M G R
Sivaji
Manorama
Rajinikanth
K. Bhakyaraj
Director Bharathiraja
R. Pandiyarajan

கடந்த கால நினைவுகள் - "மனோரமா"

பத்மஸ்ரீ திருமதி மனோரமா வாழ்க்கைத் துளிகள்

என் தாயின் வாழ்க்கையில் ஆரம்பித்து, என் வாழ்க்கையிலும் தொடர்ந்து, எனது மகனின் சுகத்தையும் தீண்டிய அந்தச் சோகத் தொடர் கதைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். அவனுக்கு வளமும் - மணமும் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க முயன்று வருகிறேன். எனது மகனின் காதல் திருமணத்தைக் கட்டாயம் நடத்தியே தீர வேண்டும் என்று எனக்கு ஆணை பிறப்பித்தவர்கள், அவனது குடும்ப வாழ்க்கை பாதியில் குலைந்து கலைந்தபோது மட்டும் வாய்மூடி மெளனியாகி விட்டார்கள். தங்களின் மெளனத்திற்கு அல்லது பாராமுகத்திற்கு ஏதாவது நியாயம் கற்பித்துக்கொண்டிருக்கலாம். அது அவர்களுக்குச் சரியாகவும் இருந்திருக்கலாம்.

அதேபோல் நானும் என் நிலைக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறேன். ஆனால் இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மனதால் பங்கப்பட்டு கண்ணீர் வடித்து நின்றவர்கள் நாங்கள் தானே தவிர அவர்கள் இல்லையே! நான் விதியை நம்புகிறவள். அதனால் 'விதி விட்ட வழி இது' என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு என்ன என்னால் முடியும்! அவள் - போனவள் போனவள்தான் பிறகு திரும்பவே இல்லை. அவள் - என்றாவது ஒரு நாள் திரும்பி வருவாள் என்று என் மகன் பூபதி திடமாக நம்பியிருந்தான். இப்படி ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு அல்ல, ஆறு ஆண்டுகள் காத்திருந்தான்! பயனில்லாத எதிர்பார்ப்பு என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டது போலும். அதுவரை என் மகன் பிடிவாதமாக 'விவாதரத்து' ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட மறுத்து வந்தான்.

அதன்பிறகும் எந்தப் பயனும் இல்லை என்றபிறகு அரைகுறை மனதோடு விவாகரத்துக்கு முன் வந்தான். என் தந்தை என் அம்மாவைக் கைவிட்ட பிறகு மூன்று திருமணங்கள் செய்துகொண்டார். என்னை மணந்தவர் என்னை விட்டதுமே வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு குடும்பம் நடத்தத் தொடங்கி விட்டார். ஆனால் நாங்கள்? ஆண்கள் இல்லையே! பெண்களாயிற்றே! அதனால் நாங்கள் நாங்களாகவே இருந்துவிட்டோ ம். எங்களுக்கு என்று தனி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மனமும் பண்பும் இடம்தரவில்லை. ஆனால் என் மகன் எங்களைப் போல பெண்பிள்ளை அல்லவே! அத்துடன் அவனது மனைவியாக வந்தவள் பிரிந்துபோன பிறகு ஏதேதோ மர்மமான செய்திகள் - வதந்தியான தகவல்கள் பல! இந்நிலையில் என் மகன் வீணாக ஏன் வயதைக் கடத்த வேண்டும்? வாழவேண்டிய வயதில் ஏன் வீணாக வசந்தம் இழந்து நிற்கவேண்டும்? அதனால் அவனுக்கு புதிய வாழ்க்கையை - அதுவும் காலத்தே அமைத்துத் தருவது ஒரு தாய் என்ற முறையில் எனது கடமை என்று உணர்வதில் தவறில்லை அல்லவா? அவன் மகரந்தம் நிறைந்த ஒரு ரோஜா மலர். அந்த ரோஜா தனிமையில் வாடிப் போவதை என்னைப் போலவே தாய்மை உள்ளம் கொண்ட நீங்களும் விரும்பமாட்டீர்கள்.

-------------- முற்றும்------------------

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25

நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்

தொடரும்

More Profiles