HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

மௌனம் பேசுகிறது

 

துரோகி

ஏறவிட்டுவிட்டு ஏணியை உதைப்பவன்,. . . .

தானே பற்றவைத்து விட்டு

கூச்சலிட்டு ஊரை அழைப்பவன், . . . .

மொத்தத்தில் வெளிச்சத்தில் வெந்துப்

போனவன், . . . .

சுண்ணாம்பைப் போல! . . .

இருமல்

சளி மாநாட்டின் முரசொலி,

அக்னி மாநாடு நா வறல

குரல் கொடுக்கிறது . . . .

தொண்டைக்கும் வயிற்றுக்கும் சண்டை . . .

தொண்டை இருமலோடு சண்டை

போடுகிறது, . . . .

இவர்களால் மூச்சுக்குத்தான் திண்டாட்டம்!. . .

தூக்கம் கூட சட்டசபையைப் போல

கலைகிறது;!

வாந்தி நண்பர்கள்! வருவதும், போவதுமாய்

அலைமோதுகிறார்கள்; . . .

இந்தச் சண்டை எப்போதுதான்

தீருமென்று தெரியவில்லை . . .

தினம் தினம் போராட்டம்

இதற்கு மைக்கு பிடிக்காதவர்களே

இல்லை கைவைத்து, . . .

அகிம்சை போராட்டம் இதற்கும் உண்டு

அப்போதுதான்

இதற்கு நிவாரணம் கிடைக்கும் . . .

அதுவரை தொண்டையோடு . . .

மல்யுத்தம்தான்!

நட்பு

நட்பே உன் அன்பு . . . .

பரிசம் காணாத காதல்

பர்சின் கணம் பார்க்காத துலாம்

என்னிடம் நீ வாங்கித் தரும்

பொருட்களை திருப்பித் தருவேன்

அது என்னிடம் இருப்பதைவிட

உன்னிடம் இருந்தால்

பாதுகாப்பாக இருக்கும் என எண்ணி!

அதனால்தான் பாதுகாக்கத் தெரியாதவள்

இவள் என்று என்னிடம் தந்த உன்னை

நீயே திரும்ப எடுத்துக் கொண்டாயா?

இருந்தும் நினைவூட்டுகிறேன்

மறக்காதே ஒற்றை ரூபாயையும்,

ஒரு சதவீத அன்பையும்!

நூல்

எந்த கவிஞனுமே எழுதாதது

பூக்களுக்கு அழகுச் சேர்த்தது

பறக்கும் காற்றாடிக்குத் தூண்டுகோலானது

மானத்தைக் காத்து நின்றது.

போராட்டம்

பகுத்தறிவுக்குக் கிடைத்த சவுக்கடி;

உறக்கம் களைத்தால் ஆரம்பிக்கும்,

கண்களை மூடி கொண்டால் நிகழ்ந்துக்

கொண்டிருக்கும்

மொத்தத்தில் விடைபெறுவது

மயானத்தில்தான், . . .

வாழ்க்கை மைதானத்தில் எல்லோர்க்கும்

பொதுவானது,

நேர்கொண்டு நின்றால் அடங்கிப்போவது!

பொறாமை

  திறமையில்லாதவனுக்கு

மூச்சுப் பிடிப்பு!

  உழைக்காதவனுக்குச்

சோம்பல் முறிப்பு . . .

  வியர்வையில் முத்துக் குளிக்காமல்

சிதறிய முத்துக்களுக்காகப்

போராட்டம் செய்வது . . .

  இந்த ஆமை நுழைந்தால் இவன்

மட்டுமே உருப்படாமல் போவான்!

பொறுமை

புறப்படும்போது வேகமாய் ஆரம்பித்தாலும்

முடியும்போது மெதுவாக முடியும் ஒரு

பொழுதைபோல . . . .

இந்த தானம் அதற்கே கிடைத்த

தானம்,

ஆம் நிதானம்!

முடியும் போதுதான் முடியும்

என்பதை புரிந்துக் கொண்டது!

அவசர தந்திக்கு கடை அடைப்பு

பருவங்கள் காத்திருப்பதைப் போல

இதுவும் காத்திருக்கும் . . .

பூக்கும்போது பூவாய் தெரியாதது . . .

பூத்ததும் மலராய் சிரிக்கும்! . . .

காத்திருந்தால் மகிழ்ச்சி கிடைக்கும்! . . .

செடி

இவர்கள்தான் இவர்களை முதலில்

சூட்டிக் கொள்கிறார்கள்.

மோசக்காரன்

சம்பாதித்தைத் தானே சாப்பிடுபவன்

தன் அடுப்படியில் பூனையைத் தூங்க

வைத்து விட்டு . . . .

அழும் குரலுக்கு மத்தியில் ஆனந்தமாய்

தூங்குபவன்!

சொத்திற்காக சொந்தங்களை

இழந்தவன்

நம்பியவன் வீட்டில் கள்ளக்கோல்

போடுபவன்

இடம் கொடுத்தத் தாய்க்கு இடம்

இல்லை என்பவன்!

நம்பிய கல்லாப்பெட்டியில் கைவைத்தவன்!

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

More Kavidhai

More Profiles