HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

மௌனம் பேசுகிறது

 

அதிர்ஷ்டம்

     தபால்காரன் தவறுதலாக

            மணியாடரோடு வரும்போது . . . .

     எதிர்பாராத வசதிகள் . . . .

     ஊர் கண்களுக்கு திருஷ்டிப் பூசணி

     மனதுக்குக் கிடைத்த மகிழ்ச்சி ஊஞ்சல்!

     காலண்டர் லஷ்மி நேரில் வந்ததாக

தகவல்.

எப்படிடா இப்படியென

அங்கலாய்த்துக் கொள்வது . . . .

பக்கத்து வீட்டு வயிற்றெரிச்சலுக்கு

நாம் பாதாம்கீர் சாப்பிடுவது

தைக்காகக் காத்திருக்காத

பொங்கல் இன்றே பொங்குவது

உறவுகள்

கண்களில் நீர் இருக்கிறத

எங்கே இந்த வேடந்தாங்கல் பறவைகள்!...

***

ஆலமரத்தின் வேர்கள் செல்லரிப்பதைக்

கூட மறந்துவிட்டு மகிழ்ச்சி ஆராவாரம்

காட்டுகிறது!

***

       உறவுக் கிளையோடு முடிந்தவரை

நிழலில் இளைப்பாறிக் கொள்ளும்

இந்த நிழல்கள்!

***

     வரவு இருக்கும் வரைதான்

     இந்த உறவுகள் பதிவேட்டில்! . . .

***

     கொடுத்தால் மட்டுமே குழந்தையைப்

     போல கொஞ்சிக் கொஞ்சி வருவார்கள்!

***

     ஆடிமாத ஈயை போல மொய்ப்பார்கள்!

***

     தேனீ கூட்டில் தேன் இருக்கும் வரை

     குளவிக்கு வேலை!

***

     வசதி இருக்கும் வரை வளர்பிறை

     போல்

     பௌர்ணமியில் குளிர்காய்பவர்கள்!

***

பனிப்பொழிவுக்குத் தீக்காத கூட்டம்

சேர்ந்தவர்கள்!

செருப்பு பேசுகிறது

கவனிப்பாரற்ற இந்தத் தேசத்தைபோல்

கிடந்தேன் வாசலுக்கு வெளிய

எங்கள் பாதத்தைத் தேய்த்துக்

கொண்டோம் ! . . .

அதனால்தான் என்னவோ நாங்கள்!

குப்பைத்தொட்டியில் கால் அறுந்து கை

அறுந்து; . . .

தாழ்த்தபட்டவர் கூட

எங்கள் தரம் தாழ்ந்து விட்டால்

சீண்டுவதே இல்லை

விதவிதமாய் நாங்கள்

அழகு சேர்க்கும்போது கூட;

எங்கள் முகத்தில் மண்ணின் பவுடர்தான் 

கோபத்தில் வீசி எறிவார்கள், அப்போதுக் கூட

நாங்கள் தான் நாணுவோம் எஜமானை

அடிக்கிறோமே என்று . . .

யாரோ கொடுத்ததை கடன் வாங்கி

துருப்புச் சீட்டாய் பயன்படுத்தும் துரோகிகள்.

பரதன் எங்களை சிறப்பித்தான்!

அரியணையில் வைத்து;

அப்போதுக் கூட கூசினோம் . . . .

இந்த மரியாதை எங்களுக்கு தகுதியில்லை

என்று . . .

வாசலில் காத்துக் கொண்டிருப்போம் . . .

பெட்ரோல் போடாத வாகனத்தைப் போல

குழந்தைகளுக்குக் கூட எங்களை மிகவும்

பிடிக்கும் . . . .

அதன் விளையாட்டுச் சாமான்களில்

எங்களின் ஜோடியும் உண்டு. . . .

சட்டசபையில் கூட நாங்கள் தான்

அதிகமாகப் பேசப்படுகிறோம்.

என்னைத் தைப்பவனும் உயர்வதில்லை

நாங்களும் உயர்வதில்லை. . . .

நாட்காட்டி

முடிந்தால் தான் இதை

கிழித்துப்போடுவோம் . . . . 

ஒரு நாள் முடியும்போதே நாம் ஆயிரம்

முறை கிழித்தெறியப்படுகிறோம். . . .

பலப் பிரச்சனைகளால் ஒரு நாளில்

மாட்டிக்கொண்டு விழிப்பதைவிட . . . .

சுவற்றிலேயே இவர்களைப் போல

மாட்டிக் கொண்டு சுதந்திரமாய்

கிழிக்கப்படலாம்!

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles