HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

எனக்கே எனக்காய்

என்.சி.மோகன்தாஸ்

  

      `ஏன் அதுவரை காத்திருக்கணும். இப்போதே வாயேன்! என்று சிரித்தான்.

   `இப்போ வந்து...எதுக்கு? கல்யாணம் பண்ணிக்க முடியுமா?

   `ஏன் முடியாது? தூதரகத்துல வச்சு தாராளமாய் பண்ணிக்கலாம். அங்கே துபாயிலே வேலை பார்க்கிற இந்தியர்கள் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிறாங்களே!

   `அது எப்படி...சட்டப்படி செல்லுபடியாகுமா?

   `தூதரகத்துல நடக்கும்போது அது அதிகாரபூர்வம் தானே! அதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு. கல்யாணம் பண்ணிக்க விரும்புபவர்கள் மனுக் கொடுக்கணும். அதைத் தூதரகம் புகைப்படத்துடன், `இவர்கள் திருமணம் செய்து கொள்வதில் யாருக்காவது ஆட்சேபம் உண்டா? என்று கேட்டு அறிவிப்பு போடும்.

    `அப்புறம்...?

    இரண்டு வாரங்களுக்குள்ளே எந்தவித மறுப்பும் வரவில்லை என்றால் திருமணம் செய்து வைத்து பாஸ்போர்ட்டுல மனைவி பெயரைச் சேர்த்துவிடுவாங்க.

    `எதுக்கு?

    `எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத்தான்! நம்ம ஆளுங்க ஊர்ல ஒண்ணு வச்சுட்டு துபாயிலேயும் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது இல்லே. அதுக்குத்தான்!

   கோபி அந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு அப்போதே மறந்துவிட்டான். இரண்டு வாரம் கழித்து அகல்யா, மெல்ல அவனிடம்`பாஸ்போர்ட் எப்படியிருக்கும்? கொடுங்க பார்க்கணும்! என்றாள்.

   `என்ன பார்க்கப் போகிறாய்?

   `சும்மாதான்..ஐயே! வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கட்டபோகிறாய். பாஸ்போர்ட்டு கூட இன்னும் பார்த்ததில்லையான்னு தோழிகள் கிண்டல் பண்ணுறாங்க! என்று சொல்லி அவனது பாஸ்போர்ட்டை வாங்கிப் புரட்டிப் பார்த்தபின்தான் திருப்தியடைந்தாள்.

    `இப்போ என்ன தெரிஞ்சுக்கிட்டாயாம்?

  `நிறைய.

  `ஒண்ணே ஒண்ணு சொல்லேன்!

  `சொல்லட்டுமா? உங்களுக்கு இன்னமும் திருமணம் ஆகலே!

  `ஆகா.... பயங்கரமான கண்டுபிடிப்பு! அது உனக்கு எப்படி தெரியுமாம்?

  `அதான் பாஸ்போர்ட்டுல மனைவி பெயர் இல்லையே! இனி நான் என் தோழிகளை விளாசப் போறேன்! எங்காளு மேல எப்படி நீங்க சந்தேகப்படலாம்னு!

(10)

   ஒரு வாரம் கழித்து-

   மதியிடமிருந்து தொலைபேசி வந்தது. அவன் ஓடி வந்து மூச்சுவாங்கி ஆதங்கத்துடன்,``கோபி! உனக்கு விசயம் தெரியுமா? என்று படபடத்தான்.

    `என்ன....?

    ``அகல்யாவுடன் தொடர்ந்த காதல் முறிவுக்கு உன் துபாய் கட்டுக்கதை மட்டும் காரணமல்ல. எனக்கு இப்போதான் உண்மை தெரிஞ்சது. எல்லாம் உங்கப்பாவும், அம்மாவும் செய்த சதி. அவர்களே உனக்கு துபாய் பெண்ணுடன் கல்யாணம் முடிந்து விட்டதுன்னு கதை கட்டிவிட்டு நகரத்து நகைக் கடைக்காரரின் பெண்ணை உனக்குப் பேசி முடிச்சிருக்காங்க! அது இப்போதான் வெளியே வந்திருக்கு!

   `அப்படியா...!

   `ஆமாம், அதுக்கு பிரதிபலனாதான் இந்த பங்களா உருவாகுது. நீ துபாய்ல இருக்கிறதால இதுக்கு நீதான் பணம் அனுப்பறேன்னு  ஊர் முழுக்க நம்பிகிட்டிருக்கு. ஆனா நகைக்கடை  காசிநாதன்கிட்ட பெரிய தொகை சீதனம் வாங்கிதான் இதைக் கட்டுறாங்க. பணம்கூட பரவாயில்லைடா.. அந்தப் பொண்ணைப் பற்றிதான் என் கவலை, அதோட நடத்தை சரியில்லையாம். நான் போய் விசாரிச்சப்போ பகீர்ன்னு ஆயிடுச்சு, அகல்யா வேணாம்னா வேறு நல்ல பெண்ணா பார்க்கலாமே! பணத்துக்காக உன் வாழ்க்கையைக் காவு கொடுக்கணுமா?

   ``அது மோசமான பொண்ணுன்னு உனக்கு எப்படித் தெரியும்?

   ``தெரியும். நீ இப்படி கேட்பாய்ன்னுதான் திருச்சிக்கு நேராய் போய் அக்கம் பக்கமெல்லாம் விசாரிச்சுட்டேன். கெட்டுப் போனவள் என்றால் சும்மா இல்லை... கர்ப்பம் வரை போயிருக்கு. அதுவும் ஒரு தடவையில்லை...இரண்டு தடவை! கருக்கலைத்த ஆஸ்பத்திரியிலேயே எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாங்க... சொல்லுடா! உனக்கு இப்படி ஒரு பெண் தேவையா....? மதி பத்த வைத்துவிட்டு தொலைபேசியை வைத்தான்.

   உடன் பழைய கோபி, விசுவரூபம் எடுத்து மனதிற்குள் தீயை உமிழச் தொடங்கினாள், மனசாட்சி, `அடக்கு ஆவேசம் வேணாம். வன்முறை வேணாம் என்று அடக்கிற்று.

    நகைக்கடை காசிநாதன், கைதேர்ந்த வியாபாரி என்று முன்பே கோபி கேள்விப்பட்டிருந்தான். அவனது வியாபாரத்தை எங்கள் வீட்டிலும் காட்டியிருக்கிறான். என் பெற்றோருக்கு ஆசைகாட்டி, வீழ்த்திவிட்டான்.

   அவர்களும் இவனது பேச்சை நம்பி கெட்டுப் போனவளையும் மருமகளாக ஏற்று சம்மதித்திருக்கிறார்கள்! மகனைவிட, திடீர் வசதி, கிராமத்தில் பங்களா என்கிற ஆசைகள், அவர்களது கண்களை மறைத்துவிட்டனவோ?

   எதற்கும் அவர்களை ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்க-

   ``ஆமாப்பா....

    ``அவர் எதுக்கு நமக்குப் பணம் தரணும்?

    ``அது வந்து .... என்று அப்பா தடுமாற கவுசல்யா, `நீங்க சும்மாயிருங்க!... என்று ரிசீவரை வாங்கி, பேச்சைத் தொடர்ந்தாள். ``நகைக்கடை காசிநாதனுக்கு ஏகப்பட்ட வியாபாரம்! சொத்து, நகை நட்டுன்னு இருந்து என்ன பயன்? கவனிச்சுக்க ஆண் வாரிசில்லை...ஒரே பொண்ணு... தேவதை மாதிரி அழகா இருப்பா....

    ``அவர் பொண்ணை இங்கே எதுக்கு அனுப்பணும்?

    ``நல்லா கேட்டே போ! உனக்குக் கட்டிவச்சா அப்புறம் அவ இங்கேதானே இருக்கணும்....

    ``நான் ..

  ``கோபப்படாதேப்பா.... கல்யாணத்துக்கப்புறம் மருமகள் எங்ககூடதான் இருக்கணும்னு நான் உறுதியாச் சொல்லிட்டேன். சம்மந்திக்கு உன்னை வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்கணும்னு ஆசை. நான் ஒத்துக்கலே .. எங்களுக்கு ஒரே பையன்னு மறத்துட்டேன்....

   கோபி வாயடைத்து நின்றிருந்தான்.

   ``ஆமா, கோபி.உன் நன்மைக்குத்தான். உனது எதிர்காலம் நல்லா அமையணும்னுதான். இந்த ஒட்டு வீட்டுலயும், சந்துலயும் வாழணும்னு நமக்கென்ன தலையெழுத்து! நீ அதிஷ்டக்காரன்! ராஜாவாட்டம் வாழவேண்டியவன்! அதையெல்லாம் யோசிச்சுதான் நாங்க இந்த முடிவுக்கு வந்தோம். இந்த பங்களா வயல்- பண்ணைவீடு எல்லாம் எங்களோட கனவு. இதை நீ நிச்சயம் நிறைவேத்துவேன்னு நம்பறோம். நீ நல்லவன் எங்களோட பேச்சைத் தட்டமாட்டேன்னு தெரியும்! என்ன சொல்றே...?

   அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. வார்த்தைகள் எதுவும் வரவில்லை. `எல்லாவற்றையும் முடிவு பண்ணி செயல்படுத்தி, ஒப்பந்தம் போட்டு பாதி கிணறு தாண்டும் நிலையில் நான் என்ன சொல்ல முடியும்?

   அவனுக்குக் கோபம் கோபமாய் வந்தது.

  இதுவே பழைய கோபியாக இருந்திருந்தால் நடப்பதே வேறு, இது புதிய கோபி, பக்குவம் நாகரிகமும் வந்துவிட்டால், மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

   தீயை கண்டு பொங்கி எழுந்து, துவம்சம் பண்ணின காலம் ஒன்று இருந்தது.

   அது பழைய கதை. புதிய அத்தியாயத்தில் நேர்மை நாணயம் வேண்டும் என்று நினைக்கும்போது இது என்ன சோதனை!

   ``கோபி! இது எங்க கவுரவப் பிரச்சினை. சம்பந்திகிட்ட கைநீட்டி பணம் வாங்கியாச்சு. வாக்கு கொடுத்தாச்சு. இனி-இது இல்லேன்னு ஆச்சுன்னா அப்புறம் எங்களை நீ உயிரோடு பார்க்க முடியாது! ஆமா சொல்லிவிட்டோம்! என்று தொலைபேசியை வைத்தார்கள்.

(11)

   மாக்கோலம், வாசலுக்கு அழகைத் தருகிறது. எறும்புகளுக்கு உணவளிக்கிறது. பெண்களின் கலை உணர்வை வளர்ப்பதுடன், அதிகாலையில் எழுந்து செயல்பட வேண்டும் என்கிற சுறுசுறுப்பையும் தருகிறது.

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

11 | 12 | 13 | 4 | 15 | 16 | 17 | 18  19

More Profiles