HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

மௌனம் பேசுகிறது

 

பெண்

  அழகின் அகராதி . . .

  ஆண்டவன் படைப்பின் அதிசயம் . . .

  உலகத்தின் கருவூலம் . . .

  உலக இயக்கத்தின் ஆதாரம் . . .

  வம்ச விருட்சத்தின் முகவரி . . .

  அழுகைக்குச் சொந்தக்காரி . . .

  ஆண்மகனின் விளையாட்டுப் பதுமை . . .

  ஆட்டுவித்தால் ஆடும் பாவை . . .

  ஆண்டவனையே அலறவைக்கும் கதாபாத்திரம்! . . .

  ஆற்றலின் சுக்தி . . .

     பெண் ஜீவ ஊற்று அன்பு காட்டுவதில் . . .

     பெண் உச்ச !வரம்பு! உணர்ச்சி வேகத்தில் . . .

     பெண் நளீனம் நாணம் கொள்ளும்போது . . .

     பெண் நாகரீகம் நாலுபேருக்கு வழிகாட்டும்போது . . .

     பெண் பெருமைக்குரியவள்

           பொறுமைக்குரியவள்

     பெண் மென்மைக்குரியவள்

           மேன்மைக்குரியவள்

     பெண் சிந்தித்தால் ஜீவன் . . .

     சிரித்தால் தென்றல் . . .

     சீறினாள்  - கோரம் . . .

     பெண் சக்தி, உயிர், ஆன்மபலம் - அறிவு!

குத்தல்

    காது குத்தியவர்கள்

           குதர்க்கமாய்ப் பேசுகிறார்கள் . . .

           முன்பக்கமாகப் பேசுகிறார்கள்

     இவர்களைப் பின்பக்கம் பார்த்து . . . .

           குத்தியவர்கேளை மறந்து! . . . .

     இந்த ஜாடை பூக்கள் வாடை வீசும்போது . . . .

           ஒரே துர்நாற்றம்!

     ஒருமாறுதலுக்காக காதை பொத்திக்

           கொள்கிறோம்! . . . .

பெண்மை

     பெண்மையில் இறைமை உண்டு

           காக்கும்போது . . . .

     பெண்மையில் தாய்மை உண்டு

           உருவாக்கும்போது . . . .

     பெண்மையில் ஆளுமை உண்டு

           அரவணைக்கும்போது . . . .

     பெண்மையில் எழுச்சி உண்டு

           எதிர்க்கும்போது . . . .

     பெண்மையில் ஆணவம் உண்டு

           அடைக்கலம் தரும்போது . . . .

     பெண்மையில் பெண்மை உண்டு

           உள்ளங்கள் இணையும்போது . . . .

     பெண்மையில் உருக்கங்கள் உண்டு

           உணர்வுகள் போராடும்போது . . . .

     பெண்மையில்ஏளனங்கள் உண்டு

           தன்னையே அறியாதபோது . . . .

     பெண்மையில் ஏக்கங்கள் உண்டு

           விருப்பங்கள் நிறைவேறாதபோது . . . .

     பெண்மையில் தெளிவு உண்டு

           தியாகங்கள் வெளிப்படும்போது . . . .

ஆண்

       வீரத்தின் மாதிரி . . .

       ஆண்டவன் படைப்பில் சலுகை

பெற்றவன் . . .

       உலக உயிர் இயக்கத்தின் ஆணிவேர் . . .

      கண்ணீர் துளிகளைக் கட்டுப்படுத்தத்

தெரிந்தவன்! . . .

       பெண் சமுதாயத்தின் நாடித் துடிப்பு . . .

       சூழ்நிலை கைதி, சுயநலப் பிரதி . . .

       குற்றவாளியாயினும், குறைகளை

சுமக்கும் சுமைத்தாங்கி! . . .

       அழகை ஆராதிப்பவன் . . .

       புலவனை விட பொய்யுரைப்பவன் . . .

       வருவதைச் சமாளிக்கும்

சாதுர்த்தியக்காரன் . . .

       வார்த்தைகளால் வசப்படுத்தக் கற்றவன்

       வாழ்க்கையை வாழ்ந்து

பார்க்கத் துடிப்பவன் . . .

நிறை குறைகளைச் சமமாய்

பார்க்கும் விவேகி . . .

வாழ்க்கை நிலத்தை உழும் காளை

இளைப்பாற நினைக்கும்

பெண்மைக்கு தரு

சாய்ந்துக்கொள்ளும் நம்பிக்கை தூண்! 

பெண்மையைப் பலவீனப்படுத்தும் ஆயுதம்!

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles