    பாவமாயிருந்தது. மறுக்க முடியவில்லை. வலியப் போய் யார் யாருக்கே உதவி செய்கிறோம். ஒருவர் சின்ன உதவி கேட்கிறார். இதைச் செய்யாவிட்டால் எப்படி என்று சம்மதித்தான்.

   `முன்பின் தெரியாத தன்னிடம் பெட்டியைக் கொடுத்து விட்டு போகிறார் என்றால் அவர் அப்பாவி! சரி, வரட்டும் என்று கோபி காத்திருந்தான்.

   பத்து நிமிடமாயிற்று...பதினைந்து ...இருபது... ஊகூம் ...ஆளையே காணோம்.

    இரண்டு பேருந்துகளைத் தவறவிட்டான். `இந்த ஆளுக்கு என்னாயிற்று? கழிவறையிலேயே குடியிருக்கிறானா? எதற்கும் போய் பார்க்கலாம் என்று அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்தபோது-

    திடீரென அலறிகொண்டு போலீஸ் ஜீப் வந்து நின்றது.

   அதிலிருந்து காவலர்கள் சட்டென குதித்து சொல்லி வைத்ததுபோல அவனை நோக்கி ஓடிவந்து, ``நீதானே கோபி? என்றனர்.

   `ஆமாம் சார் என்று மிரண்டான்.

   அவ்வளவுதான், `ஏறுடா! என்று அவனையும் பெட்டியையும் அள்ளிப் போட்டுக்கொண்டுபோய் `லாக்-அப்பில் தள்ளினர். கோபிக்கு எதுவும் விளங்கவில்லை. `நான் என்ன தப்பு பண்ணினேன்? என்னை எதுக்கு...? என்று அவன் எச்சில் விழுங்கினான்.

   `எதுக்கா...ராஸ்கல்! என்று ஓங்கி அறைந்து பெட்டியைத் திறந்தனர். உள்ளே அழுக்குச் சட்டையுடன் கட்டுக்கட்டாய் பண நோட்டுகள்!

   உடன் போலீஸ்காரர், `இதோ சார்! கொள்ளை போன பணம் சிக்கிருச்சு! நமக்குக் கிடைச்ச தகவல் சரிதான்! என்று குதூலிக்க இன்ஸ்பெக்டருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவர் மளமளவென மேலிடத்திற்குத் தெரிவித்தார்.

   `சார்...இது என் பெட்டியில்லை.

   `ஆமா. மாட்டிக்கிட்டா அப்படித்தான் சொல்வீங்க, வாயை மூடுடா! என்று கோபியை அடித்து அமர்த்தினர்.

   சற்று நேரத்தில் அந்தச் செய்தி மாலைப் பத்திரிகைகளில் படத்துடன் சுடச்சுட வெளியாயிற்று.  

    ஊரில் ஒரே புகைச்சல்! வீட்டில் ஒரே அமளியாயிற்று.

   `இவனால் நமக்குத் தலைகுனிவு! வேலையில்லாட்டியும் பரவாயில்லை. ஒழுங்காய் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே! எதற்காக கொள்ளையடிக்கப் போக வேண்டும்?

   இவனைப் பெற்றதற்கு கல்லைப் பெற்றிருக்கலாம். இவனால் இனி என்னென்ன பிரச்சினைகள் வருமோ? சுதாவிற்கு வரன் கிடைக்காமல் போய்விடுமோ? கலங்கினார்கள்.

   என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டினர் கதவடைத்து உள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

   அகல்யாவிற்கும் வாத்தியாருக்கும் அந்தச் செய்தியை நம்ப முடியவில்லை. கோபி அப்படிப்பட்டவன் இல்லை என்பது உறுதியாக தெரிந்தால், அந்தக் காவல்  நிலையத்திற்குப் போய் அவனைச் சந்தித்து விபரம் கேட்டனர்.

   அதை இன்ஸ்பெக்டரிடம் தெரிவிக்க, அவருக்குத் தர்ம சங்கடமாயிற்று.

   ஒரு அப்பாவியைப் பிடித்து அவசரப்பட்டு செய்தி பரப்பியாயிற்று. இனி அதில் இருந்து பின்வாங்கினால் சிக்கல் என்று யோசித்தார்.

   `இல்லை.. உங்கள் தவறால் ஒரு அப்பாவியின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது! என்று வாத்தியார் கெஞ்சினார், ஆனாலும், பலனில்லாமல் போய்விட்டது.

   இரண்டு வாரம் கோர்ட்டுக்கு அலைந்து ஜாமீன் பெற்றார்கள்.

   அப்புறம் விசயம் அடங்கி மறுக்கப்பட்டதும், மூன்று மாதம் கழித்து கோபி நிரபாரதி என்று தீர்ப்பு வந்தது. அதன் பிறகு ஊர் திரும்ப மனமில்லை.

   மனமொடிந்து போயிருந்த கோபிக்கு அப்போதும் அகல்யாதான் ஆறுதலாக இருந்தாள். அவனது மனதைத் தேற்றினாள். துபாய்க்கு அனுப்ப, தெரிந்தவர் மூலம் விசா பெற்றாள்.

   அதுவரை கிட்டே வராத அப்பாவும், அம்மாவும் மனம் மாறி வந்தனர். ``எங்களை மன்னிச்சிடு கோபி! நாங்க உன்னைத் தப்பா பேசிட்டோம்! எதையும் மனசுல வச்சுக்காதே! என்று உருகினபோது அவனது மனதும் கரைந்துபோயிற்று.

   ``எல்லாம் உன் ஜாதக தோஷம். குருக்களிடம் கேட்டோம். உன் சனி தசை மாறி குருபலன் தொடங்கிடுச்சாம். இனி நீ சுபிட்சமாய் வருவாய். கோபி! நீ நல்லா வரணும். எங்களுக்கு உன் சம்பாத்தியம் வேணாம். ஊரைவிட்டுப் போய் நல்லா இருக்காய்னு கேள்விப்பட்டால் போதும் என்று அவளை அனுப்பி வைத்தனர்.

    இரண்டு ஆண்டு கழித்து சென்ற முறை விடுப்பில் வந்தபோது பழைய விஷயங்கள் மறக்கப்பட்டு அவன்பேரில் ஊரில் கரிசனம் பிறந்திருந்தது. எல்லாமே தலைகீழ் மாற்றம்.

   அது தான் உலகம்!

   சென்ற முறை விடுப்பில் வந்தபோது கோபிக்கும் அகல்யாவிற்கும் முன் அனுமதி கொடுத்தது போல எந்தப் பிரச்சினையுமில்லாமல் பழகினர். வெளியே சுற்றினர்.

   `கல்யாணம் பண்ணிக்கப் போகிறவர்கள்தானே என்று வம்பு பேசும் ஊர் வாயும்கூட அடக்கியே வாசித்தது.

    அப்போது அகல்யா, `கல்யாணம் முடிஞ்சு என்னை துபாய்க்கு அழைச்சுப் போவீங்களா? என்று கேட்டாள்.

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles