மௌனம் பேசுகிறது

 

அன்பே உனக்காக!

     கற்றது கைமண்ணளவு;

     கல்லாதது உலகளவு . . .

     கற்பது வாழ்விற்கு உயர்வு;

     கற்பிப்பது அறிவுக்கு தெளிவு!

     காண்பதுக் காட்சிக்கு விருந்து;

     கவர்வது மனதின் விருப்பு! . . .

     தெளிந்திருக்க   -    குழம்பாதே . . .

     புரிந்திருக்க     -    சுருக்காதே . . .

     மறைந்திருக்க   -    ஒதுங்காதே . . .

     மறைத்துவைக்க -    பதுக்காதே . . .

     பொறுத்திருக்க   -    மறக்காதே . . .

     கடமையாற்ற    -    தயங்காதே . . .

     கலங்கியிருக்க   -    நினைக்காதே . . .

     பலமாயிக்க      -    பதைக்காதே . . .

     பயனாயிருக்க    -    பகைக்காதே . . .

வாழ்க்கை

ஒரு “பாடம்“ –

பயின்றால் மட்டும் அர்த்தம் விளங்கும்.

ஒரு “அனுபவம்“ –

வாழ்ந்தால் மட்டுமே அர்த்தம் புலப்படும்.

ஒரு “போராட்டம்“ –

களமிறங்கினால் தான்

வெற்றியும் &  தோல்வியும்.

ஒரு “தேடல்“ –

திருப்தி ஏற்படும் வரை இதன் பாதை நீளும்.

ஒரு “புதையல்“ –

முயற்சி, உழைப்பு, அதிர்ஷ்டம்

இதன் பின்னணியில் மட்டும். 

ஒரு “பிடிப்பு“ –

நாளையென்றக் கேள்விக்கு நம்பிக்கை துளிர். 

ஒரு “வரம்“ –

பெற்றோர்களின் யாகத்திற்கு இறைவன்

அளித்த நன்கொடை.

ஒரு “பயணம்“ –

முடிவுக்கு வராமலேயே முற்றுப் பெறுவது.

ஒரு “கடல்“ –

மூழ்குவதும், முத்தெடுப்பதும்தான் கலை.

ஒரு “வசந்தம்“ –

வசதியிருப்பவனுக்கும்,

வறுமையறியாதவனுக்கும்.

ஒரு “பாதை“ –

நடந்தே தீர வேண்டும் என்றக் கட்டாயத்தில்.

ஒரு “மிரட்டல்“ –

நேற்று, இன்று, நாளையென ஞாபகப்படுத்த.

ஒரு “கணக்கு“ –

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்

என கணக்கிட.

ஒரு “கண்ணாடி“ –

உள்ளதை உள்ளபடியே அறிவிக்க.

ஒரு “பலவந்தம்“ –

வேண்டாம் என்றாலும் விடாது துரத்துவது.

மொத்தத்தில் வாழ்க்கை

“நம்பிக்கை“ – வாழ நினைப்பவர்களுக்கு…

“தெளிவு“ – வாழ்ந்து காட்டுபவர்களுக்கு…

“பொலிவு“ – வாழ்ந்து முடித்தவர்களுக்கு…

‘மரணம்‘ இதனை தீண்டாதவரை

‘காலம்‘ இதனை முடிக்காதவரை

‘வாழ்க்கை‘ அத்தியாயம் தொடரும்……

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles